தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

நீர் சொட்டும் கவிதை

சின்னப்பயல்

Spread the love

நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து
நீர் மட்டுமே தாரை தாரையாகச்
சொட்டிக்கொண்டிருந்தது

சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட
அதில் திடீரென அன்னப்பறவைகள்
நீந்தத்தொடங்கின

எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று
நினைத்த பொழுதில்
அவை என்னைப்பார்த்து அகவின
அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை
யாவும் கவிதைகளாகவே இருந்தன.

புத்தகத்தை கையிலெடுத்து
உலரச்செய்து நோக்கும்போது
அதில் நான்காம் பக்கத்தில் இருந்த
அன்னப்பறவைகளும்
அவற்றோடிருந்த கவிதைகளும்
கரைந்து போயிருந்தன.

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationபின்னூட்டம் – ஒரு பார்வைகவிதை!

One Comment for “நீர் சொட்டும் கவிதை”

  • சோமா says:

    புத்தகத்தின் நான்காம் பக்கத்து நீர் குளமாகி அன்னம் உயிர் பெற்று கவிதை வீட்டை நிரப்பியது. கவிதைக்கு கீழ் இருந்த பெயர் மனிதனாக உயிர் பெற்று “சின்னப்பயல்” என அந்த வீட்டிற்கு உரிமையாளராய் தன்னை நிர்ணயித்துக்கொண்டது.


Leave a Comment to சோமா

Archives