Posted in

இந்தக் கோமாளிகளுக்குஉங்களைப்பற்றித் தெரியாது

This entry is part 5 of 5 in the series 9 நவம்பர் 2025

மாமதயானை

( சென்ரியு கவிதைகள்)

கனமான பையை

எப்படி சுலபமாக தூக்கினான்…

திருடன்

**

அன்னதானம் வாங்க தூக்க முடியாமல்

தூக்கிக் கொண்டு ஓடினான்….

தொப்பையை

**

குடிசை வீட்டிற்குள்

விரும்பிப் போய் குடியிருக்கும்…

அன்பு

**

ஆஞ்சநேயர் வாயில்

வெண்ணெய் அடித்தார்கள்…

ஏழையின் வயிற்றில் அடித்தவரகள்

**

தொட்டியில் பால்நிலா

குடித்து விட முயலும்…

பூனை

**

புரட்சி வெடிக்கட்டும்

மறுகணத்தில் வெடித்தது…

குழந்தையின் பலூன்

**

உலக வாழ்க்கையை வெறுத்து

பக்தி மார்க்கத்திற்கு மாறினான்…

பத்து பிள்ளைக்கு தகப்பன்

**

பிள்ளையார் சுழிபோட்டவன்

எழுதத் தொடங்கினான்…

திருட்டுக்கணக்கு

Series Navigationநூற்றாண்டின் நினைவில் எனது ஆசான் – தமிழருவி த. சண்முகசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *