தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 மே 2020

மணவை அமீன் படைப்புகள்

கவிதை!

அரக்க கரும் நிழலொன்று தன் காலணி அணியா வருங்காலால் மணலை இழைத்துக் கொண்டு வருவது போல மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி வந்தான் அவன்! ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை மெல்லிய கண்ணாடி வழியாகப் பார்ப்பது போலிருந்தது – அவனின் முகமும் உடலும்! நெற்றியிலும் புருவங்களிலும் வேடிக்கையானதொரு கோடு பூமியதிர்வின் சாம்பலழிந்துப் போன [Read More]

அரியாசனங்கள்!

மனைகளாய் விரிந்து கிடக்கிறது பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்! பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்! வாகன நெருக்கத்தில் சதை பிளந்து காட்சியளிக்கும் சாலைகளினிடையே மண்டையோட்டின் ஓவியங்கள்! குடி நீர் இல்லாத போதும் வெட்டுருவிற்கு பாலூற்றும் அடிமைகளின் அணிவகுப்பில் எத்தனையோ நடிகர்களின் அரியாசனங்கள்! போதை வருமானமும் [Read More]

கிருமி நுழைந்து விட்டது

காலக்கட்டத்தில் தேதி கிழிக்கப்பட்ட ஓர் இரவது! மசூதியின் முன்னில் நண்பர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம்! மருண்டோடி சிதறினான்.. முஹல்ல குழு நண்பனொருவன்! அதிர்ச்சியும்.. நிசப்தமும் நிலவிய தருணம் உள் நுழைந்தோம்.. நண்பர்கள் புடை சூழ! வேண்டாம்.. தொட்டு விடாதீர்கள். பல ராசிகளுக்கு அடித்து விடும். சில ராசிகளுக்கு ஒடிந்து விடும். – முஹல்லத் தலைவர் கூற்று! [Read More]

நன்றி மறவா..!

பேச வேண்டுமென நினைக்கும் வார்த்தைகள்.. உள் மடங்கி குறைப்பிரசவமாய்! ஜீரணிக்க முடியா நிகழ்தலில்.. காதலுக்கான குறியீடுகள்! கவிதையின் உப்பில் உள்ளளவும் நன்றி மறவா கண்ணீர் படிமங்கள்!!! -மணவை அமீன். [Read More]

அழுகையின் உருவகத்தில்..!

என்ன பதில் மொழிவதென தவிக்கும் விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில் ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால் கண்ணீர் கரைசல் படிமக் காடு படர்ந்திருக்கும். வார்த்தைகளின் உயிரோட்டத்திலே உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்.. ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில் அரவணைத்திட அறியாதொரு அழகியலின் தொன்மம் கரைந்துக் கொண்டிருக்கிறது. *மணவை அமீன்*   [Read More]

தூசு தட்டப் படுகிறது!

படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும் பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்.. யாரோ ஒருவரின் இருப்பு – தூசு தட்டப் படுகிறது..! கரையான் அரித்ததை விட கவலைகளே துரு பிடித்திருக்கிறது!!! *மணவை அமீன்* [Read More]

Latest Topics

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று [Read More]

எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !

நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் [Read More]

தனிமை

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் [Read More]

ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை

 முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த [Read More]

இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்

கோ. மன்றவாணன்       தமிழகத்தின் பல [Read More]

Popular Topics

Archives