
மறுநாள் வகுப்பும் கையின் அமைப்பைப் பற்றிதான். தசைகள், இரத்தக் குழாய்கள், நரம்புகள் போன்ற அனைத்தையும் அறிந்துகொள்ளவேண்டும். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. இவை இலத்தீன் மொழி பெயர்கள். இவற்றை நினைவில் வைத்திருப்பது மிகவும் சிரமம் என்பதோடு குழப்பமும் நிறைந்தது. திரும்பத் திரும்ப உச்சரித்தால்தான் நினைவில் நிற்கும்.
உதாரணமாக கையை எடுத்துக்கொண்டால் அதை palm, forearm , arm என்று பிரித்து கூறலாம். இம் மூன்று பகுதியையும் நாம் கை என்றே சொல்லுகிறோம். எப்போதாவது உள்ளங்கை , மணிக்கட்டு, முழங்கை , என்கிறோம். உள்ளங்கையின் ஐந்து விரல்களையும் சேர்த்து palm என்று அழைக்கும் கைப் பகுதியின் தசைகளைத்தான் நாங்கள் அறுத்து பயின்றுகொண்டிருந்தோம். கையின் கட்டை விரல் அல்லது பெருவிரலின் தசைகள் நான்கு. அவற்றின் பெயர்கள் Abductor Pollicis, Opponens, Pollicis , Flexor Brevis Pollicis , Adductor Pollicis என்பவை. ஒரு விரலின் தசைகள் இவ்வாறு நெருக்கமான வகையில் பெயர்கள் கொண்டுள்ளதால் நினைவில் வைத்திருப்பதில் குழப்பம் உண்டாகும். அதைத் தீர்க்கவே நேரடியாக அந்தந்த தசைகளை அறுத்துப் பார்த்து நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது இந்த அறுவைப் பயிற்சியாகும்! கையின் ஒரு விரலின் தசைகளை நினைவில் வைத்திருப்பதே இவ்வளவு சிரமமென்றால் உடலின் அத்தனை தசைகளையும் நினைவில் வைத்திருப்பது எவ்வளவு பெரிய சிரமம்!
உடற்கூறு பயிலும் இந்த இரண்டு வருடங்களும் மனதை வேறு காரியங்களில் செலுத்தாமல் முழுமூச்சுடன் இதைப் பயின்றாகவேண்டும். இல்லையேல் தேர்வில் சிரமம் உண்டாகும். ஒருமுறை தவறினால் ஆறு மாதங்கள் வீணாகும். மீண்டும் தேர்ச்சியுற்றபின்புதான் நான்காம் வருடம் செல்ல முடியும்.
தசைகள் அனைத்துமே எலும்புகளில் இணைந்திருப்பதால் அந்த எலும்புகளைப்பற்றியும் பயின்றாக வேண்டும். ஆகவே உடம்பிலுள்ள அத்தனை எலும்புகளின் பெயர்களையும் அவற்றின் ஒவ்வொரு பகுதிகளையும் தெரிந்திருக்கவேண்டும்.
வகுப்புகள் இரண்டாம் நாள் முடிந்ததும் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கறுப்புப் பெட்டி தரப்பட்டது. அது கனமாகவும் இருந்தது. அதை அறைக்குக் கொண்டுசென்று திறந்து பார்க்கச் சொன்னார் டாக்டர் ஹர்ஷா. அதை பத்திரமாக விடுதிக்குத் தூக்கிச்சென்றோம். எங்களைப் பார்த்த சீனியர்கள் கைகொட்டி சிரித்தார்கள். ஜெபம் செய்துவிட்டு திறந்து பார்க்கச் சொல்லி பயமுறுத்தினார்கள். அறையில் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே நிறைய எலும்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு மண்டை ஓடும் இருந்தது. அந்த எலும்புகளை ஒவ்வொருவரும் தங்களின் அறையில் இரண்டு வருடங்கள் வைத்திருக்கவேண்டும். ஓய்வு நேரத்தில் அவற்றில் ஒவ்வொன்றாக எடுத்து தடவி அதன் அமைப்பையும் அதன் மேடு பள்ளங்களையும் அவற்றின் பெயர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். நான் என்னுடைய மண்டை ஓட்டை மேசையில் வைத்து அழகு பார்த்தேன்! தனியாக இருக்கும்போது அதனுடன் பேசுவேன். அதுவும் என்னிடம் பேசுவதுபோல் தோன்றும். இரவு நேரத்திலும் அது பேசுவதுபோல் கேட்டது. அது வெறும் பிரமை!
அதன் பின்பு குலாட் கேலனுஸ் ( கி.பி. 130 – 200 ) என்பவர் ( பின்பு கெலன் என்று அழைக்கப்பட்டார் ) ஆராய்சிகளின் வழியாக உடலின் செயல்பாடுகளை ஆராயலானார். அவர் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் நீர்மங்களில் சமநிலை குறையும்போது நோய் உண்டாகிறது என்றார். அது உடலின் எல்லா உறுப்புகளிலும் உண்டாகலாம் என்றார். அவர் உடலின் உறுப்புகளை மூன்று தொடர்புடைய பிரிவுகளாகப் பிரித்து விளக்கம் அளித்தார். மூளையும் நரம்புகளும் சிந்தனைக்கும் உணர்வதற்கும் செயல்படுவதாகவும், இருதயமும் தமினிகளும் ( Heart and Arteries ) உடலுக்கு உயிரைத் தருவதாகவும், கல்லீரலும் சிரைகளும் ( Liver and veins ) ஊட்டத்தையும் உடல் வளர்ச்சியையும் உண்டுபண்ணுவதாகக் கூறினார்.அதோடு நில்லாமல் அவர்தான் பரிசோதனைகள் மூலம் உடலியல் கற்பதற்கு முன்னோடியானார். அதைத் தொடர்ந்து 1400 வருடங்கள் கேலன் போதித்த ஆராய்ச்சி தழுவிய உடலியல்தான் மருத்துவ வளர்ச்சியில் பயன்படுத்தப்பட்டது.
- நாசாவின் விண்வெளித் தேடல் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- இதோ ஒரு “ஸெல்ஃபி”
- இலக்கிய வட்டம் வானொலி ஒலிபரப்பின் இரண்டாம் பகுதி
- சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது
- திரை விமர்சனம் தாரை தப்பட்டை
- நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்
- ரிஷியின் 3 கவிதைகள்
- தாரை தப்பட்டை – விமர்சனம்
- தொடுவானம் 103. உடலியல் அறிமுகம்
- நல்வழியில் நடக்கும் தொல்குடி!
- மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி
- சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா
- ஒலியின் வடிவம்
- சிந்தனை ஒன்றுடையாள் ஸம்ஸ்க்ருதம்-தமிழ் பாலம் (தொகுப்பாசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்)
- தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி
- “அப்துல் கலாமின் ஐஸோகண்கள்”