சுப்ரபாரதிமணியன்
வீட்டு விலங்குகள் தடை செய்யப்பட்ட நாளிலும் சூரியன் பிரகாசமாக தகித்துக்கொண்டிருந்தான் .மதிய நேரம். எப்போதுமில்லாத பரபரப்பில் சுரேந்திரனின் வீடு இருந்தது.
சுரேந்திரன் வீட்டிலிருந்து வெளியேறிய அந்தக்காவல் துறைக்காரர் கையிலிருந்த பூனை மியாவ் என்றபடித் தலையைத் திருப்பி அவரைப்பார்த்தது. அதன் குரலில் அபயம் கேட்கும் பிச்சைக்காரத்தனம் இருந்தது.
“ இந்த வீட்டில் தடை செய்யப்பட்டதா இது இருந்தது. வேறெ எதையும் காணம். விட்டிருவமா. இன்னமும் தேடுவம் “
பூனையின் மியா கதறலும் சற்றே திமிறிக்கொண்டிருந்ததும் அந்தக் காவல்துறைக்காரருக்கு எரிச்சலைக்கிளப்பியதை அவரின் முகம் தெரிவித்தது. அவரின் காலடியில்பட்டு உருண்ட பிளாஸ்டிக்குவளையின் உருளல் சத்தம் பலரைத் திரும்பிப்பார்க்கச் செய்தது. சுரேந்திரன் குடும்பத்தினர் உடம்பைக்குறுக்கிக்கொண்டு வீட்டினுள் அடைந்து கிடந்தார்கள். அவரின் எட்டு வயதுக்குழந்தை உள்ளேயிருந்து ஓடி வந்து கேட்டைக்கடந்து செல்லும் காவல் துறைக்காரரை ஏக்கத்துடன் பார்த்தது.
தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அவரவர் வேலையைப்பார்த்தபடி பூனையின் மியாக்கதறலையும் எட்டு வயதுப்பெண்ணின் ஏக்கமானப்பார்வையையும் நிராகரித்து நகர்ந்து கொண்டிருந்தார்கள்
நகரத்தில் வீட்டு விலங்குகள் வைத்திருக்கக்கூடாது என்ற தடைச்சட்டம் அமுலுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. யாரும் அவற்றைக்கொண்டு ஒப்படைக்கவில்லை .காவல்துறையும் அவர்கள் கால் போனப்போக்கில் ஏதாவது வீடுகளுக்குச் சென்று வீட்டிலிருக்கும் விலங்குகளைக் கைப்பற்றி தங்களின் வாகனத்தில் போட்டுக் கொண்டு போய் சிறைச்சாலையின் ஒரு பகுதியில் அடைத்து வைத்தனர். வீட்டு விலங்குகளென்றால் நாய், பூனை, எருமை, மாடு என்பவை அடங்கும். தடைச்சட்டம் அமலுக்கு வந்ததில் எலீசர் வீட்டில் நடந்த சம்பவம் காரணமாக இருந்தது.
*
எலிசர் வீட்டில் வாடகைக்கு இருந்த இருளப்பன் போதைக்கடத்தலில் மாட்டியிருந்தான். அவனின் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க எலிசர் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். . அவர் யேசுவே என்ன சோதனை என்று அலறிக்கொண்டிருந்தார். . இருளப்பன் பற்றி எதுவும் தெரியாது . வாடகைக்கானப் போர்சன் நாலைந்து மாதங்களாய் காலியாகக் கிடந்தது. இருளப்பன் குறிப்பிடத்தக்க தனியார் நிற்வனத்தில் வேலை செய்வதாகச் சொன்னான். அவர் கேட்ட மூன்று மாத அட்வான்ஸ் பணத்தை உடனே கொடுத்து விட்டான். பதினைந்தாயிரம் என்பது அரசில் ஓய்வு பெற்றவருக்கு பெரிய தொகை. அவன் ஒற்றை ஆள் என்பதில் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வதில் , கழிப்பறையைப் பயன்படுத்திக் கொள்வதில் சிக்கனம் இருக்கும் என்பதால் உடனே சம்மதித்து விட்டார். இரண்டு மாதங்கள்தான் முழுசாய் வாடகை வாங்கியிருந்தார்,
அலிசர் யேசுவுக்குப்பயப்படுவது போல் வசவுக்கும் பாவ புண்ண்யங்களுக்கும் பயப்படுபவர் . அவருக்குத் துணையாக சீசர் என்ற நாய்க்குட்டியும் நயனதாரா என்ற பூனைக்குட்டியும் வீட்டில் இருந்தன . ஆவர் மனைவியை அவர் துணையாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் அவர் ஒரு சீக்காளி. அவளுக்கு சேவை செய்வதில் அலுப்பு வந்து விட்டது அவருக்கு. ஓய்வு வாழ்க்கையை மனைவிக்கு சேவகம் செய்வதில் அவர் கழித்து வந்தார் என்பதால் அந்த அலுப்பு.
யேசுவுக்குச் சேவை செய்து காலத்தைக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். அவரின் துரதிஷ்டம் இப்படியாகிப்போயிற்று.
இருளப்பன் வாடகை வீட்டுக்காரனாக வந்து சேர்ந்ததும் அவரின் துரதிஷ்டத்தில் சேர்ந்து போனது . இருளப்பன் பற்றிய விசாரணைக்கு காவல்றையின் கீழ்மட்ட அதிகாரி ஒருவர் வந்தார். நாற்காலியில் சவுகரியமாக அவரை உட்கார வைத்து அவரை நன்கு உபசரித்தார் எலிசர். உள்ளூர பயம். உடம்பு சற்றே நடுங்கிக்கொண்டிருந்தது அவருக்கு.
இருளப்பனைபற்றி விசாரணைத்துவங்கியதும் உடம்பு சோடியம் குறைபாடு உள்ளவனின் சிரமங்கள் போல் நடுங்க ஆரம்பித்தது. இருளப்பனின் ஆதார் கார்டு., வாக்காளர் அடையாள அட்டைப்பிரதிகள் மேல் நம்பிக்கை வைத்து வாடகைக்குக் கொடுத்ததாகச் சொன்னார்.. கேள்விகள் சற்றுத் தாறுமாறாக ஆரம்பிக்கவே எலிசர் உடம்பின் நடுக்கம் அதிகமானது. அப்போதுதான் சீசர் அவரைக்காப்பாற்றும் பொருட்டு சற்றே குலைக்க ஆரம்பித்தது. காவ்லதுறைக்காரரின் கேள்விகள் அதிக பட்சமாய் மிரட்டுவது போலிருக்க சீசரின் குரல் சற்றே உயர்ந்தது. எலிசரை எச்சரிக்கை செய்யும் விதமாய் பேசியவரை நோக்கி மெல்ல நகர்ந்தது. காவல்துறைக்காரர் எழுந்து நின்று சட்டத்தையும் நீதியையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைச் சொன்னபோது அவர் மேல் சீசர் பாய் ஆரம்பித்தது. அந்த அறையின் வலது மூலையில் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா ஏதோ விபரீதம் என்பதாய் எண்ணி எஜமானனைக்காப்பாற்ற சற்றே முன்னேறி அவர் மேல் பாய ஆரம்பித்தது.
அவர் வேறு வழியில்லாமல் அறையை விட்டு அவசரமாய் வெளியேற துரத்திச் சென்று சீசரும் நயனதாராவும் அவர் மேல் பாய்ந்தன. அவரின் வேகம் அதிகமாகி அந்த வீட்டு முகப்பு கேட்டை முன்புறம் பூட்டி விட்டு வெளியே போனவர் தெருவில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
சீசர் கேட்டை உலுக்கியபடி வெளியே வர முயற்சித்தது. சட்டென மதில்சுவரில் மீது ஏரி உட்கார்ந்து கொண்ட நயனதாரா இன்னும் உறுமியது. காவல்துறைக்காரர் அப்போதுதான் தன் கைகளைப்பார்த்தார். சற்றே கீறல்கள். கொஞ்சம் ரத்தத் துளிகள் தென்பட்டன. கீறியது யாராக இருக்கும். . நிச்சயம் எலிசராக இருக்க மாட்டார்
அடுத்த நாள் பெரும் படையுடன் காவல்துறை வந்து சீசரையும் நயனதாராவையும் பிடித்துக் கொண்டு போனது . நயனதாராவைப் பிடிப்பதற்கு அவர்கள் சிரமப்பட்டார்கள் அறைக்குள் அங்குமிங்குமோடியடி வேடிக்கை காட்டியது. கொஞ்சம் ஈறும் பல்லும் தெரிய உறுமியது.. கடைசியில் அவர்கள் விரித்த வலைக்குள்தான் மாட்டியது..
காவல்துறைக்காரர் ரத்தம் சிந்தியதால் இனி வீட்டு விலங்குகள் வளர்க்க அனுமதியில்லையென்ற அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. வீட்டு விலங்குகளை ஏவி விட்ட குற்றத்திற்காக் 123456 சட்டத்தின் கீழ் எலிசர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது .
*
காவல்துறை உடுப்பு இல்லாமலேயே ஒரு வீட்டில் பூனையை கைது செய்து வந்ததாகச் சொல்லியபடி இன்னொருவர் வந்தார். . பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து வரும் நடுத்தரவயதுப் பொண்னொருத்தி அவர் கையில் இருந்த பூனையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தா
“ என்னமோ தாகமா இருக்கும் போல இருக்கு. பூனைக்கு கொஞ்சம் தண்ணி குடுங்க “
“ வெறும் பூனை இல்லே .. புஸ்ஸி..”
“ அமாமா. புஸ்ஸி நல்லாத்தா இருக்கு அந்தப்பேர். நயனதாரா பூனை கூட இப்போ எங்க கஷ்டடியிலதா “
ஒரு வீட்டுப்பூனை ஏதோ சிரமம் கொடுக்க அதைச் சாக்கில் போட்டு மொத்து மொத்தென்று அடித்த அந்தப்பெண் கவனித்திருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அது வீர் என்று ஏதோ சத்தம் போட்டது. பின்னால் அடங்கிப்போய் விட்டது. இந்தப்பூனைக்கு அப்படி எதுவும் ஆகி விட வேண்டாம் என்று நினைத்தாள். குடத்தில் இருந்த நீரைச்சாய்த்து உள்ளங்கையில் வைத்து பூனையின் வாய் அருகில் கொண்டு சென்றார்.
“ இந்தப் பூனையை சுலபமாத்தா பிடிச்சிட்டேன். ஆனாஅந்த வீட்லே இருந்த குழந்தைக அழுத அழுகையெத்தா சகிக்க முடியலே. அதுங்களோடப் பெட்டாமா “
“ அய்யோ பாவம், குழந்திகளுக்கு எவ்வள்வு நஷ்டம் ‘
” இதெச் சாப்பிட்டா எந்த பெரிய நோயெல்லாம் போயிருமாமா . கொரானா கூட “
“ சார் இந்தக்கதையெல்லாம் பரவிடப்போகுது. அப்புறம் எந்த வீட்டிலியும் பூனைக இருக்க முடியாது. அப்பபுறம் எலிகளெ எப்பிடி ஒழிக்கிறதாமா “
அந்தப்பெண்ணின் வீட்டில் எலித்தொல்லை அதிகம்தான். பல சமயங்களில்பாத்திரங்களை உருட்டி விட்டுப் போய் விடுகிறது.
