இந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?

This entry is part 6 of 22 in the series 18 ஜூலை 2021

 


ஜோதிர்லதா கிரிஜா

ஈஷா யோகா அமைப்பாளர் ஜக்கி வாசுதேவ் கடந்த சில நாள்களாக இந்துக் கோவில்களை அற நிலையத் துறையினின்று விடுவித்துத் தனியார் வசம் ஒப்பபடைக்க வேண்டும் எனும் கருத்தை வெளியிட்டு வருகிறார். அண்மையில் நிதித் துறை அமைச்சர் மாண்புமிகு பழநிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.  அவர் தெரிவித்துள்ள கருத்துகளில் ஜக்கி வாசுதேவ் பற்றிய விமர்சனமே பெருமளவுக்கு இருக்கிறதே தவிர, அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அமைச்சரிடமிருந்து சரியான பதில்கள் இல்லை!

அரசின் பிடியினின்று இந்துக் கோவில்களை விடுவித்தல் பற்றி மட்டுமே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. அமைப்பு எதுவானாலும் அதில் ஊழல் பெருச்சாளிகளின்  சுரண்டல் இருந்தே தீரும் என்பது எல்லாருக்கும் தெரிந்த கசப்பான உண்மை. ஆனால், எதில் சுரண்டல் குறைவாக இருக்குமோ அதனை ஏற்பதே நியாயமாகும்.

அற நிலையத் துறையின் பிடியில் இருக்கும் கோவில்களிலிருந்து எடுக்கப்படும் உண்டியல்களின் பணம் அவற்றின் பராமரிப்புக்கு உரிய முறையில் செலவழிக்கப்படுவதில்லை என்பது பரவலான குற்றச் சாட்டு. பக்தர்கள் அளிக்கும் எண்ணெய், நெய் போன்றவைதான் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாய்ச் சொல்லப்படுகிறது. சிதிலமுற்றுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான பழைய கோவில்களை அற நிலையத் துறை கண்டுகொள்ளுவதே கிடையாது. அவற்றைப் புதுப்பிக்கும் பணி அறநிலையத் துறையின் பொறுப்பு இல்லையாமா?

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய குட முழுக்கு ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு நடத்தப்படவே இல்லை. குடமுழுக்கு என்பது கோவில்களையும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களையும் இடி, மின்னல் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றக் கூடியது என்பது விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏன் அறநிலையத் துறை செய்யவில்லை?

உண்டியல் வசூல் கிடைக்கும் கோவில்களே சரியாகப் பராமரிக்கப்படாத நிலையில், பாழடைந்து கிடக்கும் கோவில்களைப்பற்றிய  அக்கறை அத் துறைக்கு எங்கே வரப் போகிறது?

இந்து அற நிலையத் துறை அமைச்சர் கோயம்புத்தூரிலுள்ள ஈஷா யோகா அமைப்பில் நிதி சார்ந்த ஊழல்கள் உள்ளனவா என்பதை ஆராய இருப்பதாய்க் கூறியுள்ளார். செய்ய வேண்டியதுதான். அதே நடவடிக்கை அற நிலையத் துறைக்கும் பொருந்தும்தானே?

 ‘கோவில்களை எந்த பக்தர்கள் வசம் ஒப்படைப்பது? அதற்கான கமிட்டியை யார் நிறுவுவது? அக்குழுவின் உறுப்பினர்க்கான தகுதியை எந்த அடிப்படையில் தீர்மானிப்பது? ஒரு கோவில் எந்தக் கிராமத்தில் உள்ளதோ அதே கிராமத்திலிருந்தா, இல்லாவிட்டால் வெளியிலிருந்தா? உதாரணமாக மதுரையில் பிறந்து, ஆனால் தேவி மீனாட்சியின் பக்தராக உள்ள ஒருவர் தற்போது சென்னையில் வசித்தால், அவருக்கு அந்தத் தகுதி உண்டா?’ ஆகிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

‘மேலும் ஒரு கோவில் அரசின் கட்டுப்பாட்டினின்று எடுக்கப்படும்போது, அது ஒரு தனி இருப்பாகப் (entity) பதிவு செய்யப்பட வேண்டும். அதை எந்தப் பெயரில் பதிவு செய்வது? ஓர் அறக்கட்டளையின் பெயரிலோ அல்லது கூட்டுறவு அமைப்பின் பெயரிலோ என்றால், அது சட்டரீதியான  அமைப்பினுள் இருத்தப்பட வேண்டும். அதை யார் முறைப்படுத்துவது? அந்த வாரியத்தின் உறுப்பினர்களை எவ்வாறு தேர்வு செய்வது? அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அவர்களின் மரணம் வரையிலும் அந்தக் குழுவில் நிலையாக இருப்பார்களா? வாரிய உறுப்பினருக்கான  தகுதி என்ன?’ என்றும் அவர் வினவியுள்ளார்.

நேர்மைக்கும் நாணயத்துக்கும் பெயர் பெற்ற ராமகிருஷ்ணமடம், மதுரை ஆதீனம், மற்றுமுள்ள எண்ணிறந்த இந்து மதம் சார்ந்த நம்பகமான அமைப்புகள் ஆகியவற்றிடம் இந்துக் கோவில்களை ஒப்படைக்கலாமே! அவர்களின் தலைமையாளர்கள் கூடிப் பேசி இந்தக் கேள்விகளுக்கான விடைகளை ஆராய்ந்து அறநிலைய  நிர்வாகிகளிடம் தெரிவித்து இறுதியான ஒரு முடிவுக்கு வர இயலுமே!

மனமிருந்தால் மார்க்கமுண்டுதானே?

ராமகிருஷ்ண மடம் இந்தப் பொறுப்பை ஏற்குமா என்பது தெரியாது. ஏற்காவிடினும் அவர்களது யோசனை பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.

     கடைசியாக அமைச்சரிடம் ஒரு கேள்வி. நேர்முகத்தின் எடுத்த எடுப்பில் தனியாரிடம் இந்துக் கோவில்களை ஒப்படைப்பதை “நான்சென்ஸ்” என்று ஒரே சொல்லில் விமர்சித்துள்ள அமைச்சர், “கிறிஸ்துவச் சர்ச்சுகளும், இஸ்லாமியத் தொழுகைத் தலங்களும் தனியாக இயங்கிவரும் நான்சென்ஸுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவற்றையும் அற நிலையத் துறை எடுத்துக்கொள்ளும்,” என்று அறிவிக்கத் துணியாதது ஏனய்யா?

…….

     மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நியாயமான முடிவை எடுத்து அனைத்து மக்களினுடையவும் நன்மதிப்பைப் பெறுவாரா?

…….

 

Series Navigationகவிதைகள் பொக்கிஷம் !
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

6 Comments

  1. Avatar
    சிவகுமார் says:

    ஆலயத்தைவிட்டு அரசே வெளியேறு என்ற முழக்கம் திருவாளர் சேலம் ராமசாமி அய்வயா அவர்களால் துவக்கியது.50 ஆண்டுகளாக ஒலிக்கிறது. மதசார்பற்ற அரசாங்கத்திற்கு ஆலயத்தில் என்ன வேலை? ராமகிருஷ்ண மடம் அதன் சார்புள்ள அமைப்புகளுக்கும் ஆலய வழிபாட்டு முறைகளுக்கும் நிறைய வித்யாசம் உள்ளன. அறவோர் வாரியம் — சைவ, வைணவ, அத்வைத, கௌமார மடாதிபதிகள், சமயச் சான்றோர்கள், ஆன்றோரகள் நல்வழிக் காட்டுவோர் அதிகம் அதிகம் உள்ளனர்.அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

  2. Avatar
    B S V says:

    Temples are heritage treasures of Tamil culture and, part and parcel of Tamil lives since ancient times. Tamil people are the permanent owners. The temples were built for Tamil worshippers primarily, from their tax money and their physical labor. Ramakrishna Mutt came from Bengal. The founder, Ramakrishna came from East Bengal which is today called, Bangladesh. Their branches are almost in every State and their only aim is to propagate their brand of Hinduism namely Advaita Vedanta, It’s not originated in Tamil Nadu and also not popular here. Our temples follow agamas and other procedures, framed by Tamil ancestors, unique to Tamil culture. The Mutt has other disqualifications that can’t be listed here for fear of space. The Mutt may have all the virtues as desired by the author here, but why should we entrust our heritage temples in the hands of ‘outsiders’? Will Bengalis hand over their temples in Bengal if the same were run badly? Are we so morally bad that we are not suitable to manage our Temples ? Further, the resistance to their taking over won’t come from political parties, but from Tamil Hindus.

  3. Avatar
    B S V says:

    As regards Madurai Adheenam, how many temples will you entrust them with? Not every Temple is Saiva temple. The Adheenams propagate only their religious philosophy namely Saiva Sithanandham mostly favored by Tamil Saiva Pillais. Please remember, the Adheenams are caste-oriented people. Madurai Adheenam showed the caste certificate of Rajeshwaran (popularly known Swami Nithyananda, now a renegade living abroad) when he was nominated to the post of Peetathipathi in Madurai Adheenam mutt. As per their tradition, only a Saiva Pillai can hold the post and Madurai Adheenam proved to the followers of the Mutt who opposed Rajewsaran’s appointment, that he is a Saiva Pillai, in a press meet. The followers filed appeal in Madurai Bench who quashed the appointment. The author of this article says Madurai Adheenam are virtuous people. To practice caste based discrimination in spiritual affairs is not a virtue, Ma’am, but a crime against God. If we give Madurai Meenakshi temple to these ppl, we can be sure of witnessing the practice of casteism there.

    As said earlier, Adheenams are not popular across Tamil population since ppl follow different ways of worship. There will be stiff resistance from them, let alone politicians. Different temples, different presiding deities, different ways of people and different castes – no one group or person, however qualified, can handle. Another point is caste. Certain temples originated from caste group locally present for them only. Even today, one of their members is to be appointed as a member Board of Trustees (arangkavalar kuzhu). Even dalits. For e.g. Irukkangudi Mariamman Temple in Satur, Virudunagar dist. The pujari must be a dalit and the arangkavalar kuzhu has a permanent member from that community. Because the temple was originally constructed by dalits for their own worship in their slum – now no slum exists there. It is now a TN Govt temple due to its wide spread popularity. Will the dalits accept your Adheenam as their management? Similar cases of temples for different caste groups exist in TN.

    Finally, the questions raised by the Finance Minister of TN remain unanswered. It will remain so because they’re unanswerable.

  4. Avatar
    Jyothirllata Girija says:

    ராமகிருஷ்ண மடத்தினரை யோசனை கேட்கலாம் என்பதில் தவறு இல்லையே. அவர்கள் எந்த மாகாணத்தினராய் இருந்தாலென்ன? அவர்கள் உண்மையான பக்தர்கள். தவறு செய்ய மாட்டார்கள் எனும் நம்பிக்கையில் அவர்கள் குறிப்பிடப்பட்டார்கள்.
    சாதிகள் பற்றி எழுதப்பட்டுள்ளவை உண்மைதான். நாம் எப்போதுதான் திருந்துவோமோ, தெரியவில்லை.
    இந்த விஷயத்தில் அமைக்கும் ஆலோசனைக் குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் சேர்க்கலாமே.
    இத்தனை விவரமாய் எழுதிய அனைவர்க்கும் நன்றி. நிற்க.
    “Finally, the questions raised by the Finance Minister of TN remain unanswered. It will remain unanswered, because they are unanswerable” என்று நண்பர் BSV எழுதுகிறார். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிறிஸ்துவ அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் என்ன பதில்களை வைத்திருக்கிறார்கள்? அவர்களை மாண்புமிகு அமைச்சர் விசாரிக்கலாமே? அல்லது அவர்கள் மட்டும் விதிவிலக்குகளா? அப்படியாயின் அது நியாயமாகுமா?
    நன்றிகள்.
    ஜோதிர்லதா கிரிஜா

  5. Avatar
    BSV says:

    ராமகிருஷ்ண மடம் கோயில்களை கட்டி நடத்தவில்லை. கல்கத்தாவில் மடமிருக்கும் கோயில் அவர்கள் காலத்துக்கும் முன்பாகவே இருந்த ஒன்று. பள்ளி கல்லூரிகளையும் தங்கள் மடத்துக் கிளைகளையும் நாடெங்கும் அமைத்து நடத்தி வருகிறார்கள். அவர்கள் அடிப்படை கொள்கை சேவையே. காரணம், அவர்கள் குரு (விவேகானந்தர்) மக்கள் சேவையே மகேசன் சேவை என்றதால். கோயில் நடத்துவதும் கிடையது.

    அவர்கள் நல்லவர்களா? இல்லையா என்பது பொருத்தமற்ற கேள்வி. அவர்களுக்கு கோயில் விசயத்தில் அனுபமில்லை. அன்பவமில்லாதவர்களிடம் போய் ஆலோசனை பெற முடியுமா?

    இரண்டாவது உண்மை வியப்பைத் தரும். அதாவது, இம்மடம் மட்டுமே இந்து மதத்தையும் மற்ற மதங்களையும் இணைத்துக் காண்பது. ‘மத நல்லிணக்கம்’ என்ற பெயரில். ஆனால் இராமகிருஸ்ண பரமஹம்ஷர் தன் ஆழ்ந்த தியானத்தில் இயேசுவைக் கண்டேன். மஹமதுவைக் கண்டேன். அவர்களோடு உரையாடினேன். அவர்கள் மகத்துவத்தைப் புரிந்தேன் என்று சொன்னதெல்லாம் வரலாறு. Basically they accommodate other religions within Hinduism. இப்படிப்பட்டவர்களிடம் தமிழக கோயில்கள் போய்ச் சேர்ந்தால், அவற்றின் தனித்தன்மை அழிய வாய்ப்புகள் உள.

    உங்கள் வீடு அசுத்தமாக இருக்கிறது என்று வந்தவர் சொன்னால், அடுத்த வீடும் அசுத்தம்தான். அதை ஏன் கேட்கவில்லை எனபது straw man argument. It takes us nowhere. Our house will continue to stink if we are in continuous denial mode.

    தமிழக அரசு கோயில்களை நடத்துகின்றது. அக்கோயில்களை த‌ங்களிடம் கொடுத்துவிடுங்கள் என தமிழக இந்து இயக்கங்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கின்றன. That is the bone of contention. How does it get connected to Christian and Muslim places of worship?

    அமைச்சர் சொன்னது சரியே காரணம். த‌ங்களிடம் கோயில்களை ஒப்படையுங்கள் எனக் கேட்கும் எவரும், கொடுத்தால் நன்றாக நடத்தப்படும் எனபதற்கு என்ன உத்தரவாதம்? Evidence or past experience? வெறும் பக்தி போதுமா? உண்மை என்னவென்றால், எவருக்குமே இக்கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை. அவர்களுக்கு முன் அனுபவமும் இல்லை. முதலில் ஒரு ப்ளூ பிரிண்டை முன் வைத்துக் கேட்டால் அரசு அதை எப்படி நோக்குகிறது என்ற ஆர்வமாக வரும். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கல் பெரும் பணமுதலைகள். ரவுடிகள். அவர்களை அரசே எதிர்த்து நிலத்தை மீட்க முடியும். போலீஸ் அதிகாரம் அரசிடம்தான் இருக்கிறது. இந்த இந்து இயக்கங்கள் எப்படி விரட்டுவார்கள்? மிஞ்சிப்போனால், வழக்கு போடுவார்கள். அதை வெல்ல ஆக்கிரமிததவர்களுக்கு ஆயிரம் வழிகளைத் தெரியும். Their purpose is not the temple and God but political advantage. It is their sensational agenda to excite the emotions of Hindus and create a Hindu vote bank.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *