விண்ணப்பம்

This entry is part 6 of 30 in the series 28 ஜூலை 2013

எஸ் சிவகுமார்

 

 

பொய்யர்கள் பலகோடி

போலி முகங்காட்டி

ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா !

நானோ

மெய்சொன்னேன் எந்நாளும் ;

தவறென்றால் என்னை

மேய்ப்பரே மன்னியும் ஐயா !

 

போவோர் வருவோரின்

பாரம் சுமந்து இனியும்

பாவிகள் ஆக்காதீர் ஐயா !

யார்க்கும்

இளைப்பாறுதல் தந்தால்

இன்னும் பல பாவங்கள்

சளைக்காமல் செய்வார்கள் ஐயா !

 

இரண்டாயிரம் ஆண்டு

ஆயாச்சு இன்னும்

முரண்டுகள் பிடிக்காதீர் ஐயா !

அவர்க்கு

இரண்டொன்று தண்டனைகள்

தந்தால்தான் ஆச்சு

இ.பீ.கோ. படியுங்கள் ஐயா !

Series Navigationவீடென்பது பேறு முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் :தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?
author

எஸ். சிவகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *