மிச்சம் !

சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் ... எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து போகிற ஏதேனுமொரு திசையில் குறுக்கிடும் காகத்திற்கு தெரியாது எதிர்பார்புகளின்…
இவைகள் !

இவைகள் !

ஒரு பறவையின் நீலச் சிறகு ... இன்னும் உறுத்திக்கொண்டிருக்கும் உன் பார்வை ... அன்னியமாக உருக்காட்டி மறையும் என்னுருவம் ... தொலைந்த பயணத்தின் தொடக்க நாட்கள் ... கொஞ்சமும் இங்கிதமற்ற முறையில் சலனப்படும் மணம்.. நமக்கு நாமே எழுதிக்கொண்ட ஓர் இரவு…

புழுங்கும் மௌனம்

  ஒரு மௌனத்தை  எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு ... பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின் பிரவாகத்தில் ஒரு புள்ளியை தனக்குள் புதைத்து புளுங்கியதுண்டா…