For my part
I travel not to
Go anywhere,
But to go
I travel for
Travels sake
The great affair
Is to move
– Robert Louis Stevenson ( 115 issue Feb 2022 )
( Read during Chennai to Calcutta Indigo flight Indigo magazine )
—-1—-
பூமியின் பாடல்கள்” என்ற தலைப்பில் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் கதைகளை நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் மொழிபெயர்ப்பு செய்திருந்தேன் அந்த பதினைந்து கதைகளைக் கொண்ட தொகுப்பை சாகித்திய அகாதமி வெளியிட்டிருந்தது
ஏழு சகோதரி மாநிலங்கள் அல்லது வடகிழக்கு இந்தியா என்பது இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 சிறிய மாநிலங்களைக் குறிக்கும் அருணாச்சல பிரதேசம் அசாம் நாகாலாந்து மிசோரம் மணிப்பூர் மேகாலயா சிக்கிம் மற்றும் திரிபுரா இவையாகும் .பண்பாடு சமூக மற்றும் அரசியல் தளங்களில் இந்த பழம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது .
என் பூமியின் பாடல்கள் தொகுப்பு வந்தபின் அப்போது மேகாலயாவில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக் இருந்ததால் அவரை கொண்டு அங்கு அந்த நூலை வெளியிடலாம் என்று சில நண்பர்கள் முயற்சி செய்தார்கள். அந்த மாநில ஆளுநர் தமிழகத்திற்கு வந்தபோது திருப்பூருக்கு வந்திருந்தார் அப்போது அந்த நூலை அவரை கொண்டு அறிமுகம் செய்ய வெளியிட நண்பர்கள் முயற்சி எடுத்துக் கொண்டனர் .ஆனால் அரசியல் சார்ந்த கருத்துக்களின் காரணமாகவும் நான் இடதுசாரி அரசியல் சார்ந்த எழுத்தாளர் என்ற முறையிலும் அங்கு ஏற்பட்ட பிணக்குகள் அந்த விழா ஏற்பாடு செய்ய முடியாமல் போய்வட்டது
சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் அரசியல்வாதிகளும் புறாவும் என்ற மொழிபெயர்ப்பு கவிதைகள் நூலை கனவு பதிப்பகத்தில் வெளியிட்டு இருந்தேன் அதில் மணிப்பூரை சேர்ந்த ரகு லைசாங்கதம் மற்றும் தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)
போன்றோரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்தி ருந்தேன் இதில் ரகு லைசாங்கதம் என்பவரை டெல்லியிலிருந்து சாகித்ய அகாதமி நிகழ்ச்சியிலிருந்துத் திரும்புகிற போது ரயில் பயணத்தில் சந்தித்தேன் அவர் தந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூலில் இருந்து அவரின் கவிதையை மொழிபெயர்த்து தொடர்வண்டி பயணத்திலேயே அவரிடம் கொடுத்தேன் மகிழ்ச்சியடைந்தார்.
ஒருமுறை வடகிழக்கு இந்திய எழுத்தாளர்கள் கூட்டம் ஒன்றிற்கு சாகித்ய அகாதமி அழைத்திருந்தார்கள் ஆனால் அந்த சமயத்தில் அசாமில் வெள்ளம் மற்றும் மேகாலயா போன்ற பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. என்னால் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்ட வேறு தேதிகளில் ஒரு முக்கியமான குடும்ப காரியம் காரணமாக செல்ல முடியவில்லை அதனால் மேகாலயா குறிப்பாகச் சில்லாங் செல்வது என்பது என்னுடைய நீண்ட நாள் திட்டத்தில் ஒன்றாக இருந்தது அது மார்ச் மாதம் நண்பர்களுடன் வாய்ப்பு ஏற்பட்டது
—-2—-
வடகிழக்கு மாநில மக்களின் குரல்களை வெளிப்படுத்தும் இந்தக்கவிதைகளை நான் பத்து ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்த்தேன் .இன்றையச் சூழலில் இன்னும் அவை பொறுத்தமான அரசியல் குரல்களாகவே விலங்குகின்றன.
