Posted in

நிணம்

This entry is part 2 of 6 in the series 8 ஜூன் 2025

புரிபடாதவைகள்  ஆயிரம்

புரிந்தவைகள்  சொற்பம்

புரிந்தும்  புரியாமலும்  கடந்து  கொண்டிருக்கிறோம்

காதல்  கொண்ட  இரு  உடல்  எந்திரங்கள்

விடுதலைக்கான  யுத்தகளத்தில்  நிற்கின்றன

ஆழ்ந்த  மானுடப்  புரிதலை  ஆயுதங்களாய்  ஏந்தியிருக்கின்றன

கனவு  காண்பது  மனசுக்கு  நிம்மதி

கவிதையில்  கரைவது  உயிருக்கு  சந்தோஷம்

கடும்  வெயிலில்  காலத்தைக்  கடந்தாகணும்

பறவை மனசுள்

மாயக் கூண்டுகள்

நிழலுள் தயங்கித் தயங்கி

நுழைய

எத்தனிக்கும் வெயில்

பூவே இதயம்

காலியாய் இருக்கிறது

காதலாய் கசிந்துருகும் கனவாய் வாழ்வு

நினைவுகள் சிறகடிக்கின்றன

அம்புகளாய் துயரங்கள் தைத்தன

வீழ்ந்து மடிந்தது இதயம்.

மிரட்டினார்கள் பணியவில்லை

கெஞ்சினார்கள் அசையவில்லை

மலையாய் நின்றது காதல்

உதைத்தவர்கள்

ஓரங்கட்டியவர்கள்

கரங் குவிக்க சூரியனாய் எழுகிறது

யோசித்தேன்

தூக்கம் வரவில்லை

நிணம் புசிக்குது மிருகம்

நீதியற்ற மதம்

நாதியற்ற ஜனம்

படுகொலைகள் தொடருகிறது தினம்

இரவில் பிசாசாய் விழித்து இருக்கிறேன்

இதயமும் மூளையும் கனலை கனியவைக்கின்றன

இரு விழிகள் சிவந்து ஒளிர்கின்றன

உள்ளம் பசித்திருக்கணும்

உடல் புசித்திருக்கணும்

எல்லாம் இன்ப மயம்.

🦀

வசந்ததீபன்

Series Navigationஏழாவது சுவையின் இணக்கம்.எட்னா எரிமலையின் சீற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *