நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன்.
தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன்.
மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் இசக்கியேல் மும்பையிலும் பின் லண்டனிலும் கல்வி கற்றுள்ளார். காலனித்துவத்துவக் கோட்பாடுகளுக்குப் பின்னான இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருந்தார்.தனது 65 ஆவது வயது வரை பத்ரிக்கைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவருடைய கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக அமல்படுத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தனது 80 ஆவது வயதில் 2004 இல் மறைந்தார்.
1976 இல் வெளிவந்த ஹைமன்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எனது கருத்துகளோடு அவரது கவிதைகள் சிலவும் பகிர்ந்துள்ளேன்.
மரபைச் சார்ந்தும் மரபை மீறியும் உள்ள கருத்துக்களை வலிமையாகப் பதிவு செய்கிறார். எல்லாவற்றிலும் இவரின் எள்ளல் தன்மை வெளிப்படுகிறது.காதல் , காமம், பெண் உடல் , திருமண உறவு, பந்தம், அதன் நீட்சி போன்றவற்றினைப் பற்றிப் பேசும் கவிதைகளே இத்தொகுதியில் பெரிதும் இடம் பெறுகின்றன.
வயது வந்தோருக்கான கவிதைகள் என்றும் கூறலாம். குட் பை பார்ட்டி ஃபார் மிஸ் புஷ்பா டி.எஸ் என்ற கவிதை தன் தாய்மொழி வேறாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையில் எழுத்தப்பட்ட ஒரு நையாண்டிக் கவிதையாகும்.
THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.
THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.
எல்லாமே அடல்ட்ஸ் . ஒன்லி – வயது வந்தவர்களுக்கு மட்டும்.
1. PASSION POEMS:-
1. SUMMER :-
TOO WARM
FOR LOVE MAKING
NOT TO WARM
FOR CARESSING.
WE ARE COOL AFTER BATHING
TOGETHER.
(வேனில் காலம்காதல் செய்வதற்கு ஆகாதவெக்கையான பொழுது.மிருதுவாய்த் தடவ ஆகாததல்ல.இணைந்து குளித்தோம்குளிர்ந்தோம். )2. MONSOON:-
YOU ARRIVED
WITH SARI CLINGING
TO YOUR BREASTS AND HIPS
I PUT A KISS UPON YOUR LIPS
NO PART OF YOU
COULD HIDE.
AS YOU DRIED.
( மழைக் காலம்ஸ்தனங்களிலும் இடையிலும்
புடவை நீரொட்டிக் கிடக்கவந்தாய் நீ.உன் உதட்டில் ஒரு முத்தமிட்டேன்.உன் எந்த உறுப்பும்ஒளிய முடியாதுநீ உலரும் போது )3. THE SANSKRIT POET:-
HOW FREELY THEY MENTION
BREASTS AND BUTTOCKS
THEY ARE MY POETIC ANCESTORS.
WHY AM I SO INHIBITED ?
{சமஸ்கிருதக் கவிஞர்எவ்வளவு இலகுவாக அவர்கள்மார்பகங்களையும் பின்புறங்களையும்குறிப்பிட்டுச் செல்கிறார்கள்.அவர்கள் என் கவிதை முன்னோடிகள்.எனக்கு ஏன் இந்த மனத் தடை?. }4. ON GIVING REASONS:-
SHE GAVE ME
SIX GOOD REASONS
FOR SAYING NO
AND THEN
FOR NO REASON AT ALL
DROPPED ALL HER REASONS
WITH HER CLOTHS.
( காரணங்களைக் கையளித்தல் பற்றிவேண்டாம் என்று சொல்வதற்குஆறு சரியான காரணங்களை
அவள் சொன்னாள்.அதன் பிறகுஎந்தக் காரணமுமே இன்றிகளைந்தால் காரணங்களைஅவள் உடைகளோடு சேர்த்து . )5. NAMES:-
I REMEMBER
NOTHING
EXCEPT THAT SHE
UTTERED MY NAME
OVER AND OVER AGAIN
AND I
HERS.
( பெயர்கள்எனக்கு எதுவும்நினைவிலில்லைஅவள் என் பெயரைத்திரும்பத் திரும்பஉச்சரித்துக் கொண்டிருந்ததும்
நான் அவள் பெயரைஉச்சரித்துக்கொண்டிருந்ததும் தவிர )நான் மிகவும் ரசித்த கவிதை இது.
6. A MARRIAGE :-
KRISHNA’S TRICKS
ARE NOT FOR HIM.
NOR RADHA’S WILES
FOR HER.
THEY HAVE A DIFFERENT TRUTH
WITHIN A KINGDOM OF THEIR OWN.
I ENVY THEM.
( திருமணம் :-கிருஷ்ணனின் குறும்புகள்
அவனுக்கானதல்லராதையின் தந்திரமும்அவளுக்கானது அல்ல.தங்களுக்குமட்டுமேயான இராஜ்ஜியத்தில்அவர்களின் யதாரத்தமே வேறு..அவர்களைப் பார்த்துப் பொறாமையுறுகிறேன். )திருமண பந்தத்தில் உழலும் கணவன் மனைவிக்குள்ளாக நிகழும் வெறுப்பு வேதனை மண்டிய இழப்பையும், வாக்குவாதங்களையும் புரிந்து கொள்ளாத தன்மையையும் திருமண வாழ்வின் தெளிவின்மையையும் நிம்மதியின்மையையும் நிரந்தரமற்ற தன்மையையும் பகிர்ந்து செல்லும் கவிதைகள் சில.
7. QUARREL.
ALL NIGHT I TALKED TO YOU
A TROUBLED DREAM
OF MANY WORDS
AND NOT A SINGLE KISS
LET US NOT QUARREL AGAIN
SO I MAY NEVER DREAM
IN ARGUMENTS ALONE.
( சச்சரவுஇரவு முழுவதும் உன்னோடு பேசிக்கொண்டிருந்ததுவார்த்தைகளால் நிறைந்த
ஒரு துன்பமான கனவைப் போலிருக்கிறது.ஒற்றை முத்தம் கூட இல்லை.இனி நாம் சண்டையிட வேண்டாம்.அதனால் வாக்குவாதங்கள் மட்டுமே நிறைந்தகனவுகள் வராதிருக்கட்டும். )பெண்ணின்மேல்/ மனைவியின் மேல் வெறுப்பு மண்டிய கவிதைகள் இவை இரண்டு,. சிறு கோபமும் ஒளிக்காத வன்மமும் வெளிப்படும் வார்த்தைகள்.
8. THE LOSS.
I HAVE LOST MY REASONS
LET IT GO.
DID I CREATE THIS WOMAN
UNTAMABLE AND YET
WILLING TO BE TAMED.?
ONLY SHIVA, MEDITATING
COULD BE IMMOVABLE
IN HER MOVING PRESENCE
AS FOR ME
I HARDLY MEDITATE AT ALL.
( இழப்புநான் என் காரணங்களை இழந்துவிட்டேன்.அது போகட்டும்.அடக்கவே முடியாத
ஆனால்
அடக்கியாளப்பட விரும்பும்
இந்தப் பெண்ணை நான் உருவாக்கினேனா.தியானத்திலிருக்கும் சிவன்மட்டுமேஅசைவற்று இருக்க இயலும்இவளுடைய நகர்வின் இருப்பின்என்னைப் பொறுத்தவரைதியானிப்பது கடினம். )முத்தாய்ப்பாக இருளின் கீதங்களில் நெகிழ வைத்த கவிதைகள் இரண்டு.
9. THE RAILWAY CLERK :-
….. ……………..
ALSO I HAVE GOOD FRIENDS
THAT IS ONLY CONSOLATION.
( ரயில்வே க்ளர்க்எனக்கு நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள்.அதுதான் என்னுடைய ஒரே ஆறுதல் )10. THE COUPLE:-
HIS LOVE IS SMALL
A FLICKERING LAMP
WHILE HERS LIGHTS UP
THE UNIVERSE.
HOW ON EARTH
ARE THEY TO SEE EACH OTHER
IN ITS NORMAL DARKNESS ?
ONLY THE GODS
CAN HELP THEM NOW.
(தம்பதியர்அவனது அன்புசிறுவிளக்குப் போல ஒளிர்கிறது.அவளது அன்போபிரபஞ்சத்தையே ஒளியூட்டுகிறது.உலகின் இயல்பான இருண்மையில்எப்படி ஒருவரை ஒருவர் நோக்குவார்கள்.கடவுளர்கள்தான் அவர்களுக்கு
இப்போது உதவ முடியும். )
- யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு
- நிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்
- ஒரு புதிய மனிதனின் கதை
- வாழ்க்கை ஒரு வானவில் – 21
- ஈரத்தில் ஒரு நடைபயணம்
- எக்ஸ்ட்ராக்களின் கதை
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22
- பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது
- தொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6
- அமர காவியம்!
- சூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.
- உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு
- தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகை
- இந்த நிலை மாறுமோ ?
- அப்பா
- அழகுக்கு அழகு (ஒப்பனை)
- பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு
- பாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி
- வாக்குமூலம்
- சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1
- அதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்
- சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93
- என் சுவாசமான சுல்தான் பள்ளி
- தந்தையானவள் – அத்தியாயம்-1