துணிந்து தோற்கலாம் வா

This entry is part 9 of 33 in the series 4 ஜனவரி 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
 
 
 
வாடா நண்பா !
வாழ்ந்து பார்க்கலாம் வா !
உலகை அளந்து நமக்காய் 
வளைக்கலாம் வா !
வாழ்க்கைக் கடலாய் பரந்து கிடக்கு.
அள்ளி பருக துணிவு மிருக்கு.

எண்ணச் சிறகை மெல்ல விரித்து
பிரபஞ்ச வெளியைக் கையில் நிறுத்து
வாடா ராஜா !
வாழ்ந்து பார்க்கலாம் வா !
வாழ்க்கை நமக்கே, துணிந்து 
தோற்கலாம் வா !

தோல்வியா சோகம் எதற்கு ?
அனுபவ பாடமிருக்கு.
புதிய தொரு கற்றலின் பிறகு,
திட்டத்தைத் தெளிவாய் நகர்த்து
கசிகின்ற எண்ணங்கள் வழியே
தினம் தினம் கனவைப் பருகு !

காட்சிகள் தெளிவாய்ப் படைத்து
வாழ்க்கையை முன்பே நிகழ்த்து
படைப்பவன் நீயே, நீயடா !
உன்னைப் படைத்துப் பார்,  
மாற்றங்கள் விளங்கும்;
எண்ண விதைகள் உன்னிலே இருக்கு.
விதைத்துப் பார் !
அறுவடை உனக்குக் கிட்டும்.

உலகம் வியக்கும் உன்னை
அந்த நாள் இங்கு 
சீக்கிரம் விரைந்து வருது.
கவலை எதற்கு கண்ணா ?
வெற்றி மாலைகள் 
உந்தன் தோள் மீது வீழும்.
சோர்வைக் காலில் துணிந்து 
நசுக்கலாம் வா !
சோகம் எதற்கு, துணிந்து 
தோற்கலாம் வா !

 

Series Navigationசிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *