தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 செப்டம்பர் 2020

சருகாய் இரு

சபீர்

Spread the love

உதிர்ந்துப்போன பிறகும் !!
தன்னுடன்
வைத்திருக்கும்
சத்தமெனும்
சலசலப்பை
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!!
தன் கண
பரிணாமத்தை
இலேசாக மாற்றி
இருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
கிடக்கவும் ,பறக்கவும்
காற்றுடன் சேர்ந்து
சுழலவும்
கற்றுக்கொண்டிருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
உக்கிரமாய்
பற்றிக்கொள்ளும்
தீயையும்,ஈரத்தையும்
இயல்பை பெற்றுவிடும்
சருகுகள்,

பச்சையாய் இருந்தபோது
இல்லாத
அத்தனை
செளகரியங்களும்
சருகானதும்

உதிர்ந்த பிறகு
தனித்தோ
தாடி ,
வளர்த்தோ
திரிவதில்லை
சருகுகள்,

முழுதும் மாறிப்போகிறது
சருகிடம்,
மனிதன் உதிர்வதில்லை?
உதிர்ந்த ஒன்றாய்
உதிர்கிறான்
உறவுகளை
உதருகிறான்.

Series Navigationஎன் சுற்றுப்பயணங்கள்கவிதை

3 Comments for “சருகாய் இரு”

 • பவள சங்கரி. says:

  அன்பின் திரு சபீர்,

  அற்புதமான கோணம்.. பற்றற்ற வாழ்க்கையைப் பக்குவமாக்கிப் படைத்த கவிஞருக்கு வாழ்த்துகள்!

  ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
  பற்றுக பற்று விடற்கு’
  என்ற ஐயனின் வாக்கை நினைவு கூறச் செய்தது. நன்றி.

  அன்புடன்

  பவள சங்கரி.

 • ramani says:

  பச்சையாய் இருந்தபோது
  இல்லாத
  அத்தனை
  செளகரியங்களும்
  சருகானதும்

  this sums up the unfolding of secrets of life! But to be a dried leaf, one has to live the life of a verdure. You are at your philosophical best with the poem, Sabir.

  ramani

 • சோமா says:

  ரமணியின் கருத்துதான் என்னுடையதும்..நயமான வரிகள்…முதிர்ந்த சருகுகளின் தனித்தன்மை பற்றியது


Leave a Comment

Archives