அவள் முன்பு குடியிருந்த வீட்டில் இப்படி இரவுகளில் பாத்திரங்கள் கீழே விழுவதும் உருள்வதும் நடந்திருக்கிறது. அந்தப்பெண்ணின் மாமியார் ஏதோ ஆவி நடமாடுகிறது என்று பயந்திருக்கிறள். அப்படி பாத்திரங்கள் உருளும் சமயங்களில் எழுந்து உட்கார்ந்து கைக்கூப்புவார். கண்களில் நீர் வழிய மன்றாடுவார். “ நாஙக் இந்த இட்த்தை விட்டு போயர்றம். எங்களெ ஒண்னும் பண்ணாதே “ . மாமியார் அப்படி வேண்டியபிறகு பாத்திரங்கள் உருள்வது குறைந்து விட்டதாம், அப்புறம் அந்த வீட்டையும் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள் .
*
எலிசர் ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விட்டார். சீசரும் நயனதாராவும் சிறையில் கிடப்பது அவருக்கு இம்சையாகத்தான் இருந்திருக்கிறது. எலிசருக்கு வீட்டு விலங்குகளை காவல்துறையினர் கைப்பற்றியோ கைது செய்தோ கொண்டு போவதை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்,.
“ சார் ஜெயில் எல்லாம் போயிட்டு வந்திட்டீங்க. இந்தப்ப்பிரச்சினையிலெ ஜெயிலுக்குப்போன மொதல் ஆள் நீங்க தான் “
பக்கத்து வீட்டு கொண்டப்பன் கேட்டார் “ அந்த அனுபவமெல்லா எப்பிடி. பின்னி ஒரு காலத்திலெ இதெ வச்சு உங்களுக்கு பெரிய மரியாதை கிடைக்கும் . சிறை சென்ற தியாகின்னு கூட “. கொண்டப்பன் வாயில் புகையிலையைப்போட்டு அதக்கிக்கொண்டிருப்பார். அவர் அவ்வப்போதும்பீடிதான் குடிப்பார். கொரானா காலத்தில் சிக்கனம் கருதி சிகரெட்டிலிருந்து பீடிக்கு மாறியவர் பின்னால் பீடியை நிரந்தரமாக்கி விட்டார்.
“ வீட்டு விலங்கிலெ மாடு எருமையெல்லா வராதா எலிசர் “
“ வரும்கறாஙக். சிட்டியிலெ சில இடங்களேள்லே எருமைக இருக்கு. அதெல்லா எங்க சீசரும் நயந்தாராவும் எனக்காகப் போராடின மாதிரி கொமபெச்சீவிட்டு முட்ட வந்த இந்தப் போலீஸ்காரங்களுக்கும் ராணுவத்துக்க்காரங்களுக்கும் சிரமம்தானே “
’” நிச்சயமா . அப்புறம் மாடு எருமைகளுக்கெல்லா கொம்பு இருக்கக்கூடாது . அறுத்தெறிங்கன்னு சட்டம் வந்திரும் “
“ அதுகளோட கொம்புகளே அறுத்தெறிய அது படற கஷ்டம் நினைக்கறப்போ சங்கடமா இருக்கு சார் ”
கொண்டப்பன் வீட்டில் மாடி வீட்டுத் தோட்டம் ஒன்று இருந்தது. ஒருநாள் வீட்டு விலங்குகளைக் கைப்பற்றவோ கைது செய்யவோ வந்த காவல்துறை அதிகாரி கொண்டப்பனின் மாடி வீட்டுத் தோட்டத்திற்கு விஜயம் செய்தார்,
“ வீட்டு விலங்குகளைப் பிடிக்கப்போகும்போது அவை கீறி சிரமம் செய்கின்றன. அவற்றின் நகங்கள் கைகளி உடம்பில் பதிந்து விடுகின்றன. அது விசமாக மாறாமல் இருக்க உங்கள் வீட்டு மாடி வீட்டுத் தோட்டத்தில் ஏதாவது மூலிகைகள் இருக்கிறதா “ என்றார். . “ . நாங்கள் தொட்டிச்செடி போல் வளர்க்கும் கொஞ்சம் கீரைகளும் தொட்டாச்சிணுங்கிச் செடிகளு இதற்குப் பயன்படாது அய்யா “ என்று திருப்பி அனுப்பி விட்டார். “
“ இருந்தாலும் மூலிகை ஆராய்ச்சித்துறையினர் கவனத்திற்கு இதைக்கொண்டு செல்வேன் “
மூலிகைகளை அவர் தேடியது போலவே எங்காவது கொண்டு சென்று இந்த வீட்டு விலங்குகளை குறிப்பாக நாய்களையும் பூனைகளையும் அடைத்து வைப்பதை விட அவற்றை உணவுப்பொருளாகப் பயன்படுத்தலாமா என்பது பற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஓடிக்கொண்டிருந்தன. வடகிழக்கு மாநிலத்தைச்சார்ந்தக் கட்டிடத் தொழிலாளிகள் நாய் உணவை சாதாரணமாகப் பயன்படுத்தி வந்தனர் என்பது பலரும் அறிந்த செய்திதான். நாய்கள் காணாமல் போய் விட்டால் அவர்களையே பலர் கை காட்டினர் . கைகால் நடுக்கம், உடம்பு தடுமாறலுக்கு பூனைக்கறி நல்லது என்ற வதந்தியும் பரவிக்கொண்டிருந்தது. மாட்டுக்கறியை வைத்திருப்பவர்களை அடித்தேக்கொல்லலாம் என்ற எழுதப்படாத சட்டம் வடநாட்டில் நடைமுறையில் இருந்தது.அது பலருக்கு உவப்பாக இருந்தது தென்னாட்டிலும் அது வர வேண்டும் என்று பலர் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
“பூனை சாப்பிடப்பழகலாம் “ என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தது. புளு கிராஸ், ரெட் கிராஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் அந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புக்குரலும் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
*
எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன. இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட மாட்டார்களா . அவர்களுக்கு இயேசு ஆசி செய்ய மாட்டாரா “ என்பது தான் எலிசரின் சமீபமான கவலையாக இருந்தது.
அந்தக்கவலையுடன் வாசலில் நின்று வேடிக்கிஅ பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சிறைக்குச் சென்று வந்தவர் என்ற வகையில் அவரை தியாகியாக நினைத்து மரியாதி செய்து கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.
தெற்ர்குத் தெரு குறுக்குச் சந்தில் இருந்து கவல்துறை உடௌப்புடன் ஒருவர் ஓடி வந்து எலிசரைக்கடந்து சென்றார்.
வீட்டுவிலங்குகளை ப் பிடிக்க ஒரு வீட்டிற்குச் சென்ற போது அந்த வீட்டில் இருந்த எரூது ஒன்று காவல்துறைக்காரரை விரட்டி மொண்ணையானக் கொம்பால் குத்தி ரத்தம் வழிய செய்து விட்டதாம். அவர் உயிர் பிழைக்க ஓடிக்கொண்டிருந்தார்.
·
இனி வீட்டு விலங்குகளைப்பிடிக்கும் முயற்சியில் எருமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொலைக்காட்சியில் அவசரச் செய்தி வழக்கமான டொய் டொய் சத்தத்துடன் வெளியாக ஆரம்பித்தது.
- நம்பிக்கையே நகர்த்துகிறது
- மனிதனின் மனமாற்றம்
- என் காதலி ஒரு கண்ணகி
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் [19 -20]
- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா !
- பாவண்ணனை அறிவோம்
- காதல் ஒரு விபத்து
- ஒரு கல்லின் கதை
- அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் – 4
- தடை
- முதிர்ச்சியின் முனகல்
- கனேடிய தமிழ் எழுத்தாளர்கள் சர்வதேச இலக்கியப் போட்டியில் பரிசுகளை வென்றுள்ளனர்
- சிறந்த நூல்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபா பரிசு பெறும் இலங்கை எழுத்தாளர்கள் !
- கவிதையும் ரசனையும் – 26
- ஒரு சிறைக்கைதியின் வாழ்வியல் அனுபவங்கள் சாந்தாராம் !