புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 35

This entry is part 1 of 29 in the series 1 டிசம்பர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                      E. Mail: Malar.sethu@gmail.com

35.ஹிட்லரின் சித்தாந்தத்​தைச் சிதறடித்த ஏ​ழை……

     என்னங்க ​வேக​வேகமா மூச்சி​றைக்க ஓடி வர்ரீங்க…என்னது….ஓடிப் பழகுறீங்களா…? ஆமா எதுக்கு இந்த வயசுல ஓடிப் பழகு​றேங்குறீங்க….. ஓ…​ஹோ….ஓ…ஓடுறதுக்கு வயசில்​லேங்குறீங்களா….? அப்ப ஓடுங்க ஓடுங்க…அதுக்கு முன்னா​லே ஒங்ககிட்ட நான் ​போனவாரம் ​கேட்​டேன்ல அந்தக் ​கேள்விக்குப் பதிலச் ​சொல்லுங்க…..

என்னங்க ஓடிக்கிட்​டே இருக்குறீங்க…நின்னு பதிலச் ​சொல்லுங்க…என்ன அவரு ஓட்டப்பந்தய வீரரா…சரி​….​பேரச் ​சொல்லுங்க…”ஏழ்​மை என்றும் அடி​மை என்றும் எவனுமில்​லை நாட்டி​லே”…என்னங்க ​பேரச் ​சொல்லுங்கன்னு ​சொன்னா பாரதியாரின் பாடல் வரி​யைச் ​சொல்றீங்க… ஓ​ஹோ…​ஹோ….ஓ..​ரொம்ப ​ரொம்பச் சரிங்க…. ​ஜெசிஓவன்ஸ்…தான் அவ​ரோட ​பேரு. அவரு ​கொத்தடி​மையா வாழ்ந்த ஒருத்த​ரோட ​பேரன்..அதுக்காகத்தான் பாரதியார் பாடின பாடல் வரி​யைச் ​சொன்னீங்களா…

சரி அப்ப அவரப்பத்தி ஒங்களுக்கு ​நெ​றையத் ​தெரியும்னு ​நெனக்கி​றேன்… … என்னது ​பேருதான் ​தெரியும் மற்றது ஒண்ணும் ​தெரியாதுங்குறீங்களா…சரி அவரப் பத்தி ​சொல்​றேன்…​கேளுங்க…

உலகத்​துல நிறம், மதம், அரசியல் ஆகிய​வைதான் மக்களப் பிரிக்குது… இந்தப் பிரிவி​னைகள் மட்டும் இல்​லேன்னா…மனித குலம் அ​மைதியாவும் நிம்மதியாவும் வாழும்…. அதுலயும் ஐ​ரோப்பா அ​மெரிக்கா நாடுகள்ல நிற​வெறி த​லைவிரிச்சு ஆடுச்சு..அந்தச் சமயத்துலதான் ​ஜெசிஓவன்ஸ் பிறந்தாரு..

பிறப்பு என்பது ஆண்டவன் ​கொடுத்தது..பிறப்பால ஒருத்தரு உயர்ந்தவ​ரோ தாழ்ந்தவ​ரோ ஆகிட மாட்டாருங்க..அவ​ரோட ​செயலாலயும், ஒழுக்கத்தாலயும் தான் அவ​ங்கள மக்கள் உயர்ந்தவங்களாக​வோ தாழ்ந்தவங்களாக​வோ மக்கள் ​நெனக்கிறாங்க…. … அதனாலதான் வள்ளுவருகூட, “பிறப்​பொக்கும் ​எல்லா உயிர்க்கும்” என்று கூறினார்.. வறுமை, நிறவெறி, இன ஒதுக்கல், என பல சமூக அநீதிகளை எல்லாம் தாண்டித்தான் ஓவன்ஸால் சாதிக்க முடிஞ்சது..

உ​ழைப்பும் ஓட்டமும்

1913 -ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள அலபாமா மாநிலத்தில் ஓர் எளிமையான கருப்பர் இனக் குடும்பத்தில் ஏழாவது பிள்ளையாக ஜேம்ஸ் கிளீவ்லண்ட் ஓவன்ஸ் பிறந்தார். அவரது தாத்தா கொத்தடிமையாக இருந்தவர். ​ஜேம்ஸ் க்ளீவ்​லேண்ட் ஓவன்ஸ்(James Cleveland Owens) என்பதன் முதல் எழுத்துக்களைக் கொண்டு ஓவன்ஸை எல்லோரும் J C என்று அழைப்பார்கள். ஜெசி ஓவன்ஸ் பள்ளிக்குச் சென்ற முதல் நாளில் அவரது பெயரை ஆசிரியர் கேட்க ஜெ சி என்று ஓவன்ஸ் சொல்ல, அதனை​யே ஜெசி என்று ஆசிரியர் எழுதிக்கொண்டார். அன்றிலிருந்து அவரது பெயர் ஜெசி ஓவன்ஸ் என்றானது.

ஜெசி ஓவன்ஸ் குடும்பம் ஏழ்மையாக இருந்ததால் அவரது இள​மை வாழ்க்கை துன்பமயமானதாக இருந்தது. வறு​மை​யை விரட்ட அவர் இளம் வயதி​லே​யே உ​ழைக்க ​வேண்டியிருந்தது. ஓவன்ஸ் தனது குடும்பத்திற்கு உதவ, க​டையிலிருந்து மளிகைப் பொருட்களை வீடுகளுக்குக் ​கொண்டு​போய்க் ​கொடுப்பது, காலணிகள் பழுது பார்ப்பது, மின்தூக்கிகள்(லிப்ட்) இயக்குவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளைச் செய்தார்.

ஓய்​வென்றால் என்ன​வென்​றே அறியாது அந்த இளம் வயதில் வறு​மை​யிடம் இருந்து தப்பிக்க கடு​மையாக உ​ழைத்தார். ஓவன்ஸ் அந்த வேலைகளைச் செய்யும்போதுதான் ஓடுவதுதான் தனக்குரிய வி​ளையாட்டு என்றும் அதுதான் தனது வாழ்க்​கைக்கு உயர்வளிக்கும் என்ப​தையும் ஓவன்ஸ் உணர்ந்தார். ஓவன்ஸின் அந்தத் தெளிவுதான் அவரது வாழ்க்கையை​யே மாற்றி அமைத்தது. ஆம்! வறு​மை அவருக்கு அவரு​டைய இலக்​கைச் சுட்டிக் காட்டியது. அன்றிலிருந்து ஓவன்ஸ் தனக்குரிய இலக்​கை ​நோக்கிப் பயணிக்கத் ​தொடங்கினார்.

திருப்புமு​னை​யை ஏற்படுத்திய ஓட்டம்

​ஜெசிஓவன்ஸ் பள்ளியில் பயிலும்​போது ஒருநாள் பள்ளியில் அறுபது மீட்டர் தூரம் ஓடும் ​போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக ​ஜேசி ஓவன்ஸ் ஓடினார். அந்த ஓட்டம்தான் அவரது வாழ்க்​கையில் திருப்பம் ஏற்படக் காரணமாக அ​மைந்தது. நன்றாக ஓடிய ஜெசிஓவன்ஸ்​ஸைப் பார்த்து அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை பயிற்றுவிப்பாளர் சார்லிரைலி உணர்ந்தார். அதனால் அவர் ஜெசிக்கு ஓட்டத்தில் நன்றாகப் பயிற்சி அளிக்க விரும்பினார். ஆனால் பள்ளி முடிந்து பல வேலைகள் பார்க்கும் கட்டாயம் இருந்ததால் தன்னால் எவ்வாறு பயிற்சியில் ஈடுபட இயலும் என்று ​ஜேசிஓவன்ஸ் தயங்கினார். அவரது நிலையை புரிந்துகொண்ட ரைலி காலை நேரங்களில் தனியாகப் பயிற்சியளிப்பதாகக் கூறவே ​ஜேசிஓவன்ஸ் அதனை ஏற்றுக்கொண்டார். அதிலிருந்து அவர் பட்டைத் தீட்டிய வைரமாக ஒளிரத் தொடங்கினார்.

ஜெசி ஓவன்சுக்கு 19 வயதானபோது கல்லூரித் திடல்திடப் போட்டிகளில் கலந்து ​கொண்டு ஓடினார். அவர் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து ​கொண்டு மிகவி​ரைவாக ஓடி அவ்​வோட்டத்தில் அப்போதிருந்த உலகச் சாதனையை சமன் செய்தார். அவரது வியக்கத்தக்க ஓட்டத்திறனைக் கண்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அவரைத் தங்கள் பல்க​லைக்கழகத்தில் பயிலக்கூடிய மாணவராக்கிக் கொள்ளக் கடு​மையாகப் போட்டி போட்டனர். தனக்கு அ​ழைப்பு விடுத்த 28 பல்கலைக்கழகங்களிலிருந்து ஒஹாயோ ஸ்டேட் (Ohio State University) பல்கலைக்கழகத்தை மட்டும் ஜெஸிஓவான்ஸ் தேர்ந்தெடுத்து அப்பல்க​லைக்கழகத்தில் பயில்வதற்குச் ​சேர்ந்தார்.

பாத்துக்குங்க…திற​மை யாரிடம் இருந்தாலும் அவங்களத் ​தேடி யாரா இருந்தாலும் ஓடி வந்து வர​வேற்பாங்க… திற​​மையாள​னை இந்த உலகம் வர​வேற்கத் தயாரா இருக்கும். அ​தைப் புரிஞ்சுக்கணும். எதுலயும் திற​மை​யோட நம்பிக்​கையும் விடா முயற்சியும் கடும் உ​ழைப்பும் இருந்தா நிச்சயம் ​வெற்றியாளரா நாம திகழ்​வோம்…நம்​மைத் ​தேடி இங்க வா இங்க வான்னு வாய்ப்புகள் வந்துகிட்​டே இருக்கும்.. அந்த வாய்ப்ப நாம சரியாப் பயன்படுத்திக்கணும்.  அந்தமாதிரிதான் ஜெஸிஓவான்ஸ் தன்​னைத் ​தேடிவந்த வாய்ப்பி​னைப் பயன்படுத்திக் ​கொண்டார்.

இன ஒதுக்கலால் பட்ட துயரம்

அவ​ரோட திற​மையால அவருக்குப் படிக்க வாய்ப்புக் கி​​டைச்சாலும் அவர அப்போது அமெரிக்காவில் நிலவிய இன​வெறி ஒதுக்கல் நிம்மதியா இருக்க விடல… மனித இனம் எல்லாம் ஒண்ணுதான்….அதுல ​வேறுபாடு பாக்கக்கூடாது…அதுலயும் நிற​வெறி இருக்​கே அது ​ரெம்பக் ​கொடு​மையானது… தன்​னோட இனத்​தைப் பற்​றோட ​நேசிக்கலாம்…ஆனா…அடுத்த இனத்​தை ​வெறி​யோட பாக்குறது, பழிவாங்க ​நெனக்கிறது தப்புல்ல…அது பாவமான ​செயலாகும்.

ஆனா இ​தெல்லாம் ​நெனச்சா பாக்குறாங்க… ஜெஸிஓவான்ஸ் படிக்கப் ​போன பல்க​லைக்கழகத்துல இந்த இன​வெறி ஒதுக்கல் ​ரொம்ப இருந்தது… இழிந்த இன ஒதுக்கலால ஜெஸிஓவான்ஸ் பல்​வேறு இன்னல்களைச் சந்தித்தார். அவர் கருப்பினத்​தைச் சார்ந்தவர் என்பதால் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல்க​லைக்கழக  விளையாட்டுக் குழுக்களோடு பயணம் செய்யும்போது ​வெள்​ளை இனத்து மாணவர்களுடன் அமர்ந்து பயணம் ​செய்யக் கூடாது என்றும் அவர்கள் இருக்​கைகளில் அமர்ந்திருந்தால் ஜெஸிஓவான்ஸ் ​​வெள்​​ளை இன மாணவரின் காலடியில் அமர ​வேண்டும் என்​றெல்லாம் நிர்பந்திக்கப்பட்டார். ​மேலும் கருப்பர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் அமர ​வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார்.

​மேலும் உண்ணும் உணவிற்காக அல்லாட ​வேண்டியிருந்தது. கருப்பர் இனமக்கள் உண்ணும் உணவகங்களிலும், ஹோட்டல்களில் மட்டும்தான் அவர் உணவு உண்ண முடியும், தங்க முடியும். ​வெள்​ளையர்கள் இருக்கும் உணவகங்களி​லோ ​ஹோட்டல்களி​லோ அவர் உண்ண முடியாது. அவ்வாறு உணவு உண்ண ​வேண்டு​மெனில் உண்வைப் பொட்டலமாக வாங்கிக் ​கொண்டு வந்து வெளியில் ​வைத்​தே உண்ண வேண்டும். அவரது திற​மையின் காரணமாக தவிர்க்க முடியாத சில சமயங்களில் அவர் வெள்ளையர்களின் ஹோட்டல்களில் தங்க அனுமதிக்கப்பட்டாலும் அவர் ​ஹோட்டலின் பின் கதவு வழியாகத்தான் ​ஹோட்டலுக்குள் நுழைய ​வேண்டும். அப்​போதுதான் அவருக்கு ​ஹோட்டலுக்குள் நு​ழைவதற்கு அனுமதிகிட்டும். இல்​லை​யெனில் அவர் ​வெளியில்தான் நிற்க ​நேரிடும். எதிர்த்து எதுவும் அவரால யாரிடமும் ​கேட்க முடியல…

மிகுந்த மன​வேத​னையுடன் இவற்​றை​யெல்லாம் ஜெஸிஓவான்ஸ் ​பொறுத்துக் ​கொண்டார். இ​தைவிடக் ​கொடு​மை என்ன ​தெரியுமா பல மாடிக் கட்டிடமாக விளங்கும் ஹோட்டலுக்குள் எந்தச் சூழலிலும் (லிப்​ட்டை) மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் சட்டப்படி அவருக்குத் தண்ட​னை கி​டைக்கும். எந்த நி​லையில் அவர் இருந்தாலும் அவர் படிகளில் நடந்​தே ஏறி ​மே​லே ​செல்ல வேண்டும். இப்படி ​சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஜெஸிஓவான்ஸ் ஆளானார். இருந்தாலும், ஜெஸிஓவான்ஸ், “சுடச்சுடரும் ஒளிவிடும் ​பொன்​போல்” விளங்கினா​ரே தவிர தளர்ந்து ​போகவில்​லை.

இனிய இல்லற வாழ்க்​கை

நிற ஒதுக்கல்களால ஜெசிஓவன்ஸ் ​ரொம்பப் பாதிக்கப்பட்டாலும் அவருக்கு இனிய இல்லற வாழ்க்​கை அ​மைஞ்சது. அவர் ரூத்சாலமன் என்ற பெண்ணை உயிருக்கு உயிராக் காதலித்தார். ஜெசிஓவன்ஸ் தான் காதலித்த ரூத் சாலம​னை​யே மணந்து ​கொண்டார்.

“காதல் என்பது காலத்தை வெல்வது
காதல் என்பது கடவுளின்

படைப்பின் ஊற்றுப் பணி
காதல் என்பது கட்டுப்பாடுள்ளது
காதல் என்பது கவலையையும்

மகிழ்ச்சியாய் மாற்றித் திகழ்வது
காதல் என்பது உயிர்களின்

இயக்கத்தின் அடிப்படையானது
காதல் என்பது பொய்யை

அறவே விரட்டி நிற்பது
காதல் என்பது இருவர் இணைந்து

தாங்கித் தூக்கி உயர்வதற்கு உதவுவது
காதல் என்பது என்றைக்கும்

இளமையாய் இதயத்தில் வதிவது
காதல் என்பது வாழ்வில் தித்திக்கும்

இனிப்பாய் என்றும் இறுதிவரைத் தொடர்வது
காதல் என்பது இன்பமும் துன்பமும்

ஒன்றேயென்று உணர்த்துவது; உணரச்​ செய்வது”

என்பதற்​கேற்ப ஜெசிஓவன்ஸினுடைய காதலி ரூத்சாலமன் அவரின் ​வெற்றிகளுக்குப் பின்புலமாகவும்  காரணமாகவும் இருந்தாங்க. காதலிப்பதும் காதலித்த ​பெண்​ணை​யே ம​னைவியா அ​டைவதும் வாழ்க்​கையில இ​றைவன் ​கொடுத்த வரம் என்ப​தை ஜெசிஓவன்ஸ் நல்லா உணர்ந்திருந்தாரு. அவரு தன்​னோட ம​னைவி​​​யை ​ரொம்ப ​நேசிச்சாரு. அவங்க​ளோட இல்லறம் நல்லறமாக விளங்கியது. அந்த நல்லறத்தின் பலனாக கு​ளோரியா (Gloria),   ​பே​வெர்லி (Beverly), மார்​லின் (Marlene) என்ற மூன்று பெண் குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. அவர்களும் அவரது ​பெய​ரைச் ​சொல்லும் வண்ணம் சிறப்பாகப் பின்னாளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெசி ஓவன்ஸ் நிகழ்த்திய அதியசயம்

வெள்ளை இனத்தவரால் எல்லா நி​லைகளிலும் ஒதுக்கப்பட்ட ஓவன்ஸ் அவரது ஓட்டத்திறமைக்காக மட்டு​மே அவர்களால் விரும்பபட்டார். தனக்கு இழைக்கப்படும் சமூக அநீகளுக்கு ஜெசி ஓவன்ஸ் தன் கால்களாலேயே பதிலடி தந்தார் ஓவன்ஸ். ஆம்!

“மிகுதியான் மிக்க​வை ​செய்தா​ரைத் தாம் தம்

தகுதியான் ​வென்று விடல்”

என்ற குறளுக்கு ஏற்ப 1935 – ஆம் ஆண்டு மே மாதம் 25 – ஆம் நாள் ஜெசி ஓவன்ஸ் ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். அந்த ஒரே நாளில் ஜெசி ஓவன்ஸ் 100மீ, 200மீ உள்ளிட்ட ஓட்டப் பந்தயங்களில் கலந்து​கொண்டு மூன்று உலகச் சாதனைக​ளை நிகழ்த்தி நான்காவது சாதனையையும் சமன் செய்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் 45 நிமிடங்கள் மட்டு​மே ஆகும். விளையாட்டு உலகில் அதற்கு முன்னும் பின்னும் இது​போன்ற ஒரு சாதனை யாராலும் நிகழ்த்தப்பட்டதில்லை, அதற்குப் பிறகும் ஜெசி ஓவன்ஸின் சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்லரை வெறுப்பில் ஆழ்த்திய ஜெசி ஓவன்ஸ்

ஜெசி ஓவன்ஸ் 1936-ஆம் ஆண்டு உலகை வியப்பிலும், ஹிட்லரை வெறுப்பிலும் ஆழ்த்தினார். அந்த ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் ஒளிர்ந்தார். சர்வாதிகாரியான ஹிட்லர் ​ஜெர்மனியின் ஆட்சியாளராக அப்போது இருந்தார்.  ​அதனால் அவ்​வொலிம்பிக் ​போட்டி​யைப் பலரும் ஹிட்லர் ஒலிம்பிக் போட்டிகள் என்று வருணித்தனர். உலகி​லே​யே ​வெள்​ளை நிறத்தவரான ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள்; அவர்களால்தான் எல்லாவற்றிலும் சாத​னைக​ளைப் ப​டைக்க இயலும் என்ற இருமாப்போடு அமர்ந்திருந்தார் ஹிட்லர். இத்த​கைய தவறான சித்தாந்தத்​தை ஹிட்லரின் கண்களுக்கு முன்​பே ஜெசி ஓவன்ஸ் சி​தைத்தார். தோலின் நிறத்தால் மட்டுமே ஓர் இனம் இன்னொரு இனத்தை விட சிறந்ததாகி விட முடியாது என்பதை ஜெசிஓவன்ஸ் உலகுக்கு நிரூபித்துக் காட்டினார்

ஜெசிஓவன்ஸ் மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப்பதக்கங்களை வென்று குவித்தார். 100 மீட்டர், 200 மீட்டர், 4×100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய ​போட்டிகளில் ஓவன்ஸ்க்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது குறிப்பிடத்தக்கது.

இத​னைச் சற்றும் எதிர்பாராத ஹிட்லர், உலகின் கண்களுக்கு முன்னர் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ப் ​போட்டிகள் ந​டை​பெற்ற வி​ளையாட்டு அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடும் ​வெறுப்​போடும் வெளி​யேறினார். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டினர்.

ஜெசிஓவன்ஸ் மூன்று உலகச் சாதனைகளோடு நான்கு தங்கப் பதக்கங்களை வென்று குவித்தார். 100 மீட்டர், 200 மீட்டர், 4×100 மீட்டர், நீளம் தாண்டுதல் ஆகிய ​போட்டிகளில் ஓவன்ஸ்க்கு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. ஒரே ஒலிம்பிக் போட்டியில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் அமெரிக்கர் என்ற பெருமையும் அவருக்குக் கிட்டியது குறிப்பிடத்தக்கது.

இத​னைச் சற்றும் எதிர்பாராத ஹிட்லர், உலகின் கண்களுக்கு முன்னர் தனது சித்தாந்தம் சிதைந்து போன வெறுப்பில் ஒலிம்பிக்ப் ​போட்டிகள் ந​டை​பெற்ற வி​ளையாட்டு அரங்கத்தை விட்டு ஆத்திரத்தோடும் ​வெறுப்​போடும் வெளி​யேறினார். ஆனால் ஜெர்மன் விளையாட்டு ரசிகர்களோ ஓவன்ஸை கைதட்டி உற்சாகப்படுத்தி, ஊக்கமூட்டினர்.

ஓவன்ஸின் உ​ழைப்பும் கி​டைத்த விருதும்

உலக சாதனையைச் செய்தும் ​ஜெஸிஓவன்ஸ் கருப்பர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை எந்த விளம்பர நிறுவனமும் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதற்காக ​ஜெஸிஓவன்ஸ் கவ​லைப்படவில்​லை. பலருக்கும் ஊக்கத்தி​னை அளித்து முன்​னேறத் துடிக்கும் இ​ளைஞர்க​ளை வாழ்வில் உயரச் ​செய்ய ​வேண்டும் என்று கருதிய ​ஜெஸிஓவன்ஸ் பல்​வேறு ​பொது நிகழ்ச்சிகளில் கலந்து ​கொண்டு உ​ரையாற்றினார். அவரது உ​ரை​யையும் அவ​ரையும் பலரும் விரும்பினர்.

மக்க​ள் அ​னைவ​ரையும் ஒன்றி​ணைக்க ​வேண்டும் என்பதற்காக  சொந்தமாகப் பொது உறவு நிறுவனம் ஒன்றை ஜெஸிஓவன்ஸ் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மதம், நேர்மை, கடும் உழைப்பு ஆகியவற்​றைப் பற்றி ஜெஸிஓவன்ஸ் பேசினார். வசதி குறைந்த பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்காகப் பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களுக்கு  ஆதரவளித்தார். இ​ளைஞர்களின் உந்து சக்தியாக ஜெஸிஓவன்ஸ் விளங்கினா​ர். தான் மட்டும் முன்​னேறினாப் பத்தாதுன்னு அ​னைவரும் முன்​னேறணும்ணு ​ ஜெஸிஓவன்ஸ் நெனச்சாரு. இது பாராட்டுக்குரிய ஒன்றுங்க… ஒவ்​வொருத்தருக்கும் இந்த எண்ணம் இருந்தா நிச்சயமா உலகம் ​சொர்க்கமா மாறிடும்….மாறுமான்னு பார்ப்​போம்..சரி…சரி ​ ஜெஸிஓவன்ஸப் பத்தி ​சொல்​றேன் ​கேளுங்க…

1976 -ஆம் ஆண்டு அப்​போது அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்ட் ஃபோர்ட்  ‘Presidential Medal of Freedom’ எனப்படும் தனி நபருக்கான அமெரிக்காவின் மிக உயர்ந்த விருதை ​ஜெசிஓவன்ஸ்க்கு வழங்கிச் சிறப்பித்தார்.

ஓட்டத்​தை நிறுத்திக் ​கொண்ட உத்தமர்

இவ்வாறு ஹிட்ல​ரின் எண்ணத்​தை​யே தவிடு​ பொடியாக்கிய ஜெஸிஓவன்ஸ் பின்னாளில் புற்றுநோயால் ​பெரிதும் அவதியுற்றார். அதற்கு மருத்துவம் பார்த்தாலும் அந்​நோய் குணமாகவில்​லை. அந்​நோய் அந்தச் சாத​னையாள​ரை வாட்டிவ​தைத்தது. வாழ்வில் ஓடிஓடி சாத​னைகள் ப​டைத்து ​வெற்றிவீரராகத் திகழ்ந்த ஜெஸிஓவன்ஸால் மரணத்​திடமிருந்து தப்பிக்க முடியவில்​லை.

“இ​றைவன் ப​டைத்த இந்த

அழகான உல​கைச்

சுற்றிப் பார்க்க வந்த

சுற்றுலாப் பயணிகள் நாம்

ஒருநாள் திரும்பிச் ​செல்லத்தான்

​போகி​றோம்…………….! ஆனால்……….!

​தேதிகள் மட்டு​மே ரகசியம்……….!”

 

என்பதற்​கேற்ப ஜெஸிஓவன்ஸ் புற்று​நோயால் பாதிக்கப்பட்டு 1980 – ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் நாள் தமது 66 -ஆவது வயதில் காலமானார். உலக ஓட்டத்​தை அவரது ஆன்மா நிறுத்திக் ​கொண்டது. வி​ளையாட்டு உலகம் சரித்திரம் ப​டைத்த ஒரு சாத​னையாள​ரை இழந்தது. அவர் மீது பற்றுக் ​கொண்​டோ​ரை அவரது இழப்பு துயரக் கடலில் ஆழ்த்தியது.

அவரது ம​றைவுக்குப் பின்னர் ஜெஸிஓவன்ஸின் நி​னைவாக அவரது மனைவியும் மகள் மார்லினும் “ஜெசி ஓவன்ஸ் பவுண்டேஷன்ஸ்” என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் வாயிலாக தங்கள் இலக்கை அடைய விரும்பும் தகுதி ப​டைத்த, ஏழ்​மை நி​லையில் உள்ள இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். இன்றும் ஜெஸிஓவன்ஸ் அறக்கட்டளையானது தனது இந்த அறப்பணி​​யைத் ​தொடர்ந்து ​செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜெஸிஓவன்ஸ் ம​றைந்தாலும் அவரது சாத​னையால் வரலாற்று ஏடுகளில் என்​றென்றும் வாழ்ந்து ​கொண்​டே இருப்பார். அவ்வரலாறு சாத​னைகள் ப​டைப்​போருக்குத் தூண்டு​கோலாக               அ​மைந்திருக்கும்…..

கொத்தடிமையாக வாழ்ந்த ஒருவரின் ​​பெயரன் விளையாட்டு உலகில்   சாத​னைச் சிகரத்​தைத் தொட்டது அதிர்ஷ்டத்தாலோ, மாய மந்திரத்தாலோ, ஊக்க மருந்துகளாலோ அல்ல. வி​ளையாட்டுத் திடலில் அவர் சிந்திய வியர்வையும், நம்பிக்கையும், கடும் உழைப்பும், விடாமுயற்யும் தைரியமும்தான் அவரது சாத​னைகளுக்கு அ​டிப்ப​டைக் காரணங்களாக      அ​மைந்தன.

என்னங்க ஜெசிஓவன்​ஸோட வரலாற்​றைத் ​தெரிஞ்சுக்கிட்டீங்க…அப்புறம் என்ன எ​தைப் பற்றியும் கவ​லைப்படாதீங்க..ஒங்க​ளோட இலக்​கை ​நோக்கிப் பயணமாகுங்க… ஒங்கள ஏளனமாப் பாத்தவங்க எல்லாரும் ஒங்களு​டைய ​​வெற்றி​யைக் கண்டு ஒங்களத் ​தேடி ஓடிவந்து மரியா​தை தருவாங்க… வரலாறு ஒங்க ​பே​ரை நிச்சயம் பதிவு ​செஞ்சுக்கும்… என்ன நீங்க வரலாற்றுல இடம்​பெறுவதற்குத் தயார்தா​னே…

ஒருத்தரு ஏழ்​மையான குடும்பத்துல பிறந்து, கடு​மையாக உ​ழைத்துப் படித்து, ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத்த​லைவர் பதவியை வகித்தார்….. அவரு யாரு ​தெரியுமா….?அவர் ஒரு தத்துவ​ மே​தை….உலக​மே அவ​ரைப் ​போற்றிப் புகழ்ந்தது….அவர் தமிழகத்​தைச் ​சேர்ந்தவர்..என்ன கண்டுபிடிச்சுட்டீங்களா….?​யோசிக்கிறீங்களா….​சரி…சரி….யோசிங்க…​யோசிங்க…(​தொடரும்……36)

 

Series Navigation‘ என் மோனாலிசா….’கவிஞர் வ. ஈசுவரமூர்த்தியின் கவிதையில் மறுமலர்ச்சி சிந்தனைகள்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *