எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதை நான் பிறர் மேல் விட மாட்டேன்எல்லா மொழியும் நன்றுகோபிக்காதீர் நண்பரேஅவற்றுள் தமிழும் ஒன்று
என ஞானக்கூத்தன் எழுதியிருப்பார்
ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பிறமொழி காழ்ப்பை பிரபலமாக்கிய அரசியல்வாதிகளால் , தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உரையாடல் நிகழ்வது நின்று விட்டது. தமிழ் தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும்மொழியாகி , கொஞ்சம்கொஞ்சமாக வெறும்பேச்சு மொழியாக மாறி வருகிறது. தமிழ் பத்திரிக்கைகள் அழிந்து வருகின்றன. தமிழ் வாசிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது
பன்மொழிப்புலவர் மு.ஜகந்நாதராஜா மொழி பெயர்த்த நாகானந்தம் நூலை படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது
தமிழை தாய்மொழியாக கொள்ளாத ஜகந்நாதராஜா போன்றவர்கள் , தமிழை ஆர்வத்துடன் கற்று நிபுணத்துவம் பெற்று பல்வேறு தமிழ் நூல்களை எழுதிய காலம் இருந்தது;
அவரெல்லாம் தெலுங்கு இலக்கிய உலகிலும் பிரபலமானவர். தெலுங்கு மேடைகளில் பேசுகையில் தமிழை உயர்வாக பேசுவார். தமிழ் நூல்களை நேரடியாகவோ மொழிபெயர்ப்புகளையோ படிக்க வேண்டும் என்பார்
இவரைப் போன்றவர்கள் அல்லவா நாயகர்களாக கொண்டாடப்பட வேண்டும்
நமக்குள்ளேயே தமிழின் உயர்வைப்பற்றி பேசி பயனில்லை. பிற மொழி ஆளுமை பெற்று பிறரிடம் நம்மை உயர்வாக பேச வேண்டும்
நம்முடைய தலைவர்களோ தமிழை உயர்வாக மேடைகளில் பேசி விட்டு , ஆங்கிலக்கல்வியை தம் வாரிசுகளுக்கு அளிக்கிறார்கள். ஆங்கில வழி பள்ளிகள் நடத்துகிறார்கள். இவர்களைத்தான் நாம் கொண்டாடுகிறோம்
தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, “பாரதி காலமும் கருத்தும்’ என்ற நூலை சாகித்ய அகாதெமிக்காக தெலுங்கில் மொழிபெயர்த்த இவரை எப்படி எல்லாம் கொண்டாடி இருக்க வேண்டும்
இவரைப்போன்ற ஒரு பன்மொழி வித்தகர் . பல அரிய,பிறமொழி நூல்களை தமிழுக்கு கொணர்ந்த இவர் தமிழையும் பிற மொழிக்கு கொண்டு சேர்த்தார்
இவர் மொழி பெயர்த்த திருக்குறள் மற்றும் புறநானாறு தெலுங்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது
முத்தொள்ளாயிரம் நூலை அனைத்து திராவிட மொழிகளிலும் இவரே மொழி பெயர்த்து வெளியிட்டார்
இவரது மொழி பெயர்ப்பு நூலககளில் சில பின்வருமாறு
1 கன்யா சுல்கம், 1963, பாரி நிலையம், சென்னை.2. சேரி , 1984, சாஹித்ய அகாடமி, டெல்லி3. ஆமுக்த மால்யத, தெலுங்குப் பல்கலைக்கழகம், ஹைதராபாத்4. வேமனா, 1992, பாரி நிலையம், சென்னை5. களாபூரணோதயம் (தெலுங்கு காவியம்), தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு6. சுமதி சதகம்7. தேய்பிறை8. கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்9. காதா சப்த சதி , 1981, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்10. வஜ்ஜாலக்கம் (பிராகிருத மொழி அறநூல்)2005, தமிழினி, சென்னை 1411. கர்பூர மஞ்சரி (பிராகிருத மொழி நாடகம்)12. சன்மதி சூத்திரம் (சமண தத்துவம்)13. தீகநிகாயம் (பௌத்த தத்துவம்), சுந்தர நிலையம், சென்னை14. உதானம் (பௌத்த தத்துவம்)15. மிலிந்தா பண்ஹா (பௌத்த தத்துவம்) (மினாந்தரின் கேள்வி)16. விக்ஞப்தி மாத்ரதா சித்தி (பௌத்த தத்துவம்)17. ஔசித்ய விசாரசர்ச்சா வடமொழித் திறனாய்வு நூல், 1989, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்18. நாகானந்தம் – வடமொழி நாடகம் (1992, பீக்காக் பதிப்பகம், சென்னை19. குந்தமாலா – வடமொழி நாடகம்20. சாணக்ய நீதி வடமொழி நீதிநூல் 1986, விசுவசாந்தி பதிப்பகம், இராஜபாளையம்21. சாருசர்யா வடமொழி நீதிநூல்22. சாதன ரகசியம் – வேதாந்த நூல்அனுபவானந்த கிரந்தமாலா, பாபட்லா (ஆந்திரா)23. சிவசரணர் வசனங்கள்24. பம்ப்ப பாரதம் (கன்னட காவியம்)25. பிரேம கீதம் – மலையாளக் கவிதை26. மகாயான மஞ்சரி, 2007, பவுத்தக் கல்வி மையம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
இவற்றைத்தவிர தமிழில் இருந்து பிறமொழி பெயர்ப்பு , நேரடி படைப்புகள் எனவும் ஏராளம்
சான்றுக்கு சில..
1 கற்பனைப் பொய்கை – கவிதைத்தொகுப்பு (1972)
2. தரிசனம் – வசன கவிதை (1972)
3. காவிய மஞ்சரி – குறுங் காவியங்கள் (1986)
4. சிலம்பில் சிறுபிழை – இலக்கியத்திறனாய்வு (1968)
5. வான் கலந்த வாசகங்கள் – வானொலி உரை (1980)
6.தமிழும் பிராகிருதமும் (1992)
7. மணிமேகலை
8. இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம் (1994)
9. வடமொழி வளத்துக்குத் தமிழரின் பங்கு
10. தமிழக – ஆந்திர வைணவத் தொடர்புகள்
11. ஆபுத்திர காவியம்
12. தெரு – புதுக் காவியம்
13. பிஞ்சுக் கரங்கள்
14. ராஜுக்கள் சரித்திரம்
15. திராவிட மொழிகளில் யாப்பியல்
16. கவித்தொகை
17. அறிவுக் கதம்பம் – வானொலி உரை (1993)
சாகித்ய அகாதமி விருது பெற்றவர் இவர்
இவர்களைப் போன்றோரைப்பற்றி பேசிக் கொண்டே இருந்தால்தான் ,தமிழ் தன் மண்ணில் அழியாமல் பாதுகாக்கப்படும். தன் எல்லைகளை கடந்து எங்கும் பரவும்
நமக்கு இன்று தமிழ் பிழைப்புவாதிகள் அல்லர். ஜகந்நாதராஜாக்கள் தேவை
- கேரளாவும் கொரோனாவும்
- தன்னையே கொல்லும்
- அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்
- நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை
- ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
- நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.
- கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 1
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்