அரசியல்வாதியும் புறாவும்
ஓர் அரசியல்வாதியும் வெள்ளைப் புறாவும்
அன்பாகவும் இருந்தனர்
அடிக்கடி சண்டையிட்டும் கொண்டிருந்தனர்
வானில் சுதந்திரமாக பறக்க விரும்புவதாக புறா சொன்னது.
அரசியல்வாதி சொன்னார்:
“ உன்னை பறக்க அனுமதிப்பதோ, இல்லையோ
அது என் அரசியல்” “
புறா மீண்டும் சொன்னது:
“நான் என் இறக்கைகளை அடித்தபடி
வானில் பறப்பேன்””
அரசியல்வாதி ஒரு துப்பாக்கியைக் காட்டினான்.
புறா பறக்க இயலாமல் மெளனமானது.
இப்போது வெள்ளைப்புறா
அரசியல்வாதியின் சட்டைப் பாக்கெட்டில் இருக்கிறது.
– ரகு லைசாங்கதம் (மணிப்பூரி)
* காந்தியும், ரோபோவும்
நீண்ட காலத்திற்கு முன்
நேருஜி ரஷ்யாவிலிருந்து வந்த ஒரு ரோபோவை வைத்திருந்தார்
அதன் வாய் ஒரே நிமிடத்தில்
ஆயிரம் முறை “ஹரே ராமா””வை உச்சரிக்கும்
பிர்லாவிடமிருந்து கடன் பெற்ற காந்தியை வைத்திருந்தார்
பத்து கண்டு நூலை ஒரு மணிநேரத்தில் நூற்கும்
விக்ரம் சாராபாய் குடியரசு தினத்தில் அறிவித்தார்:
ட்ராம் பேயில் விஞ்ஞானத்திற்காக புது புனித ஸ்தலத்தை சிருஷ்டிப்பேன்
தில்லி செங்கோட்டையில்
வெறும் வயிற்றோடும் வறண்ட தொண்டையோடும்
கழுதைகள் கத்துகின்றன.
வண்ணார்கள் “ ஹரிஜன”” தினசரியின் பழைய பிரதிகளை
துண்டுதுண்டாக்கி தின்னக் கொடுக்கிறார்கள்.
இன்று சாதுக்கள் அறிவிக்கிறார்கள்:
பொக்கரனில் கோவில் ஒன்றைக் கட்டுவோம்,
புது புத்தரை வைக்க.
மகிழ்ச்சியுடன் கத்தினேன்:
“வாழ்க பாரதம், வாழ்க”” –
-தங்ஜாம் ஜபோபி சாக்(மணிப்பூரி)
இந்தியாவில் இயற்கை வளம் மிக்க மாநிலங்களில் குறிப்பிடத்தக்கவை வடகிழக்கு மாநிலங்கள். இந்த மாநிலங்களின் கலாச்சாரம் சமூக பொருளாதார அரசியல் குறித்த பல்வேறு அம்சங்களை நான் முன்பு மொழிபெயர்ப்பு ” பூமியின் பாடல்கள் “ என்ற நூலில் . கண்டேன் அந்த நூல் வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை இந்திய சுற்றுப்பயணம் முடித்து திரும்புகிற போது அந்த கதைகளை நான் மீண்டும் படித்தேன .இப்போது அந்த கதைகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது சுலபமாக இருந்தது.அங்கு இருக்கிற சாதாரண மக்கள் அவர்கள் மத்தியில் திடமான நம்பிக்கைகள், மதம் சார்ந்த உணர்வுகள், தொன்மங்கள் சார்ந்த நம்பிக்கைகள், வறுமை சூழல் போன்றவை அந்த கதைகளில் முக்கிய அம்சங்களாக இருந்தன. இயற்கை வளமும் அழகும் கொண்ட இந்த பகுதி இன்றளவும் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகவும் இருக்கிறது அங்க இருக்கிற தோட்டத்தொழிலாளர் பிரச்சனைகளில் பல கோணங்கள் இருந்தன.