மதுவந்தி
lemon Orzo
எலுமிச்சை ஆர்ஸோ
இது பொதுவாக எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு. இதில் உங்கள் விருப்பத்துக்கேற்ப மாறுதல்களையும் செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
ஆலிவ் எண்ணெய்
பூண்டு
சிக்கன் ப்ராத் அல்லது வெஜிடபிள் ப்ராத்
ஆர்ஸோ
உப்பு மிளகு தேவையான அளவு
ஒரு எலுமிச்சை
பார்ஸ்லி மேலே அழகுக்கு தூவ
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- இதில் நசுக்கிய பூண்டுகளை போட்டு 20 வினாடிகள் மணம் வரும் வரை வதக்கவும்.
- இதில் சிக்கன் ப்ராத் அல்லது வெஜிடபிள் ப்ராத், அல்லது தண்ணீரை ஊற்றி கொதிக்கும் வரை கொண்டு வரவும்.
- இதில் ஆர்ஸோவை போட்டு சி்றிதளவு உப்பும் போட்டு, பிறகு எலுமிச்சை தோலை மிகச்சிறிய சீவல்களாக போட்டு கொதிக்க விடவும்.
- ஆர்ஸோ மிருதுவாக ஆனபின்னால் (சுமார் 10 நிமிடம்) தண்ணீர் ஆவியாகியிருந்தால், தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் அல்லது ப்ராத் சேர்த்து வேகவிடவும்.
- இறுதியில் எடுக்கும்போது தண்ணீர் இருக்கக்கூடாது. அதே நேரம் நன்றாக வெந்திருக்கவும் வேண்டும்.
- தீயிலிருந்து எடுத்து தனியே இதில் எலுமிச்சை சாறு ஊற்றி, மேலும் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி உப்பு மிளகு ருசிக்கேற்ப சேர்க்கவும்.
- இத்தோடு பார்மஸான் சீஸை சீவல்களாகவும் சேர்க்கலாம்.
- மேலே பார்ஸ்லி தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
- அகழ்நானூறு 15
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 8
- வரிதான் நாட்டின் வருமானம்
- அந்தப் பதினெட்டு நாட்கள்..! 1 – காட்டுப் பன்றிகள்
- ஹைக்கூக்கள்
- மாலை நேரத்து தேநீர்
- கடவுளின் வடிவம் யாது ?
- பேராற்றல் கொண்ட பிரபஞ்சக் கருந்துளைகள் (Black Holes)
- பேராசிரியர் எஸ். பசுபதி அவர்களின் பிரிவுத்துயர் பகிர்வு
- நாவல் தினை – அத்தியாயம் மூன்று
- எலுமிச்சை ஆர்ஸோ