திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3

This entry is part 2 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 

நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை.

ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய சமூகப்புரட்சி என்றே சொல்லலாம்.

 

நாடகம் பார்க்க பஞ்சமர்க்கு இடமில்லை என்று நுழைவுச்சீட்டில் அச்சடித்து வெளியிட்டக் காலக்கட்டம், பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்விநிலையங்களில் ஆதிதிராவிடர், கிறித்துவர், இசுலாமியர்கள் சேர முடியாத காலக்கட்டம். பேருந்துகளில் ஆதிதிராவிடர்கள் ஏற அனுமதியில்லை,

அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க மாட்டோம் என்று சட்டங்கள் இருந்தக் காலக்கட்டம். இச்சமூக சூழலில் நீதிக்கட்சி கொண்டுவந்த சட்டங்கள் மிகவும் புரட்சிகரமானவை தான்.

 

பேருந்துகளில் குறிப்பிட்ட சாதியை ஏற்றமாட்டோம் என்பதைக் கடைப்பிடிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு அவர்கள் லைசன்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.

உள்ளாட்சி துறையிலோ தனியார் நிறுவனங்களாலோ நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்க மறுக்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தொகை உடனே நிறுத்தப்படும் என்று கூறி மான்யம் பெறுவதற்கான

முன்நிபந்தனையாக இதை மாற்றியது ஒரு பெரும்சாதனை. அப்படி மாற்றப்பட்ட பள்ளிகள் 1936ல் 9614 பள்ளிக்கூடங்கள் என்பதை மறப்பதற்கில்லை.

 

இந்த இயக்கத்தின் மூன்றாவது கட்டத்த்தில் தலைமை ஏற்கும் தந்தை பெரியார், அவர் கண்ட சுயமரியாதை இயக்கம் , திராவிடர் கழகம் சில கொள்கைகளை உரக்கப்பேசியது.

 

1950ல் ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.

 

நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்

நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்

நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி

நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம்

என்றார்.

அவருடைய கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார். மேனாட்டில் நாத்திகம் என்பது முழுக்கவும் அறிவியல் பார்வை. ஆனால் பெரியார் பேசிய நாத்திகம் என்பது முழுக்க முழுக்க சமூகநேயத்தை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உதவியாகத்தான் அறிவியல் ஆயுதத்தைக் கையில்  எடுத்துக் கொண்டார்.

 

சூத்திர பஞ்சமர்களுக்கு இடையில் நிலவிய தீண்டாமையையும் சேர்த்தே எதிர்த்தார். அகமணமுறை தான் சாதியம் வாழ்வதற்கான இன்னொரு காரணம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால் தான் சாதிமறுப்பு திருமணங்களையே அவரே முன்னின்று ந்டத்தினார் . . சாதியம் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றியதற்கு மனுசாஸ்திரத்தை ஏற்றுக்கொண்ட பிராமணியம் தான் காரணம் என்று உறுதியாக நம்பினார். அதானாலேயே இந்துமதத்தையும் இந்துமதக்காவலர்கள் என்று  சொல்லிக் கொண்டவர்களையும் கடுமையாக எதிர்த்தார்.

 

பெரியார் பேசிய இந்துமத வைதீக எதிர்ப்பு, சாதி ஒழிப்பு , சமத்துவம் ஆகிய கருத்துகளை அவருக்கு முன்னரே தமிழ்மண்ணில் பேசி

 

எழுதி இயக்கம் கண்டு போராடிக்கொண்டிருந்த ஆதிதிராவிட

சமூகம் மிக இயல்பாக பெரியாரின் இயக்க செயல்பாடுகளால்

களப்பணிகளால் ஈர்க்கப்பட்டார்கள்.

 

திராவிட இயக்க வரலாற்றில் பெரியாரின் காலக்கட்டத்தில் நடந்த மிக முக்கியமான மாற்றமாக இதை நான் கருதுகிறேன்.

ஏனேனில் நான் குறிப்பிட்டது போல இயக்க வரலாற்றின்

பாதையில் மூன்றாவது கட்டமான ஒன்றிணைதல்

பெரியாரின் காலத்தில் சாத்தியப்பட்டுவிட்டது.

 

இதை  மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம்

( தொடரும்)

Series Navigationவீடு திரும்புதல்க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராகசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்நட்புகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்புஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்ததுஅம்மாகுட்டிக்கான கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணிதினமும் என் பயணங்கள் – 13சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்கம்பனின் புதுமைப்பெண் சிந்தனைஉயர்ந்த உள்ளம் உயர்த்தும்திண்ணையின் இலக்கியத் தடம் -31குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’’ரிஷி’யின் கவிதைகள்ரொம்ப கனம்
author

புதிய மாதவி

Similar Posts

7 Comments

  1. Avatar
    smitha says:

    சூத்திர பஞ்சமர்களுக்கு இடையில் நிலவிய தீண்டாமையையும் சேர்த்தே எதிர்த்தார். அகமணமுறை தான் சாதியம் வாழ்வதற்கான இன்னொரு காரணம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால் தான் சாதிமறுப்பு திருமணங்களையே அவரே முன்னின்று ந்டத்தினார் .

    This is a totally false statement. During EVR’s time, dalits were employed by his party only for serving tea in meetings etc.,

    Even today, DK party hardly has dalits as party members. The self respect marriages that EVR conducted were only amongst non brahmin castes.

    There is a wonderful postin tamilhindu.com which I reproduce here :

    வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம்.

    தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பிற்படுத்தப் பட்டோரின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது.

    நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பிற்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில்.

    இந்த கொடுமையான அடக்குமுறைகளை – அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

    தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட (?) ஈ.வே.ராமசாமி நாயக்கர் தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேரா பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிராமணர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் – தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை எதிர்த்தாரா?

    பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே ஈ.வே.ரா. வகித்த பாத்திரம் எது? என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

    ஈ.வே.ரா. கூறுகிறார் :-
    ‘‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு 25.4.1926)

    ஈ.வே.ரா. கூறுகிறார் :-
    “தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்குச் செய்ததாகுமே ஒழிய, உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது……………. ” (குடியரசு 16-6-1929)

    ஈ.வே.ரா. கூறுகிறார் :-
    ‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு 11.10.1931)

    ஈ.வே.ரா. கூறுகிறார் :-
    ‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)

    இவ்வாறு ஈவேரா தான் சூத்திரன் என்று சொல்லப்படுபவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியபோதும் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல் சில தலித் எழுத்தாளர்களும் கூட ஈவேரா தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதுபோல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.

    பிராமணர்கள் பிற்படுத்தப்பட்டவர்களையும் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அந்த உந்துதலினாலேயே ஈவேரா பிற்படுத்தப்பட்டவர்களின் தீண்டாமை விலங்கை தகர்த்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே அதுவாகத்தான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட வேண்டும், அவர்களின் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவருக்குக் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்கின்ற கொடுமைகளை ஈவேரா எதிர்த்ததே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை.

    ஆனால் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்ய
    வேண்டும் என்று ஈவேரா கூறுகிறார் :-
    ‘‘உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால், இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்க வேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால், உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்.’’ (குடியரசு 16-6-1929)

    இதுதான் அவருடைய தீர்வு. இதில் கிராமவாசிகள் யார்? பிராமணர்களா? பிற்படுத்தப்பட்டவர்களா? கிராமவாசிகள் தொண்ணூற்றைந்து சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்தானே? அவர்கள் தானே தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்? அதை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்ற அடைமொழி கொடுப்பது ஏன்? அவர்களை காப்பாற்றுவதற் காகத்தானே? இதே அந்த கிராமவாசியின் இடம் அக்ரஹாரமாக இருந்தால் பிராமணர்கள் என்றுதானே சொல்லியிருப்பார்? பின் ஏன் பிற்படுத்தப்பட்டவர்களை நேரடியாக சொல்லாமல் கிராமவாசிகள் என்று சொல்ல வேண்டும்?

    ஏனென்றால் அவர்கள் தன் சமுதாயம் அல்லவா?

    மேலும் ஈ.வே.ரா. கூறுகிறார் :-
    “ரொக்கச் சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அனேகமாய்ப் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்கார்களிடமும் லேவாதேவிக் காரர்களிடமுமே போய்ச் சேரக்கூடியதாக இருப்பதால்”
    (குடியரசு 4-1-1931)

    என்று பெரியார் குறிப்பிடுகிறார். இங்கு பெரியார் பார்ப்பனரை மட்டும் பெயரில் குறிப்பிட்டு விட்டு மற்ற உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் என்று பொதுப்படையாகவே கூறிச்சென்று விடுகிறார். உயர்ந்த சாதிக்காரர், லேவாதேவிக்காரர் யார்? பிற்படுத்தப்பட்டவர்கள்தானே!

    பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமை செய்யும்போது அதை கண்டிக்காமல் அதற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார் ஈவேரா.

    ஈவேரா கூறுகிறார் :-
    ‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் – பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை.” (குடியரசு 11-1-1931)

    இந்த காரணங்களைத்தானே பிராமணர்களும் தங்களுக்குச் சாதகமாக சொல்கிறார்கள்? மத உணர்ச்சி, மத ஆதாரம், முன் ஜென்மத்தின் கர்மம், பூர்வபுண்ணியம், தலைவிதி என்றெல்லாம் சொல்லி தாழ்த்தப் பட்டவர்களை கொடுமைப்படுத்துகிறவர்களுக்கு வக்காலத்து வாங்குவது தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடுகிறவர் என்று சொல்லப்படுகிற ஈவேராவின் தொண்டா?

    ‘‘பெரியார் பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதும் போக்கைக் குறித்த கண்டனவுரையில் பெரிதும் வெப்பம் இல்லை. சில நேரங்களில் பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனரைவிட மிகக் கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை ஒப்புக் கொண்டாலும், பார்ப்பனரல்லாதாரின் கொடுமைக்குக்கூட , பார்ப்பனர்களைக் குறை சொல்லும் போக்கு பெரியாரிடம் இருந்தது. பார்ப்பனக் கருத்தியலுக்குப் பெரிதும் ஆட்படாத வேளாளர் சாதியத்தை தூக்கிப்பிடித்ததற்கும், தீண்டாமை கொடுமைகள் தாண்டவமாடியதற்கும் வரலாறு சான்று பகர்கிறது’’ என்று கோ.கேசவன் குறிப்பிடுவதில் உண்மையும் உள்ளது.

    ஈவேரா ஒவ்வொரு சமயத்திலும் தான் பிற்படுத்தப்பட்டவர் களுக்காகத்தான் பாடுபடுகிறேன் என்பதை அழுத்தந்திருத்தமாக கூறியிருக்கிறார்.

    ஈவேரா கூறுகிறார் :-
    “ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால் – ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்’ என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப்பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா? (குடியரசு 28-7-1945)

    அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லிவிட்டார். அடுத்து இதில் நமக்கு, நாமேயாகும், நம் விகிதப்படி என்ற வார்த்தையெல்லாம் யாரைக்குறிக்கின்றன? சூத்திரர்களான பிற்படுத்தப்பட்டவர்களைத்தானே? அப்படியென்றால் ஈவேரா யாருக்குப் பாடுபட்டார்? யாருக்கு அவர் பெரியாராக இருந்தார் என்பது விளங்கவில்லையா?

    ஈவேரா யாருக்காக பெரிதும் கவலைப்பட்டார், யாருக்காக பாடுபட்டார் என்பதையும் அவருடைய பேச்சுகளில், எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக கொடுக்கப்பட்ட உரிமைகளைப் பற்றிய எரிச்சல்களையும் பார்க்கலாம்.

