தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

என் சுற்றுப்பயணங்கள்

புதிய மாதவி

Spread the love

மரத்தின் இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
நிறம்மாறிக் காத்திருக்கின்றன
இலையுதிர்க்காலத்திற்காய்
என்னைப் போலவே.

வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங்காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு சங்கீதமாய்.

எவரும் துணையில்லாத
பயணத்தில்
செக்குமாடுகளாய்
பூமியைச் சுற்றியே
வலம் வருகின்றன
என் பால்வீதிகள்.

எப்போதாவது
என் வட்டத்தைத் தாண்டி
எட்டிப்பார்க்கும் கண்களை
எரித்துவிடுகின்றன
எரிநட்சத்திரங்கள்.

கழுத்தில் கட்டியிருக்கும்
கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே
தீர்மானிக்கப்படுகின்றன
எனக்கான
என் சுற்றுப்பயணங்கள்.

Series Navigationஅன்பெனும் தோணிசருகாய் இரு

One Comment for “என் சுற்றுப்பயணங்கள்”

  • சோமா says:

    கயிற்றின் நீள அகலங்கள் ஒரு எல்லையை வகுத்திருப்பது இந்த மண்ணின் தன்மைக்கு நல்லது. மண்ணையும் மனிதர்களின் மனதையும் பொருத்துத்தான் கலாச்சாரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மண்ணின் கலாச்சாரத்தில் கயிற்றின் நீள அகலம் பெண்களுக்கும் மட்டுமல்லாது சமூகத்துக்கே ஒரு எல்லையை வகுக்கிறது. பெரும்பான்மையான தருணம் பெண்களுக்கு கிடைக்கும் கௌரவமும் பாதுகாப்பும் இதன் மூலம் நீட்டிக்கப்படுகிறது….நான் ஆணாதிக்கத்திற்கு உடன் போவதாய் எண்ணி விடாதீர்கள்…..


Leave a Comment

Archives