சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப் போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே! அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே இருக்கிறது! எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன். மகர நெடுங்குழைக் காதர் அவரைப் பார்த்துக்கொள்வார். நான் ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தபோதே என்னுடைய தீவிர வாசகர்களீல் ஒருவராக இருந்தவரை இழந்துவிட்டேன். பிறந்துவிட்ட […]
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி: தீன் முகமது என்கிற ஷேக் அப்துல்லா ஒரு ரயில் பயணியின் பணப்பையைத் திருடிய குற்றத்துக்காக முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டபோது, அதிக பட்சமாக அவனுக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனைதான் கிடைத்திருக் கும். ஆனால் நல்ல வேளையாக அவனது கை ரேகைகள் முன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கைவரிசை யைக் காட்டுவதில் அவன் பழம் பெருச்சாளி என்பதைப் போலீசாரால் நிரூபிக்க முடிந்தது. […]
எனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இல்லையில்லை, அப்படியொன்று இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள். நானாகத்தான் அந்தப் பிரச்சினை க்குத் தீர்வு காண முடியும் என்கிறார்கள். சிலர் தீர்வு கண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சிலபேர் அழுது ஆகாத்தியம் செய்கிறார்கள். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதில் இவர்கள் ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறார்கள்? ‘தீர்வுக்குக் கண்டிப்பாகச் செலவாகும். பணம் அனுப்புகிறோம்’ என்கிறார்கள். ‘வேண்டாம், வேண்டாம்’ என்று அவர்களிடம் மன்றாட வேண்டியிருக்கிறது. அப்படியும் சிலர் ரொம்ப சாமர்த்தியமாக என்னைப் பார்த்துவிட்டுப் […]
புதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ் ஸ்டால் எண் 488-ல் விற்பனையாகி வருகிறது. இச்சிறுகதைகள் இதழ்களில் வெளியானபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்றன என்பது […]
பைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி இழுத்துக் கொண்டு கையில் ஒரு இறைச்சித் துண்டுடன் புறப்பட்டுவிடுகிறான்.. கூண்டைக் […]
கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும் உயர் பதவி வகித்தவர். தாம் பணியாற்றிய கீழ்த்திசை நாடுகளின் சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், கலைகள், கைவினைத் திறமைகள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் கேட்டறிந்து பதிவு செய்வதில் ஈடுபாடு கொண்டவர் இவர். இதற்காகவே, விவரம் அறிந்த உள்ளூர் நபர்களை உதவியாளர்களாக வைத்துக்கொண்டு […]
திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்த்தில்லை; தொடக்கம் முதல் இன்று வரை திராவிட அரசியல்தான் இங்கு நடத்தப் படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் நூல் புத்தக விலை : ரூ. 135/- பக்கம் 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம் லாயிட்ஸ் சாலை சென்னை 600 014 தொலை பேசி: +91-44-4200 9601 /03/04 பின் அட்டை வாசகங்கள் : திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. […]
நம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) என்ற பொது அமைப்பு 1918 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. காங்கிரஸ்காரரும், சைவ நெறிச் செல்வரும், தமிழறிஞருமான சாந்த சொரூபி திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அது தொடங்கப் படுவதற்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியப்புக்குரிய செய்தி! (பி.பி. வாடியா) பி.பி. வாடியா, சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் துணையுடன் […]
மலர்மன்னன் மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும். தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் […]
(செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள் சிறுகதை:) மலர்மன்னன் ரயிலடியில் இறங்கி வெளியே வந்த ராமசாமிக்குக் கிழக்கு மேற்குத் தெரியவில்லை. பொழுது அப்போதுதான் புலர்ந்து கொண்டிருந்தது. எதிராளி முகந் தெரிய ஆரம்பிக்கவில்லை. புதுச்சேரி அவருக்கு முன்பின் அறியாத ஊர். இங்கே யாரிடம் என்னவென்று விசாரிப்பது? அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஓடி வந்தான், ஒரு ஆள். “சாமீ, வண்டி வேணுமா” என்றான். ‘சரி’ என்று அவன் பின்னால் நடந்தான். அந்த […]