திருவழுந்தூர் ஆமருவியப்பன்

This entry is part 1 of 19 in the series 1 நவம்பர் 2020

                                                  

                           திருமங்கை ஆழ்வார் இந்திரியங்களால்

தான்படும் பாட்டை எண்ணி வருந்துகிறார். இதிலிருந்து விடுபட திருவழுந்தூரில் வீற்றிருக்கும் ஆமருவி அப்பனைச் சரணடை கிறார். ஆநிரைகளை மேய்த்தவன் தன் இந்திரியங்களையும் அடக்கியாள வகை செய்வான் என்று நினைத்திருக்கலாம்

           பார்ப்பான் அகத்திலே பால்பசு ஐந்துண்டு

           மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன

           மேய்ப்பாரும் உண்டாயின்

           பால்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே

என்று திருமூலர் சொல்வதுபோல் ஆநிரைகளை மேய்த்து அடக்

கிய ஆமருவியப்பனிடம் தன் பஞ்சேந்திரியகளையும் அடக்க வழி

தேடுகிறார் .எம்பெருமானே என்னனோடு ஒட்டிக்கொண்டு என்னை அடக்கியாளும் இந்த இந்திரியங்களை அடக்க நீதான் ஒருவழி சொல்ல வேண்டும்

                   உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது

                   அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்

                   அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

                               [7ம்பத்து,7ம்திருமொழி,1] 1608

ஐம்பொறிகள் வஞ்சனையால் சிற்றின்ப வாழ்வு, பேரின்ப வாழ்வு என்ற இரண்டு வாழ்வுக்குமாக என் உடலிலே புகுந்து என் உடலி லேயே தங்கியிருக்க அவற்றை திருப்திப்படுத்தமுடியாமல் அவற்

றுக்கு  அஞ்சி உன்னையடைந்தேன் உன்னையன்றி வேறு புகல் இல்லை.

                   சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து

                   பொய்யால் ஐவர் என் மெய்குடியேறிப் போற்றி

                         வாழ்வதற்கஞ்சி நின்னடைந்தேன்

                   ஐயா! நின்னடியன்றி மற்றறியேன்

                        அழுந்தூர் மேல்திசைநின்ற அம்மானே!

                               [7ம்பத்து,7ம்திருமொழி,3] 1610

ஐயனே! பொறுக்க முடியாத துக்ககரமான அனுபவங்களையே தருவதற்காக ஐந்து பொறிகளும் என்னிடம் வந்து சேர்ந்து என்னுடனேயிருந்து கொண்டு என்னைத் துன்புறுத்தி ஆத்ம

நாசத்தைச் செய்ய அதற்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்

               “கூறை, சோறு இவை தந்தெனக்கருளி

               அடியேனை பணியாண்டுகொள் எந்தாய்![1615]

என்று அழுந்தூர்ப் பெருமானான ஆமருவியப்பனைப் பணிகிறார்.

                         அப்பனே! இந்த ஐம்பொறிகளும் என் உட லில் புகுந்து, என்னைத் தங்கள் வசப்படுத்தி, தமக்கு வேண்டிய தையெல்லாம் பெற்றுக் கொண்டபின்னும் என்னை விட்டுப் போகாமல் என்னை வாட்டி வதைக்கின்றன! என்ன செய்வ தென்று தெரியாமல், இவற்றிடமிருந்து எப்படித் தப்புவது என்றும் தெரியாமலும் தவிக்கிறேன் நீதான் எனக்கிரங்கி எனக்கு ஒரு வழிகாட்ட வேண்டும்.

             ”கோவாய் ஐவர் என் மெய் குடியேறிக்

                   கூறை, சோறு இவைதாவென்று குமைத்துப்

             போகார், நான் அவரைப் பொறுக்ககில்லேன்

                   புனிதா! புட்கொடியாய்!நெடுமாலே!

             தீவாய் நாகணையில் துயில்வானே! திருமாலே!

                   இனிச்செய்வதொன்றறியேன்

             ஆ!ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்

                   அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!

                         [7ம்பத்து,7ம்திருமொழி9] 1616

மற்றோர்துணை நின்னல்லால் இலேன் என்று சரணடைகிறார்

உபதேசம்

                           பெருமானைச் சரணடைந்து மனம் தேறிய ஆழ்வார், உலகோரை அழைத்து எல்லோரும் இப்பெருமானையே அடைந்து உய்வு பெறுங்கள்

             முன் இவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண

                       முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து

             பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம்

                         பரிமுகமாய் அருளிய எம்பரமன் காண்மின்

                         [7ம்பத்து,7ம்திருமொழி,2] 1619

             குலத்தலைய மதவேழம் பொய்கைபுக்குக்

                   கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று

             நிலத்திகழும் மலர்ச்சுடரோய் சோதீ! என்ன

                   நெஞ்சிடர் தீர்த்தருளிய நிமலன் காண்மின்

                            [7ம்பத்து7ம்திருமொழி]1620

என்று தானவர்களுக்கும் கஜேந்திரனுக்கும் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கியது போல் நம் துன்பத்தையும் இப்பெருமான் போக்குவான்

என்கிறார். மேலும்

                                 திருவுருவம் பன்றியாகி

             இலங்கு புவிமடந்தைதனை இடந்து புல்கி

             எயிற்றிடை வைத்தருளிய எம்மீசன் என்றும்[1621]

             சினமேவும் அடல் அரியின் உருவாகித்

                   திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு

             மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி

             மாள உயிர் வௌவிய எம்மாயோன் என்றும்[1622]

              வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி

                    மாணுருவாய் மூவடி மாவலியை வேண்டி

             தானமர ஏழுலகும் அளந்த வென்றித்

               தனிமுதல் சக்கரப்படை என் தலைவன் [1623]

என்று கொண்டாடியவர் சீதாபிராட்டிக்காக இலங்கை மேல் படை

யெடுத்துத் தசமுகனான இராவணனை வீழ்த்தியதை

             பந்தணைந்த மெல்விரலாள் சீதைக்காகிப்

                   பகலவன் மீதியங்காத இலங்கை வேந்தன்

             அந்தமில் திண் கரம் சிரங்கள் புரண்டுவீழ

             அடுகணையால் எய்துகந்த அம்மான் [1624]

என்றும்,பெண்களான பூமாதேவிக்கும் சீதைக்கும் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கியதை போற்றுகிறார்.

பரகால நாயகி

                                  ஆமருவியப்பன் புகழ் பாடிய ஆழ்

வாருக்குத் தலைவி நிலையில் நின்று பெருமானைப்பாட ஆவல்

உண்டாகிறது. தோழி தன் தலைவன் ஊரைப்பற்றிய வினவ அதற்கு விடை சொல்வதுபோல்

            வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி அடியேன்

                                     மனம் புகுந்து என்

            உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும் நின்றார் நின்ற

                               ஊர் போலும்

            புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல்

                                                 பெடையோடும்

           அள்ளல் செறுவில் கயல் நாடும் அணியார்

                             வயல் சூழ் அழுந்தூரே

                       [7ம்பத்து,5ம்திருமொழி,4] 1591

            வஞ்சி மருங்குல் இடைநோவ மணந்து நின்ற

                                        கனவகத்து என்

            நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற

                                 ஊர் போலும் [1595]

            என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே

                                      நெருநல் எழுந்தருளி

            பொன்னங்கலைகள் மெலிவெய்தப்போன புனிதர்

               ஊர்போலும் [1596]     [நெருநல்——நேற்று]

   அவர் ஊர் எப்படிப்பட்டது தெரியுமா?

            ”மன்னுமது நீர் அரவிந்த மலர் மேல் வரிவண்டு

                                                இசைபாட

            அன்னம் பெடையோடு உடனாடும் அணியார் வயல்

                                        சூழ் அழுந்தூரே [1596]

என் தலவனுடைய ஊரில் வயல்களில் வரிவண்டுகள் இசைபாட [ரீங்காரம் செய்ய] அன்னம் தன் பெடையோடு ஆடும். அவ்வூரில்

இசையும் நடனமும் வயல்களில் கூட நடைபெறும் பெருமை யுடையது! என்று தன் தலைவன் ஊரைப் பற்றிப் பெருமையோடு பேசுகிறாள் பரகாலநாயகி.

                                அணியழுந்தூர் ஆமருவியப்பனைத்

தஞ்சமடைந்த திருமங்கையாழ்வார் அப்பெருமானை நாயகி பாவத்திலும் அனுபவிக்கிறார்.

=======================================================================

Series Navigationஒரு தலைவன் என்பவன்காலம்
author

எஸ். ஜயலக்ஷ்மி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *