இரண்டு கவிதைகள்

வாகன  இரைச்சலில் சாலைகள் காலடி  ஓசையில்  பாதைகள் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மைனாவாய் மேய ஆசை ---------- அவள் தைரியமாகவே உலா வருகிறாள் உரக்கப் பேசுகிறாள் எவர்தான் என்ன செய்யமுடியும்? அவளுக்கென்று ஒருவன் அவனோடு இருக்கும்வரை அமீதாம்மாள்
நாவல்    தினை              அத்தியாயம் முப்பத்தொன்று  CE 5000

நாவல்    தினை              அத்தியாயம் முப்பத்தொன்று  CE 5000

   நீலன் வைத்தியர் எழுந்து விட்டார்.  பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் கூட யாரும் லட்சியம் செய்யவில்லை.  போன வாரம் வரை இப்படி ஆகியிருந்தால், எப்படி, கரடி கரணம் அடித்தபடி பறந்திருந்தால்…