பயணங்கள் முடிவதில்லை

  மனிதர்களுக்கென்ன  ரயிலேறிப் போய்விடுகிறார்கள்    கசிந்த கண்ணீருக்கும்  குலுக்கிய கைகளுக்கும்  மென்தழுவலுக்கும்  மௌன சாட்சியாய்க் கிடக்கும்  நடைமேடையையும்  உயரத் தூண்களையும்  கழிப்பறை வாடை கருதாமல்  பூவும் பிஞ்சும் உதிர்த்தபடி  நிற்கும்  பெயர் தெரியா இம்மரத்தையும்  என்ன செய்வது..... -உமாமோகன்

வாய்ப்பினால் ஆனது

  அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச் சீலையில் முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன் திறப்பேன் என்கிறான் அங்கே தூண்டிலோடு திரியும் கிழவன்.…

ரோஜா ரோஜாவல்ல….

சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்... மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா  நிறச்சாயல்களில்  எதையும் தேர்ந்தெடுக்காது  எதையோ தேடும்  என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை... "மூணுநாள் கூட வாடாது,..." "கையகலம் பூ...." அவன் அறிமுக இணைப்புகளைக்  கவனியாது , "நா…

தூறலுக்குள் இடி இறக்காதீர்

-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி... ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது... அச்சம்,எரிச்சல், ஆவல்.... ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்...முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ, அதிகாரியோ, திணறடித்துக் கொண்டிருக்கலாம்... மரணச் சடங்கோ,…

கொசுக்கள் மழையில் நனைவதில்லை.

புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் , பாளை கிழித்துக் கொண்டும் , வைக்கோல் உதறியபடியும் யாவரையும் வைத்தபடி இருந்த ருக்கு பெரியம்மாவின் வாசாப்புகள் அலைந்துகொண்டே…

பதின்பருவம் உறைந்த இடம்

இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் ... உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், ஆத்தாவின் சுருக்குப்பை, ஜோடியோ திருகோ தொலைந்த காதணிகள், அருந்த பிளாஸ்டிக் மாலை கோர்க்கும் நரம்பு , கல்யாணமாகிப்போய்விட்ட நிர்மலா…

பாராட்ட வருகிறார்கள்

பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் ஒற்றை விருப்பச் சொடுக்காக புன்னகைக்கலாமா? பல்....? தலையசைப்பு சம்மதமாகவா ?மறுப்பாகவா? மையமாகவா? கண் பணித்துவிடுமோ... சீரான சுவாசத்தோடு வெற்றுப்பார்வை…