வணக்கம்
40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி
40 வது சார்ஜா புத்தகக்கண்காட்சி இந்த வாரம் சார்ஜாவில் முடிந்திருக்கிறது. உலகில் பிராங்பர்ட்க்கு அடுத்து மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி சார்ஜாவாகும்
இம்முறை தமிழக எழுத்தாளர்கள் மனுஷ்யபுத்திரன் , சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அங்கு நூல்கள் வெளியீட்டில் கலந்து கொண்டனர். ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் அரபிமொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.. அதை கேரளாவைச் சார்ந்த லிலி பதிப்பகம் வெளியிட்டிருந்தது அவர் கலந்து கொள்ள இயலவில்லை.
சுமார் 60 மலையாள பதிப்பக அரங்குகள் இருந்தன இது முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவே . தமிழில் டிஸவரி புத்தகநிலையம் சென்னை சில பதிப்பகப்புத்தகங்களுடன் கலந்து கொண்டது
மேட்டுப்பாளையம் ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்கள் வரைந்த 25 அமீரகத்தில் வாழும் மலையாள எழுத்தாளர்களின் ஓவியங்கள் கண்காட்சியில் ரைட்டர்ஸ் பாரம் அரங்கில் கவனம் பெற்றன . ஓவியர் தூரிகை சின்ராஜ் அவர்களும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களும் புக்கிஷ் பாரட்டு விருது பெற்றனர்
துபாய் எக்ஸ்போ கண்காட்சி ஆண்டு தோறும் ஒரு நாட்டில் நடைபெறுவது. இவ்வாண்டு துபாயில் நடைபெற்று வருகிறது. 1100 ஏக்கர் பரப்பில் பெரிய இக்கண்காட்சியில் இந்தியா உட்பட 200 நாடுகளின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அமீரகத்தில் நடைறும் மனித உரிமை மீறல், இடம் பெயர்ந்தத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சைகள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பும் புறக்கணிப்பும் செய்தன . துபாய் எக்ஸ்போவில் மாமல்லபுரம் சிற்பங்கள் , தஞ்சை பெரிய கோவில் குறித்த வீடியோக்களும் படங்களும் இடம்பெற்றிருந்தன. கலைப்பிரிவில் அடூர் கோபால கிருஷ்ணன் குறித்த சிறப்புக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
சுப்ரபாரதிமணியன்,