இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்

This entry is part 46 of 46 in the series 5 ஜூன் 2011

அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பொது மக்கள் வாக்களிப்பதை மட்டும் ஜன நாயகக் கடமையாய்க் கொள்ளாமல், தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்ததன் அறிகுறி இது.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் பணியாளர்கள் என்று தம்மை அடையாளம் கண்டுகொண்டவர்கள் அரசியலின் பிரசினைகளை சமூகப் பிரசினைகளாய் இனங்காண்பதும், அந்தப் பிரசினைகளுக்காக முன்னின்று போராடுவதும் வரவேற்கத்தக்க மாற்றம். அன்னா ஹஸாரேயும், பாபா ராம்தேவும் தொடங்கி வைத்த இந்த போக்கு இன்னும் பலரையும் இணைத்துக் கொண்டு முன்னெடுஹ்துச் செல்லவேண்டும்.

அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் கூட்டணியின் நிகழ்கால நிர்ப்பந்தங்களையும், எதிர்கால திட்டங்களையும் முன்வைத்து நடத்தப் படுபவை. நீண்ட கால செய்ல திட்டங்கள் அற்றவை. முக்கியமாக கறுப்புப்பண அரசியலுக்கும், ஊழலுக்கும் எதிராக அரசியல் கட்சிகள் வாய் திறக்கவெ இல்லை. ஏனென்றால் எல்லாக் கட்சிகளும் இந்தப் போக்கினால் ஆதாயம் பெற்றவர்கள். மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தும் போஃபர்ஸ் ஊழலின் நாயகர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சர்க்காரியா ஊழல் முதல் கலைஞர் டி வி ஊழல் வரை, ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை  புகழ் பெற்ற தி மு க அரசையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு இன்னமும் கோர்ட்டில் உள்ளது, இவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், மீண்டும் இந்த ஊழல் குடும்பங்களே ஆட்சிக்கு வருவதும் நேர்கிறது. மக்களிடம் கேட்டால் மாற்று  இல்லை என்பது அவர்களின் பதிலாக இருக்கிறது. மாற்றி மாற்றி அரசியல் கட்சிகளை அரியணை ஏற்றி உட்கார வைத்து வெறும் நம்பிக்கைகளிலேயே காலம் கட்த்தி வருகிறார்கள் மக்கள்.

அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் போராட்டங்களையும் தமதாக்கிக் கொண்டு குளிர்காய எதிர்க்கட்சிகள் தயாராய் உள்ளன. ஆனால் இந்த எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சிகளாய் இருந்தபோது ஊழலை ஒழிக்க எதுவும் செய்யவில்லை என்பதும், ஊழலின் பலாபலன்களைத் தழுவியவர்கள் தான் என்பதும் உண்மை.

லோக்பால் மசோதாவை மீண்டும் அரசியல்வாதிகள் கடத்திக் கொண்டுபோய், என்னை நீ காட்டிக் கொடுக்காவிட்டால், நான் உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஒரு வசதியை ஏற்படுத்தும் வகையில் லோக்பால் மசோதாவின் வரவு உள்ளது. லோக்பால் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தனி அமைப்பாக செயல்படுவது ஒன்று தான் லோக்பால் அமைப்புக்கு கொஞ்சமாவது ஆற்றலை அளிக்க முடியும். இல்லையென்றால், லோக்பால் மசோதாவும் காகிதத்தில் சிறந்ததாகவும், நடைமுறையில் பொருளற்றதாகவும் முடியும்.

காந்தியின் அடியொற்றியவர்கள் சிலர் மூலம் மீண்டும் இந்தியா துளிர்விட சில வாய்ப்புகளை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

Series Navigation(68) – நினைவுகளின் சுவட்டில்
author

மஞ்சுளா நவநீதன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    R.Ganesan says:

    I try to type in tamil but your site properly responded as like the maalai malar site. Any way I want to share my thoughts in the above said regards. Ofcoure no body has a second opinion against the black money matter. But at first when Anna Hazare starts this everybody give him respect but when he sought the support from one of the world renown Bofers special Sonia’s support his image among the general public loss some extent. But now he is totally changed. Present Anna hazare is purely needs publicity only.

    The another one is really not a disciplined person. A man who wear the bliss symbol of kaavi dress but doing vice verse is now a days very popular. Without investing even a penny and also sitting ideal but can be a multi millionaire can be possible in our country by two ways. One is a politician like M.karunanidhi, Sonia gandhi or Chidambaram or a man who is dressing like the Baba Ramdev as act like a saint but his back entry how he earned that much of money? Moreover, why he need that much of assets as a saint?! So both are not a full disciplined manner based according to their services or professions like a saint etc.,

    Really these are like a thing as follows. To safeguard a treasure appointing a big thief and handed over the key of the treasury room himself?!!!

  2. Avatar
    prabath says:

    அய்யாமார்களே! முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பாபாவின் சொத்துக்கள் பற்றியோ அன்னா குழுவினரின் மீதான குற்றச்சாட்டுகள் நாம் கவலைப் பட தேவையில்லை. விளம்பர யுக்தியாகக் கூட இருந்து விட்டு போகட்டும்.ஆனால் கருப்புப் பணங்கள் நம்மை அழ வைத்து கண்களை சிவப்பாக்கி விட்டன என்பதும் ஊழல்கள் மெகாவுக்கும் மேலாகப்போய் விட்டன என்பதும் கண்கூடான உண்மை.நமக்கு தேவை போராட்டத்தை இட்டுச் செல்ல ஒரு நல்ல,வலுவான தலைமை. அகில இந்திய அளவில் வழிநடத்திச் செல்லும் நபராக அன்னா கிடைத்திருக்கிறார்.இதைப்பயன்படுத்திக்கொண்டு நாம் அவர்கள் பின்னால் அணிதிரள வேண்டுமே யொழிய குறைகளைக் கூறிக்கொண்டு போரட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.அரசாங்கம் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.ஆரம்பத்திலிருந்தே இந்த போராட்டத்தை நசுக்க குற்றச்சாட்டுகள் கூறுவதும்,மோசடிப்புகார் கூறுவதும்,பொறுக்கமுடியாத நிலையில் வன்முறையையும் பிரயோகித்துப்பார்த்து விட்டது இந்த அரசு.ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இணையான அனைத்தையும் பரீட்சித்துப் பார்த்து வருகிறது.ஏதோ இருவரின் போராட்டமாக இல்லாமல் மக்கள் போராட்டமாக மாறும் போதுதான் வெற்றியடையும்.நமக்குத் தேவை மீன், புழுவிற்குப் புண்ணிருந்தால் என்ன? போராட்டம் வெற்றியடைந்து(ஒருவேளை) சட்டம் அமுலாகும் போது பாபாக்களும் அன்னாக்களும் அச்சட்ட வரம்பிற்குள் வந்துதான் ஆக வேண்டும்.

Leave a Reply to prabath Cancel reply

Your email address will not be published. Required fields are marked *