கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்

காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் தலைவன் தலைவிக்குச் சமபங்கு உண்டு. உடலும் உயிருமாகவும் இரு கண்களாகவும் திகழ்பவர்கள்; இவர்கள். ஒருவரைவிட்டு ஒருவரை உயர்த்திக்காண இயலாது. தராசின் இரு தட்டுகள் போன்றவர்கள். இவர்கள் இணைந்திருக்கும்போதுதான் இல்லறம் சிறக்கும். தலைவன் தலைவியின் களவிலும் கற்பிலும்…