மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர்
இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள்
படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக
நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை
அவர்களின் ஆலோசனையுடன் ஏற்பாட்டுக்குத் குழுத்தலைவராக முன்னாள் சங்கத்
தலைவரும், இன்றைய அயலகத் தொடர்புக் குழுத் தலைவருமான
திரு.பெ.இராஜேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக
நடந்தேறியது. நிகழ்வின் செயலாளர் திருமதி.விஜயராணி செல்லப்பா நிகழ்வு
தடையின்றி நடைபெற பெரிதும் உதவினார்.
இந்த சிறப்பு நிகழ்வில் ரெ.கார்த்திகேசு பற்றிய சிறப்பு மலர்
வெளியிடப்பட்டது. திரு.பெ.இராஜேந்திரன் தொகுத்து வழங்கிய இச்சிறப்பு மலரை
நிகழ்வில் கலந்து அனைவரும் பாராட்டினர். இம்மலர் இலக்கியச் செம்மல்
ரெ.கார்த்திகேசு அவர்களின் இலக்கிய படைப்புகள் அனைத்தையும் முழுமையாக
அலசி ஆராய்ந்ததுடன் அவரது வாழ்க்கை வரலாற்றையும் நம் கண் முன்னே கொண்டு
வருகிறது.
மலேசியத் தமிழ் இலக்கியத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிறுகதைத்
தொகுப்பு ‘ஊசி இலை மரம்’, தான் ஸ்ரீ புத்தகப் பரிசு பெற்ற ‘அந்திம காலம்’
நாவல் மற்றும் பிற படைப்புகள் பற்றி ஆய்வுகளும் மூலம் நாட்டின் சிறந்த
படைப்பாளர்களான கோ.புண்ணியவான், அரு,சு.ஜீவானந்தன், பூ.அருணாசலம்,
மைதி.சுல்தான், இலக்கியக் குரிசில் மா.இராமையா, விரிவுரையாளர்
மு.மணியரசன், முனைவர் சேகர் நாராயணன், ஆதி.இராஜகுமாரன்,முத்தெழிலன்,
எ.மு.சகாதேவன், வே.ம.அருச்சுணன், முனைவர் இரா.மோகன்,முனைவர்
சா.உதயசூரியன் தமிழக எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், இன்னும் பலரும்
இலக்கியச் செம்மல் ரெ.கா. அவர்களின் இலக்கியப் படைப்புகளின் சிறப்புகளை
ஆய்வின் மூலம் வெளிக்கொணர்ந்தனர்.
அன்றைய காலை நிகழ்வில் கிம்மா தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ ஸ்ரீ டத்தோ
சைட் இப்ராஹிம் அவர்கள் சிறப்பு நூலை வெளியீடு செய்தார். டத்தோ
வி.எல்.காந்தன்.டத்தோ ஆ.சோதிநாதன்,பாப்பாவின் பாவளர் முரசு.நெடுமாறன்
போன்ற பெருமக்கள் நூல்களை நேரில் பெற்றுக்கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இளைஞர்,விளையாட்டுத் துறை
துணையமைச்சர் கலந்து சிறப்பித்தார். மலேசியாவுக்கான இந்தியத் தூதர்
மாலையில், மலேசியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு கிருஸ்ணமூர்த்தி அவர்கள்
சாதனைப் படைத்த ரெ.கா. அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பொன்னாடை, மாலை
அணிவித்து நினைவு பரிசை எடுத்து வழங்கினார். ரெ.கா.அவர்களின்
துணைவியாருக்கும் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்வில்
இலண்டனில் வாழும் மலேசிய எழுத்தாளர் திரு.இராம. வீரசிங்கம்( பாரி )
அவர்களும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தம்மை
வெகுவாகக் கவர்ந்த எழுத்தாளர் ரெ.கா. அவர்களுக்குத் தங்க மோதிரம்
அணிவித்து பெருமை படுத்தினார்.
‘வாழும் போதே வாழ்த்திடு’ எனும் சங்கத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும்
நோக்கில் ,நிகழ்வில் மற்றொரு சிறப்பு அங்கமாக பேராசிரியர் ரெ.கா அவர்கள்
பற்றிய காணொளியில் பல அரிய படங்கள் இடம் பெற்றதுடன் பெ.இராஜேந்திரன்
திரு.ரெ.கா.அவர்கள் பற்றிய எழிச்சிப் பாடல் ஒன்றை அற்புதமாக எழுத, தமிழ்
நாட்டு இசையமைப்பாளர் இசையமைத்துப் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்த
நிகழ்வாகும்.
மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தமது எழுத்துத் திறத்தால் அளப்பெரிய
பங்களிப்பை வழங்கியுள்ள இலக்கியச் செம்மல் திரு.ரெ.கார்த்திகேசு
அவர்களின் அனைத்து படைப்புகளையும் இலவசமாக http://reka.anjal.net என
தட்டச்சு செய்து வாசித்து மகிழலலாம்.மலேசிய நாட்டுக் கணினி தொழில்
நுட்ப வல்லுநர் முத்துநெடுமாறன்,கார்த்திகேசுவி
மின்னூலாக்கி அதற்கான அறிமுகத்தையும் நடத்தினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இலக்கியச் செம்மல் திரு,ரெ.கா. அவர்கள்
தொடர்ந்து இலக்கியத் துறைக்குத் தம்மால் இயன்ற இலக்கியப் படைப்புகளை
வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறது. அன்னார் ஆரோக்கித்துடன் நீண்ட
ஆயுளுடன் வாழ இறைவனிடம் இறைஞ்சுகின்றது.
முற்றும்
- எம்.ஜி.ஆரின் தாய் ஏட்டிலிருந்து தாயகம் கடந்த தமிழ் அவுஸ்திரேலியன் வரையில் பயணித்த பன்முக ஆளுமை கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியம்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -1
- தொடுவானம் 116.சிங்கப்பூருக்கு பெயர் சூட்டிய பரமேஸ்வரன்
- ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை
- புரியாத மனிதர்கள்….
- குரு அரவிந்தனின் தமிழ் சிறுகதை பற்றிய சிறு குறிப்பு
- நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல்
- கவிதைத் தேர்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
- குழந்தை