எளிதில் அணுக முடியாத மலைப்பகுதிகளில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய நிர்வாகம் செய்து வருவதை கண்டு கொள்ள முடிந்தது காசி போன்ற பகுதிகளில் தாய்வழிச் சமூகத்தின் எச்சங்கள் இன்னும் இருப்பதும் தாய்வழிச் சமூகத்தின் கூறுகளை அவர்கள் பின்பற்றுவதும் தெரிந்தது அங்கு வங்க தேச மக்களின் குடியேற்றம் பல சமயங்களில் நிகழ்ந்தது. கிறிஸ்தவர்கள் பழங்குடிகள் மத்தியில் கல்வி போதித்தனர் மத மாற்றங்களும ஏற்பட்டன விடுதலைக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய படி வெடித்தன இன்று வரை இது நீடிக்கும் சூழல்கள் இன மோதல்கள் அதனோடு தொடர்புடைய ஆயுதப் போராட்டங்கள், புதிதாக ஒப்பந்தமாகும் சில விஷயங்கள் வழிவிட்டுக் கொண்டே இருக்கின்றன மற்றும் குடியேறிகளுக்கும் மரபான ,புராதான மக்களுக்கும் இடையில் கூடிய மோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இந்த அம்சங்களை நான் அங்கிருக்கும் மக்களுடன் பேசுகிறபோது அறிந்துகொண்டேன் இந்த “ பூமியின் பாடல்கள் “ நூலின் கூட அந்த அம்சங்கள் இருப்பதை நான் மறுவாசிப்பு செய்கிறபோது அறிந்துகண்டேன் பிரம்மபுத்திரா நதியின் விகாச்த் தன்மையும் மழை காரணமாக ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கரையோரங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து அந்த பகுதியில் நாசமாவதையும் கூட அறிந்து கொள்ள முடிந்தது எல்லை பிரச்சனை என்பது காலப்போக்கில் எல்லை நிர்ணயம் என்பது கொண்டிருக்கிறது தனி மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தின் விளைவு இந்திய அரசு அசாம் மாநில அரசு மத்தியில் பதட்டமான நிலையே பல ஆண்டுகள் கொண்டிருந்தது. அவ்வப்போது பக்கத்திலிருந்து குடியேறும் மக்களுடைய பிரச்சனைகளும் கிழக்குப் பாகிஸ்தான் கலவரங்களால் வங்காளிகள் அகதிகளாக குடியேறி வரும் சார்ந்த பல்வேறு அம்சங்களை அதனுடைய கதைகள் சொல்லியிருக்கின்றன. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் வெறும் மலைக் குன்றுகளையும் நிகழ்ச்சிகளையும் குகைகளையும் இயற்கை சார்ந்த பல்வேறு அம்சங்களையும் இந்த வடகிழக்கு இந்தியாவின் பயணத்தில் நான் அறிந்துகொள்ள முடிந்தது . இயற்கை பிரம்மாண்டமானது அது அதனோடு மனிதன் இணைந்து வாழ்வது தான் மனிதனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகும்.அப்படி இல்லாதபோது துயரங்கள் தான் அதிகமாகின்றன. இயற்கையை வெற்றி கொள்ள மனிதன் முடியாது என்பதை இந்த பயணத்தில் நான் தெரிந்து கொண்டேன். வளைந்து வளைந்து செல்லும் சாலைகளில், ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலைக்கு வரவேண்டியது ஒரு அருவியை பார்க்க வேண்டுமெனறால் தூரம் இருந்துதான் ரசிக்க வேண்டும்,கனகத்துள்தான் அவை அடங்கிப்போயிருக்கும் வளைந்து வளைந்து செல்லும் சாலைகள்,ஒரு மலையில் ஏறி அடுத்த மலையில் இறங்கவேண்டும் சாலை போடுவது பராமரிப்பது என்பது தொடர்ந்து கொண்டே இருப்பதால் பயணங்கள் மிகுந்த தாமதமாகத்தான் ஆகின்றன .ஆனால் அந்த இயற்கையின் பேரழகை ரசிப்பதற்கு எதுவுமே தடை இல்லை என்பதை இந்த வடகிழக்கு இந்திய பயணம் உணர்த்தியது.
அசாமில் சில நாட்களும் சில்லாங்கில் சில நாட்களும் சிரபுஞ்சியில் சில நாட்களுமாக வடகிழக்கு இந்திய பயணம் அமைந்திருந்தது .இன்னும் மணிப்பூர் நாகாலாந்து உட்பட சில மாநிலங்களில் பயணப்பட வேண்டி இருக்கிறது அடுத்த பயணம் அதற்கான ஆயத்தங்களையும் வழிமுறைகளையும் சொல்லும் என்று நினைக்கிறேன் நான் மொழிபெயர்த்த இரண்டு மணிபூரி கவிதைகளை உங்கள் பார்வைக்கு மேலேத் தந்திருக்கிறேன்
( தொகுப்பு : அரசியல்வாதியும் புறாவும்
மொழிபெயர்ப்புக்கவிதைகள்/ சுப்ரபாரதிமணியன்
வெளியீடு : கனவு பதிப்பகம், திருப்பூர்)
இந்த அரசியல் குரல்களின் யதார்த்த நிலையை பின்னால அலசிக்கொள்ளலாம்
—-3—-
ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார்
அஸ்ஸாம் செல்வதாகச் சொன்னபோது பறவை,விலங்கியல் சார்ந்த விசயங்களில் அக்கறை கொண்ட நண்பர் சின்னராஜ் அவர்கள் அஸ்ஸாமில் ஒற்றைக்கொம்பன் காண்டா மிருகத்தைப்பார்க்கச் சொன்னார். அப்புறம் பிரம்மபுத்திரா நதியையும் பாருங்கள் என்றார்.
அஸ்ஸாம்- கவுகாத்தி வடகிழக்கு மாநிலங்களின் நுழைவாயில்.
நான் கொஞ்சம் எழுத்தாளர்களைச் சந்திக்க ஆசை. ஆனால் சுற்றுலாவில் பெரியக் குழுவில் இருப்பதால் தனிப்பட்ட ஆசைகள் , சந்திப்புகள் சாத்தியமா என்று தெரியவில்லை என்றேன்
இவ்வாண்டின் ஞானபீடம் பரிசு, தேசிய விருதுத்திரைப்படம் ஆகியவை அஸ்ஸாம் சார்ந்தவர்கள் பெற்றிருந்தார்கள் என்பது கவுகாத்தி விமானநிலையத்தில் இறங்கியபோது மனதில் வந்தது. முகப்பில் தென்பட்ட அழகான ஓவியங்கள், சிற்பங்கள் கவனத்திற்குரியதாக இருந்தன.உக்ரேனில் இருந்து வரும் இந்திய மாணவர்களை வரவேற்று விமான நிலையத்தில் வரவேற்புப் பதாகைகள் இருந்தன.
முதலில் ஒற்றைக்கொம்பன் காண்டா
அப்புறம் உக்ரேனுக்குப் போகலாம்.
இந்திய மூக்குக்கொம்பன், இந்திய காண்டாமிருகம், அல்லது ஒற்றைக்கொம்பன் என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இயற்கைச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் செம்பாதிக்கும் மேலான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின் சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விலங்கு அசாமின் மாநிலவிலங்காகும்.
ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த மூக்குக்கொம்பன் இனம் இந்திய மூக்குக்கொம்பன் ஆகும்.
மூதாதைய மூக்குக்கொம்ன் முன் இயோசீன் காலத்தில் ஒற்றைப்படைக் குளம்பிகளிடம் இருந்து பிரிந்து படிவளர்ச்சி அடைந்தது. இழைமணிகளின் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியின் மரபியல் கணக்குப்படி தற்கால காண்டாமிருகத்தின் மூதாதையர்கள் சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் குதிரைக் குடும்பத்தில் இருந்து பிரிந்துவந்துள்ளன என்று அறியப்பட்டுள்ளது. உலகில் தற்போதுள்ள காண்டாமிருகங்களின் குடும்பம் முதன்முதலில் யூரேசியாவில் இயோசீன் காலத்தில் தோன்றியதாகவும், மேலும் மூதாதைய காண்டாமிருகம் மயோசீன் காலத்தில் ஆசிய கண்டத்திலிருந்து அற்றுப்போய் இருக்கலாம் எனவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்திய மூக்குக்கொம்பனின் தொல்லியல் எச்சங்கள் நடு பிலிசுடோசின் காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பிலிசுடோசின் காலத்தில் காண்டமிருகப் பேரினம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசிய பகுதிகளில் வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இவ்விலங்கின் தொல்லியல் எச்சம் இலங்கைத் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டின் திருநெல்வேலியை அடுத்த சாத்தான்குளத்தில் காண்டமிருகத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் கோலோசின் காலத்தில் இம் மூக்குகொம்பன்கள் தற்போதய இந்தியாவின் மேற்கு பகுதியான குசராத்திலும், பாக்கிசுத்தானிலும் 3200 ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
முகலாயப் பேரரசரான அக்பரின் குறிப்புகளின்படி காண்டாமிருகங்கள் இன்றைய உத்திரப் பிரதேசத்தின் சாம்பல்பூரில் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. மற்றொரு முகலாய மன்னரான சகாங்கீரின் குறிப்புகளின்படி இவ்விலங்குகள் உத்திரப் பிரதேசத்தின் அலிகார் பகுதியில் காணப்பட்டதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தியா மற்றும் பாக்கிசுத்தான் பகுதிகளில் மூக்குக்கொம்பன்கள் வாழ்ந்ததற்கான தொல் எச்ச ஆதாரங்கள் கிடைத்த இடங்களையும் அதன் காலத்தையும் விளக்கும் சட்டம்:
மேற்கு உலகிற்கு முதன்முதலில் அறிமுகமாகிய காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். போர்த்துகிய முதலாம் மானுவேல் பத்தாம் போப் லீயோவுக்காக ஒரு காண்டாமிருகத்தை கப்பலில் அனுப்பி வைத்தான், ஆனால் எதிர்பாராவிதமாக அக்கப்பல் பயணத்தின் போது விபத்துக்குள்ளானது. அக்கப்பலில் இருந்த ஒரு ஓவியர் காண்டமிருகத்தின் படத்தை வரைந்து வைத்திருந்தார். அப்படத்தை அடிப்படையாக வைத்து ஆல்பிரெஃக்ட் டியுரே காண்டாமிருகத்தின் மர அச்சு ஒன்றை செதுக்கினார். இது புகழ் பெற்ற ஓர் படிவம். இவர் இவ் விலங்கைப் பார்க்க வாய்ப்பு இல்லாமலே செதுக்கியது குறிப்பிடத்தகுந்தாகும்.
தற்போது உலகிலுள்ள காண்டாமிருகங்களிலேயே உடலளவில் மிகப்பெரிய இரண்டு காண்டாமிருகங்களில் இந்திய காண்டாமிருகமும் ஒன்றாகும். அதிக அளவாக ஆணின் தோள்பட்டையின் உயரம் சுமார் 180 செ.மீ வரை இருக்கும். சராசரி ஆணின் உயரம் 170 செ.மீ சுற்றளவு 335 செ.மீ ஆகும். இவ்விலங்கின் வெளிப்புறம் கடினமான தோலினால் பல மடிப்புகளைக் கொண்டதாகும். தோலின் புறநிறம் பழுப்பு நிறத்திலும் மடிப்புகளுக்கிடையே வெளிறிய சிவப்பு நிறத்திலும் காணப்படும். இவ்விலங்கு நீர் குட்டைகளில் இருப்பதால் உடலில் பெரும்பாலான பகுதி சேற்றுப்பூச்சைக்கொண்டிருக்கும்.இவ்விலங்கில் கண்கள், காதுகள் மற்றும் வாலின் நுனிப்பகுதி தவிர்த்து வேறு எங்கும் மயிர்கள் இராது. வாலின் நீளம் ஏறத்தாழ 70 செ.மீ ஆகும். ஆண் கொம்பன்களுக்கு கழுத்தின் அருகில் தோலினால் ஆன மடிப்புகள் தோன்றும்.
நன்கு வளர்ந்த ஆண் பெண்னை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கும். ஆண் 2200 முதல் 3000 கிலோ வரையும் பெண் 1600 கிலோ எடையில் இருக்கும். மிக அதிகபட்சமாக 3500 கிலோ எடையுள்ள விலங்கு ஒன்று காணப்பட்டதாக தரவுகள் கூறப்படுகிறது. கொம்பு ஆணிலும் பெண்ணிலும் காணப்படினும் பிறந்த குட்டிகளில் காணப்படுவதில்லை. இதன் கொம்பு கெராட்டின் எனப்படும் நகமியம் அல்லது கொம்புறை அல்லது நகமஞ்சளம் என்றழைக்கப்படும் பொருளாளால் ஆனதாகும். இதன் கொம்புகள் மனிதரின் நகங்களைப் போன்ற பொருளால் ஆனது. கன்றுகள் பிறந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவற்றின் கொம்புகள் வெளிப்படும். பெரும்பாலான வயதுவந்த விலங்குகளுக்கு கொம்பு ஏறத்தாழ 25 செ. மீ நீளம் வளரும்.. அதிகபட்சமாக சில விலங்குகளில் 57.2 செ.மீ கணக்கிடப்பட்டுள்ளது. இதன் கொம்புகள் கறுப்பு நிறத்தை கொண்டவையாகும். உயிரினக்காட்சி சாலைகளில் உள்ள விலங்குகளுக்கு காட்டில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இணையாக கொம்புகள் வளருவதில்லை..
இந்திய காண்டாமிருகம் சிறுதொலைவுக்கு மணிக்கு 40 கி.மீ வேகமாக ஓடக்கூடிய திறன் படைத்ததாகும். இந்த விலங்கு மிகக் கூர்மையான மோப்ப மற்றும் கேட்கும் திறனைப் பெற்றது, ஆனால் இதன் பார்க்கும் திறன் மிகக் குறைவாகும். இவை பெரும்பாலும் தனித்து வாழும் இயல்பைக் கொண்டதாயினும் குட்டி ஈன்றபின் குட்டி தாயுடனே இருக்கும், இனப்பெருக்கம் செய்யும் பிணைகளும் ஒன்றாகவே இருக்கும். மேலும் ஒரு பகுதியில் வாழும் விலங்குகள் அனைத்தும் சில நேரங்களில் குளிக்கும் இடங்களில் ஒன்று சேரும். ஆண்கள் தங்களுக்கென்று ஒரு எல்லையை வகுத்துக் கொள்கின்றன. சராசரியாக ஒரு ஆணின் எல்லை 2 முதல் 8 சதுர கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும். முனைப்பான ஆண்கள் இனப்பெருக்க காலத்தில் தங்களுடைய எல்லைக்குள் வேறு ஆணை அனுமதிப்பதில்லை. சில நேரங்களில் எல்லை மீறலினால் ஒன்றுக்கொன்று கடும் சண்டையிடும். இவ்விலங்கின் நடவடிக்கைகள் இரவு மற்றும் விடியற்காலையில் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகல்பொழுதை அருகிலுள்ள குளம், ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் புரண்டு கழிப்பன. இவை பெரும்பாலும் சதுப்புநிலங்களில் வாழ்வதால் நீரில் நன்றாக நீந்தக்கூடியவை. ஒலி எழுப்பி தன் இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும். இத்தகைய ஒலிகள் பத்து வகைகள் என்று இன்று வரை அறியப்பட்டுள்ளது. இவை ஒரு முறை சாணி போட்ட இடத்தை எப்பொழுதும் பயன்படுத்தும் பண்பை உடையது. இப்பண்பினால இதனை வேட்டையாடுபவர்கள் ஒரு சாணிக்குவியலை கண்டுபிடித்து அதன் அருகே விலங்கின் வருகைக்காக காத்திருந்து விலங்கு வந்தவுடன் கொன்றுவிடுவார்கள்.
அட்டை, தொள்ளுப் பூச்சி மற்றும் இழைப்புழு போன்றவை காண்டமிருகத்தின் புறத்தோலில் இருக்கும். சில நேரங்களில் இப்பூச்சிகளால் பல்வேறு தொற்று நோய்கள் காண்டமிருகத்தைத் தாக்குகின்றன. மேலும் காண்டமிருகத்தை ஆந்திராசு மற்றும் தோலில் நுண்ணுயிர் மரித்தல் போன்ற வியாதிகளும் தாக்கும்.
இவ்விலங்கு புல், இலை, பழங்கள் மற்றும் நீர்ச்செடிகளைத் உண்கிறது. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் மேயும். இதன் முகத்தின் மேல்தட்டையை வைத்து புதர்களில் உள்ள புற்களை மடக்கி பின் மென்று தின்னும் பழக்கத்தைக் கொண்டதாகும். தாய் விலங்குகள் சிலசமயங்களில் குட்டிகளுக்கு ஏற்றவாறு புற்களையும், புதர்களையும் காலாலோ அல்லது உடலலோ அழுத்தி மடக்கிக் கொடுக்கும். இவ்விலங்கு பெரும்பாலும் தன் சிறுநீர் கலந்த நீரையே உட்கொள்ளும்.
இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். உயிரினக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் 4 ஆண்டுகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றது, ஆனால் காடுகளில் உள்ளவை 6 ஆண்டுகளுக்கு மேலே மட்டும் இனப்பெருக்கம் செய்கின்றன. காடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திடமான ஆண்களை சமாளிக்கவேண்டி மிக அதிகமான உடல் வலு தேவைப்படுகிறது. ஆதலால் 6 அகவைகளைத் தாண்டிய பின்னரே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சில வேளைகளில் வலுவான இரண்டு ஆண் கொம்பன்களுக்கிடையே ஆதிக்கம் செலுத்த வேண்டி சண்டைகள் நடப்பதுண்டு, இச்சண்டைகளின் போது பலம் குறைந்த விலங்கு இறப்பதும் உண்டு. ஆப்பிரிக்க காண்டமிருகங்களைப் போல கொம்பினால் முட்டாமல் இவை முன்வாய்ப் பற்களால் எதிரிகளைக் கடிக்கும். ( வி பீடியா )
கடிக்கும் கொம்பனை விட்டு விட்டு இலக்கியம் பக்கம் போகலாமே
இவ்வாண்டு அசாமிய கவிஞர் நில்மணி பூகன் ஜூனியர் 56வது ஞானபீட வென்றார்.
நாட்டின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடமானது “இலக்கியத்திற்கான அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக” எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
“
90 வயதான பூகன், சாகித்ய அகாடமி மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்றவர். கவுகாத்தியைச் சேர்ந்த அவர் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சூரிய ஹேனு நமி அஹே எய் நொடியேடி , குலாபி ஜமுர் லக்னா மற்றும் கோபிதா ஆகியவற்றை எழுதியுள்ளார் .
ஆனால் உரைநடை எழுதுவார். அவர் அஸ்ஸாமின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவராக இருந்தார், மேலும் நாட்டுப்புறவியல் மற்றும் நாட்டுப்புற கலைகளில் பணியாற்றினார்.
பூகன் ஞானபீடத்தைப் பெற்ற மூன்றாவது அஸ்ஸாமி எழுத்தாளர் ஆவார். இதற்கு முன் 1979 இல் பிரேந்திர குமார் பட்டாச்சார்யா மற்றும் 2000 இல் மாமோனி ரைசோம் கோஸ்வாமி ஆகியோர் விருது பெற்றவர்கள்.
- கண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்
- இன்று…
- தலைப்பில்லாத கவிதைகள்
- பார்த்தாலே போதும்
- அறிஞர் அப்துற்-றஹீம் கூறும் எண்ணமும் வாழ்க்கையும்
- ’பாவண்ணனின் வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’
- கவிச்சூரியன் ஐக்கூ 2022
- இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
- நான் கூச்சக்காரன்
- வர்ண மகள் – நபகேசரா
- வடகிழக்கு இந்திய பயணமும் வடகிழக்கு இந்திய எழுத்தாளர்களின் சிறுகதைகளும்
- இன்னும் எவ்வளவோ
- ஒட்டடைக்குருவி
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.
- எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 31
- சொல்லவேண்டிய சில…..
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இசையோடு, காட்சியோடு பாடல் : ஆடும் அழகே அழகு