இன்று…

This entry is part 3 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

 

ருத்ரா

இன்று நாள் நல்ல நாள்.

நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி

ஜோஸ்யம் சொல்லிவிட்டது.

மனசுக்குள் இந்த இன்பச்சுமையை

திணித்து திணித்து சுமையாக்கி

சுமப்போம் வாருங்கள்.

எல்லா நிகழ்வுகளுக்கும்

நாம் “சந்தோஷம்” என்றே பெயர் சூட்டுவோம்.

பாருங்கள்

நம் பாரங்கள் இலேசாகி விட்டன.

இன்றுகளின் 

முகமூடிகள் தான்

நேற்றுகளும் நாளைகளும்!

இப்போது

அந்த சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகள் 

கூட‌

நம் முகத்தின் எதிரே படலம் காட்டும்

மனத்திரையில்

நிறப்பிரிகை செய்து காட்டுகிறது.

புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்புக்கிரணங்களும்

“சந்தோஷ”ப்பிசிறுகளை

மாலையாக்கி விட்டது.

அழுவதும் ஆனந்தம்.

ஆனந்தமும் அழுகை.

தீம் திரிகிட..தீம் திரிகிட..

அக்கினிக்குஞ்சுகளும்

அல்வா இனிப்புகள்.

சாம்பலாய் விழுவதிலும்

சண்பக‌ப்பூ பனித்துளியை 

சுமந்து நிற்கிறது.

விஞ்ஞானிகளின் “க்ராண்ட் யூனிஃபிகேஷன்”

இந்த எல்லா பிரபஞ்சங்களையும்

க்ரஷ் செய்து அதோ கோப்பையில் நீட்டுகிறது.

அந்த ஜனன மரண ரசம்

பஜகோவிந்த ரசமாய் மழைபெய்கிறது.

ஏமாந்து கொள்வதே பரம சுகம்.

அதுவே எல்லாவற்றையும் நனைக்கட்டும்.

அறியாமை அறிவை விழுங்கித்தீர்க்கட்டும்.

சுபம்..சுபம்..சுபம்!

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்தலைப்பில்லாத கவிதைகள்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *