உலகில் இது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் 60 வயதுக்குமேலுள்ள பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. துவக்க காலத்தில் வீக்கம் இருந்தாலும் வலி இருக்காது. போகப்போக வலி கடுமையாகும்.உடல் பருமன் அதிகமுள்ள பெண்களையும் இது தாக்கலாம்.
இரண்டு எலும்புகள் கூடும் இடத்தை மூட்டு என்கிறோம். அந்த மூட்டுப் பகுதியில் உள்ள எலும்புகளைச் சுற்றி வழவழப்பான ஜவ்வு உள்ளது. இதை ” சைனோவியம் ” என்று அழைக்கிறோம். இந்த ஜவ்வு தேய்வதால் அங்கு அழற்சி உண்டாகி எலும்பும் தேய்ந்து போகிறது.இதையே மூட்டு எலும்பு அழற்சி என்கிறோம்.
வயது ஒரு முக்கிய காரணம் என்றாலும் எல்லா வயதானவர்களுக்கும் இது உண்டாவதில்லை. ஆனால் மூட்டுகளில் உண்டாகும் அழற்சியால் ” கார்டிலேஜ் ” எனும் மூட்டு சவ்வு எலும்புகள் தேய்ந்து வடிவிழக்கும் வேளையில் எலும்புகள் அதை எதிர்த்து சரி செய்யும்போது அங்கு புது கரடு முரடான கூறிய எலும்புகள் உற்பத்தியாவதால் அசையும்போது வலி உண்டாகிறது. இத்தகைய நோய் இயலில் பல்வேறு கூறுகள் பங்கு வகிக்கின்றன.அவை அனைத்துக்கும் அடிப்படையானது இந்த மூட்டு அழற்சியே காரணமாக அமைகின்றது.
* அப் பகுதியில் உண்டான புது எலும்புகள் கட்டி போன்று தென்படலாம்.
* எம்.ஆர்.ஐ. பரிசோதனை – இதில் சவ்வு எலும்பு தேய்வு தெரியும். இந்த பரிசோதனை பெரும்பாலானோருக்கு தேவைப்படாது. அறிகுறிகளையும் எக்ஸ்ரே பரிசோதனைகளையும் வைத்தே நோயை நிர்ணயம் செய்துவிடலாம்.
* மூட்டு மாற்று அறுவை சிகிச்சை - தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளது இது பெரும்பாலும் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு ஆகியவை மாற்றப்பட்டு செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன.
( முடிந்தது )
- 52 டூஸ்டேஸ் (52 செவ்வாய்க் கிழமைகள்)
- சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்
- ’இனிய உளவாக’வும் INSENSITIVITYகளும்
- தொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறை
- மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )
- நான் என்பது
- 2019 ஆண்டில் பொதுநபர் விண்வெளிப் பயணச் சுற்றுலாவுக்கு முதன்முதல் இரு அமைப்புகள் துவங்கலாம்
- பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் – எல்லாம் உருண்டை