பு.புளியம்பட்டியில் புத்தகத் திருவிழா

This entry is part 28 of 31 in the series 13 அக்டோபர் 2013


சின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்றசின்ன ஊர்களிலும் இப்போது புத்தகதிருவிழாக்கள் நடப்பது ஆரோக்யமான விசயமாக உள்ளது. சென்றாண்டு  இரு பதிப்பகங்களின் தளங்களுடன் ஆரம்பித்தது புஞ்சைப்புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி. இவ்வாண்டு 10 புத்தகப்பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.   ” விடியல் ” என்ற சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. சமூக நல இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது. அதில் முதன்மையானவர் ஜெயகாந்தன் என்ற இளைஞர்.. முன்பே பள்ளி மாணவர்களுக்கு கல்வித்தொகை உதவி, பாராட்டுப்பரிசளீப்புகள், ரத்ததான முகாம்., மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் என்று தொடர்ந்து நடத்தி வருபவர்கள் ஜெயகாந்தன் தலைமையிலான குழுவினர்.


இவ்வாண்டு ஒரு நாளில் நானும், சு.ப. வீரபாண்டியனும் கலந்து கொண்ட நிகழ்ச்சி இருந்தது.


சு.ப. வீரபாண்டியன் அவ்வூரின் அரசியல் கூட்டமொன்றுக்கு பேச்சை முடித்து கிளம்பியபோது                  ” விடியல் ” நண்பர்களுடன் மேடையில் புகைப்படம் எடுத்துக்கொள்கையில் ஜெயகாந்தன் சொன்னார்: “ இந்த 5 நண்பர்கள் தான் இத்தனையையும் செய்றோம் “ .. சு.ப.வீ. சிரித்துக் கொண்டே சொன்னார். “ மாவீரன் பிரபாகரன் சொல்வார்: 5 பேர் இருந்தால் சாதிக்கலாம். 50 பேர் இருந்தால் விவாதிக்கலாம்”.



நான் செகந்திராபாத்தில் வசித்து வந்த போது அங்கு புத்தகக் கண்காட்சி  நடத்திய அனுபவங்கள் ஞாபகம் வந்தது. ஏகதேசம் ஒற்றை ஆளாய் இருந்து சமாளிப்பேன். 20க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். விஜயா பதிப்பக வேலாயுதம் வெகுவாக ஒத்துழைத்தார். நான் தமிழ் நாட்டிற்கு வந்த பின் அங்கு நின்று போய் விட்டது. ” கனவு”  இலக்கிய வட்டம் மூலம் நடத்தினேன்.கனவின் புத்தகக் கண்காட்சி நனவு அங்கு தொடர செகந்திராபாத் தமிழ்ச்சங்கம், இலக்கிய பேரவை, நிறை போன்ற அமைப்புகள் மனது வைக்கலாம்



குழந்தைகள அதிகம் இருந்ததால் என் பேச்சு கதை சொல்வது பற்றி அமைத்துக் கொண்டேன். கதை சொல்லல், கதையின் முதல் பதிவான கில்காமிஸ் காவியம், குழந்தைகளுக்கான கதைகள் முறைகள்  என்று சில கதைகள் சொன்னேன். அதில் சொல்லலாம் என்று நினைத்திருந்து விட்ட ஒரு கதையை இங்கு இணைத்திருக்கிறேன். இது இப்போது     ” பசுமைப் பூங்கா “  என்ற தலைப்பில் இரண்டு சிறுவர் கதைகளைக் கொண்ட நூலாக எட்டுப் பக்க்ங்களில் ரூ5 விலையில் வெளிவந்திருக்கிறது.


நான் ஆண்டுதோறும் நடத்தும்  ”  கதை சொல்லி  “ போட்டியில் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து பரிசுகள் பெற்று வரும் பவித்ரா என்ற புஞ்சைப்புளியம்பட்டியைச் சார்ந்த 8 வகுப்பு மாணவி சென்றாண்டு அக் கதை சொல்லி போட்டியில் பரிசு பெற்ற கதைப்பிரதி கிடைத்தது. விவசாய அழிவு, மண் புழு என்ற நண்பன், இயற்கை விவசாயம் என்று அக்கதை கோடிட்டுச் சென்றது. புத்தகக் கண்காட்சி மேடையில் பவித்ரா பயம் நீங்கி நல்ல கதை சொல்லலாக அக்கதையை விளக்கிய போது கூட்டம் ஆரவாரித்தது. இப்போது எனது  “ பசுமைப்பூங்கா “ ( முன்பே எனது சிறுவர் கதைகளை யுரேகா புத்தக பதிப்பாளர் “ பள்ளி மறுதிறப்பு “  என்ற சிறுவர் நூலை வெளியிட்டிருக்கிறார்.)



                    * பசுமைப் பூங்கா

 

    திலீபன் அப்பா வெங்கடாசலம் இரட்டைச் சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். காற்று காதுகளில் நிறைந்தது.

    “பிருந்தாவன் பூங்கா போனே. அப்புறம் எப்ப பாத்தாலும் பூங்கா ஏதாச்சும் போலமுன்னு நச்சரிப்பு” என்றார் சற்றே எரிச்சலுடன். அம்மா ராஜாமணி திலீபனை இறுக்க அணைத்துக் கொண்டாள். “நல்லதுதானே” “நல்லதுதான், நல்ல இடங்களைப் பார்க்க ஆசை வருவது நல்லதுதான்.”

    சென்ற வாரம் கோவை போகும் வேலை இருப்பதாகச் சொன்னார் வெங்கடாசலம். திலீபன் தானும் வருவதாகச் சொன்னான். “சிதம்பரம் பூங்கா பாக்கணும்ப்பா”

    “செரி… சிதம்பரம் பத்தி தெரியுமா…”

    “கப்பலோட்டியத் தமிழன். கோவை சிறையிலதா இருந்தார். அவர் ஞாபகமாகத்தான் அந்தப் பூங்கா…”

    “பரவாயில்லை. ஞாபகம் வைத்திருக்கிறாய்…”

    “தமிழ் பாடநூலில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய பாடம் உள்ளது அப்பா”

    “அதுதா ஞாபகம் இருக்கு போல.”

    அம்மா ராஜாமணி இடைமறித்தாள்,” எல்லாத்துக்கும் கிண்டல்தா உங்களுக்கு. திலீபனுக்கு பொது விஷயத்திலே அக்கறை இருக்குது…”

    வாராவாரம் ஞாயிறில் மாலை எங்காவது வெளிக் கிளம்பலாம் என்பார் வெங்கடாசலம். “எங்காச்சும் பூங்கா போலாம்ப்பா” என்பான் திலீபன்.

    “நம்மூர்ல எங்கடா பூங்காக்கள் இருக்கு…”

    “பிருந்தாவன் பூங்கா.”

    “அதுக்குத்தா போயிட்டு வந்துட்டமே.”

    “புகைவண்டி நிலையம் பக்கத்திலெ…”

    அதிலதா நெறைய கட்டிடங்க வந்திருச்சே.”

    “அலகு மலை பசுமைப் பூங்கா”

    அலகு மலை முருகனையும் திரிசிக்கலாம் என்றாள் ராஜாமணி. ‘சேவ்’ அமைப்பு அந்த பசுமைப் பூங்காவை அமைத்திருந்தது. ஏழை அனாதை குழந்தைகள் அங்கு தங்கியிருந்தனர். அங்கிருந்து பெருந்தொழுவு பள்ளிக்கு சென்று படிக்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் சிலர் இருக்கிறார்கள். சுமங்கலி திட்டத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்களும் இருக்கிறார்கள்.

    “திருமுருகன் பூண்டி பூங்கா…”

    கோவில் முகப்பில் இருந்தது. குழந்தைகள் விளையாட இரண்டு ஊஞ்சல்கள். சறுக்கு மேடை. ஓடி விளையாட நல்ல விரிவான இடம். ஞாயிறு என்றால் கூட்டம் இருக்கும். ஊஞ்சல் விளையாட வரிசை இருக்கும். அப்படி வரிசையில் நிற்கிற போதுதான் அந்த வரிசையான அறைகள் திலீபனின் கண்களில் பட்டன.

    “அதெல்லாம் என்னப்பா…”

    “அறைகள்… கோவிலுக்கு வர்ரங்க தங்கறதுக்கு…”

    “பலர் நோயாளிக மாதிரி இருக்காங்களே”

    “ஆமா… மன நோயாளிக. இங்க தங்கியிருக்கறது. இங்க இருக்கற கெணத்திலெ குளிக்கறது. இதனாலே அது விலகும்ன்னு நம்பிக்கை.”

    “முருகனுக்கு கூட சித்த பிரம்மெ புடுச்சிருக்காமா…”

    “பாருக்குத்தா புடிக்கலே.”

    எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள். “சூரபத்மனெ கொன்னப்புறம் இங்க வந்திருக்கார் முருகன். சிவன் இங்க காத்திட்டிருக்கச் சொல்லியிருக்கிறார். வந்தா எங்கிருக்கார்ன்னு தெரியலே. சித்தபிரமை புடுச்சிருச்சு. சிவன் தேடிக் கண்டுபிடிச்சு அலஞ்சு தீர்த்திருக்கார். அதுதா முன்னாடி இருக்கற கோயில்.”

    “செரி… நம்ம ஊர்ல நொய்யல் கரை உக்காந்து ஓய்வு எடுக்கற மாதிரி இல்லே. வேற பூங்காக்களும் இல்லே…”

    “ஆமா… அஞ்சு லட்சம் பனியன் தொழிலாளிக இருக்காங்க. ஆனா நல்ல பூங்காக்கள் இல்லே. ஓய்வுன்னா சினிமா தியேட்டருக்குத்தா போகணும்.”

    அன்றைக்கு ஏழு மணியாகிறது. பூங்கா வாசலைப் பூட்டப்போவதாக காவலாளி சப்தம் போட்டுச் சொன்னார்.

    “இன்னம் கொஞ்ச நேரம் இருக்கறேமே…”

    “நான் வூடு போக வேண்டாமா. காலையில வேலைக்கு வந்தவன். தினமும் ஏழு மணி வரைக்குந்தா… இன்னிக்கு பத்து நிமிஷம் அதிகமாயிருச்சு…” என்றார் பூங்கா காவலாளி.

    “வேற பூங்கா இல்லீங்களா.”

    “ஒரு கிலோ மீட்டர் தூரத்திலெ செம்மொழிப் பூங்கா இருக்குது. அது குடியிருப்புகளுக்குள்ள இருக்குது. ஒன்பது மணி வரைக்கும் தொறந்திருக்கும்.”

    “அப்பா அங்க போலாமா…”

    “ஒரு கி.மீ. போகணும். முக்கிய சாலை. மூணு பேரு இரட்டை சக்கர வண்டியில போறது தப்பு. போலீஸ் கண்லெ பட்டுட்டா…”

    “படமாட்டம் அப்பா… ப்ளீஸ்… ப்ளீஸ்…”

    மூவரும் இரட்டை சக்கர வண்டியில் கிளம்பினார்கள். சீக்கிரம் வந்து விட்டது போலிருந்தது.

    “பூங்கா தேடி டவுனை வுட்டு எவ்வளவு தூரம் வரவேண்டியிருக்குது.”

    பூங்கா மின் விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பூங்கா முதல் பார்வையிலேயே பளிச்சென்று பட்டது. தூரிகள் நான்கு இருந்தன. வழுக்கு மேடைகள். நடைபாதை மேடைகள். வர்ண விளக்குகள்.உயரத்தில் நீர் ஊற்று ஒன்று. சுற்றுச் சுவர்களில் தமிழர்கள் திரு.வி.க, வள்ளலார், பாரதி, பாரதிதாசன் படங்கள். சமூகச் சேவைத் தலைவர்கள் அம்பேத்கார், காந்தி முதற்கொண்டு அப்துல்கலாம் வரைக்கும் இருந்தனர்.

    இரண்டு முறை பூங்காவை வலம் வந்தது போல சுற்றினர். தூரிகளில் குழந்தைகள் இருந்தனர். “அம்மா நீ தூரி வெளையாட வாய்ப்பே இல்லை.”

    “ஏண்டா திலீபன்.”

    “யாருமில்லாட்டி கூட நீங்க முயற்சி பண்ணலாம். குழந்தைகள் நிறைய காத்திட்டிருக்காங்க…”

    “அம்மாக்களும் நிறைய காத்துகிட்டிருக்காங்க”

    “அம்மாக்கள் கொழந்தைகளுக்கு காவலா காத்திட்டிருக்காங்க.”

    “செரி… செரி. நான் உங்க வெளையாட்டுக்கு வர்லே…”

    “கள்ள விளையாட்டுதானே… சந்தர்ப்பம் இல்லம்மா…”

    “மானத்தை வாங்காதே” வெங்கடாசலமும் உரக்க சிரித்துக் கொண்டார்.

    தூரி ஆடியபின் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தார்கள். அவன் தூரி விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததை தொடர்வது போலிருந்தது. அவர்கள் பேசிக் கொள்ளட்டும் என்று அவன் மெல்ல நகர்ந்தான்.

    பூங்காவின் மூலையில் இருந்த ஒரு பாறை மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். பாறை சற்று உயரத்தில் இருந்தது. பாறை குளுமையாக இருந்தது. தீப்பொறி ஒன்று காற்றில் பறந்து வந்தது போல இருந்தது.

    அவன் அருகில் அந்த மின்மினிப் பூச்சி வந்து உட்கார்ந்தது.

    “இந்தப் பூங்காவுக்குப் புதுசா…”

    “ஆமா…”

    “நீ…”

    “நானும் தா…”

    “இந்தப் பூங்காவுலதா நாலு நாளா இருக்கேன்.”

    “இதுக்கு முந்தி…”

    “கல்லாறு பழத்தோட்டத்திலெ…”

    “கல்லாறு எங்க இருக்கு…”

    “குன்னூர் போற வழியிலெ.”

    “மேட்டுப்பாளையமா…”

    “மேட்டுப்பாளையத்திலெ… பிளாக் தண்டர் தெரிஞ்சு வெச்சிருப்பே. அங்கதா.”

    “அங்கயும் போகணும். எதுக்கு இங்க வந்தே…”

    “ஒரு கல்யாண விசேஷத்துக்காக வாழை மரம், தேக்கு மரம் வெட்டிட்டு வந்தாங்க இந்த வீதிக்காரங்க. அதிலெ ஒட்டிட்டு வந்துட்டேன்.”

    “இதிலே எத்தனை நாள் இருப்பே…”

    “சீக்கிரம் போயிரணும்…”

    “ஏன்…”

    “பூங்கா கூட சூடாத்தா இருக்கு. மாலையிலதா தண்ணி வுடறாங்க மத்தபடி சூடுதா. இந்த சூட்லே என்னாலே இருக்க முடியாது.”

    “எங்களுக்கும் கஷ்டந்தா… இவ்வளவு பெரிய ஊர்ல பூங்கா ரொம்பக் குறைவு.”

    “காத்து சுத்தமா இல்லே. பெட்ரோல் புகை… மரங்கள் ரொம்பக் குறைவு”

    “பனியன் தொழில் 15,000 கோடி ரூபா அந்நியச் செலவாணி வர்ர ஊர். ஆனா தொழிலாளர்கள் விடுமுறையில் ஓய்வெடுக்க நல்ல பூங்காக்கள் இல்லை. இது நகரத்தைவிட்டு பத்து கி.மீ. தாண்டி இருக்குது…”

    “மரம் நடறம்ன்னு போட்டோ புடுச்சுக்குறாங்க… மரங்களை வெட்டாமெ இருந்தா செரி…”

    “அங்கங்கே பூங்கா அமைக்கறாங்க. ஊரே பூங்காவா அழகா இருக்கணும்.”

    “ஊர்லே ஒரு பூங்கா இருக்கறதுக்கு பதிலா பூங்கா மாதிரி ஊர் இருக்கணும்.”

    “ஆமா… அதுதா சரி…”

    “வீதிதோறும் பூங்கான்னு கோஷம் போடறம். வீதியெல்லாம் பூங்கா மாதிரி வெச்சா எவ்வளவு நல்லா இருக்கும்.”

    “ஆமாமா… செரி… ஒரு ரகசியம் சொல்வேன். நீ மின்மினிப் பூச்சி. பகல்லெ கூட பளிச்சின்னு இப்பிடியே இருப்பியா…”

    “அது ரகசியம். உன் ஆசிரியர் கிட்ட கேள். பாடத்திலே என்னைப் பத்தித் தேடு…”

    திலீபன் திலீபன் என்று அழைக்கும் குரல்கள் கேட்டன.

    “எங்கம்மா அப்பா குரல்தா என்னைத் தேடறாங்க…” பாறையிலிருந்து மெதுவாக கீழே இறங்கினான். மின் விளக்குகளால் கண்கள் கூசின.

    “என்னையும் கல்லாறு பழப் பண்ணை தேடுது…”

    வெங்கடாசலமும், ராஜாமணியும் அவனை நெருங்கினர். “என்ன தனியா உக்காந்துட்டே…”

    “நீங்க ஏதோ ரெண்டு பேரும் சீரியஸா பேசிட்டிருந்தீங்க… அதுதா…”

    “வீட்டு விஷயம்தா. செரி போலாமா.”

    “அடுத்த வாரம் கல்லாறு பழப் பண்ணை பூங்கா போறம்ப்பா…”

    “புது பூங்கா கண்டுபிடிச்சிட்டியா…”

    “மின்மினி சொல்லுச்சு…”

    “அது யார் மின்மினி…”

    “பிரண்ட்ப்பா…”

    “செரி போலாம் திலீபன்”

    “அடுத்த வாரம் கல்லாறு பழப்பண்ணை பூங்கா. ரொம்பவும் உற்சாகமாக இருக்கப்பா…”

Series Navigationசஞ்சீவி பர்வதத்தின் சாரலில் இயற்கை வர்ணனைகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *