தனிமை

    கொரொனாவோடு கூட இருந்தேனாம் இரண்டு வாரம் தனிமை   அர்த்தம் தொலைத்த சொற்களில் இப்போது ‘தனிமை’   உறவுகள் நட்புகளோடு கூகுலாரும் சட்டைப் பையில் இது எப்படி ‘தனிமை’   கோழிக்குஞ்சுகளை பஞ்சாரத்தில் அடைப்பது பருந்திடமிருந்து காக்கத்தானே  …
சூடேறும் பூகோளம்

சூடேறும் பூகோளம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       ********************         இந்த பூமி நமதுஇந்த வான்வெளி நமதுஇந்த நீர்வளம் நமதுமுப்பெரும் சூழ்வளத்தைதுப்புரவாய் வைக்கும்,ஒப்பற்ற பொறுப்பு நமது. ++++++++++++++   சூடு காலம் வருகுது ! புவிக்குக்கேடு காலம் வருகுது !நாடு, நகரம், வீடு, மக்கள்நாச மாக்கப் போகுது…

புதராகிய பதர்

உமா சுரேஷ்வெட்ட வெட்ட மரம் துளிர்த்து வளருமாமே... இந்த விந்தையறியாது உன் நினைவை பலமுறை வெட்டி எரிந்தேன் மறுபுறம் நீ துளிர்த்து வளர்வதை மறந்து...   புதரென்று வேரறுக்கவும் முடியவில்லை...   பதரென்று விட்டுவிடவும் முடியவில்லை...   புதராயினும்,பதராயினும் என்னை பதம்…

மேசையாகிய நான்

  உமா சுரேஷ் காலேஜ் சேர்ந்து கல்வி கற்க வாய்ப்பேதும் வாய்க்கவில்ல...   அங்கே காலம் களிக்க கிடைத்ததுவே கண் கண்ட வரம் தானே...   எனைக் கட ந்து சென்ற ஜுவன் எல்லாமே அரிய வகைப் பொக்கிசமே...   அவரவரின்…

செயற்கைச் சிடுக்கு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்லும் சொல்லுக்காய் அடர்காட்டில் அனாதிகாலம் ஆரவாரமற்று ஒற்றைக்காலில் நின்றபடி மோனத்தவமியற்றுபவன் சடாமுடியை சினிமாவில் கண்ட ‘விக்’ என்று சுலபமாகச் சொல்லி நக்கலாய்க் கெக்கலித்துச் சிரிக்கும் ஒலி பெருங்காட்டின் நிசப்தப் பேரோசையிலும் அருந்தவ ஆழ்மௌன ரீங்காரத்திலும் வலுவிழப்பதே இயல்பாக…………

அப்பாவிடம் ஒரு கேள்வி

ஜோதிர்லதா கிரிஜா   (தினமணி கதிர் 5.7.1998 இதழில் வந்தது. ‘வாழ்வே தவமாக…’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         இரவெல்லாம் சரியாகத் தூங்காததில் தீபாவின் கண்கள் சிவந்து கிடந்தன. முகம் கன்றி…

பூடகமாகச் சொல்வது

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)       ’நாடகமாடுகிறார்கள்’ என்றார். ’நாடகம் நாட்டியமல்லவே’ என்றேன். ’ஓபரா தெரியாதோ?’ என்றார். ’ஒருமாதிரி ’காப்ரா’வாகத்தானிருக்கிறது’ என்றேன். ’கவிதையே தெரியாதுனக்கு’ என்றார். ’உங்களிடமிருந்து இப்படியொரு நேர்மறையான பாராட்டு கிடைத்ததில் அமோக மகிழ்ச்சி யெனக்கு’ என்றேன். ’வஞ்சப்புகழ்ச்சியா?’…

சில்லறை விஷயங்கள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     ஒருகாலத்தில் பத்துபைசாவுக்கு மூன்று பட்டர் பிஸ்கெட்டுகள் சுடச்சுட கிடைக்கும் பேக்கரியிலிருந்து. இன்று ஒரு ரூபாய் நாணயமே சில்லறை.   ”இந்தா சில்லறைப்பணம் போகும் வழியில் யாருக்கேனும் தருவாயே” என்று அன்போடு என்னிடம் சில ஐம்பது…

புகை

ஜோதிர்லதா கிரிஜா (23.3.1980 கல்கி-யில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       கண்ணப்பன் எரிச்சலுடன் எழுந்தான். சமையற்கட்டிலிருந்து கிளம்பிவந்த புகை கண்ணைக் கரித்ததுதான் அவனது எரிச்சலுக்குக் காரணம். புகையின் விளைவாகக் கண்களில் நீர் சோர்ந்ததால்…

விதியே விதியே

எஸ்ஸார்சி     திருப்பதி ஏழுமலையானை த்தரிசிக்க ரெண்டு தினங்கள் காத்து க்கிடக்கவேண்டும். அது பழங்கதை. பதினைந்து நிமிடம் காத்திருக்க ஏடு கொண்டலவாடனை வெங்கட ரமண கோவிந்தனை த்தரிசிக்க வாய்க்கிறது. கொவைட் பெருந்தொற்றின் ஆட்சியல்லவா இப்போது நடக்கிறது. பக்தர்கள் நடமாட்டமின்றி  வெறிச்சோடிக்கிடக்கின்றன…