Posted inகவிதைகள்
ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்
ஸ்வரூப் மணிகண்டன் மறுகரையில் இருப்பதாகச்சொல்லி செய்தியனுப்புகிறாய். நம்மிடையே நதியோடியிருந்த காலம் போய் வெகுநாட்களாகிவிட்டது. இப்போது நான் வந்து நிற்கும் கடலுக்கு எந்தெந்தப்பக்கம் எத்தனைக்கரைகள் என்று யாருக்குத்தெரியும்?