    ஈவேரா கூறுகிறார் : –
    “……காங்கிரசும் சுயராஜ்யமும் இராமராஜ்யமும், திராவிடர்கள் சூத்திரத்தன்மையில் இருந்து மனிதத் தன்மை பெறாமல் இழிநிலையில் – அடிமை நிலையில் இருப்பதற்கு ஏற்பட்டவைகளே தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் ஏற்பட்டதல்ல என்பதை நான் எங்கும் நிரூபிப்பேன். இல்லாவிட்டால், தேவைக்கு மேற்பட்ட யோக்கியதாம்சத்தை ஏற்படுத்திக்கொண்டு, திராவிடனுக்கு மாத்திரம் தகுதி, திறமை என்கின்ற முட்டுக்கட்டை ஏன்? முஸ்லீம்களுக்குத் தகுதி, திறமை வேண்டியதில்லை; வெள்ளையனுக்கு வேண்டியதில்லை; சட்டைக்காரர்களுக்கு வேண்டியதில்லை. ‘வேறு மதத்திற்குப் போய்விடுவேன்’ என்று மிரட்டுகிற ஆதித்திராவிடர்களுக்குத் தகுதி, திறமை என்பவை – ‘திராவிடனுக்கு இருக்க வேண்டும் என்றபடி’ வேண்டியதில்லை. ஆனால் திராவிடனுக்குப் பள்ளியில் சேர்க்கப்படுவதற்கே தகுதி, திறமை வேண்டும் என்று சுயராஜ்ய பார்ப்பனப் பிரதம மந்திரி சர்க்காரிலுள்ள திராவிடக் கல்வி மந்திரியைக் கொண்டே திட்டம் செய்வாரானால், மனுதர்மமும் விபீஷணத்தன்மையும் எவ்வளவு பலாத்காரமாகக் கையாளப்படுகிறது என்று பாருங்கள்.
    …….
    ……ஆதித்திராவிடர்களையும் முஸ்லீம்களையும் நடத்திய மாதிரி மிக மோசமாக இருந்து வந்தாலும், இப்போது அவர்களுக்குப் ‘பிரைஸ்’ அடித்துவிட்டது. முதல் பிரைஸ் இல்லையானாலும் நல்ல பிரைஸ். அவர்கள் நிலை உயர்த்தப்பட்டுவிட்டது. இனி அவர்களுக்குச் சரியானபடி விகிதாசாரமும் மேலுங்கூட- கண்டிப்பாகக் கிடைக்கும். அவர்களுக்கு சிபாரிசு, குறைகளைக் கேட்க வசதிகள் ஏற்பட்டு விட்டன.
    …..
    ……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர் ‘நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல’ என்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்’ என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்’ என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கி’ என்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம் ‘நான் இந்துவல்ல’ என்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும் ‘இந்து அல்ல’ என்றுதான் – வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்.

    ……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார். (நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947)

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த உரிமைகள் பற்றிய எரிச்சல்கள் ஈவேராவிடம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்திய அரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில உரிமைகள் புரட்சியாளர் அம்பேத்கரால் கிடைத்தது. ஆனால் சூத்திரர்களுக்கு கிடைக்கவில்லையாம். அந்த எரிச்சல்களை எப்படி கொட்டுகிறார் பாருங்கள்!

    ஈவேரா கூறுகிறார் : –
    “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950)

    மேலும் ஈவேரா கூறுகிறார் : –
    ‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’ (விடுதலை 22-9-1951)

    ‘‘ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள்.’’ என்ற ஈவேராவின் பேச்சு எரிச்சலைத்தானே காட்டுகிறது?

    இந்த எரிச்சல் தாழ்த்தப்பட்டவர்களை நன்றியற்றவர்கள் என்று சொல்லுமளவுக்கு ஈவேராவின் குரல் ஒலித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தான்தோன்றித்தனமான பேச்சுக்களையும் தாழ்த்தப்பட்ட தலைவர்களால் போராடி பெறப்பட்ட உரிமைகளையும் கூட தன்னால்தான் பெறப்பட்டது என்ற அகங்காரப்பேச்சுகளையும் ஈவேரா ஒலித்திருக்கிறார்.

    ஈவேரா கூறுகிறார் : –
    ‘‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பார்ப்பானுக்கு விரோதமாகிவிடுகிறது என்பதற்காக சர்க்காரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை 1950ல் எடுத்துவிட்டார்கள். பிறகு நாங்கள் செய்த கிளர்ச்சிகளின் பயனாகச் சட்டத்தில் கொஞ்சம் திருத்தம் செய்திருக்கிறார்கள். படிப்பு, உத்தியோகம், சமுதாயம் ஆகிவற்றில் பின்தங்கியவர்களுக்குச் சலுகைகாட்டத் திட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று அரசியல் சட்டத்தில் எழுதியிருக்கிறார்கள். அரசியல் திட்டத்தால் ஆதிதிராவிடருக்கு மாத்திரம் அவர்களுக்குரிய விகிதாச்சாரம் கிடைத்திருக்கிறதே ஒழிய, மற்ற திராவிட மக்களுக்கு விகிதாச்சாரம் கிடைக்கவே இல்லை. இப்படி நாங்கள் கூறுவதை ஆதிதிராவிடர்கள் தங்களுக்கு விரோதமானது என்று கூறிக் கொள்கிறார்கள். மற்ற திராவிட மக்களுக்கு அவர்களால் (ஆதித்திராவிடர்களால்) ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும், நாம் எவ்வளவோ செய்தோம். அப்படி இருந்தும் ‘பிராமணர்கள் தேவலை, சாதி இந்துக்களால்தான் எங்களுக்குத் தொல்லை’- என்று ஆதித்திராவிடர்கள் கூறுகிறார்கள். இது நன்றியற்றப் பேச்சு. அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் யார்? பார்ப்பனர்களா? நாங்கள் செய்த கிளர்ச்சியாலும், முயற்சியாலும்தான் இன்று அவர்கள் சமுதாயத்தில் தலையெடுக்க முடிந்தது. அவர்கள் படிப்புத் துறையில் முன்னேற வழிகாட்டியவர்கள் நாங்களே. ஆதித்திராவிடர்களின் கோயில், தெரு நுழைவுக்கு முதல்முதல் போராடியவர்கள் நாங்கள்தாம். ஆதித்திராவிடர்கள் படித்தவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் ஆனார்கள் என்றால், பார்ப்பனர்களாலா? இதற்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்தவில்லை என்றாலும், நமக்கு விரோதிகளாகவாவது ஆகாமல் இருக்க வேண்டாமா?’’ (விடுதலை 21-9-1956)

    ஈவேரா சொல்கிற உரிமைகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகள். (பார்க்க – நீதிக்கட்சியின் மறுபக்கம், அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய மக்களுக்கு உழைத்த பெருமக்கள் – விரிவான வரலாறு, உணவில் ஒளிந்திருக்கும் சாதி) தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் எந்தவிதமான போராட்டங்களையும் இதுவரை நடத்தியதில்லை. வைக்கம்போராட்டம்

    காங்கிரசின் போராட்டம். காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி நடந்த போராட்டம். ஈவேரா அப்போராட்டத்தில் காங்கிரஸ்காரராகவே கலந்துகொண்டார். இதில் கூட ஒரு சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தெருக்களில் நடக்கின்ற, கோயில்களில் நுழைகின்ற போராட்டத்தை ஈவேரா தலைமையேற்று தமிழ்நாட்டில் நடத்தியதுண்டா? ஏன் நடத்தவில்லை?

    அதுமட்டுமல்ல ஈவேராவின் சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததே தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவினால்தான். அந்த நன்றியை மறந்துவிட்டு தாழ்த்தப்பட்டவர்கள் நன்றியற்றவர்கள் என்று கூறுகிறார் ஈவேரா.

    ஆகவே ஈவேரா சொல்வதெல்லாம் பித்தலாட்டம், பிதற்றல், எரிச்சல் தவிர வேறொன்றுமில்லை.

    மேலும் ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களை எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் கொண்டுள்ளார் என்பதையும் அவருடைய பேச்சிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஈவேரா கூறுகிறார் : –
    ‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’
    (விடுதலை 11.11.1957)

    ஈவேரா கருத்துப்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 இடம் கொடுத்தால்கூட அவர்கள் முன்னேறமாட்டார்கள் என்பது. ஆனால் அதை பார்ப்பனர்கள் கருத்தாகவே கூறிவிட்டார். பார்ப்பனர்கள் எங்கே அப்படி சொன்னார்கள் என்று கேட்டால் பார்ப்பனர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள் என்று ஒருபோடு போடுவார்கள், வரலாறு – சரித்திரம் – அப்படித்தான் நமக்கு காட்டுகிறது என்றெல்லாம் கதைவிடுவார்கள்.

    புரட்சியாளர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டமக்களுக்கு வாங்கித்தந்த உரிமைகள் பற்றி ஈவேரா பலதடவை எரிச்சல்பட்டிருக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்காக வாதாடவில்லை என்று ஒருதடவையும், வாதாடினார் என்று ஒருதடவையும் மாறி மாறி ஈவேரா பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் புரட்சியாளர் அம்பேத்கர் ஏதோ செய்யக்கூடாத குற்றத்தைச் செய்துவிட்டமாதிரி ஈவேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.

    ஈவேரா கூறுகிறார் :-
    ‘‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லே… அந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னா? உங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதி-திராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’ (17.1.68 கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38)

    தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமைகள் கிடைத்ததை ஈ.வே.ரா எவ்வளவு மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார் பாருங்கள். ஆகவே ஈவேரா தாழ்த்தப்பட்டவர்களுக்கு எப்போதுமே தன் இயக்கத்தின் சார்பாக போராடியது இல்லை. அவர் போராடியது எல்லாம் பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதிகளுக்குத்தான். ஆகவே பெரியார் பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களுக்குத்தான் பெரியாரே தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்கு அல்ல. இதை தாழ்த்தப்பட்டவர்கள் உணரவேண்டும். ஈவேரா பின்னால் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர் என்ற பொய்ப்பிம்பத்தை அழிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வரலாற்றுகளை நாம் படித்தறியும்போதுதான் இந்த மாதிரி ஆட்களின் பொய்ப்பிம்பத்தை உடைத்தெறிய முடியும். ஆகவே தாழ்த்தப்பட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். உண்மை புரியும். நமது உரிமைகள் யாரால் பெறப்பட்டது என்பது. அதுவரை இந்தமாதிரியான பொய்ப்பிம்பத்தை வைத்து தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றும் திராவிட கூட்டம் வல்லூறுகளாய் காத்துக்கொண்டு இருக்கின்றன.

  2. Avatar
    வில்லவன்கோதை says:

    பெரியாரின் தலையாய போராட்டமே சமூகத்தில் மனிதன் மனிதனாக மதிக்கப்பெறவேண்டுமென்பதே தவிற தாழ்த்தப்பட்டன் தலித் என்ற கேள்வி அன்றைக்கு எழவில்லை.அன்றைக்கு இந்த இழிநிலைக்கு அடிப்படை காரணமாக இருந்தது பிராமணீயமும் அது கற்பித்த கோட்பாடுகளுமே.
    கூறு கூறாய் தோண்டி இந்த சமூகம் பெற்ற பலன்களை பெற்றுத்தந்த தந்தை பெரியாரின் உழைப்பை இழிவு செய்வது வஞ்சகம் என்பதை உணருங்கள்.
    வில்லவன் கோதை

  3. Avatar
    Paramasivam says:

    I hail from the then East Tanjore District.Even as a child,I know that the Scheduled Caste laborers fighting with their land-lords if they were not treated properly..They used to say that they were followers of Periyar.Every body in that District knew that the evil of untouchability was fought tooth and nail by Periyar.

  4. Avatar
    Paramasivam says:

    The struggle undertaken by Periyar in bringing the communal representation resolution in the Congress Conferences from 1920 to 1925 has been recorded by Naraa.Nachiappan in his book on “Gurukula Porattam”

  5. Avatar
    puthiyamaadhavi says:

    டியர் சுமிதா
    வணக்கம். உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
    என் கட்டுரையில் எவ்விடத்திலும் தந்தை பெரியாரை தலித்துகளின் தலைவராக காட்டும் முயற்சியை நான் செய்யவில்லை. வாசிக்கவும் என் கட்டுரையின் 2 அத்தியாயத்தை. ஓர் அண்மைக்கால வரலாற்று நிகழ்வு, அதை முடிந்தவர ஆய்வு நோக்கில் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே எழுதி இருக்கின்றேன். பெரியார் மட்டும்தான் கலப்பு திருமணங்களை சாதி மறுப்பு திருமணங்களாக நடத்திக் காட்டியவர். அவர் மும்பை தோழர் பெரியவர் தொல்காப்பியனாருக்கு நடத்திய திருமணம் முதல் இன்றைக்கு அரக்கோணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழேந்தி இல்லத்து திருமணம் வரை சாதி மறுப்பு திருமணங்களாக மட்டுமல்ல, மணமகனோ மணமகளோ தலித் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார்கள். இதற்கான புள்ளிவிவரங்கள் இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் இந்த வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இதற்கு சாட்சியாக இருக்கிறேன்.
    இட ஒதுக்கீடு மற்றும் பெரியார் சூத்திரர்களின் தலைவராக இருந்தது என்பதை எல்லாம் இந்து டாட் காம் மற்றும் விடுதலை டாட் காம் பேசிக் கொண்டிருக்கட்டும். நீங்கள் வைக்கும் கேள்விகளுக்கெல்லாம் அன்றே ஜம்னாதாஸ் போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். பார்க்க: http://www.ambedkar.org. என் கட்டுரையில் தலித் இயக்கங்களின் எழுச்சியை திராவிட இயக்கம் காலப்போக்கில் அறுவடை செய்ததும் அதற்கு தன்னலம் கருதாத பெரியார் என்ற ஈர்ப்பு சக்தி ஒரு காரணமாக இருந்தததையும் பார்க்கிறேன். இந்த தாமரை இலை தண்ணீர் உறவு தான் தருமபுரி வரை தன் சுயமுகத்தைக் காட்டி இருக்கிறது என்பதையும் தருமபுரிக்கு நேரடி ஆய்வுக்கு சென்றதன் மூலம் அறிந்து இருக்கிறேன்.
    மீண்டும் நன்றியுடன்,

    புதியமாதவி

  6. Avatar
    puthiyamaadhavi says:

    திரு பரமசிவம் அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
    நீதிக்கட்சியும் பெரியாரும் செய்த சமூக மாற்றங்களை அந்த அரசியல் வட்டத்திலிருந்து வெளியில் வந்து நிற்கும் இப்போதும் ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒரு நிகழ்வைப் பதிவு செய்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் வீடு பத்தமடை, திருநெல்வேலி மாவட்டம். எங்கள் இல்லம்
    அன்பகம் சார்ந்த அனைத்து குடும்ப நிகழ்வுகளிலும் பத்தமடை இலட்சுமண தேவர், ந. பரமசிவம், செல்லபாண்டியன், இரத்தினவேல்பாண்டியன், தம்பிதுரை இவர்களுடன் பத்தமடை இசுலாமிய குடும்பங்கள்… ஒரே திராவிட குடும்பங்களாய் பந்திப் பரிமாறுவார்கள், ஒரே உணவை உண்டு உறவுகளாக வாழ்ந்திருக்கிறோம். அதே காலக்கட்டத்தில் என் சித்தப்பா பி.எஸ்.கோவிந்தசாமி (காங்கிரசு ஆதரவாளர், குடியரசு கட்சி)
    இல்ல நிகழ்வுகளில் காங்கிரசு காரர்களுக்கு தனிப்பந்தி தான் நடக்கும். நான் சொல்லும் இதெல்லாம் 60களில். பெரியாரின் சமூக புரட்சியாகவே இதைப் பார்க்கிறேன். ஆனால் இது வளர்த்தெடுக்கப்பட்டதா? எனக்கு கொடுக்கப்பட்ட சம உரிமை
    மரியாதை என் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு ஏன் மறுக்கப்படுகிறது? இந்தக் கேள்வி சாதியின் கோரமுகத்தை எனக்கு புரியவைத்தது.

  7. Avatar
    smitha says:

    வெண்மணி – ஈவேராவின் எதிர்வினை என்ன?

    ஈவேரா சொல்கிறார்:-

    ‘‘இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை. இது ஜனநாயகத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி பொன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்துவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரச நாயகமாகப் போக வேண்டும் அல்லது தனித் தமிழ்நாடு பிரித்துத் தரப்பட வேண்டும் அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வர வேண்டும். தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் – ஜான்சன்’’

    தமிழ்நாட்டையே நடுங்க வைத்த சம்வத்திற்கு ஈவேரா ஆற்றிய எதிர்வினை இதுமட்டுமே!

    இது எந்த வகையில் பொருத்தமான எதிர்வினையாக இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

    இத்தகையக் காட்டுமிராண்டித்தனம் தீர ஈவேரா சொல்லும் தீர்வு – சரியா? ராஜாவின் ஆட்சியோ, தனிநாடோ, அந்நிய அரசோ வந்து விட்டால் இந்த மாதிரிக் காண்டுமிராண்டித்தனக் கொடூரமான நிகழ்வுகள் நடக்காது என்று எவரால் உத்திரவாதம் தர முடியும்?

    ஜாதியைக் கொண்டுவந்தவர்கள், கடைபிடிப்பவர்கள் பிராமணர்கள் மட்டுமா? கடைபிடிப்பவர்கள் மற்ற சாதி இந்துக்களும்தானே! கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை மிகக் கொடூரமாக நடத்திவருவது சாதி இந்துக்களும் தானே! சாதிவெறி கொண்ட பார்ப்பனர்களை எதிர்த்தது போலச் சாதிவெறி கொண்ட சாதி இந்துக்களையும் எதிர்க்கவில்லையே ஏன்? அதனால்தானே இந்த 44 உயிர்கள் எரிந்துபோனது?

    ஈவேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.

    ‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’

    கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம் பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப் போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!

    கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம் நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக் கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல் போட்டுவிட்டார்.

    இச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், பிராமணரல்லாதாரராகவே இருந்ததால் அவர் கண்டிக்காமலும் போராடாமலும் விட்டதற்கு காரணம். இதுவே கொன்றது பிராமணராக இருந்திருந்தால் ஈவேராவின் நடவடிக்கை எப்படி இருந்திருக்கும் என்பது சொல்லத் தேவையில்லை. முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கழகக்காரர்கள். ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே முன்னெடுக்கவில்லை திராவிடர் கழக ஈவேரா.

    பிராமணருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல் வரும்போது உற்சாகமாக தாழ்த்தப்பட்டோரை உசுப்பிவிடுவதற்காக ஆதரித்த ஈவேரா பிராமணரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் மோதல் வரும்போது தாழ்த்தப்பட்டோரை ஆதரிக்க முன்வரவில்லை. அவரைப் பொறுத்தவரை பிராமணர்களே பிரதான எதிரி. பிராமணரல் லாதார் எதிரிகள் இல்லை. அதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தும் பிராமணரல்லாத உயர்சாதியினரைத் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரியாக கட்டமைத்துவிடக் கூடாது என்பதில் ஈவேரா எப்போதும் விழிப்புடன் இருந்தார். அவர் எப்பொழுதுமே சூத்திரர்கள் பக்கம்தான் இருந்தார் என்பதற்கு சரியான உதாரணமாகக் கீழ்வெண்மணிக் கொடூரத்தில் ஈவேராவின் எதிர்வினையை நாம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *