தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 பெப்ருவரி 2020

வார்த்தைகள்

கவிப்ரியா பானு

Spread the love

சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..

ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

Series Navigation“சூ ழ ல்”ஓ… (TIN Oo) ………….!

2 Comments for “வார்த்தைகள்”

  • சோமா says:

    கடைசி பாராவை நன்றாகவே அமைத்திருக்கிறீர்கள்..ஒற்றை வார்த்தைதான் நிறையவே மாற்றம் கொள்ளச் செய்கிறது நம் வாழ்க்கையில்…

  • kavibhanu says:

    நன்றி தோழர்.. வார்த்தைகள் பெரும்பாலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.


Leave a Comment

Archives