‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………29 ஞானக்கூத்தன் – ‘கவிதைகளுக்காக’

This entry is part 15 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம். நாவல் படிக்கிறவர்கள் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிபவர்கள் நாவல் படிப்பதாகத் தெரியவில்லை. பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை. படிப்பவர்கள் அதைக் கேலி செய்ய இடம் தரும் எழுத்துக்களைப் படிக்கிறார்கள். இப்படி வாசகர்களின் கடைத்தெரு வீணாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படிக்கிறார்களோ இல்லையோ வெளியிடும் வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ எழுதுகிறவர்கள் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எழுதுங்கள் வெளியிடுகிறேன் என்றால் கசக்கவா செய்யும்? திரு.கி.கஸ்தூரிரங்கன் எழுதச் சொன்னார். எழுத வருகிறதா என்று பார்க்கும் பொருட்டு எழுதினேன். எழுத வருகிறது என்று தெரிகிறது. சிரமமில்லாமல் படிக்க வசதியாகச் சிறிய கட்டுரைகள் இவை., கருத்துக்களும் மூச்சுத்திணறச் செய்யாமல் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

கணையாழி திரு.கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு நன்றி.

ஞானக்கூத்தன்
சென்னை -5 – 27-3-96

Series Navigationஅசல் துக்ளக் இதுதானோ?புது ரூபாய் நோட்டு
author

வே.சபாநாயகம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *