திமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு

This entry is part 21 of 28 in the series 9 செப்டம்பர் 2012


மலர்மன்னன்

மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும்.

தமிழக அரசியலில் அப்போதுதான் நடை பயிலத் தொடங்கியிருந்த திராவிட முன்னேற்றக் கழகம் தனது இருப்பைப் பதிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பாக 1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மும்முனைப் போராட்டம் என்பதாக ஒன்றை நடத்த முடிவு செய்தது. அதில் ஒரு முனைதான் கல்லக்குடிப் போராட்டம்.

திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் ஏராளமாகப் புதைந்து கிடப்பதால் சிமெண்ட் உற்பத்திக்கு  அது மிகவும் ஏற்ற இடமாக இருப்பதை 1930 – களிலேயே கண்டறிந்த  டால்மியா நிறுவனம், அரியலூரிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் தனது தொழிற்சாலையை நாற்பதுகளின் தொடக்கத்தில் நிறுவியது. அந்தக் காலகட்டத்தில் அரியலூர் இப்போதிருப்பதைவிட மிகச் சிறிய ஒரு சிற்றூராகத்தான் இருந்திருக்கும். எனில் டால்மியா சிமென்ட் தொழிற்சாலை நிறுவப்பட்ட கிராமப்புறம் எந்த நிலையில் இருந்திருக்கும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. தொழிற்சாலை அமைந்த சுற்று வட்டார கிராமங்கள் கல்லக்குடி, பழங்காநத்தம் முதலானவை.

டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டதாலேயே அந்தப் பகுதி பல துணைத்தொழில்களும் வாணிபங்களும் மிகுந்து, தொழில்வளர்ச்சியடைந்த வட்டாரமாக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. தொழிற்சாலை அலுவலர்களுக்கான குடியிருப்புகளும் கடை கண்ணிகளும் உருவாயின. டால்மியா சிமெண்ட் தொழிற்சாலையின் பின்னணியிலேயே அடையாளம் பெற்ற அச்சிறுதொழில் நகரத்தில் தளவாடங்கள் வந்து இறங்கவும் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றுமதி செய்யவும் அமைந்த ரயில் நிலையம்தான் டால்மியாபுரம். இப்படி வளர்ச்சிக்குக் காரணமான இடங்களுக்கு டாட்டா நகர், ஜாம்ஷெட்பூர் என்றெல்லாம் அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பதுபோல் பெயர் சூட்டுவது இயல்புதானே?

ஆனால், ‘டால்மியா என்பது ஒரு வட நாட்டான் பெயர். அவன் பெயரால் தமிழ் நாட்டில் ஓர் ஊர் இருக்கக் கூடாது’ என்று திடீரென விழித்துக்கொண்டு, கண்டனம் தெரிவித்து, அந்தப் பெயருக்குப் பதிலாக அதன் அருகில் உள்ள கல்லக்குடியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்பதற்கான போராட்டத்தைத் தனது மும்முனைப் போராட்டத்தில் ஒன்றாக நடத்துவதென்று தி.மு.க. தீர்மானித்தது. இது குறித்து அது முன்னதாகக் கள ஆய்வு ஏதும் செய்து மக்களின் எண்ணத்தைத் திரட்டியிருக்கவில்லை. டால்மியாபுரம் என்ற பெயருக்குப் பதிலாகத் தங்கள் ஊரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற விருப்பமோ கோரிக்கையோ அப்போது கல்லக்குடி மக்களிடையே இருக்கவுமில்லை. சொல்லப் போனால் டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றுவதானால் டால்மியா தொழிற்சாலை அமைக்கப்பட்ட பழங்காநத்தம் என்ற ஊரின் பெயரைச் சூட்டுவதுதான் மிகப்  பொருத்தமாக இருக்கும். எனவேதான் பல ஆண்டுகளுக்குப் பிறகு, பலவாறான அரசியல் மாற்றங்களின் விளைவாக மத்தியில் அரசு அமைய தி.மு.க. வின் தயவு தேவை என்ற நிலைமை  உருவாகி, அதைத் திருப்தி செய்ய டால்மியாபுரம் என்ற பெயர் நீக்கப்பட்டு,

கல்லக்குடி-பழங்காநத்தம் என்ற பெயர் சூட்டப் பட்டது. அரசியலுக்காகக் கல்லக்குடி, மக்களின் நியாயமான நிலைப்பாட்டுக்காகப் பழங்காநத்தம்!

திட்டம் இதுதான். குறிப்பிட்ட நாளில் டால்மியாபுரம் ரயில் நிலையம் சென்று, அங்குள்ள பெயர்ப் பலகையில் டால்மியாபுரம் என்ற பெயருக்கு மேல் கல்லக்குடி என்று எழுதப்பட்ட தாளை ஒட்ட வேண்டும். போராட்டம் ஒருநாள் மட்டும்தான். வன்முறைக்குச் சிறிதும் இடமில்லை. பெயர்ப் பலகையில் தாளை ஒட்டவிடாமல் தடுத்தால் அமைதியாகத் தடையை மீறிக் கைதாக வேண்டும். ஆனால், கருணாநிதிதான் திடீரெனத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, பெயர்த்தாள் ஒட்டும் போராட்டத்தை ரயில் நிறுத்தப் போராட்டமாக மாற்றிவிட்டார்.

தி.மு.க. நடத்திய மும்முனைப் போராட்டத்தில் ரயிலை நிறுத்துவதும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அதற்கும் கல்லக்குடிக்கும் சம்பந்தமில்லை. நேரு ‘நான்சென்ஸ்’ என்று சொன்னதற்காக ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவது என்று திட்டமிட்டிருந்தார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எழுப்பிய கோரிக்யைத்தான் பிரதமர் நேரு ‘நான்சென்ஸ்’ என்று புறந்தள்ளிவிட்டிருந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் ராஜாஜிதான் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வழி செய்திருந்தார். உடனே, நேரு தமிழர்களையே அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி இன்னொரு முனைப்போராக ரயில் நிறுத்தப் போராட்டத்தை தி மு க நடத்தியது. இந்தப் போராட்டத்தின்போது ஓடும் ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்திய தி.மு.க வினர் பலர் வண்டி நின்றதும் வெளியே குதித்து ஓடிப் போனார்கள். எஞ்சிய சில நூறுபேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

தி.மு.க. தனது மும்முனைப் போராட்டத்தில் சேர்த்துக்கொண்ட மூன்றாவது போர் முதலமைச்சர் வீட்டு வாயிலின்முன் அவரை வெளியே வரவிடாமல் மறியல் செய்வது. ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்துக்குக் ‘குலக் கல்வித் திட்டம்’ எனப் பட்டம் சூட்டி அதைக் கைவிட வற்புறுத்துவதற்கான போர்முறை அது.

1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த நமது அரசியல் சாசனத்தின் ஐந்தாவது பகுதியில் உள்ள வழிகாட்டு நெறிகளில் 45 ஆவது விதி கல்வி அளிப்பது குறித்து மாநில அரசுகளுக்கு உள்ள கடமையை அறிவுறுத்துகிறது. ’சாசனம் நடைமுறைக்கு வந்து பத்து வருட காலத்திற்குள் 14 வயது முழுமையடைந்த குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி அளிக்க முயற்சி எடுத்தாக வேண்டும்’ என்று அந்த விதி வலியுறுத்துகிறது. இதனையொட்டி அப்போதைய நிதி ஆதாரத்தையும், ஏற்கெனவே இருந்து வந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கையையும் கருத்தில்கொண்டு ஒரு புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி முன்வைத்தார்.

ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஷிஃப்டுகள் நடைபெற வழி செய்யும் அத்திட்டத்தின்படி, மாணவர்கள் ஒருவேளை மட்டும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். சட்டமன்றத்தில் புதிய கல்வித் திட்டம் முன்வைக்கப்பட்டபோது, ’எஞ்சிய பொழுதில் மாணவர்கள் என்ன செய்வார்கள்? வீணாக ஊரைச் சுற்றிக் கெட்டுப் போக மாட்டார்களா’ என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். ‘அப்படி ஏன் எண்ண வேண்டும்? அவர்கள் அந்த நேரத்தில் ஏதாவது கைத் தொழிலைக் கற்றுக்கொள்ளலாம். ஏன், வீட்டிலேயே பெற்றோருக்கு உதவியாக வேலை செய்து அவர்கள் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெறலாம். கைப் பழக்கமாக அவர்களால் எளிதில் அத்தொழிலில் தேர்ச்சி பெற்று விட முடியும்’ என்று முதல்வர் ராஜாஜி மிகவும் யதார்த்தமாகச் சொன்னார். அவ்வளவுதான், ’ஆச்சாரியார் குலக் கல்வியைப் புகுத்துகிறார்’ என்கிற கோஷம் வீறிட்டெழுந்தது. ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து அவர் வீட்டு வாசலில் மறியல் செய்வது தி.மு.க. வின் மும்முனைப் போராட்டங்களில் ஒரு முனையானது. ராஜாஜியின் ஒருபொழுது கல்வித் திட்டத்துக்குக் குலக் கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி அதை முன்வைத்தே ராஜாஜியைப் பதவி விலகும் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கினார்கள்.

1965ல் நடந்த மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் தவறான தகவல்களின் அடிப்படையில் சொல்லப்படுவதுதான். 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த அரசியல் சாசனம், 15 வருட காலத்துக்குள் மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் ஹிந்தி ஆக வேண்டும் என்று கால நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் பிரதமர் நேரு ஹிந்தி மொழி பேசாத மக்கள் விரும்பும்வரை ஹிந்தியுடன் ஆங்கிலமும் மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் நீடிக்கும் என்று அறுபதுகளின் தொடக்கத்திலேயே வாக்களித்திருந்தார். அப்படியும் 1965 ஜனவரி 26 லிருந்து ஹிந்தி மட்டுமே மத்திய ஆட்சி மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் ஆகிவிடும் என்கிற பீதி மாணவர்களிடையே கிளப்பிவிடப்பட்டது.

1966 தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்த  வேண்டும் என்பதற்காகவே 1965-ல் மாணவர் கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டதென்று அக்கால கட்டத்தில் ஈ.வே.ரா. தமது ’விடுதலை’ நாளிதழில் தி.மு.க.வின் மீதும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் மீதும் இடைவிடாது குற்றம் சாட்டி வந்தார். அப்போது அவர் காங்கிரசின் அதி தீவிர ஆதரவாளர்! ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் தூண்டியதற்காக அவ்விரு கட்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு அவற்றின் மீது பகைமை பாராட்டியவர்!

’இந்தியா ஒண்ணா இருக்கணும்னா ஆட்சி மொழின்னு ஒண்ணு இருக்கணும் தானே? இந்திக்காரன் உங்களைப் போல இங்கிலீஷை நெனைக்கலியே! இழிவா நெனைக்கறானே! தமிழ் நாட்டுக்காரன் சொல்றபடி நடக்குமா? அதான் ஜனநாயகமா?’ என்று ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் எதிர்க் கேள்வி கேட்டவர், அவர் (14 ஏப்ரல், 1965).

மாணவர் என்ற போர்வையில்  சமூக விரோத ரவுடிக் கும்பல்கள் வன்முறைக் கிளர்ச்சிகளை நடத்துவதாகவும் ’விடுதலை’யில் எழுதினார், ஈ.வே.ரா.  1965 ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி பற்றி பிப்ரவரி 8 அன்று விடுதலை இதழில் விவரிக்கும் ஈ.வே.ரா., ‘இதனால் கெட்டவர்கள் நம் மக்களின் பிள்ளைகள்தானே! பாவம், இந்தக் காலித்தனத்தில் 100 க்கு 50 பேர்கூட மாணவர்கள் இருக்க மாட்டார்கள். 50 பங்குக்குமேல் கண்ணீர்த்துளி (தி.மு.க.) காலிகளும் பணக்காரரால் (சுதந்திரா) ஏவப்பட்ட காலிகளும் இருந்து நடத்தி இருக்கிறார்கள்! அவர்கள்தான் திட்டம் போடுகிறார்கள். அதை மாணவர் பேரால் பத்திரிகைக்காரர்கள் வெளியிடுகிறார்கள். காலிகளே நடத்துகிறார்கள்’ என்கிறார்.

இந்தப் பின்னணியில் பாடப்பத்தக சர்ச்சைக்குள் மீண்டும் செல்வோம். ஹிந்தி எதிர்ப்புக்கான காரணத்தை விளக்குகையில், அது ஆங்கிலத்தின் இடத்தைப் பிடித்துக்கொண்டுவிடும், அது ஹிந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களுக்குப் பாதகமாகிவிடும் என்றுதான் ராஜாஜியும் சொன்னார். எனவே கேலிப் படத்தில் ராஜாஜி ஒருபக்கம் ’இதென்ன ஆங்கிலத்துக்கு ஆதரவான முழக்கங்களை எதிர்க்கிறார்களே’ என்று தலையில் கை வைத்துக்கொள்ள, மறுபுறம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் இவர்கள் என்ன மாணவர்கள்தானா என்று திகைக்கிறார்.

பாடப் புத்தகங்கள் வறட்டுத்தனமான ஆவணங்களின் தொகுப்பாகச் சலிப்பூட்டாமல் சுவாரசியமாக இருந்துவிட்டால் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடங்களைப் படிப்பார்கள் என்கிற நோக்கத்துடன்தான் கேலிப் படங்கள் பாடங்களில் சேர்க்கப்படுகின்றன என்று எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை.

நன்றி: ஆழம் மாத இதழ், செப்டம்பர் 2012 (சென்னை கிழக்குப் பதிப்பக வெளியீடு)

 

Series Navigation(99) – நினைவுகளின் சுவட்டில்காலம்….!
author

மலர்மன்னன்

Similar Posts

114 Comments

  1. Avatar
    Kavya says:

    க‌ட்டுரை ஆராய்ச்சிக்க‌ட்டுரைய‌ன்று. அர‌சிய‌ல்வாதியின் க‌ட்டுரை போல‌.

    ப‌ல‌ க‌ருத்துக்க‌ள். அன்று என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று இன்று சொல்ல‌முடியாது. அன்றிருந்தோர் இன்றில்லை. அனைவ‌ரும் மாண‌வ‌ர்க‌ள்தானா என்று ஆர்ப்பாட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்டோர்தான் சொல்ல‌ முடியும். ஈ வெ ராவோ அல்ல‌து ம‌ல‌ர்ம‌ன்ன‌னோ சொல்ல‌முடியாது. ஹிந்தி எதிர்ப்பு போராட்ட‌ம் ஒரு ம‌ஹ‌த்தான‌ வெற்றியென்றும், அது தி மு க‌வின் ஒரு பெரும் பிர‌ச்சார‌ சாத‌னையென்றும் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன். அத‌ன் பிற‌கு தி மு க‌ ஏர்முக‌ம், ம‌ற்ற‌க‌ட்சிக‌ள் இற‌ங்கு முக‌ம், இராஜாஜி காணாம‌ல் போனார் என்ப‌து வர‌லாற்று உண்மைக‌ள்; இதை எவ‌ரும் எழுதி நாம் தெரிந்து கொள்ள‌த்தேவையில்லை. இராஜாஜியின் குல‌க்க‌ல்வித் திட்ட‌ம் ஒரு வேலைய‌த்த‌ வேலை என்ப‌தும், அவ‌ரின் ஒரு இராஜ‌த‌ந்திரி அன்று என்ப‌தும் தேற்ற‌ங்க‌ள்; எவ‌ரும் ம‌றுக்க‌ முடியாது. ஒரு இராஜ‌த‌ந்திரி த‌ன‌க்கெதிரான் பொய்ப்பிர‌ச்சார‌த்தை வெற்றி கொள்வான். இவ‌ர் முடிய‌வில்லை. ம‌க்க‌ளின் எண்ண‌த்தைத் தெரியாத‌வ‌ன் எப்ப‌டி ஒரு ந‌ல்ல‌ அர‌சியல்வாதியாவான்? மேலும், ம‌க்க‌ளிடையே பொய்பிர‌ச்சார‌ம் என்றால், ஒட்டு மொத்த‌ த‌மிழ‌க‌மும் குல‌க்க‌ல்வித் திட்ட‌த்தை எதிர்த்த‌தேன்? பார்ப்ப்ன‌ர‌க‌ளைத்த‌விர‌ ம‌ற்ற‌வெரும் ஆத‌ரித்தன‌ரா? குல‌க்க‌ல்வி திட்ட‌ம் பார்ப்ப்ன‌ருக்கு ந‌ன்று; அபார்ப்ப‌ன‌ருக்கு கேடு. என‌வே எந்த‌ ஆத‌ர்வும் இல்லை. இதையேன் இங்கிட‌ப்ப‌ட்டிருக்கும்‌ உண்மை வ‌ர‌லாறு சொல்ல‌வில்லை? சேம் சைடு கோல் போட்ட‌மாதிரியாகிவிடும‌ன்றோ!

    வ‌ட‌நாட்டான் வ‌ந்து ஓரிட‌த்தைப்பிடித்து தொழிற்சாலைமைத்து அத‌ற்கு த‌ன்பெய‌ரையே சூட்டிக்கொள்ள‌லாமென்றால், ச‌ரி. அத்தொழிற்சாலையில் வேலைசெய்வோர் குடியிருப்புப்ப‌குதிக்கு ம‌ட்டும்தான் அவ்வாறு செய்ய‌லாம். டாடாவின் இரும்பு நிறுவ‌ன‌ம் மிக‌ப்பெரிய‌து. அத‌ன் ஸ்டீல் ட‌வுன்ஷிப் பின்னாளில் ஒரு பெரிய‌ ந‌க‌ர‌மான‌து. என‌வே ஜாம்பெட்ஷ்பூர்.

    இதே டால்மியா திருச்செந்தூருக்க‌ருகில் ஆறுமுக‌னேரியில் உர‌த்தொழிற்சாலை நிறுவினார்; அத்தொழிற்சாலையிருக்கும் ப‌குதியில் தொழிலாள‌ர் குடியிருப்புக்கும‌ட்டுமே சாகுபுர‌ம் என்று பெய‌ர். அக்கிராம‌ம் என்றுமே ஆறுமுக‌னேரிதான். ஆறுமுக‌னின் பெய‌ரை எடுத்துவிட்டு அந்த‌ மார்வாடியின் பெய‌ரை வைத்திருக்க‌ல‌மே? ஆறுமுக‌னேரியிலும் ர‌யில் வ‌ண்டி நிலைய‌ம் உண்டு. அத‌ன் பெய‌ர் மாற்றப்ப‌ட‌வில்லை.

    க‌ல்ல‌க்குடியிலும் அப்ப‌டித்தான் செய்திருக்க‌வேண்டும். ம‌த்திய அர‌சுக்கு உடைமையான‌ ர‌யில் வ‌ண்டி நிலைய‌த்துக்கு ஏன் அந்த‌ மார்வாடியின் பெய‌ர்? போராட்ட‌ம் ச‌ரியான‌து. ஊரின் பெய‌ரையே மாற்றுவான்; நாளை மாவ‌ட்ட‌த்தின் பெய‌ரையே மாற்றுவான். ம‌க்க‌ள் ப‌ல‌விட‌ய்ங்க‌ளைக்கேட்க‌ மாட்டார்க‌ள். நாம்தான் சொல்ல‌வேண்டும். பின்னாளில் எல்லாம் கைந‌ழுவிய‌பின் வ‌ருந்துவார்க‌ள். த‌மிழ்ப்ப‌கைவ‌ர்க‌ள்; த‌மிழ‌ருக்கு எதிரான‌வ‌ர்க‌ள்: இவ‌ர்க‌ளைக்க‌ண்டு கொள்வ‌து க‌டின‌ம். டால்மியா புர‌ம் என்ற‌ பெய‌ர் ச‌ரியென்போர் த‌மிழ் மொழிக்கும் த‌மிழ‌ருக்கும் ப‌கைவ‌ர்க‌ள். உள்ளிருந்தே குழிதோண்டுவோர். சங்க‌காலத்திலேயே த‌மிழ்ப்ப‌கைவ‌ர்க‌ள் உண்டு என்று காட்டுகிறார் ரா.ராக‌வைய‌ங்கார். ந‌க்கீர‌ன் எதிர்த்துப்போராடிய‌ குய‌க்கோட‌ன் ஒருவ‌ன். அதை நான் இங்கு எழுதியிருக்கிறேன்.

    தி மு க‌ ந‌டாத்திய‌ போராட்டம் மிக‌ச்ச‌ரி. அத‌ன் விளைவு எந்த‌ மார்வாடியும் த‌ன் பெய‌ரையோ குடும்ப‌த்தாரின் பெய‌ரையோ த‌மிழ்நாட்டு ஊர்க‌ளுக்கு வைக்க‌த் துணிய‌வில்லை. த‌மிழ‌ர்க‌ள் இளிச்ச‌ வாய‌ர்க‌ள் அல்ல‌ என்று புரிந்திருப்பான். இல்லையா?

    1. Avatar
      R Venkatachalam says:

      அன்பு காவ்யா அவர்களுக்கு
      தாங்கள் ராஜாஜியைப்பற்றி எழுதி இருக்கும் கருத்துக்கள் சரியல்ல. அவர் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்தார் என்றீர்கள். அவர் கொண்டு வந்தது சிஃப்ட் கல்விதான். இருக்கும் இடம் ஆசிரியர் வசதிகளைக்கொண்டு அதிகமான மாணவர்களுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற கேள்விக்கு அன்று இருந்த சூழலில் அவர் கண்ட பதில் அது.
      இன்றைய தினம் கபில் சிஃபில் ஸ்கில்லிங் என்று திட்டம் கொண்டு வந்து இருக்கிறார். அதில் விவசாயம் இராதா? தச்சு இராதா? கட்டடக்கலைஞர் இராரா? துணி துவைப்பதும் முடி திருத்துவதும் தேவைப்படாதா? அவை எல்லாம் இழிவான தொழில்களா?

      பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்து
      தாள்வினை இன்மை பழி 618

      என்றார் திருவள்ளுவர். குறிப்பிட்டதிறனுக்கான அல்லது துறைக்கான பொறி அதாவது aptitude or intelliegence இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பது ஒரு குறை அல்ல. ஆனால் தன்னிடம் என்ன திறனுக்கான ஏது உள்ளது என அறிந்து அதனை ஒட்டி ஆள்வினையை அதாவது தன்னுடைய உடல் பொருள் ஆவி ஆகிய எல்லா நிலைகளிலும் ஈடுபடாமையே பழி அல்லது குற்றம் என்று பொருள். பார்ப்பணர்களிலும் பலருக்கு எல்லாவித பொறிகளும் குறைந்து இருப்பது சாத்தியமே அதேபோல மிகவும் தாழ்த்தப்பட்ட இனத்தைச்சேர்ந்தவருக்கு பல துறைகளில் அதிகமான பொறி இருப்பதும் சாத்தியமே. தமிழகத்தில் நான் அறிந்த வரை ராஜாஜியைப்போல தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டவர் வேறொருவர் இல்லை. ராஜாஜி அப்பழுக்கு இல்லாத தன் ஆன்மாவில் நின்று வாழ்ந்த யுக புருஷர். அவர் காந்தியைவிடவும் சிறந்த தலைவர்.

      1. Avatar
        ananthan says:

        துணி துவைப்பதும் முடி திருத்துவதும் தேவைப்படாதா? அவை எல்லாம் இழிவான தொழில்களா? இல்லவே இல்லை, கடவுளை சேவிப்பதை விடவும் புனிதமான தொழில்கள்தான். இந்தப் புனிதமான தொழிலை கடவுள் சேவகர்களும் செய்ய வேண்டும். கடவுள் சேவகத்தை சலவை, முடி திருத்துபவர்களும் செய்ய வேண்டும். நீங்கள் குறிப்பிடும் சிஃப்ட் ஸ்கில்லிங்கை, குல்லுகபட்டர் எல்லோருக்குமாகப் பொதுமைப்படுத்தி கொண்டு வர முயற்சி செய்திருப்பார் என்றால் வரவேற்கலாம். ஆனால், அவரது நோக்கம் வேறுவகைப்பட்டது. தேவதாசி முறையை பண்பாட்டுச் செயல்பாடாக அவர் விதந்தோதியபோது டாக்டர் முத்து லெட்சுமிரெட்டி சொன்ன பதில் மலர்மன்னர்களாலும் தங்களைப்போன்றவர்களாலும் ஏற்றுக்கொள்ளவே இயலாது.

        1. Avatar
          R Venkatachalam says:

          தேவதாசி முறையை பற்றி சட்ட சபையில் விதந்து பேசியது சத்தியமூர்த்தி என நினைக்கிறேன். ராஜாஜியின் நோக்கம் வேறு விதமானது என்பதற்கு என்ன ஆதாரம்? அதென்ன தங்களைப்போன்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது? என்னைப்பற்றி என்ன தெரியும் தங்களுக்கு? ராஜாஜியை நான் ஆதரித்துப்பேசியவுடன் எனக்கு ஒரு சாயம் ஏற்றியாயிற்றா?

        2. Avatar
          punaipeyaril says:

          யாரும் இங்கே துணி துவைக்கவும், முடிவெட்டவும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை செய்யச் சொல்லவில்லை. அவ்வளவு ஏன் பாலக்காட்டு உயர்குடி இசைஞர் எம்.எஸ்.விஸ்வநாதன் புள்ள பெரிய பார்பர் ஷாப் வைத்திருக்கிறது. ஜாதி வேற்றுமையின்றி நிறைய பேர் ஆட்டோமெடிக் லாண்டரி வைத்திருக்கிறார்கள். படிச்சு பில்கேட்ஸ்ஸுக்கு அட்வைஸ்ராக போக வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. கட்டப்பஞ்சாயத்தில் ரவுடித் தனம் பண்ணும் நேரத்தை, இலவச டிவியில் கும்மாங் குத்து பார்ப்பது தவிர்த்து ஒரு வேலையில் ஜித்தனாக வேண்டாம் என்று எந்த பார்ப்பன் சொன்னான்…. பழைய தேவதாசி விடுங்கள்… ஜாதி மத பேதமின்றி சினிமா சான்ஸிற்கும் பிரமோஷனுக்கும் பலர் தேவதாசியை விட கீழ இருக்கிறார்கள்…

  2. Avatar
    Pandian Govindarajan says:

    நிகழ்ந்து முடிந்த வரலாற்றுக்கு முரணான முடிச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறார் மலர் மன்னன்
    வில்லவன் கோதை

  3. Avatar
    Paramasivam says:

    Long after those incidents,why Malarmannan writes this essay.Except to tarnish the image of DMK.Like the hate essays of Nedumaran,this essay also will be thrown in the dustbin.

  4. Avatar
    மலர்மன்னன் says:

    பரமசிவம்,
    12 ஆம் வகுப்புக்கான வரலாறு பாடப் புத்தகத்தில் மும்முனைப் போராட்டம் பற்றிய பாடம் இருப்பதால் அதுபற்றிக் கேட்கப்பட்ட கருத்தையொட்டி நான் எழுதிக் கொடுத்த கட்டுரைதான் இது. கட்டுரையின் தொடக்கத்திலேயே இதுபற்றிய குறிப்பு உள்ளது.நான் மும்முனைப் போராட்டம் நடந்த காலத்தில் அண்ணாவுடன் மட்டுமின்றி தி.மு.க.வின் அந்த நாளைய தலைவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றிருந்ததால் என்னிடம் தி.மு.க. தொடர்பான விஷயங்கள் பற்றிக் கேட்பது வழக்கம். அதேபோல் காமராஜர் உள்ளிட்ட பழைய காங்கிரஸ் தலைவர்கள் பலரோடும் எனக்குப் பழக்கம் இருந்தது. இன்று பிரபலமாக உள்ள ப சிதம்பரம், குமரி அனந்தன் தங்கபாலு எனப் பலரும் என்னை அறிவார்கள். எனக்கு உள்நோக்கம் எதுவும் கிடையாது. எனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறேன், அவ்வளவுதான்.மாற்றுக் கருத்துள்ளவர்கள் ஆதாரங்களுடன் மறுக்கலம். தத்துப் பித்தென்கிற பதில்களைப் படிக்கும்போது சிரித்துவிட்டுத்தான் போக முடியுமே தவிர அத்தகைய உளறல்களுக்கு பதில் அளிப்பதில் பொழுதை விரையம் செய்ய இயலாது. நீங்கள் என் எழுத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதால் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.
    -மலர்மன்னன்

  5. Avatar
    மலர்மன்னன் says:

    மும்முனைப் போராட்டம் பற்றியும் பாடம் உள்ளது. அது பற்றிய குறிப்பு விடுபட்டிருக்கிறது. ஆனால் என்னிடம் அதுபற்றியும் கேட்கப்பட்டதால் அதையும் குறிப்பிட்டே எழுதியுள்ளேன். பிரசுரம் செய்கையில் அது எப்படியோ விடுபட்டுவிட்டிருக்கிறது. எழுதுவதற்கு என்னிடம் எவ்வளவோ இருக்கையில் எனக்கு இதுபற்றி எழுத வேண்டிய அவசியம் என்ன? ஆனால் சம கால வரலாறு திரித்து எழுதப்படுமானால் நேரடி அனுபவம் உள்ளவர்கள் அதுபற்றிய உண்மையைப் பதிவு செய்வது அவசியம். ஆகவே இதுபற்றியும் எழுதிவிடுவது சரிதான் என எழுதிவிட்டேன்!
    -மலர்மன்னன்

  6. Avatar
    knvijayan says:

    திமு காவினரின் இந்தி பெயர் அழிப்பை தான் நேரு non -sense என்று சொன்னார்,ஆனால் மலர் மன்னனோ தன் ராஜாஜி அபிமானத்தை காண்பிக்க அது ராஜாஜியை எதிர்த்த காங்கிரஸ் காரர்களை {வேறு யார் காமராஜரைத்தான் }தான் என்று புது கரடி விடுகிறார்.இதே போல வேறு ஒரு இடத்தில் ராஜாஜியை எதிர்த்த காமராஜரை மகாத்மா கிளிக் என்று எழுதினார் என்று சொன்னார்,அது முழு உண்மை இல்லை.1946 -ம் ஆண்டு தமிழ்நாடு பயணத்தை முடித்துவிட்டு சென்ற காந்தி அதே ஆண்டு பெப்ரவரி 10 -ம் தேதி அரிஜன் இதழில் இவ்வாறு எழுதியதை படித்த காந்தியின் மற்றொரு நெருங்கிய நண்பருமான சேலம் வரதராஜுலு நாயுடு காந்திக்கு எழுதிய கடிதத்தில் காமராஜ் ஒரு மாபெரும் காந்தி பக்தர்,காங்கிரஸ் பக்தர்,தேச பக்தர்.தமிழ்நாடு காங்கிரஸில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியாது ஆகவே நீங்கள் அதில் தலையிடவேண்டாம் என்று எழுதினார்.அதை படித்த தேசபிதா தன் தவறுக்கு வருந்தி தான் இனிமேல் தமிழ்நாடு காங்கிரெஸ் விசயத்தில் தலையிடுவதில்லை என்று அரிஜன் இதழில் எழுதினார்.இதில் தனக்கு சாதகமான விசயத்தைமட்டும் எழுதிவிட்டு மீதியை மலர்மன்னன் விட்டுவிட்டார்.படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோவென்று போவான் அன்பது அமரகவியின் வாக்கு.

  7. Avatar
    மலர்மன்னன் says:

    திமுக வினரின் இந்தி பெயர் அழிப்பை தான் நேரு non -sense என்று சொன்னார்,ஆனால் மலர் மன்னனோ தன் ராஜாஜி அபிமானத்தை காண்பிக்க அது ராஜாஜியை எதிர்த்த காங்கிரஸ் காரர்களை {வேறு யார் காமராஜரைத்தான்தான்.- knvijayan //

    இது தவறான தகவல். ரயில் நிலையங்களில் மும்முனப் போராட்டச் சமயத்தில் ஆங்கிலம் வட்டார மொழி ஆகிய இரு மொழிகளை எழுதும் வழக்கம்தான் இருந்தது. ஹிந்தியில் எழுதுவது பின்னால் வந்தது. அதை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம்தான் நடத்தியது. நேரு நான்சென்ஸ் என்று சொன்னது தமிழ் நாடு காங்கிரசில் ஒரு குழுவினரைத்தான். 1946-ல் காந்திஜி வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் சொனனது சொன்னதுதான். மாநில உட் கட்சி விவகரங்களில் தலையிட்டு அங்குள்ள அற்பப் பூசல்களில் இனி கவனம் செலுத்த மாட்டேன் என்றார். தமிழ் நாடு காங்கிரஸ் வழியாக கட்சிக்க்குள் வா என்று தன் சம்பந்தி ராஜாஜியிடம் அவர் சொல்லவில்லை. ராஜாஜி, காந்திஜீ இருவர் மீதும் எனக்கு மரியாதை உண்டு. ஆனால் அபிமானம் ஏதும் கிடையாது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. எதுவானாலும் முழுவதாகத் தெரிந்தால் மட்டுமே நான் பதிவு செய்வது வழக்கம். நேரு எங்களைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. எங்களை எதிர்ப்போரைத்தான் அப்படிச் சொன்னார். ஆனால் தமிழர்கள் அனைவரையுமே அவர் அவமதித்ததால் தி.மு.க. அதைக் கண்டித்துப் போராடுகிறது என்று அப்பொது அண்ணா சொன்னார். பழைய கால விவரம் தெரிந்த தி மு க வினர் யாராவது இருந்தால் கேட்டுப் பாருக்கள். அந்தக் கால திராவிட நாடு இதழ்கள் இருந்தால் புரட்டிப் பாருங்கள். அண்ணா சொன்னதற்காக திராவிட நாடு இதழில் அவ்வப்போது அரசியல் அல்லாத விஷயங்களை எழுதியவன் நான். சூதும் வாதும் செய்யும் கலை எனக்குத் தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டேன். ஏழு தலைமுறைகளுக்கும் கூடுதலாக சொத்து சேர்த்து வைத்துவிட்டு மாட மாளிகையில் உல்லாசமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். என் வாழ்க்கையில் அதற்கான வாய்ப்புகள் நிறையவே வந்தன. அவற்றையெல்லாம் வெளியிடுவது தற்பெருமையாக முடியும் என்பதால் மெளனம் சாதிக்கிறேன். ஆனால் பலவீனனாக இருந்திருந்தால் இப்போதுபோல் விரல்கள் நோக எழுதிக்கொண்டு இருக்க மாட்டேன்!
    -மலர்மன்னன்

    1. Avatar
      K A V Y A says:

      மொனம் சாதிக்காமல் ஒரு சுயசரிதை எழுதிவிடுங்கள். வயதாகிக்கொண்டே போகிறது. உங்கள் நினைவுகள் உங்களோடே போய் விடுவதா? உங்கள் நண்பர் சாமிநாதன் வெளியிட்டு விட்டாரே அவர் நினைவலைகளை. மிக மோட்டாவான புத்தகமது. மதுரை புத்தகத்திருவிழாவில் கண்டேன். அவரைப்போல விலையை அதிகம் வைக்காமல் குறைச்சி வச்சீங்கன்னா ரொம்பப்பேர் வாங்கி படித்துப்பயன்பெறுவார்கள்.

  8. Avatar
    மலர்மன்னன் says:

    சென்னை மாகாண சட்ட சபையில் கல்வி அமைச்சசர் சி. சுப்பிரமணீயம் கல்வித் திட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார். அதில் பிள்ளைகள் அரை நாள் பள்ளிக்கூடம் சென்ற பிறகு வீட்டில் தகப்பன் செய்யும் தொழிலைக் கற்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இது பற்றிச் சந்தேகம் உள்ளவர்கள் சென்னையில் உள்ள சட்டமன்ற ஆவணக் காப்பகத்தில் உரிய அனுமதி பெற்று பழைய ஆவணங்களைப் புரட்டிப் பார்க்கலாம். யாராவது ஒரு எம் எல் ஏ பரிந்துரை இருந்தால் போதும். முதலில் சட்ட மன்றத்துறை செயலரை அணுகி அனுமதி பெறுவதற்கான வழிமுறை அறியவும். ஆனால் ஆய்வாளர் என்ற தகுதியும். ஆவணங்கள் பார்க்கும் காரணமும் தெரிவிக்கப்பட வேண்டும்.
    -மலர்மன்னன்

  9. Avatar
    knvijayan says:

    நேரு திமுகவினரை non -sense என்று சொன்னது மும்முனை போராட்டத்தின் போது அல்ல 1957ல் ,அப்போது முதல்வர் காமராஜர்,ராஜாஜி அல்ல,57 களில் ரயில் நிலைய பலகைகளில் இந்தி இடம்பெற்று இருந்தது.இதை எதிர்த்து 1958 -ல் நேரு தமிழ்நாடு வந்தபோது கருப்புக்கொடி காட்டி திமுகவினர் சிறைசென்றனர்.காந்தி கிளிக் என்று சொன்னதை மறுபரிசீலனை செய்தாரா இல்லையா என்பதை தின தந்தி வெளியீடான “வரலாற்று சுவடுகள் “நூலின் பக்கம் 400 பார்க்கவும்.

  10. Avatar
    Kavya says:

    Mr Malarmannan

    உள்ளோக்க‌ம் இருக்கிற‌தா இல்லையா என்ப‌தைப் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள்தான் தெரிந்து கொள்ள‌ முடியும். எழுதிய‌வ‌ர் எப்ப‌டி ஒத்துக்கொள்வார்?

    டால்மியாபுர‌ம் என்று ஏன் ர‌யில் வ‌ண்டி நிலைய‌த்துக்குப்பெய‌ர்? டால்மியா இந்திய‌ ர‌யில்வேயையே விலைக்கு வாங்கினாரா?

    ஊர்ம‌க்க‌ள் எதிர்க்க‌வில்லையாம்! ப‌ல்லாயிர‌மாண்டுக‌ளாக‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌விட‌ய‌ங்க‌ளை எதிர்க்க‌வில்லை. கார‌ண‌ம் அப்ப‌டி அடிமைப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். அதை வைத்துக்கொண்டு அவ‌ர்க‌ளே எதிர்க்க‌வில்லை; எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொள்ள‌வேண்டும். எதிர்ப்ப‌வ‌ரை எதிர்ப்போம் என்ப‌தா? திமுக‌வுக்கு என்ன‌ வேண்டாத‌ வேலையென்ப‌து உள்ளோக்க‌ம்தானே?

    ஆறுமுக‌னேரியில் உர‌த்தொழிற்சாலை நிறுவிய‌வ‌ர் டால்மியா அன்று; அந்த‌ மார்வாடியின் பெய‌ர் தார‌ங்க‌தாரா. அவ‌ரென்ன‌ அந்த‌ கிராம‌த்தின் பெய‌ரையே என் பெய‌ருக்கு மாற்று என்றா சொன்னார்? ஆறுமுக‌னேரியிலும் ர‌யில் நிலைய‌முண்டு. அங்கிருந்துதான் அவ‌ர்க‌ள் பொருட்க‌ள் ஏற்றும‌தி/இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌டுகின்ற‌ன‌. என‌வே என் பெய‌ரை வை! என்றா சொன்னார்க‌ள்?

    ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ள் உள‌ற‌ல்க‌ளா இல்லையா என்ப‌தை ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் தீர்மானிக்க‌ட்டும். நீங்க‌ள் கேள்விக‌ளுக்கும‌ட்டும் ப‌தில்க‌ளிடுங்க‌ள்.

    1.ர‌யில் நிலைய‌த்துக்கு டால்மியாபுர‌ம் என்ற‌ பெய‌ரை வைக்க‌வேண்டுமென‌ அவ்வூர் ம‌க்க‌ள் கேட்ட‌ன‌ரா?

    2.எப்ப‌டி ஒரு தொழிற்சாலை வைத்த‌வ‌ன் அவ்வூரின் பெய‌ரையும் அவ்வூரின் ர‌யில் வ‌ண்டி நிலைய‌த்தையும் த‌ன் த‌ன் குடும்ப‌த்த‌வ‌ரின் பெய‌ர்க‌ளை வைக்க‌ச்சொல்ல‌லாம்? அல்ல‌து முய‌றிசிக்க‌லாம்?

    3.ஊர்ம‌க்க‌ள் கேட்க‌வில்லையென்றால் வைத்துக்கொள்ள‌லாமா? அர‌சு அனும‌திக்க‌லாமா?

    4.அப்ப‌டி ஒரு மார்வாடியின் பெய‌ரை ஒரு த‌மிழ்க்கிராம‌த்துக்கு வைப்ப‌தை த‌டுத்துப்போராடுவ‌தை த‌வ‌று எப்ப‌டி சொல்ல‌லாம்?

  11. Avatar
    smitha says:

    Kavya,

    The truth about kalvi thittam, is out. Since U are an EVR follower, it would be difficult for you to accept that.

    Regarding your comment on DMK’s ascent & Rajaji’s descent, pls note that Rajaji was a huge factor in the DMK’s victory in the 1967 elections.

    Annadurai promised Rajaji that he would abide by his directions before the elections but once he came to power, he backtracked on his promise.

    Also, Anna did not stand for assy elections at that time. He got elected within 6 months after coming to power.

    Also, Anna was not a saint as malarmannan makes it out to be.

    1. Avatar
      Kavya says:

      None s a saint in Indian politics, no matter it is M K Gandhi or Karunanidhi or ur beloved brahmical icon. This truth is now universally acknowledged.

      U mean to say that Rajaji’s Hereditary Education Policy would have been a success if it was nor the propoganda against it orchestrated by Kazhagams.

      All justifications r given now for it. As usual, all of u r trying to be bold after the heroes had left for heavenly or hellish abode !

      U shd prove only Kazhagams oppoosed it.

      Here, I am not discussing the nitty gritty of that plan with which he burnt his fingers as well as his political future. I am rather pointing out the aftermath in which the respect for him among the general public of TN, excluding the Tamil paarppnars like you, for political sagacity and as a public minded man, became history !

      In politics who allied with who – s immaterial. Ends justify means. Alliance with your stark enemy and, after victory, discarding him – s wonderful polticial wisdom ! I like it.

      1. Avatar
        Kavya says:

        If u indeed feel strongly that the Plan was good and mischievously made to look bad, now is the time for Jeyalalitha to revive it. Let today TN prove that the Plan is worth implementing for general good.

        Needless to say, it will decimate Jeyalalitha’s political life too. :-p

  12. Avatar
    smitha says:

    வேதாளம் சொன்ன பேரறிஞர் கதை

    கழக அரசுகளை திரும்பத் திரும்பத் தன் தலையில் தானே போட்டுக் கொள்ளும் தமிழக மக்கள் போல, தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் வேதாளம் உறைந்த சவத்தை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு கீழிறங்கினான். வேதாளம் பேசத் துவங்கிற்று.

    “வீரம் மிகுந்த அரசனே! இது வரை பல கதைகள் சொல்லி விட்டேன். கதை முடிவில் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீயும் சரியாகப் பதில் சொல்லிக் கொண்டே வருகிறாய்.

    இம்முறை உனக்கு தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்கிறேன் கேள். “ என்று ஆரம்பித்தது.

    அண்ணாதுரை என்று தலைவர் ஒருவர் தமிழ் நாட்டில் இருந்தார். ஆரம்பத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அவர் படித்து முடித்து 1935ல் ஜஸ்டிஸ் பார்ட்டி என்கிற கட்சியில் சேர்ந்தார்.

    தனது பேச்சாற்றலால் தமக்கென அக்கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார். கட்சியும் வளர்ந்து திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

    அக்கட்சித் தலைவர் ஈவேராவுடன் கருத்து வேறுபாட்டில் வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக் கட்சி துவங்கினார். எதையும் தாங்கும் இதயம் கொண்ட மனிதராக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பலகாலம் நடத்தி இந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்தார்.

    தென்னாட்டை தனி திராவிட நாடாக பிரிக்க வேண்டும் என்று மேடை தோறும் கொள்கை முழக்கம் செய்தார்.

    தொடர்ந்து பெரும் பேச்சாளராக வலம் வந்த அவர், தமிழக முதல்வரும் ஆனார். அதுவரை மதராஸ் பிரசிடென்சி என்று இருந்ததை தமிழ் நாடு என்று பெயர் மாற்றம் செய்தார்.

    அவர் மிகுந்த புத்திசாலியாக இருந்ததால் பேரறிஞர் அண்ணா என்றே நினைவு கூறப் படுகிறார். மேலும் அவர் பல வகையான நாவல்கள், நாடகங்கள், இலக்கிய புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.

    திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். அவர் எழுதிய பல கதைகள் படங்களாக வந்திருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக் கழகம் கூட அவரது அறிவை மெச்சி பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

    அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட லட்சோப லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” ஆகிய நெறிகளை தன் வாழ்க்கையில் மேற்கொண்டு, தன் தொண்டர்களையும் அக்கொள்கைகளின் படி நடக்கச் செய்தார்.

    தென்னாட்டு பெர்நாட்ஷா, இந்நாட்டு இங்கர்சால், காஞ்சி தந்த கரிபால்டி என்றெல்லாம் புகழப்பட்ட அவர் வாழ்ந்த போதும், மறைந்த பின்னும் தமிழ்நாட்டு அரசியலில் இன்றியமையாத சக்தியாக நிலை பெற்றிருக்கிறார். அண்ணா இறந்த பொது உலகில் அதுவரை நிகழாத வகையில் உலக சாதனையாக பெறும் மக்கள் கூட்டம் கூடி அஞ்சலி செலுத்தியது.

    இப்போது சொல்.

    தமிழகத்தில் எத்தனையோ அறிவு ஜீவிகள் இருந்தும் அவர்களையெல்லாம் விஞ்சி நிற்கும் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை பற்றி உன் கருத்து என்ன?

    அண்ணா தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் ஏற்றி வைத்தார் என்று சொல்லலாமா? அண்ணாவின் அரசியலை அடியொற்றி வளரும் தமிழக அரசியல் எப்படி அமையும் என்று நீ நினைக்கிறாய்?

    இதற்கெல்லாம் பதில் தெரிந்தும் பேசாமல் இருந்தால் உன் தலை சுக்கு நூறு.”
    என்று நிறுத்தியது வேதாளம்.

    வேதாளம் பேச்சை நிறுத்திய கணமே, சவத்தைக் கீழே போட்டுவிட்டு சிரி சிரி என்று விழுந்து விழுந்து சிரித்தான் விக்ரமன்.

    “அட முட்டாள் வேதாளமே… ஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயே… உன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.” என்றான்.

    ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. மற்ற கொள்கைகளை எல்லாம் வசதிக்கு தகுந்தது போல ஏற்றுக் கொண்டார். எம்.ஏ படித்த இளைஞராக ஈ.வே.ராவின் கட்சியில் அண்ணா சேரும் போது (1935) அக்கட்சிதான் மதராஸ் ராஜதானியில் ஆட்சியில் இருந்தது.

    இரண்டு வருடங்கள் கழித்து நடந்த தேர்தலில் காங்கிரசிடம் தோற்றது. பின்னர் சில வருடங்களில் (1944) ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது.

    இதேதடா… உருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), ஈவேரா மணியம்மையை திருமணம் செய்து கொண்டதை ஒரு சாக்காக வைத்து வெளியேறினர்.

    ஈவேராவின் வாரிசு எனக் கருதப் பட்டு வந்த ஈ.வி.கே சம்பத்தும் அண்ணாதுரையும் சேர்ந்து புதுக் கட்சி துவங்கினர். அப்படி ஆரம்பித்ததுதான் திமுக.

    அன்றைய கால கட்டத்தில் மக்கள் இன்றைய நாளை விட பல மடங்கு படிப்பறிவு குறைந்தவர்கள். அப்போதுதான் வெள்ளையர் ஆட்சியிலிருந்து நாடு விடுதலை அடைந்த நேரம்.

    நாடெங்கும் வறுமையே நிறைந்திருந்தது. இன்றைக்கு உள்ளது போல் தொலைக் காட்சி ஊடங்கங்கள் எல்லாம் அப்போது இல்லை. தனிமனித துதி தழைத்தோங்கிய காலம்.

    மக்கள் தலைவர்களை பெரிதும் நம்பினார்கள். நாட்டின் பிரச்சனைகளுக்கு தம்மாலே தீர்வு காண முடியும் என்று இளைஞர்கள் நினைத்தார்கள். எளிதில் உணர்ச்சி வசப் பட்டார்கள்.

    வேலைவாய்ப்பு மிகக் குறைந்த காலம் அது. தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள்.

    அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம்.

    அடிப்படையில் அவருடையது ஒரு வெறுப்பரசியல். மக்களுக்கிடையே வெறுப்பைத் தூண்டி விட்டு அரசியலை மலினப் படுத்துவதே அந்த அரசியலின் வழி.

    தன் அரசியலின் ஆரம்ப கட்டத்தில் அண்ணாவின் பொன்மொழிகள் சிலவற்றை கேட்டால் ஆடிப்போவாய்

    ஜெர்மன் அதிகாரியான ஹெர் ஹிட்லர் ஜெர்மனி தேசத்திலே யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததைத் தமது சுயசரிதையில் விளக்கி இருப்பதைப் படிப்போர் தென்னாட்டிலே பார்ப்பனராதிக்கம் இருந்து வருவதினால் விளையும் சமூகக்கேட்டை நன்கு உணர்வர்,” என்று ஹிட்லரின் வெறுப்பியலை ஆதரித்து மேலும் கூறுகிறார்:

    “பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வ கலாசாலைகளில் யூதர்களே. கலா மண்டபங்கள் அவர்கள் கரங்களிலே. புலவர்கள் யூதர்களே. பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. விஞ்ஞானம் அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது. செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மனியரிடம் – ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம் ஜெர்மனியரிடம். ஆனந்தம் அவர்களிடம், சோர்வு ஜெர்மனியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதேயாகும், என ஹிட்லர் சுயசரிதையில் எழுதினார். எழுதியபடி செய்தும் முடித்தார்” என்று அறுபது லட்சம் யூத மக்களை கொன்றதை ஆதரிப்பது போல தம் தொண்டர்களுக்கு குறிப்புணர்த்தினார்.

    ஏனோ அவர் நினைத்த அளவு தமிழகத்தில் இனவெறுப்பு ஈடேறவில்லை

  13. Avatar
    smitha says:

    மகாத்மா காந்தியின் புகழைப் பொறுக்காமல் “காந்தியார், ஒன்றும் கடவுள் அல்ல, மகானும் அல்ல, மகாத்மாவும் அல்ல. அவர் ஒரு காமாந்தக்காரர். சுசீலா நாயர்கள் சூழ வர, கோகில பென்கள் தோளிலே கை போட்டுக்கொண்டு நடந்து வரும் காந்தியை பார்த்தாயா, தம்பி” என்று பொருமினார்.

    பேரறிஞர் என்று புகழப் படுகிற அண்ணாவின் தீர்க்க தரிசனத்துக்கு ஒரு உதாரணம் அவர் “வெள்ளையனே வெளியேறு” போராட்டம் நடந்த போது மகாத்மா காந்தியைக் குறித்து சொன்னது:

    “தம்பி, காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது, பஸ் ஓடாது, ரயில் ஓடாது, தந்தி கூட இருக்காது, ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது”.

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணாவின் பங்கு குறித்து சொன்னாய். உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.. திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள். இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். பொது சொத்துக்கள் தீக்கிரையாகின. அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

    ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா, போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே “இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது” என்று அண்ணா அறிவித்து விட்டார்.

    சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர். “இந்தி திணிக்கப் படமாட்டாது” என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும் வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர். பாவம், இவர்களை நம்பி தீக்குளித்தவர்கள் தான் முட்டாள்கள் ஆனார்கள்.

    அடுத்து திராவிட நாடு கோரிக்கையும் இப்படியே முடிந்தது. உண்மையில் பார்த்தால் திராவிட நாடு கோரிக்கை எழுப்பிய அண்ணாவுக்கே திராவிடம் என்பதின் பொருள் தெரியவில்லை. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகியவை உள்ளடங்கிய மதராஸ் ராஜதானியையே இவர் தனி நாடாக்க கேட்டுக் கொண்டிருந்தார். இவர் கேட்டது தமிழ் நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களில் யாருக்கும் தெரியாது.

    இவர் திராவிட நாடு கேட்டுக் கொண்டிருக்கும் போதே மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப் படத் துவங்கின. 1965ல் சீனப் போர் துவங்கிய போது, எங்கே தனி நாடு கேட்கும் தம் கட்சியை தடை செய்து தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வருவதில் மண்ணைப் போட்டு விடுவார்களோ என்று தனி திராவிட நாட்டுக் கொள்கையை குப்பையில் கிடத்தினார்.

    ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின் கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின் இறைக் கொள்கை விளக்கத்தில் தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது.

    கற்பு என்ற ஒன்றே கிடையாது என்ற ஈவேராவின் நிலைப்பாட்டிலிருந்து விலகி, கண்ணகி என்கிற கற்புக்கரசி கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கத் துவங்கினார் அண்ணாதுரை. 1962 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் “அண்ணாதுரை முதலியார்” என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது. இப்படி எந்த கொள்கையிலுமே அண்ணா உறுதியாக இருந்ததில்லை.

    அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய். அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

    யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி. டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

    இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப் பட்டன. அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

    எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார். அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார். இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான்.

    அண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம் தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:

    “[……] ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [………] என்பவள் ஒரு பேனா மைக்கூடு – அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் நானும் பயன்படுத்தினேன்”.

    கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. அன்றைக்கு அண்ணாவின் கட்சியில் பேச்சாளராக இருந்த மூடர்கள் சற்றும் தயங்காமல் அண்ணாவின் இந்த வசனத்தை மேடை தோறும் மறு ஒலிபரப்பு செய்து மகிழ்ந்தார்கள்.

    பல தந்திரங்கள் செய்து ஆட்சியைப் பிடித்தபின் என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில் தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களை உயிருடன் தீயிட்டு கொளுத்தப் பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும், ஆட்சியில் சட்டம் ஒழுங்கும் சிறந்து விளங்கிய லட்சணம் அது.
    இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும் அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்கு மயங்காதவர் குறைவே. இன்றைக்கு கருணாநிதியை எதிர்த்து பேச யாரும் துணியாதது போலவே அண்ணாவையும் யாரும் பெரிதாக எதிர்க்கவில்லை. நாடு முழுவதையும் முட்டாளாக்கி விட்டு அண்ணா போய் சேர்ந்தார்.

    திராவிட நாடு, தமிழ் மொழி என்றெல்லாம் அரசியல் செய்து மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு எத்தனையோ பேர் தீக்குளிக்கவும், சிறை செல்லவும், பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வரவும் காரணமாக இருந்தது அன்றைய அண்ணா அரசு.

    அண்ணாவின் கூச்சல்களை நம்பி இந்தி மொழி கற்காமல் போனதால் நட்டம் தமிழர்களுக்கே. ஆனால், கழகத்தினார் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை இந்தி படிக்க வைத்திருக்கிறார்கள்.

    தன் பிள்ளைகளுக்கு பதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கொடநாட்டிலும், கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது.

    அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் “விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்று பிரச்சாரம் செய்து விற்றது. உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

    அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது. ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது. ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார். கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

    சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

    அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது. அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது. பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது.

    கழக அரசியலை புரிந்து கொண்டு முற்றாக இவற்றை ஒதுக்கும் வரை தமிழக மக்களுக்கு விடிவு காலம் இல்லை. நாட்டைக் கடனில் ஆழ்த்தி, மக்களின் வரிப்பணத்தைக் கொண்டே கழகங்கள் வீசும் இலவச எலும்புத் துண்டுகளுக்கும், வாய்ஜாலங்களுக்கும் மயங்கி சுரண்டலுக்கு ஆட்பட்டு, சுயமரியாதை இழந்து, கழகங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான்.

    இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது.

    I have reproduced the above article from Tamilhindu.com

  14. Avatar
    மலர்மன்னன் says:

    ஒரு விளக்கம்:
    ரயில் நிலையங்களில் ஹிந்தியிலும் பெயரை எழுதும் முடிவு 1950-ல் எடுக்கப்பட்டு அதற்கான பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. ஒரே நாளில் முடியக் கூடிய வேலையா இது? 1952 -ல் தமிழ் நாட்டில் 1952-ல் பெரும்பாலான ஊர்களில் எழுதி முடிக்கப்பட்டது. அதைத் தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை ஈ.வே.ரா. தொடங்கினார். அதை திமுக ஆதரித்தது. ஆனால் இதற்கு நேரு எதிர்வினை ஏதும் செய்ததாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் தெற்கெல்லைப் போரட்டம் நடந்தது பற்றியே நேரு நான் சென்ஸ் என்று சொன்னதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால் 1952-53-ல் அது பிரதமர் நேருவின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாகத் தெரியவில்லை. மொழிவாரி மாநில ஏற்பாடுகள் தொடங்கிய பின்னரே அது சூடு பிடித்தது. குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வெகு காலமாகவே நேசமணி போன்றவர்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை திடீரென நேரு விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது. 1953 கால கட்ட தி.மு.க. சார்பு இதழ்களைப் பார்க்க வேண்டும். அக்காலத்தில் நாளிதழ்கள் தி மு க விஷயங்களைப் பொருட்படுத்துவதேயில்லை. 1953 காலகட்டத்தில் ராஜாஜியைப் பதவியிலிருந்து நீக்குவதில் காங்கிரஸ்காரர்கள் பலரே மும்முரமாக ஈடுபட்டிருந்ததாலேயே நேரு அப்படி அதை விமர்ச்சித்திருக்க வேண்டும்.
    -மலர்மன்னன்

  15. Avatar
    Kavya says:

    நான் ஏற்கனவே எழுதியது போடப்படவில்லை. மீண்டும் எழுதுகிறேன்.

    ‘உண்மை வரலாறு’ என்று எழுதுபவர் சொல்ல முடியாது. ”வரலாறு என் பார்வையில்” என்று மட்டும்தான் சொல்லலாம்.

    எந்த வரலாற்றாய்வாளரும், அல்லது அறிஞரும் தாங்கள் எழுதிய வரலாற்றை உண்மை வரலாறு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. ஏனெனில் அது மற்ற அறிஞரின் மாற்றுகருத்துக்களைக்கொண்ட வரலாறுகளைப் பரிகாசம் பண்ணுவதாகும். அறிஞர்கள் பண்புடையோராகவும் இருத்தல் அவசியம்!

    வரலாறு என்பது பலராலும் பல நோக்கங்களுக்காக எழுதப்படுகிறது. அதிலும் சமீபத்திய சமூக நிகழ்வென்றால் கேட்கவே வேண்டாம்.

  16. Avatar
    knvijayan says:

    நேருவின் non -sense என்பது ஏதோ பெரிய கேட்ட வார்த்தை என்று நம்பிய தம்பிகள் ,அவரை பலவாறாக விமர்சித்தார்கள்.அதில் ஒன்று கனகவிசயரின் தலையில் சேரன் செங்குட்டுவன் கல் சுமக்க வைத்ததுபோல் நாங்கள் நேருவை கல்சுமக்கவைபோம் என்று இலட்சிய நடிகர் SSR முழங்கினார்.

    1. Avatar
      Kavya says:

      It s not just a bad word to simply ignore or to scold those who take it seriously as u seem to portray the DMK here.

      In English, words can have two senses: one as we read in a dictionary; 2 as imported from the context. The context in which Nehru used it s significant and decides its meaning.

      The context has already been explained here by others. In that context, it means that all that user stands for is truth, honesty and public welfare; and those who opposes him defends falsehood, dishonesty and r anti social.

      DMK took the word in its context and rightly made Nehru understand that he could not portray himself as ‘sense’ and DMK ‘nonsense’.

      The feeling of DMK and the demonstration of such feeling through democratic means are admirable acts

  17. Avatar
    மலர்மன்னன் says:

    நேரு திமுகவினரை non -sense என்று சொன்னது மும்முனை போராட்டத்தின் போது அல்ல 1957ல் ,அப்போது முதல்வர் காமராஜர்,ராஜாஜி அல்ல,57 களில் ரயில் நிலைய பலகைகளில் இந்தி இடம்பெற்று இருந்தது.இதை எதிர்த்து 1958 -ல் நேரு தமிழ்நாடு வந்தபோது கருப்புக்கொடி காட்டி திமுகவினர் சிறைசென்றனர்knvijayan//

    கட்டுரையை முழுமையாகவும் சரியாகவும் படித்துவிட்டுக் கருத்துத்தெரிவிப்பதே முறை. மும்முனைப் போராட்டம் நடந்தது 1953-ல் அதில் ஒரு முனை நேரு நான்சென்ஸ் என்று சொன்னதைக் கண்டிக்க ரயிலை நிறுத்துவது. இதை மறுப்பதானால் தக்க ஆதாரங்களுடன் மறுக்க வேண்டும். மபொசி யுடன் நெருங்கிப் பழகிய, தமிழரசுக் கழகத்தவருடன் பழக்கமுள்ள, வயது முதிர்ந்த தி வ மெய்கண்டாருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தேன். தெற்கெல்லைப் போராட்டம் தொடர்பாக நேரு நான்சென்ஸ் என்று சொல்ல வில்லை என்று உறுதியாகச் சொல்லி எனது கருத்தே சரியாக இருக்கும் என்று சொன்னார். காந்திஜி காமராஜ் குழுவினரை க்ளிஷே என்று சொன்னது ராஜாஜி திரும்பவும் காங்கிரசில் நேரடியாகச் சேர்த்துகொள்ளப்பட்டதை அவர் ஆட்சேபித்ததைக் கண்டிப்பதற்கு. ராஜாஜி இரண்டாம் முறையாக முதல்வராகப் பதவி ஏற்றது 1952ல். அவரைப் பதவியிலிருந்து நீக்க முயற்சி எடுத்தவர் டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் இன்னும் சிலரும். காந்திஜி 1948 ஜனவரி 30 அன்றே இறந்துவிட்டார். நேரு நான்சென்ஸ் என்று சொன்னது வரத்ராஜுலு குரூப் முயற்சியைத்தான். அதில் காமராஜரும் அடக்கம்.ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்தை அழிப்பது போன்ற சிறுபிள்ளத்தனங்களையெல்லாம் நாட்டின் பிரதமர் அதிலும் நேருவைப் போன்ற சர்வ தேசத் தலைவர் என்கிற அந்தஸ்தைப்பெற்றவர் விமர்சனம் செய்திருப்பாரா என்று யோசிக்க வேண்டும். சும்மா ஓய்வெடுத்திருந்த ராஜாஜியை வருந்தி அழைத்து, ஆளுநரே நேரடியாக அவரை மேலவை உறுப்பினராக (மேலவைக்கும் பல தொகுதிகளும் தேர்தலும் உண்டு. அவை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர் தொகுதி, என்றெல்லாம் வேறுபடும். அரசே நேரடி நியமனம் செய்யும் சில உறுப்பினர்களூம் உண்டு. அந்த அடிப்படையில் ராஜாஜி நியமனம் செய்யப்பட்டார். ஆக தேர்தல் எதிலும் போட்டியிடாமலேயே பதவிகள் பெற்றவர் ராஜாஜி! நின்றிருந்தால் ஜெயித்திருப்பாரா என்பது ஹைப்பாதெடிகல் கேள்வி!) ராஜாஜியை வலிய அழைத்து பதவி ஏற்கச் செய்த தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்கள் இரண்டே இரண்டு ஆண்டுகளுக்குள்ளக அவரை நீக்க வேண்டும் என்று ஆரம்பிப்பது கேலிக் கூத்தானது என்று கருதுயே நான்சென்ஸ் என்று நேரு சொன்னார். அவர் அவ்வாறு சொன்னது தமிழ் நாட்ட்வர் அனைவரையுமே சொன்னதாக திமுக-வினர் கூட்டம் போட்டுப் பேசி மும்முனைப் போராட்டத்தில் அதையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டார்கள். இந்த மும்முனைப் போராட்டம் ஒன்றும் தமிழ் நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றாகவேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அல்ல. ஆனால் நம் பிள்ளகள் படிக்கும் பாடத்தில் நடந்த நிகழ்ச்சியைத் திரித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாறபது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகள் ஆட்சி தொடர்வதால் நிகழும் கேடுகளில் இதுவும் ஒன்று. வரும் தலைமுறைகள் தவறான செய்திகளையே பள்ளிப்பாடங்களில் படித்து, அவையே சரியானவை என்ற நம்பிக்கையுடன் இருந்துவரும் ஆபத்து இதில் உள்ளது.
    இந்த பதிலையாவது முழுவதுமாக நிதானத்துடன் படித்து விஷயத்தை உள்வாங்கிக்கொண்டு கருத்துத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
    -மலர்மன்னன்

  18. Avatar
    knvijayan says:

    DMK’s Black Flag Demonstrations of the 1950s

    Chapter 11
    of
    “Political History of the Rise and Fall of Dravidian Parties in Tamil Nadu (South India)”

    Thanjai Nalankilli, Ph.D.

    A notable black flag demonstration was against the then Indian Prime Minister Jawaharlal Nehru in 1958. The previous year Jawaharlal Nehru had called protests and statements by DK and DMK leaders against Hindi imposition and issues as “nonsense”. To protest this, DMK planned black flag demonstrations on January 6, 1958 when Nehru visited the state. State police banned all public meetings and processions for 15 days from December 31, 1957 in order to thwart these demonstrations. DMK called it an infringement of their freedom of speech and decided to defy the ban.

  19. Avatar
    Paramasivam says:

    How can Malarmannan describe the defacing of Hindi letters from Railway Station Boards as childish?If there are mistakes in school text books,it should be brought to the notice of the Govt.How he is going to “educate”students with his so called ” correct versions” which contain nothing but hatred against a particular political party?After calling himself as sanyasi,he should not run a “hate”campaign.

  20. Avatar
    மலர்மன்னன் says:

    1953-ல் தி.மு.க. நடத்திய மும்முனைப் போராட்டத்தில் ஒரு முனைப் போராட்டம் ரயில் நிறுத்தப் போராட்டம். அது தமிழ் நாட்டுத் தலைவர்கள் பேச்சை நான்சென்ஸ் என்று நேரு சொன்னதைக் கண்டிக்க. கண்டனம் மத்திய அரசின் கவனத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ரயில் நிறுத்தப் போராட்டம். மூன்று பிரச்சினைகள் குறித்த போராட்டம் என்பதால்தான் அதை மும்முனைப் போராட்டம் என்று அழைத்தனர்.
    தவறான தகவல்களை கழக ஆட்சிகள் வரலாற்றுப் பாடங்களாக எழுதிவிடுவதால்தான் ஆய்வாளர்களும் அவற்றின் அடிப்படையில் தமது ஆய்வுக் கட்டுரைகளை எழுதி விடுகிறார்கள், அதையே மற்றவர்கள் எடுத்துக் காட்டாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால்தான் குறிப்பிட்ட சம்பவம் நடந்தபோது அதுபற்றி நேரில் அறிந்தவர்கள் அவை கவனத்திற்குக் கொண்டு வரப்படும்போது பிழையைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. இதை உணர மறுத்து நடந்தது என்ன என்ற தகவலைச் சொல்வதில் விருப்பு வெறுப்பு எதுவும் இருப்பதாக உள்நோக்கம் கற்பிப்பது அறியாமை. அண்ணா தமது கட்சி செயற்குழுவில் விவாதித்து முடிவு செய்ததுதான் மும்முனைப் போராட்டம். அப்போதே கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கல்லக்குடி போராட்டத்தை ரயில் நிறுத்தப் போராட்டமாக மாற்றிவிட்டார், கருணாநிதி. அண்ணாவும் ஒரு அரசியல்வாதிதான் என்று நான் பல இடங்களில் பதிவு செய்திருக்கிறேன். அவரைப் புனிதர் என்று எங்கும் குறிப்பிட்டதில்லை. சமூக-அரசியல் களங்களில் மகக்ளை திசை திருப்பி சுய லாபம் தேடுவோரை அடையாளம் காட்டுவது சொந்தக் கவலைகளோ கடமைகளோ இல்லாத சந்நியாசிகளின் தலையாய பணியாகும்.
    -மலர்மன்னன்

  21. Avatar
    மலர்மன்னன் says:

    ரூபா நோட்டுகளிலும் தபால் வில்லைகளிலும் மிகப் பிரதானமாகத் தலைப்பிலேயேி இக்கும் ஹிந்திச் சொற்களை அழிக்க வேண்டியதுதானே, பரமசிவம்? ஏன் பொதுச் சொத்தான ரயில் பலகையை அசிங்கப் படுத்தி மீண்டும் எழுதச் செய்து பொதுப் பணத்தை விரயம் செய்ய வேண்டும்? தார் கொண்டு அசிங்கமாக அழித்து அழகைக் கெடுத்ததால் விளைந்த பயன் என்ன? இன்று ஹிந்தி வழங்காத பகுதிகளில் உள்ள ரயில் நிலையப் பலகைகளில் ஹிந்தியிலும் எழுதுவது நிறுத்தப்பட்டுவிட்டதா? மத்திய அமைச்சரவையில் இடம் பெறுள்ள தி மு க அமைச்சர்களுக்கு வரும் கோப்புகள் அனைத்திலும் ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்தே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதைக் கண்டித்து அவர்கள் வெளியே வர வேண்டியதுதானே! ரயில் நிலையங்களிலும் அதுபோலத்தானே இரு மொழிகளும் உள்ளன?
    -மலர்மன்னன்

    1. Avatar
      வீரன் says:

      ஆ! திமுக அமைச்சர்களுக்கு வரும் இந்தி கோப்புகளால் பணம் வருகிறதே.
      இந்தி எதிர்ப்பு செய்ததே, கலைஞரின் குடும்பம் நன்றாக பணம் பண்ணத்தானே? இப்போது கலைஞரின் பேரக்குழந்தைகள், கலாநிதி, தயாநிதி குழந்தைகள் இந்தி ஆங்கிலம் மட்டுமே படிப்பதும், கலைஞர் சந்ததியினர் செல்வமும் செழிப்போடும் வாழ வேண்டும் என்பதற்காகத்தானே? கலைஞரின் குடும்பம் உலகத்திலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக ஆகவேண்டும் என்பதற்காகத்தானே ஒவ்வொரு உடன்பிறப்பும் நாயாய் பேயாய் உழைக்கிறது? இதனை கேள்வி கேட்டால் எப்படி?

      பரமசிவம் சார், நீங்க மலர் மன்னன் சொல்வதை கண்டுகொள்ளாதீர்கள்.
      வாழ்க கலைஞர் குடும்பம். வளர்க அவர் செய்யும் ஊழலும், தமிழருக்கு போடும் மொட்டையும்.

      1. Avatar
        Kavya says:

        வீரன்!

        ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதீர்கள். இங்கு 60 வருடங்களுக்கு நடந்த நிகழ்வுகளைப்போட்டு மலர்மன்னன் கட்டுரை எழுதுகிறார். அவர் சொல்லின்படி, டிஎம்கேயின் கருநானிதி ஒரு கள்ளத்தனம் பண்ணியதாகவும், அதை எல்லாருக்கும் சொல்வது சந்நியாசியான தம் கடமையெனவும் சொல்கிறார்.

        ஆனால் நீங்களோ இன்று என்ன செய்யப்படுகிறது என்று சொல்லி 1950 ஐயும் 2010 ஐயும் இணைத்து எழுதுகிறீர்கள். அன்று நீங்கள் வாழ்ந்திருந்தால் அப்போது உங்கள் கண்ணுக்கு கருநாநிதி எப்படி தெரிந்திருப்பார்? அவருக்குப் பிள்ளைகள் அப்போது உண்டா? 2 ஜி, கிரானைட் ஊழல் என்றெல்லாம் அப்போது உண்டா? அழகிரி உண்டா? கனிமொழி உண்டா? அப்படிப்பட்ட காலத்தில் உங்களுக்குக் கருநாநிதி எப்படித்தோன்றுவாரோ அதை வைத்துத்தான் நீங்கள் எழுத முடியும்.

        இவ்வளவு சிரத்தையாக தமக்கு வேண்டாதவரின் யோக்கியதையைத் தோலுரிப்பதே தம் தெய்வீகக்கடமையென்னும் மலர்மன்னன், ஏன் அன்று தம் ஜாதிக்காரர்கள் நடந்ததற்காக இன்று அதே ஜாதிக்காரர்களை நாம் ஒன்று செய்யக்கூடாதென்கிறார் பெரியாரைத் திட்டுகிறார். தி கவைத்திட்டுகிறார். அவர்களெல்லாரும் வெள்ளைக்காரன் காலத்தில் பார்ப்ப்னரெப்படி நடந்தார்கள் என்றுதானே பேசினார்கள்? அல்லது 2000 ஆயிரமாண்டுகளுக்கு முன் மனு என்ன எழுதினான் என்றுதானே சொன்னார்கள்? அவர்கள் சொல்வது மட்டும் தவறு; தான் பழங்காலத்தில் நடந்ததை இங்கு வைத்து தமக்கு வேண்டாதவர்களைத் தோலுரிப்பது என்பதுமட்டும் எப்படி நியாயமாகும்? சாதிக்கொரு நீதியா? கட்சிக்கொரு நீதியா? ஆளுக்கொரு நீதியா?

        ஆக, அவர் ஒரு உள்ளோக்கத்துடனே இந்த வேலையைச்செய்கிறார். நீதி நேர்மை என்று வரும்போது என் தோழன், என் உறவு என்றெல்லாம் போய்விடும். மாறாக என் எதிரி மட்டுமே என் டார்கெட் என்றால் நிச்சயமாக உள்ளோக்கம்தான் !

    2. Avatar
      Kavya says:

      // ரூபா நோட்டுகளிலும் தபால் வில்லைகளிலும் மிகப் பிரதானமாகத் தலைப்பிலேயேி இக்கும் ஹிந்திச் சொற்களை அழிக்க வேண்டியதுதானே, பரமசிவம்? ஏன் பொதுச் சொத்தான ரயில் பலகையை அசிங்கப் படுத்தி மீண்டும் எழுதச் செய்து பொதுப் பணத்தை விரயம் செய்ய வேண்டும்? தார் கொண்டு அசிங்கமாக அழித்து அழகைக் கெடுத்ததால் விளைந்த பயன் என்ன? இன்று ஹிந்தி வழங்காத பகுதிகளில் உள்ள ரயில் நிலையப் பலகைகளில் ஹிந்தியிலும் எழுதுவது நிறுத்தப்பட்டுவிட்டதா? மத்திய அமைச்சரவையில் இடம் பெறுள்ள தி மு க அமைச்சர்களுக்கு வரும் கோப்புகள் அனைத்திலும் ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்தே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதைக் கண்டித்து அவர்கள் வெளியே வர வேண்டியதுதானே! ரயில் நிலையங்களிலும் அதுபோலத்தானே இரு மொழிகளும் உள்ளன//

      திராவிடக்கட்சிகளை வெறுப்பது வேறு; தமிழையே வெறுப்பது வேறு. ஒரு வெறுப்பு இன்னொரு வெறுப்புக்குத் தாவுகிறது இங்கே. போகட்டும். கருத்துக்கு வருவோம்.

      உருபாத் தாள்கள், தபால் வில்லைகள் தமிழ்மக்களுக்கு மட்டுமல்ல. அவை இந்தியர் அனைவருக்கும். எனவே அதில் ஹிந்தியும் உண்டு. உருபாத்தாளில் ஹிந்தி மட்டுமில்லை. மற்ற மொழிகளும் உண்டு. எல்லாமக்களும் தத்தம் மொழியில் அத்தாளின் மதிப்பென்ன என்று தெரியவேண்டுமாதலால், தபால் வில்லைகள் சிறியனவாகவிருப்பதால் சாத்தியமில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே புழங்கும் ஒரு தபால் வில்லையிருந்தால் தமிழில் மட்டுமேகண்டிப்பாக இருக்கும். வக்கீல்கள் நலத்திற்காக சிறப்புத் தபால் வில்லையை ஒட்டியாக வேண்டும். அவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழதப்பட்டிருக்கும் ஹிந்தி ஆங்கில்லை.

      ரயில் வண்டி நிலையத்துப் பலகை அஃது எந்தவூர் என்பதைத் தெரிவிக்கவே. இளவேலங்கால் ரயில் வண்டி நிலையத்துக்கு வருவோரில் எத்தனை ஹிந்தி பேசுவோர்? ஆங்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தென்ன பயன்? அழகுணர்ச்சியத்தர அப்பலகைகள் அமைக்கப்படுவதில்லை. எந்தவூர் என்பதைத் தெரிவித்தால் போதும். தமிழ்நாட்டு மக்கள் சென்றடையும் ஊரின் பெயரை ஹிந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவேன் என்றால் எப்படி? அதை எதிர்க்கும் போராட்டம் என்று வருமாயின் அப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்காமல் வேறெதை அழிப்பது? தமிழ்நாட்டில் தமிழ் இல்லையென்றால், தமிழருக்குத் தமிழ் இல்லையென்றால், வேறெங்கு அம்மொழி போக வேண்டும்? உத்தர்பிரதேசத்தில் ஒரு ரயில் வண்டி நிலையத்திலாப் போய் எழுதுவார்கள்?

      அன்று நடந்தவைகளைத்தான் கட்டுரையாகப்போட்டு எவரெலாம் பார்ப்பனர்களை எதிர்த்தார்களோ அவர்களைக்கிழித்துக்கொண்டிருக்கிறீர்கள். அது சரி. அந்நிகழ்வுகளை இந்நாள் நிகழ்வுகளுடன் எப்படிப் பொருத்துகிறீர்கள்? விரன் செய்த அதே பிழையைத்தானே போடுகிறீர்கள்?

      அன்று தமிழகம் தனித்து நின்றது. தனிநாடு, திராவிட நாடு, தமிழே எங்கும் என்றெல்லாம் உணர்வலைகள். அக்கால கட்டம் என்றுமே சாசுவதமா?

      1000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆகம் விதிகளையும் மனு சட்டத்தையும் உச்சியில் வைத்துக்கொண்டாடும் உங்களைவிட, திராவிடக்கட்சிகள் மேலென்றுதான் தோன்றுகிறது. அன்று வேறு; இன்று வேறு என்று அவர்கள் நகன்று விட்டார்கள். நீங்கள் நகரவில்லையே ஏன்?

      ஹிந்தி எனக்கு அத்துப்பிடி. இலக்கிய இந்தி. கவிதை இரசிக்க முடியும். அதற்காக தமிழை யான் பழித்தேனென்றால் நான் ஒரு துரோஹி. ஹிந்தி இருக்கலாம். ஆனால் தமிழுக்கு அடுத்தே என்ற கொள்கையே உயர்வான கொள்கை. அதைக் கிண்டலடிப்பது வேடிக்கை.

      ஒரு இயக்கத்தில் கொள்கையை ப்ரிஜ்ஜில் வைக்கமாட்டார்கள் மலர்மன்னன் நீங்கள் செய்வதைப்போல. சமூகத்தில்தான் உலவவிடுவார்கள். எந்நாளும் ஒரே நாளன்று. காலத்துக்குக்காலம் சமூகக்காரணிகள் உருமாறும், சிதையும், வளரும். வளராமலும் போகும். புதுக்காரணிகள் பழைய காரணிகளை விரட்டிவிடும். ஹிஸ்டரி இஸ் ஆல்வேஸ் இன் ஃபளக்ஸ். இல்லையா? இவ்வுண்மையை மறுத்து கட்டுரைகளைத் தீட்டி திண்ணையில் விரித்துப் பழமையைப்– அஃது எவ்வளவுதான் தீங்கிழைத்தபோதிலும் – போற்றும் மலர்மன்னனுக்கு இஃது எப்படிப்புரியும்?

      இன்றையத் திராவிடக்கொள்கையை இப்படி எடுக்கலாம்:

      தமிழே உயர்வு. தமிழே நம் தாய்மொழி. அதைக் காப்பாற்றி வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வோம். அதே நேரத்தில், நாம் இந்தியாவில் ஒருபகுதி. இந்தியா நம் தாய்நாடு. அதன்படி ஹிந்தி நம்முடன் இருப்பதில் ஆட்சேபணையில்லை .அதே நேரத்தில் ஹிந்தியைப்புகழ்ந்து அதைத்திணிக்கும் சூழ்ச்சியிலிறங்கி தமிழை விரட்டும் குயக்கோடன்கள், எட்டப்பன்கலிடமிருந்து நம் தமிழைக்காப்பாதுவே திராவிட சந்நியாசிகளின் தெய்வீககடமையாகும்!

      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதனைத்
      தொழுது படித்திடடி பாப்பா”

      இதை யான் மாற்றுகிறேன்;

      ‘சொல்லின் உயர்வு தமிழ்ச்சொல்லே- அதனைத்
      தொழுது படியுங்கள் கிழங்களே!”

  22. Avatar
    மலர்மன்னன் says:

    03-7-1981 தேதியிட்ட தமது முரசொலி நாளிதழில் மு. கருணாநிதி முதல் பக்கத்திலேயே அரைப்பக்க அளவுக்கு மலர்மன்னன் கதை என்ற தலைப்பில் என்னைப் பற்றி ஒரு கதை வடிவக் கட்டுரையை எழுதியவர்தான். அதில் நான் நேர்மையாளன், தவறுகளைக் கண்டிக்கத் தயங்காதவன் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே யாரையும், வேண்டியவர் வேண்டாதவர் என நான் பார்ப்பதில்லை. தவறு என எனக்குத் தோன்றுவதைச் சுட்டிக் காட்டுவதும், அதேபோல் சரி என்று படுவதைப் பாராட்டுவதும், மேலும் எனக்குத் தெரிந்ததை மற்றவர்களூடன் பகிர்ந்துகொள்வதுமே நான் மேற்கொண்டுள்ள பணி. தவிரவும், நான் எழுதுவது எல்லாமே (கட்டுரைகள், புத்தகங்கள் உள்பட) மற்றவர்கள் கேட்டுக்கொள்வதால் மட்டுமே. எனது மின்னஞ்சல் பெட்டியைத் திறந்து பார்த்தால் இது தெரியும். தினசரி சராசரியாக இரண்டு மிரட்டல்களாவது வருவதையும் அதில் காணலாம்!
    -மலர்மன்னன்

  23. Avatar
    மலர்மன்னன் says:

    tamiltribune.com என்ற தளத்தில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. இது சித்தூர் மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என ம பொ சி யின் தமிழரசுக் கழகம் நடத்திய போராட்டத்தை நேரு நான்சென்ஸ் என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தி மு க நேரடியாகவோ அதிகாரப் பூர்வமாகவோ பங்கெடுக்கவில்லை. ஆதரவு தெரிவித்தது. இதோ அந்த இணைய தளம் தரும் செய்தி:
    1. Introduction
    Nineteen fifty three was an active year for Dravida Munnetra Kazhagam (DMK). It initiated several demonstrations and also took part in others.
    2. Chittoor Agitation (not part of the three-pronged agitation)
    Chittoor agitation was not part of DMK’s Three-Pronged Agitation of July 1953. Neither was it spearheaded by DMK. DMK took part in this agitation at the invitation of the organizers.
    In 1953 Madras State consisted of much of today’s Tamil Nadu State and large parts of today’s Andhra State (Andhra Pradesh); the former was predominantly Tamil speaking and the latter predominantly Telugu speaking. The Telegu speakers naturally wanted their own state and so those areas were separated from Madras State and Andhra State was formed in 1953. (There would be further India-wide reorganization of states in 1956.)
    Chittoor District had a very large Tamil population in some areas close to Madras State boundary and they wanted to be part of the Madras State instead of Andhra State (Andhra Pradesh). Tamilarasu Kazagam headed the agitation to transfer those areas from Andhra to Madras State. Tamilarasu Kazhagam head M. P. Sivanjanam asked DMK to participate in the agitation and it agreed. DMK volunteers stopped trains near Thiruththani for a few days as a form of protest and many were arrested. The agitation, however, did not succeed in its aim.
    Indian Prime Minister Jawaharlal Nehru called the agitation “nonsense” and this insult would seed another agitation, as we would see in Section 3.
    3. The Three-Pronged Agitation of July 1953 (“mum-munai poaraattam” in Tamil – மும்முனைப் போராட்டம்)
    DMK Executive Committee (seyal kuzhu) met on July 13, 1953 at the headquarter building in Madras and passed resolutions regarding the three-pronged agitation already planned.
    1. July 14, 1953: E. V. K. Sampath to head demonstrations in front of Chief Minister Rajagopalachari’s house (Rajaji’s house) in Madras protesting his newly introduced “caste-based education scheme”. More information about Rajaji’s “caste-based education” scheme may be found in Chapter 14. (Notes: E. V. K. Sampath was DK President Periyar E. V. Ramaswamy’s nephew. He was a founding member of DMK. The “caste-based education” was called kula vazhi kalvi thittam or kulaththozhil kalvi thittam by its critics in Tamil.) [Note: Official name of the proposed education sysyem was “Modified Scheme of Elementary Education”. Very few people used this name except in official documents. Hereditary education policy, hereditary/caste education scheme, family vocation based education and Rajaji’s education scheme are some of the other names people used. The Tamil name “kula vazhi kalvi thittam” (loosely translated as “caste-based education scheme”) is the one used by many of the opponents of the scheme. DMK’s English language website also uses the name “caste-based education policy” (seen in August 2012).]
    2. July 15, 1953: M. Karunanithi to head demonstrations in Dalmiyapuram to change the town’s name from Dalmiyapuram to Kallakudi.
    3. July 15, 1953: DMK branch offices to carry out rail-stopping agitations throughout Madras State in protest of Indian Prime Minister Jawaharlal Nehru calling the Chittoor agitation a “nonsense”.
    Around the time the executive committee meeting was about to end, around 7:30 PM, police came and arrested C. N. Annadurai, R. Nedunjchezhian, E. V. K. Sampath, K. A. Mathiazhagan and N. V. Natarajan. They were later sentenced to be held under guard until the court proceedings ended (that is just a few hours under guard) and 500 Rupees fine each. A very light sentence. However failure to pay the fine would result in three months imprisonment. All five chose to go to prison instead of paying the fine.
    Coming back to the three-pronged agitation, they were held as scheduled. Police resorted to lathi charges (baton charges), tear gassings, arrests and even shootings to break up the agitations. DMK held statewide protest meetings on September 13, 1953 against these police “high-handedness” during the three-pronged agitation. There were a few local protests on other days too. DMK cadres also showed black flags to Chief Minister Rajaji in Madras, Kanchipuram and North Arcot as protest to his “high-handed” handling of the agitation and the imprisonment of DMK leaders. There were also black flag demonstrations in September and October 1953 before the state governor Prakasa in Katpadi, Valaja and Vellore, before minister U. Krishna Rao in Valaja, before Indian Prime Minister Jawaharlal Nehru and Madras State Governor Prakasa in Madras, before Nehru and Rajaji in Madurai and before Nehru in Coimbatore.
    We will discuss the July 15 agitation against Jawaharlal’s insult in the next section. The other two agitations (the agitations against Rajaji’s caste-based education and Kallakudi agitation) will be discussed in Chapters 14 and 15, respectively.
    4. Agitation Against Nehru’s Insult (one part of the three-pronged agitation)
    As planned, DMK volunteers stopped trains on July 15, 1953 either by lying on railway tracks or by pulling the “danger chain” from within the trains (driver would immediately stop the train if a passenger pulled the danger chain). This happened in Chennai (Madras), Chithamparam, Coimbatore (Kovai), Madurai, Thiruvannamalai, Thooththukudi (Tutucorin) and other places. Police lathi-charged the crown in Coimbatore and since even this did not break up the demonstrations opened fire. Four died and about 20 were injured. A number of people were arrested in Chennai (around 182), Chithamparam, Coimbatore (around 300) Madurai (over 100), Thiruvannamalai (around 38) and Thooththukudi (around 26). Total arrests on July 15 were over 5000. Many stores in Madurai and Thoothukudi closed protesting police actions in Thoothukudi.
    A few of the arrested received jail sentences ranging from a few months to over a year. Some sentences were later reduced on appeal.
    தமிழரசுக் கழகத்தின் வடக்கெல்லை (சித்தூர்)ப் போராட்டம் நடந்தது எப்போது என்று இனி விவரம் தேட வேண்டும். மெய்கண்டாரிடம் விசாரித்தால் தெரியும்.

    -மலர்மன்னன்

  24. Avatar
    மலர்மன்னன் says:

    சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் கிளர்ச்சி செய்தது. சித்தூர் மாவட்டம் எப்போது ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டது?

    1952-ல் தனி ஆந்திர மாநிலம் வேண்டி பொட்டி ஸ்ரீராமுலு என்ற காந்தியவாதி சென்னை மயிலையில் உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டார். அதன் விளைவாகப் பெருங் கலவரம் வெடித்தது. சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசப்படும் 11 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுத் தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று 1952 டிசம்பர் 19 அன்று பிரதமர் நேரு அறிவித்தார். அதன் படி 1953 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு மொழி பேசுவோர் வாழும் 9 கடலோர மாவட்டங்களையும் இரண்டு ராயலசீமா மாவட்டங்களையும் சேர்த்து தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழிவாரி மாநிலப் பிரிவினைகளுக்கு இதுவே முன்னோடி. பின்னர் 1956-ல் ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா, கர்நாடக, மகாராஷ்டிர எல்லைப் பகுதிகளும் இணைக்கப்பட்டு விசால ஆந்திர மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது.
    1953 அக்டோபரில் உருவாக்கப்பட்ட ஆந்திரத்தின் பதினோரு மாவடங்களில் ஒன்பது கடலோர மாவட்டங்கள். மீதி இரண்டு ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவை. ஆனால் ராயலசீமாவைச் சேர்ந்தவை மொத்தம் நான்கு மாவட்டங்கள். அவையாவன, கர்நூல், கடப்பா, அனந்தப்பூர், சித்தூர் (?) ஆகியவை. புதிதாக உருவாக்கப்பட்ட பதினோரு மாவட்டங்களைச் சேர்ந்த ஆந்திர மாநிலத்திற்குத் தலைநகராகக் கர்நூலை வைத்துக் கொண்டார்கள். எனவே ராயலசீமாவிலிருந்து கர்நூல் மாவட்டம் ஆந்திராவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது உறுதியாகிறது. மீதியுள்ள மூன்றில் (சித்தூரையும் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில்தான்) கடப்பாவும் அனந்தப்பூரும் தெலுங்கர்களே பெருவாரியாக உள்ள மாவட்டங்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே அவற்றில் ஒன்றுதான் கடப்பா அல்லது அனந்தப்பூர் அப்போது ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 9 கடலோர மாவட்டங்கள் + 2 ராயலசீமா மாவட்டங்கள்= 11 மாவட்டங்கள். இதுவே 1953 அக்டோபரில் உருவாக்கப்பட்ட முதல் கட்ட ஆந்திர மாநிலம். அதில் அந்த இரு ராயலசீமா மாவட்டங்கள் கர்நூலும் மற்றது கடப்பா அல்லது அனந்தப்பூராகத்தான் இருக்க வேண்டும். எனவே 1952 லோ 1953 லோ தமிழரசுக் கழகம் சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவுடன் இணைத்தமைக்குப் போராட்டம் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. சித்தூர் மாவட்டமும் ஆந்திராவில் சேர்க்கப் பட்ட 1956-க்குச் சிறிது முன்னதாகத்தான் நடந்திருக்கும். தி முக வின் மும்முனைப் போராட்டமோ 1953 ஜூலையில் நடந்தது. அதில் நேரு சொன்ன நான்சென்ஸ் தமிழரசுக் கழகம் நடத்திய சித்தூர் போராட்டத்திற்காக இருக்க வாய்ப்பில்லை. எனது நினைவில் சித்தூர் மாவட்டம் 1956 வாக்கில்தான் ஆந்திராவுக்கு என உறுதி செய்யப்பட்டது. ஆகவே நேரு நான்சென்ஸ் என்று சொன்னது ராஜாஜியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய சில தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்களைக் குறிப்பிட்டுத்தான் எனக் கருத வேண்டியுள்ளது. நேரு தம் வாழ்நாளில் எத்தனையோ முறை நான்சென்ஸ் என்று அலட்சியமாகச் சொல்லிப் பல விஷயங்களைப் புறந்தள்ளிய மகானுபாவர்தான் (ஜனநாயகவாதி!). ஆனால் தி மு க வின் மும்முனைப் போராட்டத்தில் ஒரு முனையான நான்சென்ஸ் கண்டனப் போராட்டம் நான் குறிப்பிடும் சம்பவத்தை ஒட்டியே!
    -மலர்மன்னன்

  25. Avatar
    வீரன் says:

    காவ்யா,

    ..ரயில் வண்டி நிலையத்துப் பலகை அஃது எந்தவூர் என்பதைத் தெரிவிக்கவே. இளவேலங்கால் ரயில் வண்டி நிலையத்துக்கு வருவோரில் எத்தனை ஹிந்தி பேசுவோர்? ஆங்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தென்ன பயன்?”

    அதாவது தமிழ்நாட்டினரை தவிர வேறு யாரும் இளவேலங்கால் ரயில் வண்டி நிலையத்துக்கு வர வேண்டிய தேவை இல்லை என்கிறீர்களா?
    அவற்றில் உலகத்தில் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளக்கூடிய ரோமன்லிபியிலும் , இந்தியாவில் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளக்கூடிய தேவநகரி லிபியிலும் இருந்தால் தமிழ் அழிந்துவிடுமா?

    இருக்கும் இருக்கும். காவ்யா சொன்னால் சரியாத்தான் இருக்கும்.
    பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானில் ஒரு 11 வயது பெண்ணால் அபாயத்துக்குள்ளான இஸ்லாமை காப்பாற்ற அந்த பெண்ணை கைது செய்து கொல்லப்போகிறார்கள் என்று படிக்கிறோம். அதே போல, ஆங்கில லிபியிலும் தேவநகரி லிபியிலும் இளவேலங்காலில் எழுதினால் தமிழ் அழிந்தாலும் அழிந்துவிடும்.
    இஸ்லாம் பெரும்பான்மை ஆனதும், இந்தி மொழியை உருதுவாக ஆக்கி அதனை அரபி போன்ற லிபியில் எழுதி சந்தோஷப்பட்டுகொள்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அதே போல, சுவனப்பிரியன் மாதிரியானவர்கள் கூட நீங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இனி தமிழை அரபி எழுத்தில் எழுத ஆரம்பிக்க பழக வேண்டியதுதான். (இப்போ சுவனப்பிரியனை கையிலயே பிடிக்க முடியாது.. காப்பி பேஸ்ட் போட்டு தொலைச்சிடுவார் தொலைச்சி)

    1. Avatar
      Kavya says:

      //ரயில் வண்டி நிலையத்துப் பலகை அஃது எந்தவூர் என்பதைத் தெரிவிக்கவே. இளவேலங்கால் ரயில் வண்டி நிலையத்துக்கு வருவோரில் எத்தனை ஹிந்தி பேசுவோர்? ஆங்கு ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்தென்ன பயன்?”

      அதாவது தமிழ்நாட்டினரை தவிர வேறு யாரும் இளவேலங்கால் ரயில் வண்டி நிலையத்துக்கு வர வேண்டிய தேவை இல்லை என்கிறீர்களா?
      அவற்றில் உலகத்தில் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளக்கூடிய ரோமன்லிபியிலும் , இந்தியாவில் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ளக்கூடிய தேவநகரி லிபியிலும் இருந்தால் தமிழ் அழிந்துவிடுமா
      //

      தமிழ்நாட்டினரைத்தவிர பிறர் அச்சிறிய ரயில் வண்டி நிலையத்தில் இறங்குவதில்லை. விருதுநகருக்கு அடுத்துவருவது. விரைவு வண்டிகள் நில்லா. ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் மெது வண்டிகள் மட்டுமே நிற்கும். எனவே பிறர் வரக்கூடாதென்பதில்லை; வருவதில்லையென்பதே உண்மை. பின்னே அங்கு எதற்கு ஆங்கிலமும் ஹிந்தியும்? வெறும் தமிழ் போதும். சரி. உத்தரபிரதேசத்தில் ஏன் ஹிந்தியும் ஆங்கிலமும் ரயில் வண்டி நிலையங்களில்? அங்கு தமிழ் பேசமட்டும் தெரிந்தோர் போகக்கூடாதா?

      பிறமொழி அவசியத்தின் பொருட்டே வைக்கப்படவேண்டும். பட்டி தொட்டியெல்லாம் ஹிந்தியையும் ஆங்கிலத்தையும் வைத்துப்புரட்டியெடுத்தால், தமிழ் அழியத்தான் செய்யும். அல்லது உருத்தெரியாமல் சிதைந்து விடும். ஏற்கனவே சிதைந்து விட்டது. சென்னையில் ஒரு பள்ளிக்குழந்தையுடன் பேசிப்பாருங்கள் தெரியும்.

  26. Avatar
    மலர்மன்னன் says:

    ரூபாத் தாளில் தலைப்பில் முதல் வரியாக ஹிந்தியில் ஃபாரதிய ரிசர்வ் பைங்க் என்று போட்டுவிட்டு அதன் கீழ்தான் ஆங்கிலத்திலும் அதை எழுதிவிட்டு, தஸ் ருப்யே, பீஸ் ருப்யே, ஏக் ஸெள ருப்யே என்றெல்லாம் மதிப்புக்கு ஏற்பப் பிரதானமாக எழுதப்படுகிறது. பின்புறத்தில்தான் நம் நாட்டின் பிற முக்கிய மொழிகள் மிகச் சிறியனவாக எழுதப்பட்டுள்ளன. ஆகவே ஹிந்தியை வேம்பென வெறுப்பவர்கள், ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மட்டோம் என முழங்குபவர்கள் ரூபா நோட்டுகளைச் சீந்தவே கூடாது! செய்வார்களா?
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      குலக்கல்வித்திட்டம் நானறிந்ததன்று. அதை ஏற்கனவே, “அத்திட்டத்தின் நிட்டிகிரிட்டிகளை இங்கு நான் வாதிக்கவில்லை” யென்றுசொல்லிவிட்டேன். நிட்டிகிரிட்டிகளென்றால் அதன் நெளிவுசுழிவுகளையென்று பொருள்.

      இங்கே நான் சொன்னது:

      அத்திட்டம் ஆரால் எதிர்க்கப்பட்டது? வெறும் கழகத்தினர்களால் மட்டுமா? அல்லது ஒட்டுமொத்த தமிழ்மக்களுமா?

      எந்ததெந்த கட்சிகள் எதிர்த்தன? காமராஜரும் எதிர்த்தாராமே?

      கழகங்கள் மட்டுமே எதிர்த்தால் அத்திட்டம் அவர்கள் சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டது எனலாம‌; அல்லது, அதைபயன்படுத்தி ராஜாஜியை வெளியேற்ற முயன்றார்கள். அச்சூழ்ச்சி வெற்றிபெற்றதா தோல்வியா?

      “அது சூழ்ச்சிமட்டுமே; ;பிறமக்களின் ஆதரவு இருந்தது!” என்றால், ஏன் ராஜாஜி அதன்பிற்கு முதலமைச்சராக முடியவில்லை?

      “பிறமக்கள் விரும்பினர் ஆனால் திமுக அவர்களை சிந்திகக விடாமல் தடுத்தார்கள்” என்றால், அத்திட்டம் நன்று என்றுதானே பொருள்? இன்று ஏன் அத்திட்டத்தை நாம் செயல்படுத்த ஜெயலலிதாவிடம் கேட்கக்கூடாது?

      இவைதான் நான் எழுப்பிய கேள்விகள்.

      மேலே எழுப்பிய கேள்விகளிலிருந்து சில வெளித்தேற்றஙகள்.

      திட்டம் விவாதிக்கப்படவேயில்லை.

      ராஜாஜியின் தலித்துகளுக்குச் செய்த தொண்டோ, அன்னாரின் தனிப்பட்ட குணங்களோ விமர்சனம் செய்யப்படவில்லை.

      ராஜாஜி தன் திட்டம் மக்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பைப்பெற வேண்டும் என்பதை முன்கூட்டியே அறிவதில் தவறிவிட்டார். ஒரு அரசியல்வாதிக்கு அப்படி அறியும் குணம் தேவை. (Anticipation is a sterling quality in a successful poltician. The anticipation helps him prevent from falling into unpopularity and losing his poltical control. Commonly it is called ‘to feel the pulse of the people”. Rajaji had failed to feel the pulse of Tamil masses)

      அத்திட்டத்தை எதிர்த்து வைக்கப்பட்ட பிரச்சாரத்தை ராஜாஜியால் முறியடிக்கமுடியவில்லை. காரணம் அவருக்குப்போதிய ஆதரவு இல்லை. Further, the propoganda was that Rajaji is a hard core brahmanan associated with all the sterotyped negative qualities of a Brahmanan; Lo and Behold! One such qualility is getting evidenced in his effort to bring back this Hereditary Education Plan which is nothing but a disguise to bring back Varnashradharma, a dharam which benefited only his own caste people to the disability and disadvantage of all other castes of Tamil society! Beware of him! He is a wily Brahmanan! குல்லுக பட்டர்!His plan is to help his own caste; and put the whole TN under their control !!. A great propoganda and no wonder, it was a roaring success!!)

      இவைகள்தான் நான் எழுதியவை.

    2. Avatar
      Kavya says:

      எழுதியதையே எழுத வேண்டியது என் தெய்வீகக்கடமை போலும் !

      உருபாத்தாளில் முன்புறத்தில் ஹிந்தி இருந்தாலென்ன; பின்புறத்திலிருந்தாலென்ன?
      அஃது இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான பணத்தாள்.

      இள‌வேல‌ங்காலோ, சோழ‌வ‌ந்தானோ, த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டுமே இற‌ங்கி ஏறும் ர‌யில் வ‌ண்டி நிலைய‌ங்க‌ள். அங்கே ஹிந்தியில் ப‌ல‌கை ஏன் வேண்டுமென‌பதுதான் என் கேள்வி. அப்ப‌ல‌கைக‌ளில் ஹிந்தி எழுத‌ப்ப‌ட்டால், அத‌ன் பெய‌ர் திணிப்பு. வேறென்ன‌ பெய‌ர் கொடுப்ப‌து. என‌க்கு சாப்பாடு போடுகிறீர்க‌ள். என‌க்கு அசைவ‌ம் பிடிக்காது. அசைவ‌த்தையே என் விருப்ப‌த்தையும் மீறி கொண்டுவைக்கிறீர்க‌ள். திணிப்புத்தானே?

      ஹிந்தி வேம்பாக‌ வெறுக்க‌ப்ப‌ட‌வில்லை. ஹிந்தி திணிக்க‌ப்பட்டதாலே எதிர்க்க‌ப்ப‌ட்ட‌து.

  27. Avatar
    smitha says:

    Kavya,

    If u indeed feel strongly that the Plan was good and mischievously made to look bad, now is the time for Jeyalalitha to revive it.

    On one hand, you say that we should not compare 1957 & 2012. What is applicable then may/may not be applicable today.

    Then you ask why can’t JJ implement kula kalvi now?

    Why this confusion?

    1 point. Whether U like it or not, kula kalvi is there everywhere. Doctors’s sons become doctors, similar with engineers, actors, singers etc.,

    1. Avatar
      Kavya says:

      A propoganda s abroad orchestrated by ppl like you that the Plan was indeed good and thought in good faith in the larger interests of all ppl. And the enemies were against it for their own political gains. There was massive support to the Plan from the ppl.

      In the above context, I said, if it was good then, it is good now. Because the same society exists. Lets go and bring it back esp. when our own caste leader is the omnipotent leader of Tamils.

      Clear?

  28. Avatar
    Kavya says:

    தமிழ்நாடு வக்கீலகள் நல சேமிப்பு நிதி (Tamilnadu Advocates Welfare Fund Rs. 10. Your petition will be invalid and wont be accepted in the Registry w/o that stamp) என்பதுதான் அத்தபால் வில்லை. அqது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. ஏன் தமிழில் இல்லை என்பதற்கு சொன்னார்: ஆங்கிலமே இன்றும் நீதிமன்ற மொழி.

    போனவாரம் மதுரையில் வக்கீல்கள் ஒரு நாள் போராட்டம் நடாத்தினார்கள். தமிழை நீதிமன்ற ஆட்சிமொழியாக்குக.

    அரசு குறைந்தது சிறு நீதிமன்றங்களில் தமிழை மட்டுமே நீதிமன்ற மொழியாக்கலாம்.

    அதற்கும் ஒரு போராட்டம் தேவைப்படும். அதையும் ஏதாவது ஒரு திராவிட கட்சி செய்து தொலக்கும். அப்போதும் பலர் அதைக்கிண்டலடிப்பார்கள் நிச்சயமாக.

    இது தமிழுக்கு விதிக்கப்பட்ட தண்டனை. தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட்டம். தமிழர்கள் நடாத்துகிறார்களாம். ஆரை எதிர்த்து? அடடே தமிழர்களை எதிர்த்தல்லவா? நல்ல தமாசா கீது !

    தமிழினி மெல்லச்சாகும் என்றான் ஒரு பேதை. அவன் பேதையா? அறிவாளியா?

  29. Avatar
    suvanappiriyan says:

    திரு வீரன்!

    //இஸ்லாம் பெரும்பான்மை ஆனதும், இந்தி மொழியை உருதுவாக ஆக்கி அதனை அரபி போன்ற லிபியில் எழுதி சந்தோஷப்பட்டுகொள்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். அதே போல, சுவனப்பிரியன் மாதிரியானவர்கள் கூட நீங்களும் சேர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இனி தமிழை அரபி எழுத்தில் எழுத ஆரம்பிக்க பழக வேண்டியதுதான். (இப்போ சுவனப்பிரியனை கையிலயே பிடிக்க முடியாது.. காப்பி பேஸ்ட் போட்டு தொலைச்சிடுவார் தொலைச்சி)//

    மொழியை பொறுத்த வரை ஒரு பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். எனது தாய் மொழி தமிழை நேசிக்கிறேன். அதை எவரும் பேசினால் கேட்டு இன்புறுகிறேன். அதே சமயம் உலக மொழிகளையும் நேசிக்கிறேன். நமது இந்தியாவில் பரவலாக பேசப்படும் இந்தி மொழியையும் நேசிக்கிறேன். உலக மக்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலத்தையும் நேசிக்கிறேன். உலக ஒருமைப்பாட்டுக்காக இறைவனை வணங்கும் போது மட்டும் அரபியில் ஓதுவதையும் நேசிக்கிறேன். இப்படி அனைத்தையும் ஒரே தரத்தில் வைத்து பாவித்தால் வேற்றுமை வராதல்லவா?

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.’
    குர்ஆன் 14:4

    இதன் மூலம் முல மொழியான தமிழுக்கும் ஒரு வேதமும் தூதரும் வந்திருக்கிறார். எனவே உலக மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே என்பதால் அனைத்துமே தேவ மொழிகளே! ஆனால் இது உயர்ந்தது: இது தாழ்ந்தது என்று இங்கும் வர்ணாசிரமத்தைக் கொண்டு வரும்போதுதான் பிரச்னையாகிறது.

  30. Avatar
    punaipeyaril says:

    எது எப்படியாயினும் ஹிந்தி எழுத்தின் மீது தார் பூசியதை சின்னப்புள்ளத்தனமானது என்று ம,ம சொல்வது கண்டனத்துக்குறியது. தமிழ் நமது அடையாளம். வடநாட்டில் எத்துனை பேர், பாரதி, வ.உசி, பற்றி தெரிந்துள்ளார்கள். எத்துனை பேர் “சிந்து நதியின்… “ பாட்டை கேட்டுள்ளார்கள்..? எத்தனை பிள்ளைகளுக்கு கக்கன், காமராஜர், பாரதி, என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது..? எத்துனை பேருக்கு திருவள்ளுவர் யார் என்று தெரியும்…? ஹிந்தி படிக்காமல் விட்டதால் பெரிய பாதிப்பு கிடையாது… ஆங்கிலம் படிக்காமல் விட்டிருந்தால் தான் நாசமாகியிருப்போம்.. கருணாநிதி கயவராய் இன்று மாறியதால் ஹிந்தி எதிர்ப்பு நிலை தவறாகி விடாது.

  31. Avatar
    மலர்மன்னன் says:

    ரயில் நிலயங்களின் பலகையில் மாநில மொழி ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தியிலும் எழுத ஆரம்பித்தார்கள். இந்தச் சாதாரண விஷயம்கூடப் புரியாமல் வரிந்து வரிந்து எழுதுவதைத் திண்ணை ஆசிரியர் குழு இடம் பெறச் செய்வது குழுவின் நகைச் சுவை உணர்த்துகிறது. நகைச்சுவையே ஆனாலும் திகட்டும் அளவுக்குப்போய்விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு திண்ணை ஆசிரியர் குழுவை வேண்டுகிறேன்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      K A V Y A says:

      //…ஹிந்தியிலும்…//

      ஹிந்தியிலும் ஏன்?

      நல்ல நகைச்சுவையத்தரும் கேள்வி. சிரித்துக்கொள்ளுங்கள். ஆனால் பதிலையும் சொல்லிவிடுங்கள். கடையம் ரயில் வண்டி நிலையத்தில் ஏன் ஹிந்தி?

      1. Avatar
        வீரன் says:

        //ஆனால் பதிலையும் சொல்லிவிடுங்கள். கடையம் ரயில் வண்டி நிலையத்தில் ஏன் ஹிந்தி?//
        உங்களது வீடு எங்கே இருக்கிறது என்று உங்கள் நண்பர்களுக்கும் சொந்தக்காரர்களுக்கும் தெரியும். இருந்தாலும் ஏன் உங்கள் வீட்டுக்கு எண் இருக்கிறது?
        அதே பதில்தான்.

        1. Avatar
          Kavya says:

          எண் வேறு; மொழி வேறு.

          எண்ணம் எவராலும் படிக்கப்படும். தமிழ்நாட்டுக்கிராமத்தாரும் படித்தப் பட்டணத்தாரும் எண்ணைப்பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

          அதே என் வீட்டுத்தெருவின் பெயரை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எழதிப்போட்டால் என்னைப்பார்க்க வரும் என் கிராமத்து உறவினரால் வாசிக்க இயலுமா?

          கடையம் என்பது ஒரு சிற்றூர். திருமதி பாரதியாரின் ஊர். அவ்வூருக்கு ஒரு ஹிந்தி பேசுபவர் வந்தால் மட்டுமே அவ்வூர் புகைவண்டிநிலையத்தில் எழுதப்பட்ட ஹிந்து அவருக்கு உதவும்.

          அங்கு ஒருவருமே வராதபோது ஹிந்திக்கு என்ன வேலை? திணிப்புத்தானே? அத்திணிப்பை எதிர்த்தலை நகைச்சுவை என்று நக்கலடிப்பதை என்ன சொல்வது?

          எங்கு அவசியமோ அங்குதான் ஹிந்தியும் ஆங்கிலமும் எழதப்படவேண்டும். மீறினால், அதை எதிர்ப்பது நன்று. எதிர்ப்பாளர்கள் போற்றப்படவேண்டும்.

          வீரன், சீனப்பாஷையில் உங்கள் தெரிப்பெயரை எழுதிப்போட்டால் என்ன நினைப்பீர்கள்? எழுதியவன் பைத்தியக்காரன்; அல்லது திமிர்பிடித்தவன் அவன் கொட்டத்தை அடக்கவேண்டுமென்றுதானே?

  32. Avatar
    மலர்மன்னன் says:

    ரயில் நிலையப் பலகைகளீல் ஹிந்தி எழுத்துகள் மீது தார்பூசி அசிங்கப்படுத்துவது பெரியபிள்ளைத்தனம் என்றால் ஹிந்தி எழுத்துகள் அகற்றப்படும்வரை தொடர்ந்து தார் பூசிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே?
    -மலர்மன்னன

    1. Avatar
      punaipeyaril says:

      நக்கலு…? முடியலையய்யா… எங்களின் முன்னோர்கள் பாதியில் விட்டு, தாய் மொழியால் கல்வி எனும் நிலைப்பாட்டை ,ஆங்கிலத்துடன் எடுக்காமல் வெறுமனே வறட்டு வார்த்தை ஜாலத்துடன், மொழி அழகியலுடன் நின்றதால் வந்த வினை. நாம் தயங்கிய போது, பல தலைமுறைகள் முறையற்று அரசியல், ஐ ஏ எஸ் பரீட்சை என்று கோல்மால் புரிந்து வடக்கத்தியர்கள் இந்தியாவை கைப்பற்றினார்கள். எனது உலகளாவிய அனுபவத்தில் எல்லா ஊரில் தாய்மொழி, ஆங்கிலத்துடன் இணைந்தே கொண்டாடப்படுகிறது. இங்கு தான், இலக்கிய வளமோ , அறிவியல் கலைக்களஞ்சியமோ, இல்லை ஆதர்ஷ மனிதர்க்ளோ பேசாத ஹிந்தி இருக்கிறது. ஹிந்தி பேசத் தெரியாவிட்டால் இந்தியன் இல்லையாம்…! நாய்கள்… ஒரு குஜராத்தியும், ஒரு பெங்காலியும் முன்னெடுத்த மாதிரி ஹிந்திக்காரன் எவன் முன்னெடுத்தான். இவ்வளவு பேசும் மம…. ஹிந்திக்காரன் புத்தகங்களில் பாரதியும், காமராஜரும், வ உ சியும் இல்லாதது ஏன்..? எப்படியோ சி பி எஸ் சி முறையில் ஹிந்தியை திணிக்க முயன்ற ம.அரசிற்கு ஆப்பாக ஐ ஜி சி எஸ் சி வந்து விட்டது. அடுத்த தலைமுறையும் ஹிந்தியில் இருந்து காப்பாற்றப்படும். வெளிநாட்டு இந்திய விழாக்களில் போய் பாருங்கள்.. வடக்கத்தியன் தெக்கத்தியனை ஒன்றாக பார்ப்பதில்லை… சாப்பாட்டால், துணியால், மொழியால் , நிறத்தால் அவர் நாமில்லை. பிரஞ்சு படிக்காமல் க்யூபக்கில் இருக்க முடியுமா…? அது போல் தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் இருக்க முடியா சூழல் வர வேண்டும். மொழியால் திமுக கொள்ளையடித்ததற்கு நாம் ஏன் மொழியை வெறுக்க வேண்டும்…? மன்மோகன், லல்லு, முலாயம், மாயாவதி என்ன புத்தர்களா…? மம.. பேசாமல் இல்லா கடவுளுக்கு துதிபாடி நிம்மதி என்ற மாயைக்கு அலையட்டும்…

    2. Avatar
      Kavya says:

      It s a symbolic protest. Once the meaning s caught by the target polticians, or the aim has reached its target, the protest becomes obsolete.

      Symbols, images and metaphors apply not only in religion but in politics too.

      Therefore, MM, your anger is misplaced.

  33. Avatar
    மலர்மன்னன் says:

    தமிழ்நாட்டு மக்கள் சென்றடையும் ஊரின் பெயரை ஹிந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவேன் என்றால் எப்படி? அதை எதிர்க்கும் போராட்டம் என்று வருமாயின் அப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்காமல் வேறெதை அழிப்பது? //
    இதை நகைச் சுவையென்று கருதிச் சிரிப்பதா? அல்லது பாமரத்தனம் என்று பரிதாபப்படுவதா என்று பட்டி மன்றம் நடைபெற வேண்டுமா?
    -மலர்மன்னன்

  34. Avatar
    Kavya says:

    நகைச்சுவை என்று கருதி சிரித்துவிடுங்கள். உடலுக்கு நல்லது.

  35. Avatar
    லெட்சுமணன் says:

    //எது எப்படியாயினும் ஹிந்தி எழுத்தின் மீது தார் பூசியதை சின்னப்புள்ளத்தனமானது என்று ம,ம சொல்வது கண்டனத்துக்குறியது.//

    ம.ம எங்கே அப்படி சொல்லி இருக்கிறார் என்று விளக்கினால் நன்றாக இருக்கும்?

    1. Avatar
      K A V Y A says:

      மலர்மன்னன் ஹிந்தியைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஹிந்தி திணிக்கப்பட்டது என்றால் அதை நகைச்சுவைப் பேச்சென்கிறார். சிரிப்பு வருது…சிரிப்பு வருத் என்கிறார். திண்ணை ஆசிர்யர்கள் நையாண்டி தர்பார் நடாத்திக்கொண்டிருக்கிறார் என்று திரும்பத்திரும்ப எழுதுகிறார். தமிழ்நாட்டில் ஹிந்தியை அழித்ததை ‘பெரிய பிள்ளைத்தனமா?’ என்று கேள்வி எழுப்புகிறார். இதிலிருந்து அவர் என்ன சொல்லவருகிறார்? ஹிந்தி எதிர்ப்பு போராட்டமே சின்னபிள்ளைத்தனம் என்றுதானே? ஆக, இலட்சுமணன். எதையும் நேராகத்தான் சொல்லவேண்டுமென்பது அவசியமில்லை. ‘பெரிய பிள்ளைத்தனாமா? என்றெழுதியதிலிருந்து தொக்கி நிற்பது, அது சின்னபிள்ளைத்தனமே என்பதாகும். இலை மறைகாயாகவும் சொல்லலாம். உண்மையில் அப்படிச்சொல்வதே ரொம்ப எஃபெக்டிவ். As I understand, he is a Tamil journalist.

  36. Avatar
    லெட்சுமணன் says:

    கட்டுரையில் எங்குமே ”சின்னப்புள்ளத்தனமானது” என்று காணப்படவில்லை. பு.பெ என்பவர் ”சின்னப்புள்ளத்தனமானது” என்று முதலில் சொன்ன பிறகே ம.ம
    *//ரயில் நிலையப் பலகைகளீல் ஹிந்தி எழுத்துகள் மீது தார்பூசி அசிங்கப்படுத்துவது பெரியபிள்ளைத்தனம் என்றால் ஹிந்தி எழுத்துகள் அகற்றப்படும்வரை தொடர்ந்து தார் பூசிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே?*//
    என்று பதில் சொல்கிறார். ம.ம தான் சொல்லாத சொன்றை அடுத்தவர் தான் சொன்னதாக சொல்லும்போது அதற்கு ஏன் பதில் சொல்கிறார் என்று அவர் தான் சொல்ல வேண்டும்.

    *//தமிழ்நாட்டு மக்கள் சென்றடையும் ஊரின் பெயரை ஹிந்தியிலும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதுவேன் என்றால் எப்படி? அதை எதிர்க்கும் போராட்டம் என்று வருமாயின் அப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்காமல் வேறெதை அழிப்பது? //

    இந்த கருத்துக்கு தான் ”இதை நகைச் சுவையென்று கருதிச் சிரிப்பதா? அல்லது பாமரத்தனம் என்று பரிதாபப்படுவதா” என்கிறார்.

    3(மூன்று) மொழிகளும் இருந்தன என்று தான் 300 (முந்நூறு) முறை சொல்லிவிட்டாரே? என்னதாங்க பிரச்சினை?

    பி.கு: என்னை ஹிந்தி ஆதரவாளர், ம.ம ஆதரவாளர் என்ற முத்திரை எல்லாம் தயவு செய்து குத்திவிடாதீர்கள்.

    1. Avatar
      Kavya says:

      என்ன பிரச்சினையென்றால் புகை வண்டி நிலையங்களில் எழதப்பட்ட ஹிந்திப்பெயரை அழிக்கும் போராட்டத்தை அவர் நகையாடுகிறார். அது தவறென்கிறார். அவர் நக்கலகள் பல பதில்களில். ஒன்றன்று. எப்படி ஒரு சிற்றூர் நிலையத்தில் ஹிந்தி தேவை? நம் கிராமங்களில் உள்ளவர்களுக்கு ஏன் ஹிந்தி என்ற கேள்விக்கு அவர் பதிலே சொல்லாமல் கேள்வி எழுப்புவரை விதூசகன் என்கிறார். ஏன் பதில் சொல்லவில்லை.

      பெரிய பிள்ளைத்தனமா? என்று கேள்வியெழுப்பியபின்னர்தான் அவர் எங்கு அவர் சிறுபிள்ளைத்தனமென்று சொன்னார் என்ற வக்காலத்து திண்ணையில் உஙகளால் சமர்ப்பிக்கப்படுகிறது.

      அந்த‌ வக்காலத்துக்குப் பதில்: பெரியபிள்ளைத்தனமா என்ற நக்கல் கேள்வியில் அது சிறுபிள்ளைத்தனமே என்ற உறுதி தெரிகிறது. இதைத் தெரிந்து கொள்ள பெரிய அறிவொன்றும் தேவையில்லை.

      ஆனால் நீங்கள் கேட்கிறீர்களே? என்ன பிரச்சினை உங்களுக்கு ?

      நீங்கள் ஹிந்தி ஆதரவாளராயிருந்தாலும், தமிழ் வெறியராக இருந்தாலும் எவருக்கும் எந்த‌ கவலையில்லை. மக்களுக்கு அவர்கள் புரிந்த பாஷை வேண்டும். ஹிந்தி பேசும் கிராமத்தில் தமிழைக்கொண்டு திணித்தாலும் என் கொள்கை ஒன்றே. எதிர்ப்போம்.

      இப்போது நான் ஹிந்தி ஆதரவளானா? தமிழ் ஆதரளவானா?

    2. Avatar
      Kavya says:

      //3(மூன்று) மொழிகளும் இருந்தன என்று தான் 300 (முந்நூறு) முறை சொல்லிவிட்டாரே? என்னதாங்க பிரச்சினை//

      ஏன் ஹிந்தியிலும்? என்ற‌துதான் பிரச்சினை.

      ஏன் என்ற கேள்வியை நகைச்சுவை என்றதுதான் பிரச்சினை.

      கேள்விக்குப் பதில் சொல்லாமலே திரும்பதிரும்ப நகைச்சுவை என்றதுதான் பிரச்சினை !!

      மூன்று மொழிகளிலும் என்று சொல்லிவிட்டார் என்பது பிரச்சினையே இல்லை.

      சரியாகப்படித்து கிரஹித்து எழுதவும்.

    3. Avatar
      Paramasivam says:

      Malarmannan in his comments dated 11th Sept has described the defacing of Hindi letters in Railway Station Boards as childish act.For that comment only,I responded on that date itself.He has got the habit of quitting the arguments after writing controversial essays.So MrLakshmanan,do not worry.How can he deny his own comment?Before asking others to be honest,the author of the essay should practice honesty.Vidhura in his Vidhura neethi describes a sanyasi as one who does not have anger and who maintains his cool when others praise him or criticize him.

  37. Avatar
    மலர்மன்னன் says:

    ஸ்ரீ லட்சுமணன்,
    நான் சொல்லாதையெல்லாம் சொன்னதாகக் குறிப்பிட்டு நீள நீளமாக விமர்சிப்பதைச் சிலர் வழக்கமாகக் கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டிச் சுட்டிக் காட்டியே எனக்கு சலித்துப் போய்விட்டது. எத்தனைமுறைதான் நான் சொல்லாததை ஏன் சொன்னதாகச் சொல்கிறீர்கள் என்று நினைவூட்டுவது? இவ்வாறு நினைவூட்டியதைப் படித்த பிறகும் அவர்களில் எவரும் சம்பிரதாயமாகக் கூட வருத்தம் தெரிவிப்பதில்லையே! எதிர் வினைகள் என்ற பெயரில் திசை திருப்பல்கள்தாம் நடக்கின்றன. அவற்றுக்கு பதில் அளிக்கத் தொடங்கி நாமும் அந்தத் திருப்பபட்ட திசை வழியே செல்லும்படி ஆகிவிடுகிறது. ஆகவே, புனைப் பெயரில் அவருடைய மொழியில் எனக்கு யோசனை சொன்னாலும் அதை எனது கோணத்தில் எடுத்துக் கொள்கிறேன். இனி பதில்கள் எழுதுவதில் பொழுதை விரயம் செய்யப்போவதில்லை. திண்ணையில் மறு பிரசுரத்திற்கு அனுப்பும் எனது கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளுக்கும் எவ்விதக் கருத்தும் தெரிவிப்பதாக இல்லை. மிகக் குறைவாகவே எனக்கு உள்ள அவகாசத்தை இதைக்காட்டிலும் பயன்மிக்க பணிகளில் கவனம் செலுத்துவேன். என்னை இம்முடிவு எடுக்கத் தூண்டிய புனைப் பெயரில்லுக்கு நன்றி. நீ எழுதும் பதில்களால் பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம், ஆகவே உன் பதிலை எதிர்பார்க்கிறோம் என மின்னஞ்சல் அனுப்புவதைச் சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். என்னிடம் ஏதேனும் சந்தேகம் கேட்க விரும்புவோர் மின்னஞ்சல் மூலம் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.
    -மலர்மன்னன்

  38. Avatar
    Rajan says:

    என்னை பொறுத்த மட்டில் மூன்று மொழிகளிலும் எழுதவது ஒன்றும் தவறு இல்லை. தமிழர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ “திராவிடன்” என்ற தவறான அடையலாம் திணிக்கப்பட்டுவிட்டது. அதின் வெளிப்பாடு தான் தமிழ் நாட்டின் அணைத்து ப்றேச்சனைகளுக்கும் மறைமுகமான காரணம். தமிழ்நாடு ஒன்றும் தனி தீவல்ல. அது இந்தியாவின் கலாச்சாரத்தில் ஒரு கூறு. இதை திராவிட கழகம் ஆரம்பதிலுர்ந்தே மறுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்து, அதை மெருகேத்தி, உசுபேத்தி, கடைசியில் அதை இந்தியவிலுருந்து பிரிப்பதே இவர்களின் லாங் டெர்ம் பிளான். இது புரியாமல் இன்றும் நாம் அறிவியல் பூர்வமாக நிராகரிக்கப்பட்ட “ஆரிய படையெடுப்பு” மற்றும் “ஆரிய திராவிட” இனவாத கொள்கைகளை இன்றளவும் கொண்டுருக்கிறோம். இந்தியாவில் உள்ள அத்துணை பேறும் தங்களது தாய் மொழிக்கு பிறகு ஒரு பொது மொழியை கற்க வேண்டும். அது ஆங்கிலம் என்கிற அந்நிய மொழியாகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் சமஸ்க்ரிதமாகவோ ஹிந்தியாகவோ இருக்க கூடாதா? ஆந்திரா, கேரளா, மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் அவர்கள் ஹிந்தி மீது இவ்வளவு வெறுப்பு காட்டுவதில்லை. அவர்கள் எல்லோரும் தமிழர்களை விட தங்களது தாய் மொழியின் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்கிலம், தாய்மொழி, மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் தமிழர்களுக்கு மட்டும் இந்த மொழி வெறி?

    நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஹிந்தி மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. வட இந்தியாவிலிருந்து கூலி தொழிலாளிகள் வருகை அதிமாகி உள்ள நிலையில், அவர்களை வேலை வாங்குவதற்காக தொழில் செய்யும் தமிழர்கள் மெல்ல மெல்ல ஹிந்தியை கற்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

    1. Avatar
      K A V Y A says:

      //தமிழ்நாடு ஒன்றும் தனி தீவல்ல. அது இந்தியாவின் கலாச்சாரத்தில் ஒரு கூறு. இதை திராவிட கழகம் ஆரம்பதிலுர்ந்தே மறுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுத்து, அதை மெருகேத்தி, உசுபேத்தி, கடைசியில் அதை இந்தியவிலுருந்து பிரிப்பதே இவர்களின் லாங் டெர்ம் பிளான். ர்

      லாங் டெர்ம் பிளான் அரசியலில் போட முடியாது. Please understand that. Politicians look for immediate gains. Hindu agitation was spearheaded by politician – no doubt for immediate gain. But the success overflowed to general welfare of Tamil language which is a point of debate in all that I write here.

      இந்தியாவிலிருந்து பிரிப்பதென்று என்றால், அவர்கள் “எங்களை மொழியையும் கலாச்சாரத்தையும் நுங்கள் மொழியைத்திணித்து அழிப்பதே உங்கள் லாங் டெர்ம் பிளான்” என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? மார்க் டுல், மில்லியன் மூட்டினியில் சொல்கிறார்: ஹிந்தி 1000க்கும் மேலான இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது. Hind has gobbled up more than 1000 languages and dialects of India. உங்கள் பதிலென்ன? தமிழ் அழியக்கூடாதென்று நினைத்துச்செயல்படுவோரிடம் என்ன தவறு கண்டீர்கள்? தமிழர்களுக்கு அந்த அக்கறையில்லையென்றால் பின் ஆருக்கு? தமிழ் இல்லையென்றால் தமிழன் என்ற அடையாளம் எப்படி வரும்?
      தமிழை அழிக்க முடியாது என்ற வாதம் போலி. Rubbish.அழிக்க முடியும். ஏனென்றால் மற்ற மக்களுக்கு உள்ள தாய்மொழிப்பற்றுத் தமிழர்களுக்கு கிடையாது. வெகு இலகுவாக விலைபோவார். எனவே தமிழைக்காப்பது அரசியல்வாதியின் வேலையாகப்போய்விட்டது.
      நினவிருக்கட்டும் தென்மொழிகளில் சமசுகிருத ஆதிக்கத்தை எதிர்த்தது தமிழன் ஒருவனே. குயக்கோடனைப் பாண்டியன் அவையில் எதிர்த்தது நக்கீரனே. சங்ககாலத்திலிருந்தே சமசுகிருதமே உயர்வென்போர் எதிர்க்கப்பட்டேயிருந்திருக்கிறார்கள். (ரா. ராகவையங்கார்: சங்க காலம் கட்டுரை) அந்த எதிர்ப்பினாலே தமிழ் இன்றும் சாகாமல் பிழைத்துக்கிடைக்கிறது.

      மலையாளம், தெலுங்கு எல்லாம் சமசுகிருதத்துக்குள் அமுங்கியன எதிர்ப்பு இல்லையாதனலால். மலையாளம் தெரிந்தால் உங்களுக்குப் புரியும். Malayalam is a highly sanskritised language. Botn languages went into the hands of the Brahmins in their origins, and whose aim was not language; but bringing Vedic religion into Andhra and Kerala. So, the Brahmins wrote the Ithikasas first in the languages. Similar to the aim of missionaries.

      பார்ப்பனர்கள் சமசுகிருதத்தை தமிழில் உள்ளே கொண்டுவந்தாரகள். அதற்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இன்றும் தமிழும் மலையாளம் போலத்தான் ஆகியிருக்கும். அல்லது இருமொழிகளும் ஒன்றாகியிருக்கும். ஒரு மக்களின் உயிர்மூச்சு அவர்தம் தாய்மொழி.
      பிரபல மலையாளிகள் சொல்வதுண்டு: முதலில் நானொரு மலையாளி. பின்னர்தான் நானொரு இந்தியன அவர்களிடம் போய்: கேரளா ஒரு தீவன்று என்று சொல்லவியலுமா?
      கே பி எஸ் மேனோன் (இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறைச்செயலர் நேருவின் கீழ்) தன் சுய சரிதையில் சொல்கிறார். I am a Malayali to my finger tips. (Many Worlds)

      இப்படி எவரேனும் தமிழ்நாட்டில் சொல்லிவிட்டால், அவர்களைத் தமிழ் வெறியரென்பதேன்?

      1. Avatar
        Rajan says:

        //Malayalam is a highly sanskritised language. Botn languages went into the hands of the Brahmins in their origins, and whose aim was not language; but bringing Vedic religion into Andhra and Kerala. So, the Brahmins wrote the Ithikasas first in the languages. Similar to the aim of missionaries.//

        உங்கள் வீட்டு கழிப்பறையில் தண்ணி வரவில்லை என்றால் கூட அதற்க்கு காரணம் பிராமணர்கள் என்று சொல்வீர்கள் போலிருக்கு. முதலில் பிராமணர்களை எதிரியாக பார்க்கும் மனோபாவத்தை மாற்றிகொள்ளுங்கள். இந்த வெறியை உங்களுக்கு கற்று கொடுத்தே இந்த பாழாப்போன மிஷனரி பாதிரியார்கள் தான்.

        //பிரபல மலையாளிகள் சொல்வதுண்டு: முதலில் நானொரு மலையாளி. பின்னர்தான் நானொரு இந்தியன அவர்களிடம் போய்: கேரளா ஒரு தீவன்று என்று சொல்லவியலுமா?
        கே பி எஸ் மேனோன் (இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறைச்செயலர் நேருவின் கீழ்) தன் சுய சரிதையில் சொல்கிறார். I am a Malayali to my finger tips. (Many Worlds)

        இப்படி எவரேனும் தமிழ்நாட்டில் சொல்லிவிட்டால், அவர்களைத் தமிழ் வெறியரென்பதேன்?//

        உண்மை தான். ஆனால் எந்த மலையாளியும் தனது குடியை கெடுத்தவன் பிராமணன் தான் என்று சொல்வதே இல்லை. தமிழன் மட்டும் தான் சொல்லிகொண்டிருக்கிரன். அதே போல் எந்த மலையாளியும் “ஆரிய படையெடுப்பு” போன்ற அபத்தங்களை நம்புவதில்லை. தமிழர்கள் இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

        //Please understand that. Politicians look for immediate gains. Hindu agitation was spearheaded by politician – no doubt for immediate gain. But the success overflowed to general welfare of Tamil language which is a point of debate in all that I write here.//

        True, but that doesn’t mean that politicians are not interested in it. they look for immediate gains only to establish themselves in the throne. Once they achieve that, they start working towards their long term plans. Looks like you’ve never read the role of missionaries in dividing nations across the world.

        //Hind has gobbled up more than 1000 languages and dialects of India//

        ஆங்கிலம் உங்கள் கண் முன்னாடியே தமிழை விழுங்கி கொண்டிருக்கிறதே, இது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் ஹிந்தியை விட ஆங்கிலத்துக்கே அதிகம் பொருந்தும்.

    2. Avatar
      ananthan says:

      இந்தியாவின் பொதுமொழியாக சமஸ்கிருதம் இருந்தால் என்ன குறையென்று ராஜன் கேட்கிறார். காதில் உலோகத்தை உருக்கி விடமாட்டார்களா ராஜன்? அப்படியே இந்திய அரசியல் சட்டம் மனுஸ்மிருதியாக இருந்தால் என்ன குறையென்று கேட்டு விடுங்கள் ராஜன். இந்தியாவின் மிகப் பெரிய தேசிய இனமான தமிழர்களுக்கு மொழிப்பற்று அதிகமாக இருப்பதை ராஜன்களும் மலர்மன்னன்களும் குறையாக நினைத்த பிறகு மற்றவர்கள் ஏன் இதை மறுக்க வேண்டும்.

      1. Avatar
        Rajan says:

        அனந்தன்,

        //இந்தியாவின் மிகப் பெரிய தேசிய இனமான தமிழர்களுக்கு மொழிப்பற்று அதிகமாக இருப்பதை ராஜன்களும் மலர்மன்னன்களும் குறையாக நினைத்த பிறகு மற்றவர்கள் ஏன் இதை மறுக்க வேண்டும்//

        இங்கே தான் ப்றேச்சனையே. தமிழனை ஒரு தனி இனமாக கருதுவதே ஒரு மிகப்பெரிய முட்ட்டள்தனம். இந்தியாவில் எந்த மாநிலத்தவரும் தனி இனத்தை சேர்ந்தவர் அல்லர். எல்லோரும் ஒரே இனம் தான். இது ஜெனெடிக் ஸ்டடீஸ் மூலம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்டுவிட்டது. இந்த இனவாத கொள்கையை வைத்து கொண்டு உங்களை போன்றவர்கள் இனி காலம் கடத்த முடியாது. இது திராவிட கழகதவர்களுக்கும் நன்றாக தெரியும். அதனால் தான் அவர்கள், இப்போதெல்லாம் ஆரிய திராவிட இனவாதத்தை பற்றி வாயே திரபதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் நடத்த இவர்களுக்கு ஒரு தனி அடையாளம் தேவைபடுகிறது. அந்த அடையாளம் இவர்களுக்கு பிராமணர்கள் எதிர்ப்பு மற்றும் சமஸ்க்ரித்த எதிர்ப்பு போன்றவைகளை வைத்தே கிடைக்கிறது.

        சமஸ்க்ரிதம் ஒரு போதும் தமிழின் மீது ஆதிக்கம் செலிதியதே இல்லை. தமிழ் வெறியர்கள் தான் அதை அப்படி சிதரிக்கிரர்கள். முதலில் திராவிடன் என்கிற போலி அடையாளத்திலிருந்து வெளியே வாருங்கள், பிறகு மனுச்ம்ரிதியை பற்றி பேசலாம். நீங்கள் சத்தியமாக மனுச்ம்ரிதியை நேரடியாக ஒரு வார்த்தை கூட படித்திருக்க மாட்டீர்கள் என்று நன்றாக தெரியும். அதனால் தான் சொல்கிறேன், முதலில் ஒரு விஷயத்தை விமர்சிப்பதற்கு முன்பு அதை படிக்க வேண்டும். சும்மா திராவிட அன்பர்கள் சொல்வதை அப்படியே ஒத்து ஊதி ஒரு ப்ரோயோஜனமும் இல்லை.

  39. Avatar
    Rajan says:

    //ஏன் ஹிந்தியிலும்? என்ற‌துதான் பிரச்சினை.//

    நீங்கள் கேட்கும் த்வநிலேயே உங்கள் ஹிந்தி எதுர்ப்பு தெரிகிறது. ஹிந்தியில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று சொன்னால் அது தவறு, நான் ஒப்பு கொள்கிறேன். ஹிந்தியிலும் தான் எழுதி விட்டு போகட்டுமே, அதி உங்களுக்கு என்ன பிரெச்சனை?

  40. Avatar
    Bala says:

    இந்தி படிக்காமல் போனால் வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும். வடநாட்டுப்பக்கம் போனால் பெரும் பாதிப்பாக இருக்கும் அதனால் இந்தி படிக்கவேண்டியது மிகவும் அவசியம் என்றுதான் பல காலமும் இந்தி ஆதரவாளர்கள் கூறிவந்தார்கள்\ வருகிறார்கள். இப்போது முதன்முறையாக, வடநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களை வேலை வாங்குவதற்கு இந்தி தேவைப்படுகிறது என்று ஒருத்தர் எழுதுகிறார். இதைப் படித்ததும் என் தலை உண்மையிலேயே சுற்றியது.

    ராஜன் கூற்றுப்படி பார்த்தால், வடநாட்டுக்கு வேலை செய்யப்போன தமிழர்களை வேலை வாங்க வடநாட்டவர்கள்தாம் தமிழ் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். நம் தமிழர்கள் இந்தி அறிவோடு அங்கு சென்றிருக்க\செல்ல வேண்டியது இல்லை; எனவே இந்தி வேண்டும் என்னும் வாதமே அர்த்தமற்றதாகிறது.
    *****
    மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவான வாதங்களைக் கேட்கும்போதெல்லாம், பெரிதும் சிறிதுமாகத் தான் வளர்க்கும் இரண்டு பூனைகளும் எளிதாக வந்து செல்லக் கதவில் இரண்டு ஓட்டைகளைப் போடுமாறு சொன்ன ஐன்ஸ்டினைப் பார்த்துச் சிரித்த வேலையாள் சொன்ன பதில்தான் எப்போதும் என் நினைவுக்கு வருகிறது.

    ‘இரண்டும் வந்து செல்ல ஒரு பெரிய ஓட்டையே போதும்’

    உலகத்தோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் வேண்டும். இந்தியர்களுடன் தொடர்புகொள்ள இந்தி வேண்டும்.

    அப்படியானால் மற்ற இந்தியர்களுக்கு உலகத் தொடர்பு வேண்டாமா? அவர்களுக்கு ஆங்கிலம் வேண்டாமா? தமிழ்நாட்டைத் தவிர மற்ற இந்தியர்களுக்கு ஆங்கிலம் தெரியாதா அல்லது தெரிந்துகொள்ளக்கூடாதா? அவர்களுக்கு ஆங்கிலம் வேண்டும் என்றால் அதே ஆங்கிலத்தில் நாமும் அவர்களுடன் தொடர்புகொள்ளலாமே நடுவில் ஏன் இந்தி?
    *****
    சட்டத்தின் முன் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்றால், ஒரு பகுதியைச் சேர்ந்த மக்களின் மொழிக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது பெரும் அநீதி. இந்த அநீதியின் அடையாளமாக நிற்கும் இந்தியை ஏற்க எந்த மானமுள்ள மனிதனின் மனமும் ஒப்பாது.

    1. Avatar
      Rajan says:

      //உலகத்தோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் வேண்டும்.//

      இதுவே முதலில் அபத்தமானது. உலகத்தில் வெகு சில நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் முழுமையாக தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். பிரான்ஸ், ஜப்பான், சீனா, கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில், இன்றளவும் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. முதலில் ஆங்கிலம் தெரிந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் பிழைத்து கொள்ளலாம் என்கிற சிந்தனையே தவறு.

  41. Avatar
    லெட்சுமணன் says:

    காவ்யா அவர்களே,

    *//”தமிழ்நாட்டு மக்கள் சென்றடையும் ஊரின் பெயரை ஹிந்தியிலும் ஆங்கிலத்தில் ””மட்டுமே”” எழுதுவேன் என்றால் எப்படி?”*//

    அந்த “மட்டுமே”ங்கிற வார்த்தையைத்தான் அவர் நகைப்புக்குரியது என்கிறார். நானும் தமிழிலும் இருக்கும்னு சொல்லிட்டாரேங்கன்னு சொன்னா?

    ”சரியாகப்படித்து கிரஹித்து எழுதவும்” அப்படின்னு திருப்பி அடிக்கிறீங்க.அவர் சொன்னதை நீங்கள் திசை திருப்புகிறீர்கள்.
    நானா சரியாக படிக்கவில்லை. “You are trying to provoke Malarmannan”. எப்படியோ மலர்மன்னன் எழுதுவதை நிறுத்தீட்டீங்க. அடுத்தது யார்?

    என்னவோ போங்க? இப்படியே நீங்க போட்டு தாக்குனா கடைசியா நீங்களே கட்டுரை எழுதி பின்னூட்டமும் நீங்களே போட்டுக்க வேண்டியது தான்.

    ஒரு சினிமால(யூத்?) விஜய் சொல்லுவாரு “அழுக கண்ணு இருக்கும், தொடைக்க கை இருக்காதுன்னு” அதான் நினைவுக்கு வருது.

    “வாதம் செய்யலாம். விதண்டாவாதம் செய்து வெற்றியும் பெறலாம். ஆனால் மனிதர்களை இழந்து விடுவோம்.”

    உங்கள் வாதத்தின் வெற்றி முக்கியமா, சக மனிதர்கள் முக்கியமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    1. Avatar
      K A V Y A says:

      விவாதம் மலர்மன்னனை விட்டு எப்போதே அகன்று விட்டது. பற்பல விடயங்கள், கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் நீங்களோ தனிநபருக்காக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இதற்காகவா விவாத அரங்கு?

  42. Avatar
    லெட்சுமணன் says:

    திரு.மலர்மன்னன் ஐயா,

    தாங்கள் அளிக்கும் விளக்கங்கள் என் மூலமாகவா ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதில் எனக்கு வருத்தமே.

    தங்களில் மின்னஞ்சல் தரப்படவில்லையே?

  43. Avatar
    K A V Y A says:

    அதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது.
    தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு ஏன் ஹிந்தி? மணி ஆர்டர் தாளின் ஏன் ஹிந்தி? ரயில் முன்பதிவு சீட்டுக்களின் ஏன் ஹிந்தி? எவரேனும் அதைப்படிக்க முடியுமா? நிரப்ப முடியுமா? இருந்துவிட்டுப்போகட்டுமே என்றால் அதை அச்சடிக்க ஆகும் செலவு எத்தனை எத்தனை? ஏன் இந்த பணம் விரயம்? அவ்விரயம் மக்கட்பணத்திலிருந்துதானே? உங்கள் பணமும் அதில் இருக்கிறதல்லவா? அப்போது உங்கள் பிரச்சினையும்தானே?
    இருந்துவிட்டுப்போகட்டும் என்று உதவாவது ஒரு பொருளை வைத்து உங்கள் வீட்டை நிரப்புவீர்களா இராஜன்? If I force a useless thing inside your house, wont u object to it? Should I say u r unfair to that thing?

    1. Avatar
      Rajan says:

      //அதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறது.
      தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு ஏன் ஹிந்தி? மணி ஆர்டர் தாளின் ஏன் ஹிந்தி? ரயில் முன்பதிவு சீட்டுக்களின் ஏன் ஹிந்தி? எவரேனும் அதைப்படிக்க முடியுமா? நிரப்ப முடியுமா? இருந்துவிட்டுப்போகட்டுமே என்றால் அதை அச்சடிக்க ஆகும் செலவு எத்தனை எத்தனை? ஏன் இந்த பணம் விரயம்? அவ்விரயம் மக்கட்பணத்திலிருந்துதானே? உங்கள் பணமும் அதில் இருக்கிறதல்லவா? அப்போது உங்கள் பிரச்சினையும்தானே?
      இருந்துவிட்டுப்போகட்டும் என்று உதவாவது ஒரு பொருளை வைத்து உங்கள் வீட்டை நிரப்புவீர்களா இராஜன்? If I force a useless thing inside your house, wont u object to it? Should I say u r unfair to that thing?//

      இதை படித்தப்பின் எனக்கு சிறுப்பு தான் வருகிறது. தமிழ்நாட்டில் படிப்பரவில்லாத மக்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், அதற்காக பயண சீட்டை அச்சடிபதையே நிறுத்தி விடலாமா? அமெரிக்க போன்ற நாடுகளில் கூட ஒவ்வொரு அரசாங்க சம்மந்த பட்ட விஷயமும் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் விஎத்னாமீஸ் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்படுகின்றன. அங்கே யாரும் அதை திணிப்பு என்று கருதவில்லை. ருபாய் நோட்டுகளிலும் கூடத்தான் அத்துணை மொழிகளும் இருக்கின்றன, விட்டால் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவரவர் மொழிகளில் மட்டும் தனித்தனியே நோட்டு அச்சடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது.

      என் கேள்வியே இது தான். ஹிந்தி இருக்க கூடாது என்று சொல்லும் நீங்கள் ஏன் ஆங்கிலத்தை மட்டும் எர்க்குரீர்கள்? மனி ஆர்தர் தாளில் உள்ள ஆங்கிலம் மாட்டும் நமது கிராமத்து வாசிகளுக்கு புரிந்து விடவா போகிறது? அப்பொழுது அதையும் சேர்த்து எதுற்பதல்லவா நியாயம்?

      1. Avatar
        K A V Y A says:

        ஏற்கனவே உருபாத் தாளைப்பற்றி எழுதிவிட்டேன். அது ஒரு நாட்டின் கரன்ஸி. எந்த மூளையில் எவரிடம் போய்ச்சேரும் அவர் எம்மொழி பேசுவார் என்று தெரியாது. எனவே அங்கு தாய்மொழி மட்டும் என்ற வரையறை செல்லாது. அனைத்து இந்திய மொழிகளும் இருக்கின்றன.

        மணி ஆர்டர் கண்டிப்பாகத் தமிழில்தான் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும். நகரங்களில் தமிழ்தெரியாதவர்கள் இருப்பதால், வருவதால் ஆங்கிலத்திலும் இருக்கலாம்.

        பயணச்சீட்டு தமிழில் இருந்தால் எப்படி படிக்காதவனுக்கு உதவும் என்கிறீர்களே? அவனுக்கு குறைந்தது அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியும். பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மணி ஆர்டர் அவன் செலுத்த விரும்பும்போது அதை நிரப்பாமல் செலுத்த முடியாது. அவனுக்காக பிறர் அதை நிரப்புவர். அவரும் தமிழரே. அவருக்கு எதற்கு ஆங்கிலம்? ஹிந்தி? இரண்டுமே தேவையில்லை.

        தமிழ்நாட்டில் எந்த ரயில்வே முன்பதிவு அலுவலகத்திலும் எவரேனும் முன்பதிவுச்சீட்டின் பின்புறம் ஹிந்தி வடிவத்தை நிரப்புவது கண்டதுண்டா? பின்னர் ஏன் லட்சக்கணக்கில் அச்சடித்து பணம் விரயம் பண்ண வேண்டும்? மொழி மனிதனின் உபயோகத்துக்காக. அதைப்புரிந்து கொண்டால் குழப்பத்துக்கிடமேயில்லை !

        1. Avatar
          Rajan says:

          //பயணச்சீட்டு தமிழில் இருந்தால் எப்படி படிக்காதவனுக்கு உதவும் என்கிறீர்களே? அவனுக்கு குறைந்தது அது தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியும். பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மணி ஆர்டர் அவன் செலுத்த விரும்பும்போது அதை நிரப்பாமல் செலுத்த முடியாது. அவனுக்காக பிறர் அதை நிரப்புவர். அவரும் தமிழரே. அவருக்கு எதற்கு ஆங்கிலம்? ஹிந்தி? இரண்டுமே தேவையில்லை.//

          அப்பாடா, இப்போழுதாவது ஹிந்தியை சேர்த்து ஆங்கிலத்தையும் எதிர்த்தீர்களே, அதுவரையில் சந்தோஷம். மணி ஆர்டர், ரயில்வே டிக்கெட் இவையெல்லாம் மத்திய அரசு சம்பந்தப்பட்டது. இதை நீங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவப்படுத்த முடியாது. அப்படி செய்தால் வீண் “Administrative cost” தான் விரையமாகும். நீங்கள் சொல்லுகின்ற கிராமங்களில் அங்குள்ள பஞ்சதுகளின் சமாசாரம் வேண்டுமானால் தமிழில் மட்டும் அச்சடிதுகொள்ளட்டும்.

          ஒரு விஷயம் நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பண்டைக்காலத்து இந்தியா அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு இருக்கவில்லை. கலாசார ரீதியாக தான் ஒன்றுபட்டு இருந்தது. ஆகையால், ஆங்காங்கே இருந்த மன்னர்கள், அவரவர் ராஜ்யத்துக்கு ஏற்ப விதிகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்றைய இந்தியா அப்படி இல்லை. இது அரசியல் மற்றும் பூகோள ரீதியாக ஒன்று பட்டிருக்கிறது. ஒரு நாடு, ஒன்றுப்பட்ட அரசியல் என்று ஆகிவிட்டது. அப்படி இருக்க, இங்கே சில விதிமுறைகள் பின்ப்பற்றாவிட்டால் அது தேசிய ஒருமைப்படையே பாதிக்கும். நமது தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஒரு இந்திய மொழியை இணைப்பு மொழியாக கொள்வதே உகர்ந்தது. அது எந்த இந்திய மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. அது எந்த மொழியாக இருக்கலாம் என்று வேண்டுமானால் விவாதித்து கொள்ளலாம்.

  44. Avatar
    பூவண்ணன் says:

    இன்று இந்தியாவில் ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக இருக்க காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் .ஆங்கிலத்திற்கு மாற்றாக தான் இந்தி திணிக்கப்பட்டது. உலகெங்கும் தமிழர்கள் வேலை செய்வதற்கு முக்கிய காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அங்கிலத்தை தொடர்பு மொழியாக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது தான்

    http://swaminomics.org/?p=548
    Many ceremonies recently marked the 35th death anniversary of C N Annadurai, first DMK chief minister of Tamil Nadu. He is remembered mainly for ending Congress hegemony and Brahmin supremacy in the state. But today we should see him in a new light: he saved India from Hindi imperialism, ensured the continuation of English, and so made possible the outsourcing revolution that is moving lakhs of jobs from the West to India.

    The party has (in one of two factional avatars) ruled the state ever since. Many people think South India resisted Hindi. Not really. The resistance was specifically Tamil. Former foreign minister Dinesh Singh, from Uttar Pradesh, once complained bitterly to me that Hindi would have triumphed but for Tamil Nadu.

    ரூபாயில் இந்தி இருப்பது பிரச்சினை எனபது திசை திருப்பும் முயற்சி.ஆங்கிலத்திற்கு பதில் இந்தி எனபது தான் மத்திய அரசின் குறிக்கோள்.அதை எதிர்த்தது தான் இந்தி எதிர்ப்பு போராட்டம்
    இந்தி மட்டுமே இணைப்பு மொழி என்பதை எதிர்த்து தான் போராட்டம்.இன்றும் இந்தி பேசும் மாநிலங்களின் சில தலைவர்களின் கனவு அது தான்
    இந்தி பிரசார சபை மூலமாக இந்தி படிப்பதை யாரும் எதிர்க்கவில்லை
    அனைவர் மேலும் வலுக்கட்டாயமாக திணித்து ஆங்கிலத்தை அப்புறபடுத்தி இந்தியை மட்டும் இணைப்பு மொழியாக்கும் முயற்சிகளுக்கு பலத்த அடி கொடுத்தது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தான்

    1. Avatar
      Rajan says:

      சபாஷ், அந்நிய மொழியான ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஏர்பீர்கள் ஆனால் நமது நாட்டின் சமஸ்க்ருததயோ, ஹிந்தியையோ ஏற்க மாட்டீர்கள். இந்த ஆங்கிலம் தான் இன்று தமிழையே அழித்து கொண்டிருக்கிறது என்று இன்னும் சில முட்டாள்களுக்கு புரியவே மாட்டேங்குது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஒரு இந்திய மொழியால் மட்டுமே இருக்க முடியும், ஒரு அந்நிய மொழியால் அல்ல.

  45. Avatar
    Dr.G.Johnson says:

    I am glad to inform the readers that I was an active participant in the 1965 Students Anti-Hindi Agitation organised by the DMK. I was then a student of MADRAS CHRESTIAN COLLEGE,TAMBARAM. It was the first such participation in the long history of the college. Our photo appeared in the ILLUSTRATED WEEKLY OF INDIA. The state agitation was led by RAVICHANDRAN of LAW COLLEGE. We had many secret meetings with him in MadrAS CHRISTIAN COLLEGE. We held a secret meeting with KALAIGNAR at his residence in Gopalapuram.We gathered at Napier Park in thousands and proceeded towards Fort St.George carrying placards and shouting slogans. The Chief Minister Mr.Bhaktavasalam refused to meet our leaders. Instead tear gas and lathi charge were used to disperse the procession. Many of us were injured on that day. Colleges and hostels were closed immediately and we were forced to return home for about two weeks. The students were united under one banner during the Anti-Hindi Agitation. An uprising arose among the people of TAMIL NADU to preserve Tamil and not to let Hindi infiltrate in any guise. Students somehow learnt to know the importance of preseving their mother tongue TAMIL. The Dravidian influence was such that people of Tamil Nadu swayed from voting to CONGRESS in favour of the DMK under ANNA! It was a glorious era then!… Dr.G.Johnson.

    1. Avatar
      Paramasivam says:

      Thanks Dr Johnson,At least you have come forward to share your experience.Within 47 years,some people try to twist the history.Just see for yourself,how a spontaneous agitation has been painted as the act of unsocial elements by the so called patriots?And added to that,the essayist calls his essay as the true story.

  46. Avatar
    பூவண்ணன் says:

    இந்திய முழுவதும் மூன்று மொழி இருந்தால் சரி.அது ஏன் சில மாநிலங்களுக்கு மட்டும் மூன்று மொழி
    தமிழ்,வங்காளம்,கன்னடம் போல ஹிந்தி ஒரு மொழி.அதை ஏன் எல்லா மாநிலங்கள் மீதும் திணிக்க வேண்டும்.ரயில் நிலையங்களில் திணிக்க வேண்டும்
    ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணித்து பின்பு ஆங்கிலத்தை முழுவதுமாக அகற்றுவது தான் திட்டம்.அதை முறியடித்தது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்.
    ஹிந்தி எதிர்ப்பு,இட ஒதுக்கீடு போராட்டங்கள் மூலம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையானோருக்கு பெரிய நன்மை கிடைக்க வழி வகுத்தது திராவிட இயக்கம்
    இன்று இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஆங்கிலத்தின் நன்மைகளை புரிந்து கொண்டு அதை கடவுளாக கொண்டாட வேண்டும் என்ற அளவிற்கு சென்றுள்ளார்கள்

    http://www.nytimes.com/2011/02/17/world/asia/17iht-letter17.html?_r=2scp=1&sq=bitter%20truth&st=cse&

    People like Mr. Prasad, who want to liberate the poorest segment of the population, the Dalits, through the extraordinary power of English, view Indian culture and all related sentiments with suspicion. It was that same culture that had once deemed the Dalits “untouchable,” relegating them to the lowest of the low in the caste hierarchy.

    In Mr. Prasad’s temple, there is an idol in robes, wearing a wide-brimmed hat. Very soon, Mr. Prasad said, he would encourage young Dalit couples to include a ritual in their wedding ceremony in which they would sign the letters A, B, C and D on a piece of a paper. “That would be a promise they make that they will teach their children English,” he said.

  47. Avatar
    K A V Y A says:

    //அவர்கள் ஹிந்தி மீது இவ்வளவு வெறுப்பு காட்டுவதில்லை. அவர்கள் எல்லோரும் தமிழர்களை விட தங்களது தாய் மொழியின் மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்கிலம், தாய்மொழி, மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் தமிழர்களுக்கு மட்டும் இந்த மொழி வெறி?
    நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஹிந்தி மெல்ல மெல்ல தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. வட இந்தியாவிலிருந்து கூலி தொழிலாளிகள் வருகை அதிமாகி உள்ள நிலையில், அவர்களை வேலை வாங்குவதற்காக தொழில் செய்யும் தமிழர்கள் மெல்ல மெல்ல ஹிந்தியை கற்று கொண்டுதான் இருக்கிறார்கள்.//

    இராஜன்!
    தமிழர்களுக்கு மொழிவெறியிருப்பதாகச்சொல்வது உண்மையன்று. எங்கு சென்றாலும் அங்குள்ள மொழியைக்கற்று வாழ்பவர்கள் தமிழர்கள். தில்லியில் 10 லட்சமும் மும்பையில் அதற்குமேலாகவும் தமிழர்கள் வாழ்கிறார்கள் 60 களில் சென்றவர்கள். அவர்கள் ஹிந்தியோ மராட்டியோ படிப்பதில்லையென்ற வெறியுடன் வாழவில்லை. சச்சினின் அப்பாதான் தாராவியில் தமிழர்களுக்கு மராட்டி ஆசிரியர்.
    அதே வேளையில் பீஹாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எங்கு சென்று வாழ்கிறார்களோ அங்குள்ள மக்களுடன் அவர்கள் சேர்ந்து வாழவிரும்பாமல் தங்களுக்குள்ளேயே ஹிந்தி பேசி அவர்கள் கலாச்சாரத்தை மட்டும் பேணிவாழ்வதால் அவர்கள் எங்குமே விரும்பப்படுவதில்லை. மஹாராட்டிராவில் மட்டுமன்றி; எங்கும் அப்படித்தான். அவர்களின் குழுமனப்பானமை மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். பீஹாரிகள் மற்றும் உபிக்காரர்களின் ஹிந்தி பற்று, வெறியென்பதே நிதர்சனம்.
    சிபிஎஸ்சி மும்மொழித்திட்டத்தை அறிவித்தது. அதன்படி வடமாநிலத்தவர் ஒரு தென்மொழியையும் தென்மாநிலத்தவர் ஹிந்தியையும் படிக்கவேண்டும். வடமாநிலத்தில் எவருமே எந்தத் தென்மொழியையும் படிக்கவில்லை. திட்டம் படுதோல்வி. எப்போதும் அப்படித்தான். தமிழ் அல்லது மற்ற தென்மொழிகளில் பாண்டித்தியமுள்ள எவரையும் அங்கு பார்க்க முடியாது. ஆனால், ஹிந்தியில் பாண்டித்தியமுள்ள பேசவல்ல தென்னவரகள், தமிழர்களைப் பார்க்க முடியும். நான் மதுரையில் பலவிடங்களில் இந்தியில் என் மனைவியுடனும் குழந்தைகளிடம், உரையாடுவதுண்டு. ஜூஸ் கடைக்காரனிடமும் ஹோட்டல் சர்வர்களிடமும் ஹிந்தியில்தான் பேசுவோம். வடநாட்டு யாத்ரிகளிடம் ஹிந்தியில் கேட்டு தமிழில் பேருந்து நடத்துனரிடம் சொல்லி, அவர்களுக்கு ராமேசுவரம் மாட்டுத்தாவணியிலிருந்து போக உதவுங்கள் என்று சொல்வதுண்டு. பேருந்துப்பயணிகள் மிகவும் உதவுவார்களை இகழ்வது கிடையாது. எவரும் ஹிந்தி பேசியதற்காக ஹிந்திக்காரர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். எவரும் எங்களைக்கண்டு இகழ்வதோ, வெறுப்புப்பார்வை வீசுவதோ கிடையாது. அதே வேளையில் ட்ரக் டரைவர் ஒருவர் சொன்னார்: கேரளாவில் நான் எதைக்கேட்டாலும் சர்வர் தருவதில்லை. மலையாளத்தில் சொன்னால்தான் தருவான். குழந்தைகளுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் தமிழ் உச்சரிப்பு பிறருக்குச் சிரிப்பைத்தருமென்று வெட்கப்பட்டு ஹிந்தி பேசிவ்ருகிறார்கள். அப்படியிருக்க தமிழருக்கு ஹிந்தி வெறுப்பென்கிறீர்களே!! அப்படிச்சொல்லும் நீங்கள் லக்நோவில் தமிழ் பேசுங்கள் பார்ப்போம்.
    உண்மையென்னவென்றால் அவர்களுக்குத்தான் ஹிந்தி வெறி. எனவேதான், தமிழ்ப்பார்ப்பனர்கள் சமசுகிருதத்தை முதலில் வைத்துத் தமிழை இரண்டாவதாக சங்ககாலமுதல் செய்து வர, இன்றும் சமசுகிர்தமே கோயிலில் என்றெல்லாம் வாதாடிவர, உபி பார்ப்ப்னர்களோ ஹிந்தியே முதல்; தம் மொழி இந்தியா முழுக்கப்பரவ வேண்டுமென்ற கொள்கையுடையோராகி, அப்பார்ப்ப்னர்களுள் ஒருவரான டண்டன் இந்தியப்பாராளுமன்றத்திலே ஹிந்திக்காக வாதாடி, அவரின் ஒரே ஓட்டில் ஹிந்தி ஆட்சிமொழியாகியது என்று அறிகிறோம். ஜாதி, மதம், என்று பாராமல் அனைத்து உபிக்காரரும் ஹிந்திக்காக வாழ்கிறார்கள்; அதுமட்டுமா, இந்திய மொழிகளிலே தம்மொழியே சிறந்தது என்ற தற்பெருமையும் அவர்களுக்குண்டு. 17ன் நூற்றாண்டில் மொகலாயர் அரண்மனைக்கவிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழிதான் அது. சூர்தாஸ்தான் முதற்கவிஞர்கள். அதற்குமுன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மின் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சமணர்களும் தமிழ்க்கொடைதந்துவிட்டு மறைந்துவிட்டார்கள்.
    இங்கிருந்து கூலிவேலைக்காக ஆயிரக்கணக்கில் வடமாநிலம் சென்ற தமிழர்களிடம் அவர்கள் முதலாளிகள் தமிழில் ஆணையிடுவது கிடையாது. ஹிந்திதான். இவர்களும் ஹிந்தியை கபக்கென்று பிடித்து விரைவில் பேசப்பழகிவிடுவார்கள். போய்ப்பாருங்கள்.
    அதே சமயம், நீங்கள் சொல்கிறீர்கள். ஹிந்தி கூலிக்காரர்களிடம் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள் அவர்கள் முதலாளிகளென்று. ஹிந்தி கூலிக்காரர்களால், தமிழகத்தில் ஹிந்தி வருகிறதென்று.
    தமிழ்க்கூலிக்காரர்களால் தமிழ் தில்லியில் நுழையவில்லை.
    வேறுபாடு காட்டும் ஆர் வெறியர்களென்று. உங்கள் வாயிலிருந்தே வந்து விட்டது : – )

  48. Avatar
    K A V Y A says:

    Some months ago, a Bihari clerk at Mylapore PRS thre the reservation slip at the woman who tendered it. His reason: she dared to fill up the form in Tamil. She pleaded with him that she k fnew only her mother tongue. The news spread like wild fire. As usual, some group of Tamil fanatics agitated in front of the PRS asking for the removal of the Bihari clerk. The Tamil fanatics agitated in front of SR office also. The clerk was transferred. And the Tamil fanatics or thamizh veriyarkal saved the honor of their mother tongue.

    I wish they were arrested, thrashed severely and given riogrous punishment for at least a year. How dare they were to qn the clerk who wanted the woman to fill it up in Hindu? Sooner we get rid of these veriyarkal, the better for the welfare of TN

  49. Avatar
    K A V Y A says:

    இராஜன் இந்தக்கேள்விக்குப் பதில் சொல்லலாம்:
    லக்னோவில் ஒரு ரயில்வே கிளார்க பயணி ஒருவரிடம் ‘இந்தியில் நிரப்பிவந்தால் ஏற்கமாட்டேன். தமிழில் கொண்டுவா; அல்லது ஆங்கிலத்தில் கொண்டுவா!’ என்றால், அதற்கு அங்குள்ளவர் எதிர்ப்பு தெரிவித்தால், எவரேனும் அவர்களை ஹிந்தி வெறியர்கள் என்று இழித்துரைப்பரோ ?

  50. Avatar
    Rajan says:

    காவ்யா,

    நீங்கள் இன்னும் நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆங்கிலத்தை ஏற்கும் நீங்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள் என்பது தான் எனது கேள்வி. அந்நிய மொழியான ஆங்கிலம் மட்டும் வேண்டும் ஆனால் நமது நாட்டு மொழியான ஹிந்தி மட்டும் வேண்டாமா? இந்த ஹிந்தி எழுத்தை என்ன தமிழ் நாட்டில் மட்டும் தானா அமுல் படுத்துகிறார்கள்? எல்லா மாநிலங்களிலும் தானே அமுல் படுத்துகிறார்கள். அதில் உங்களுக்கு என்ன பிரெச்சனை? நீங்கள் தாய் மொழியான தமிழியிலேயே எல்லாவற்றையும் படியுங்கள், அதை வரவேற்கிறேன். ஆனால் அதற்காக ஹிந்தியை ஏற்க மாட்டேன் என்று சொல்வது எந்த விதத்திலும் ந்யாயம் இல்லை. அப்படி நீங்கள் ஹிந்தியை எதிர்த்துதான் ஆகவேண்டும் என்று சொன்னால் ஆங்கிலத்தையும் எதிர்க்க தயாரா? அப்படியானால் ஆங்கிலத்தை தமிழ் நாட்டிலுருந்து அறவே நீக்க ஏன் இன்னும் போராடவில்லை?

    நீங்கள் இன்னும் நான் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை. மற்ற தென் மாநிலங்களில் ஹிந்தியை அவர்கள் எப்பொழுதும் திணிப்பாக நினைப்பதே இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் தான் இந்த நிலை. இதைதான் நான் மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். திராவிட கழகம் உங்களை போன்றோருக்கு ஒரு தனி அடையாளத்தை (போலியான) ஏற்படுத்தி கொடுத்து விட்டார்கள். அதன் விளைவு தான் தமிழன் தன்னை இந்தியாவின் ஒரு கூறாக என்றைக்குமே பார்த்ததே இல்லை. முதலில் தமிழன் தன்னை ஒரு தனி இனமாக கருதாமல் இந்தியாவை சேர்ந்த ஒருவனாக கருதவேண்டும். அப்பொழுது ஹிந்தி திணிப்பாக தெரியவே தெரியாது. இது தமிழ் நாட்டுக்கு மட்டும் அல்ல. வேறு எந்த மாநிலமும் ஹிந்தியை திணிப்பாக கருதினால் அவர்களுக்கும் என் அறிவுரை இது தான். தற்போது இந்தியாவுக்கு ஆங்கிலத்துக்கு மாற்றாக ஒரு பொது மொழி மிக மிக அவசியம். அது இந்தியாவில் அதிகம் பேர் புரிந்து கொள்ளும் மொழியான ஹிந்தியாகதான் இருக்க முடியும். பொது மொழி என்று சொன்னவுடன் அதை எல்லோரும் பேசியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. மாற்றாக அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மொழியாக இருக்க வேண்டும். நான் மறுபடியும் சொல்கிறேன், இந்தியாவிற்கு ஒரு பொது மொழி அவசியம் என்று தானே சொன்னேனே தவிர, மற்றபடி அவரவர் தாய் மொழிக்கு என்றுமே நான் எதிரி இல்லை. ஒவ்வொருவரும் தத்தமது தாய் மொழியை கட்டாயம் படிக்கவேண்டும், முடிந்தால் அதிலேயே கல்வி பயிலவேண்டும், அதற்க்கு கூடவே ஹிந்தியையும் சேர்த்து படியுங்கள் என்று தான் கேட்டு கொள்கிறேன்.

    1. Avatar
      K A V Y A says:

      //நீங்கள் இன்னும் நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. ஆங்கிலத்தை ஏற்கும் நீங்கள், ஹிந்தியை மட்டும் ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள் என்பது தான் எனது கேள்வி//
      நீங்கள்தான் புரியவில்லை. ஆங்கிலத்தைப்பற்றி எழுத்வில்லையென்பதற்காக ஆங்கிலத்தில் இருக்கலாம் துலுக்கப்பட்டியில் ரயில் நிலையப்பலகை என்று பொருள் கிடையாது. துலுக்கப்பட்டி திருநெல்வேலி பக்கத்திலுள்ள ஒரு ரயில் நிலையம்
      என் வாதம், ஒரு மொழியை ஓரிடத்தில் அறிவுப்புப்பலகையில் எழுதினால் அது அங்கு வதிவோர் அல்லது வாசிப்போருக்குப் புரியவேண்டும். அவர்களுக்குத்தானே எழுதுகிறீர்கள். இல்லாவிட்டால் எழுதிய பலன் கிடைக்காது. மேலும் பணம், நேரம் விரயம்.
      எனவே தமிழ் மட்டும் கடையத்திலோ, இளவேலங்காலிலோ, கோவில்பட்டியிலோ, திருவாலங்காட்டிலோ, துலுக்கப்பட்டியிலோ போதுமானது என்பதே என் வாதம்.

      1. Avatar
        Rajan says:

        தமிழ்நாட்டில் தமிழ் படிக்க தெரியாதவர்கள் வரவே மாட்டர்களா? அப்படி யாரேனும் வந்தால் அவர்களுக்கும் புரிய வேண்டும் என்று தானே பொது மொழிகளிலும் எழுத படுகிறது? இவ்வளவு ஏன், இன்று தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வெறும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியை மட்டும் படித்துவிட்டு ஒருவர் பள்ளிகல்வியை விட்டு வெளியே வர முடியும். அப்படி ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஒருவர் கோவில்பட்டிக்கு வரக்கூடாதா? வந்தால் அவர்களுக்கும் அது உபயோகப்படும் அல்லவா? இதில் உங்களுக்கு என்ன பிரெச்சனை? தமிழை ஒதிக்கி விட்டு ஆங்கிலத்தையும், ஹிந்தியையும் மட்டும் பயன் படித்தினால் நானே அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பேன். மூன்று மொழியிலும் தானே எழுதுகிறார்கள்? அதில் என்ன தவறு?

        1. Avatar
          K A V Y A says:

          பெருநகரங்களில் எல்லாம் மும்மொழிகளும் உண்டு. இல்லாவிட்டாலும் இருக்க வேண்டும். அவை தவிர, சுற்றுலாத்தளங்களிலும் இருக்கவேண்டும். அங்கு ஹிந்தி, அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் வருகிறார்கள். அவர்கள் தொல்லைபடக்கூடாதென்பதற்காக அப்படி.

          ஒரு குக்கிராமத்தில் தமிழே தெரியாதவர்கள் எவரேனும் வருவரா? வருவார்கள் என்கிறீர்கள்? எதற்காக வருவார்கள்? அவசியமே இல்லாமல் எவரேனும் எங்காவது செல்வதுண்டா? எனவே அங்கு தமிழ் மட்டும் இருந்தால் போதும்.

          கிராமங்களிலும் பிறமொழியினர் வாரா சிறுநகரங்களிலும் ஆங்கிலம் ஹிந்தி தேவையில்லை. மதுரையில் இருக்கட்டும். ஒட்டன்சத்திரத்தில் ஏன்? ராமேசுவரத்தில் இருக்கட்டும். துலுக்கப்பட்டியில் ஏன்? இருந்தால் திணித்தலே. பெருந்தவறு.

  51. Avatar
    Rajan says:

    காவ்யா,

    //அதே வேளையில் பீஹாரிகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எங்கு சென்று வாழ்கிறார்களோ அங்குள்ள மக்களுடன் அவர்கள் சேர்ந்து வாழவிரும்பாமல் தங்களுக்குள்ளேயே ஹிந்தி பேசி அவர்கள் கலாச்சாரத்தை மட்டும் பேணிவாழ்வதால் அவர்கள் எங்குமே விரும்பப்படுவதில்லை. மஹாராட்டிராவில் மட்டுமன்றி; எங்கும் அப்படித்தான். அவர்களின் குழுமனப்பானமை மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். பீஹாரிகள் மற்றும் உபிக்காரர்களின் ஹிந்தி பற்று, வெறியென்பதே நிதர்சனம்.//

    நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. நான் அமெரிக்காவில் சுமார் ஏழு வருட காலம் வாழ்ந்தேன். அப்பொழுது அங்கு இருந்த தமிழர்களிடம் தமிழ் தான் பேசி வந்தேன். அங்கும் இட்லி தோசை போன்ற பண்டங்களை தான் உண்டு வந்தேன். எனது கலாச்சார வழிபாடுகள் அனைத்தும் (கோவில், பூஜை, புனஸ்காரம்) தவறாமல் செய்து வந்தேன். என்னையோ மற்ற தமிழர்களையோ யாரும் குழுமனப்பானமை கொண்டவர்கள் என்று விமர்சித்தே இல்லை. அமெரிக்காவிற்கு சென்றவுடன் அங்குள்ள கிருச்துவரைப்போல் என்னை என்ன சர்ச்சுக்கு போக சொல்லுகிறீர்களா? இதை தானே பீகாரிகளும் செய்தார்கள்? இது அவர்களின் மொழி பற்றை தானே காட்டுகிறது? இதையே தான் மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் செய்கிறார்கள்? மொழி வெறி வேறு மொழி பற்று வேறு. இதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் மக்கள் மத்தியில் மொழி வெறியை தான் பரப்பி வருகிறார்கள், மொழி பற்றை அல்ல.

    //சிபிஎஸ்சி மும்மொழித்திட்டத்தை அறிவித்தது. அதன்படி வடமாநிலத்தவர் ஒரு தென்மொழியையும் தென்மாநிலத்தவர் ஹிந்தியையும் படிக்கவேண்டும். வடமாநிலத்தில் எவருமே எந்தத் தென்மொழியையும் படிக்கவில்லை. திட்டம் படுதோல்வி. எப்போதும் அப்படித்தான். தமிழ் அல்லது மற்ற தென்மொழிகளில் பாண்டித்தியமுள்ள எவரையும் அங்கு பார்க்க முடியாது.//

    இதை நான் ஓரளவு ஒப்பு கொள்கிறேன். இதற்க்கு ஒரு காரணம் நமது பாட திட்டம் தான். கஜினி முஹம்மது, அக்பர், பாபர், போன்ற இஸ்லாமிய மன்னர்களை படிக்கிற அளவு கூட நம் நாட்டு மன்னர்களான ராஜ ராஜ சோழன் போன்ற தென்னிந்திய மன்னர்களை பற்றி வட மாநிலத்தவர் படிப்பதே இல்லை. அப்படியே படித்தாலும் ஏதோ ஒப்புக்குத்தான் படிக்கிறார்கள். இது அவசியம் சரி செய்ய பட வேண்டும். இந்த நிலை மாறும் பொழுது வட இந்தியர்களும் தென்னிந்திய மொழிகளை படிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

    //தமிழ்ப்பார்ப்பனர்கள் சமசுகிருதத்தை முதலில் வைத்துத் தமிழை இரண்டாவதாக சங்ககாலமுதல் செய்து வர, இன்றும் சமசுகிர்தமே கோயிலில் என்றெல்லாம் வாதாடிவர, உபி பார்ப்ப்னர்களோ ஹிந்தியே முதல்;//

    இது பிராமணர்களின் மீதுள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக கூற படுகிற குற்றச்சாற்று. இது ராபர்ட் கால்டுவெல் போன்ற சதிகாரர்கள் ஆரம்ப காலத்தில் செய்த சதியின் காரணமாக இன்றளவும் நீங்கள் சமஸ்க்ரிதத்தை விரோதி மொழியாகவே பார்குரீர்கள். முதலில் இந்த நினைப்பாய் தூக்கி எரிய வேண்டும். பிராமணர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தியதே இல்லை. இது கிறிஸ்துவ பாதிரியார்கள் சொல்லிவிட்டு போன புரட்டு. அதை திராவிட கழகம் பிறகு கையில் எடுத்து கொண்டு பிரசாரம் செய்தது. இதற்க்கான பல ஆதாரங்கள் இருக்கின்றன. தி.கவின் “ஆரிய படையெடுப்பு” இன்று முற்றிலுமாய் அறிவியல் பூர்வமாக நிராகரிக்க பட்டு விட்டது. இது போல் பிராமன எதிர்ப்பு கொள்கையும் கூடிய சீக்கிரம் மடிந்து போகும். இதற்க்கு தான் நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். தமிழனுக்கோ மற்ற எந்த மாநிலத்தவனுக்கோ தனகென்று ஒரு தனி இன ரீதியான அடையாளமே கிடையாது. எல்லோரும் இந்த நாட்டை சேர்ந்த ஒரே இனத்தவர் தான். இதை முதலில் புரிந்து கொண்டு பிறகு தமிழ் சமிச்க்ரித்த ப்றேச்சனையை அணுகுங்கள். அப்பொழுது அதன் பரிமாணமே மாறும். கோயில்களில் தமிழில் அர்ச்சனை என்று வாதாடும் நீங்கள் ஏன், மசூதிகளிலும் தமிழ் என்று சொல்வதே இல்லை? முதலில் ஒரு கோயிலை சர்ச் அல்லது மசூதி போன்று கருதவே முடியாது. இந்த அடிப்படை உண்மை கூட உங்களுக்கு புரியவில்லையே? பண்டைகால கோயில்கள் ஆகம விதிப்படி கட்ட பட்டுள்ளன. அப்படி கட்ட பட்டுள்ள கோயில்களிலுள்ள கருவறையில் இருக்கிற விக்ரஹம பிரதிஷ்டை செய்யபட்டது. அதை பிரதிஷ்டை செய்வதற்கு சில வழி முறைகள் இருக்கின்றன. அம்முறைப்படி சில சப்த ஒலிகள் எழுப்ப படுகின்றன. அவை தான் மந்திரங்கள். உதாரணத்துக்கு “ஓம்” என்கிற பிரணவ மந்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதற்கென்ன மொழியா இருக்கிறது? இது வெறும் ஒரு சப்தம் அவ்வளவே. இதை எந்த மொழியில் சொன்னாலும் ஓம் என்ற சப்தம் ஓம் தான். இதை போன்று தான் பிற மந்திரங்களும். இதை நன்கு புரிந்து கொண்ட நம் மன்னர்கள் அக்கால கட்டத்தில் இதை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டார்கள். கோவில் சுவர்களில் தமிழில் எழுத தெரிந்த அவர்களுக்கு கருவறையில் தமிழை புகுத்த தெரியாதா என்ன? பிறகு ஏன் அவர்கள் அதை செய்யவில்லை? இந்த சப்தங்களை எப்படி தமிழில் ஒலிக்க செய்ய முடியும்? எதில் தான் தமிழை புகுத்துவது என்பதற்கு ஒரு வெவஸ்தையே இல்லையா? இது போன்ற செயல்களை மொழி வெறி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

    //அதே சமயம், நீங்கள் சொல்கிறீர்கள். ஹிந்தி கூலிக்காரர்களிடம் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள் அவர்கள் முதலாளிகளென்று. ஹிந்தி கூலிக்காரர்களால், தமிழகத்தில் ஹிந்தி வருகிறதென்று. தமிழ்க்கூலிக்காரர்களால் தமிழ் தில்லியில் நுழையவில்லை. வேறுபாடு காட்டும் ஆர் வெறியர்களென்று. உங்கள் வாயிலிருந்தே வந்து விட்டத//

    இதை நான் சுட்டி காட்டிய உள்நோக்கத்தையே நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால், நீங்கள் எந்த மொழியை திணிப்பதாக சொல்கிறீர்களோ அதே மொழி வணிகம் காரணமாக மெல்ல மெல்ல உள்ளே வந்து கொண்டிருக்கிறது. இதை தான் நான் சுட்டிகாட்ட விரும்பினேன். பிழைப்பு என்று வந்து விட்டால் மொழி வெறி கூட இரண்டாம் பட்சம் தான் இந்த தமிழனுக்கு!!! இன்று தமிழர்களுக்கு மொழி வெறி பிடித்தவர்கள் என்று ஒரு பிம்பம் இருக்கிறது என்றால் அதற்க்கு முழு காரணம் தமிழ் நாட்டில் மொழியை வைத்து செய்கிற அரசியல்தான்.

    என் இறுதி கருத்து இது தான். இன்று இந்தியர்கள் தங்களை தனியாக அடையாள படுத்தி கொள்ள ஆங்கிலத்துக்கு பதிலாக வேறு ஒரு பொது மொழி மிக மிக அவசியம். அது எந்த ஒரு இந்திய மொழியாக இருந்தாலும் கூட பரவாயில்லை, ஹிந்தியாகதான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. அது எந்த மொழி என்பதில் வேண்டுமானால் நமக்குள் விவாதம் இருக்கலாம், ஆனால் அது வேண்டவே வேண்டாம் என்று சொல்வது சரியல்ல.

    1. Avatar
      K A V Y A says:

      பீஹாரிகளைப்பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. மதுரையில் தெலுங்கைத்தாய்மொழியாக கொண்டோர் ஏராளம். மலையாளிகள் உண்டு கணிசமாக. இருப்பினும் அவர்களைக்கண்டு பிடிக்க முடியாது. அவர்கள் வந்தேறிய இடத்து மக்களை மதித்து அவர்களாலும் மதிக்கப்படுகிறார்கள். பீஹாரிகள் கதையே வேறு. மும்பையில் ஹிந்திதான். அவர்களால் நன்கு பேசமுடியும். எனினும் தாங்கள் பீஹார்கள் எனத் தனிமைப்படுத்திக்கொண்டே வாழ்கின்றனர். எங்கு சென்றாலும் இவர்கள் இப்படித்தான். தமிழகத்தில் இன்னும் செட்டிலாகவில்லை. ஆனபின் தெரியவரும். அப்படியே பிஹாரிகள் கலந்தால், அதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும்.

      சமசுகிருதம் பண்டிதர் மொழி; தேவபாஷை. என்று செய்யப்பட்டது பார்ப்ப்னர்களாலேயே. அதன் விளைவே அது பொதுமக்களிடமிருந்து விலகி விட்டது. இது நானறிந்தவை. வரலாற்று நூல்களிலில் வேறு இருந்தால் எடுத்துக்காட்டவும். காம சூத்திராவும் காளிதாசன் நாடகங்களும் அம்மொழியில் எழுதப்பட்டன. ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தது. அப்படியே செகுலர் பாஷையாக இருந்திருந்தால், அது இந்தியர்களில் பொதுமொழியாகத் தகுதியுண்டெனலாம். எல்லாப்பாஷைகளிலும் அம்மொழி ஊடுருவியது வைதீக மத வழியாகவேதான். மற்றபடி இல்லை. அதைக்காரணம் காட்டி அதைப்பொது மொழியாக்க முடியாது. மேலும் அது இந்து மத்த்தோடு சேர்த்து இணைக்கப்பட்டு விட்டதால், பிற மதத்தை அனுசரிக்கும் இந்தியர்களுக்கு ஒவ்வாதது. உங்களால் சமசுகிருத விவகாரத்தை விருப்பு வெறுப்பன்றி நெருங்க முடியாது. உங்கள் எழுத்துக்கள் உங்களைக் காட்டுகின்றன. உண்மைகளை ஏற்கமாட்டீர்கள் அது உங்கள் கொள்கைகளையே கேள்விக்குறிக்குள்ளாக்குமென்று தெரிந்தால். இருந்தாலும் ஆதாரங்களை வையுங்கள். அது பார்ப்ப்னர்களுக்கும் சமசுகிருதத்துக்கும் தொடர்பில்லையென்று சொல்ல வேண்டும். முடியுமா?

      ஹிந்தி நிறைய மக்களால் பேசப்படுகிறது என்பது உண்மை. ஆயினும் அம்மக்கள் மக்கட்தொகை மிகுந்த வடமாநில மக்களே. வடகிழக்கில் இந்தி எதிர்ப்பு தீவிரம். மாலையிலோ இரவிலோ பேசிக்கொண்டு போனால் கொல்லப்படுவீர்கள். ஒரிசா, மற்றும் தென்மாநிலங்கள், மஹாராட்டிரா, கோவா, பஞ்சாப் வங்காளம் போன்ற மாநிலங்களில் மக்கள் அவர்கள் பாசையைத்தான் பேசுகிறார்கள். ஹிந்தி பொது பாசையெனச்சொல்லி வைத்தால், லிப் சர்விஸ்தான் கிடைக்கும். இருக்கிறது. எப்படி, கல் இருக்கிறது, கட்டை இருக்கிறது. சட்டை செய்வோர் இல்லை எனபதைப்போல. இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்தி ஆட்சிமொழியாகக்கூட மத்திய அரசு அதைச் சரியாக செய்ய முடியவில்லை. காரணம். எவரிடம் ஆர்வமில்லை. தமிழ்நாடு தவிர மற்ற தென்மாநிலங்களில் இந்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது வெறும் அஃபிசியல் அகசெபடன்ஸ். ஹிந்தி ஊடுருவவேயில்லை. பட்டணங்க;ளில் வணிகர்கள் பேசுவார்கள். காசியில் கடைக்காரர்கள் தமிழ் பேசுவார்கள் தெரியுமா இராஜன். காசி விசுவநாதர் ஆலயத்துக்குச்செல்லும் கடைகளில் வாங்கும்போது நீங்கள் திணறவேண்டியத்தேவையில்லை. நல்ல தமிழில் பேசுவர்.

      ஹிந்திக்கு, சுருங்கச்சொல்லின், ஒரு பொது மொழியாக வலிமையில்லை. அது எங்கு தாய்மொழியாகப்பேசப்படுகிறதோ அந்தவிடங்களைத்தவிர மற்றவிடங்களில் அதால் ஊடுருவ முடியவில்லை. பிராந்திய மொழிகள் வெரி வெரி ஸ்ட்ராங்க்.

      1. Avatar
        Rajan says:

        //பீஹாரிகளைப்பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. மதுரையில் தெலுங்கைத்தாய்மொழியாக கொண்டோர் ஏராளம். மலையாளிகள் உண்டு கணிசமாக. இருப்பினும் அவர்களைக்கண்டு பிடிக்க முடியாது. அவர்கள் வந்தேறிய இடத்து மக்களை மதித்து அவர்களாலும் மதிக்கப்படுகிறார்கள். பீஹாரிகள் கதையே வேறு. மும்பையில் ஹிந்திதான். அவர்களால் நன்கு பேசமுடியும். எனினும் தாங்கள் பீஹார்கள் எனத் தனிமைப்படுத்திக்கொண்டே வாழ்கின்றனர். எங்கு சென்றாலும் இவர்கள் இப்படித்தான். தமிழகத்தில் இன்னும் செட்டிலாகவில்லை. ஆனபின் தெரியவரும். அப்படியே பிஹாரிகள் கலந்தால், அதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும்.//

        நீங்கள் பீகாரிகள் எதை கொண்டு குற்றம் சாட்டுகிரீர்களோ, அதையே தான் வெளி நாடுகளில் உள்ள அத்துணை இந்தியர்களும் செய்கிறார்கள். நானும் அமெரிக்காவில் இருந்த பொழுது அதையே தான் செய்தேன்.அது ஒன்றும் தவறில்லை. குழுமனப்பான்மையோடு இருப்பது அவரவர் விருப்பம். இப்படி தானே நாம் காலம் காலமாக இருந்தோம். அதனால் தானே பல மொழி, பல மதம், பல ஜாதி, பல கலாச்சாரங்கள் நம் நாட்டில் உருவாகி தழைத்தது. இல்லை என்றால் ஆங்கிலேயர்களைபோல் நாம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று ஆகியிருப்போம்.

        //சமசுகிருதம் பண்டிதர் மொழி; தேவபாஷை. என்று செய்யப்பட்டது பார்ப்ப்னர்களாலேயே. அதன் விளைவே அது பொதுமக்களிடமிருந்து விலகி விட்டது. இது நானறிந்தவை. வரலாற்று நூல்களிலில் வேறு இருந்தால் எடுத்துக்காட்டவும். காம சூத்திராவும் காளிதாசன் நாடகங்களும் அம்மொழியில் எழுதப்பட்டன. ஒருகாலத்தில் நன்றாகத்தான் இருந்தது. அப்படியே செகுலர் பாஷையாக இருந்திருந்தால், அது இந்தியர்களில் பொதுமொழியாகத் தகுதியுண்டெனலாம். எல்லாப்பாஷைகளிலும் அம்மொழி ஊடுருவியது வைதீக மத வழியாகவேதான். மற்றபடி இல்லை. அதைக்காரணம் காட்டி அதைப்பொது மொழியாக்க முடியாது. மேலும் அது இந்து மத்த்தோடு சேர்த்து இணைக்கப்பட்டு விட்டதால், பிற மதத்தை அனுசரிக்கும் இந்தியர்களுக்கு ஒவ்வாதது. உங்களால் சமசுகிருத விவகாரத்தை விருப்பு வெறுப்பன்றி நெருங்க முடியாது. உங்கள் எழுத்துக்கள் உங்களைக் காட்டுகின்றன. உண்மைகளை ஏற்கமாட்டீர்கள் அது உங்கள் கொள்கைகளையே கேள்விக்குறிக்குள்ளாக்குமென்று தெரிந்தால். இருந்தாலும் ஆதாரங்களை வையுங்கள். அது பார்ப்ப்னர்களுக்கும் சமசுகிருதத்துக்கும் தொடர்பில்லையென்று சொல்ல வேண்டும். முடியுமா?//

        சமஸ்க்ரிதம் பொது மொழி ஆகாமல் இருந்ததன் காரணமே அது எந்த மொழியின் மீதும் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதற்கு மிகப்பெரிய சான்று. அதை படித்தவர்களும் அதை விரும்பித்தான் படித்தார்கள். சமஸ்க்ரிதம் பிராமனர்க்களுக்கான மொழி என்று சொல்வது இன்னொரு அபத்தம். வேதங்களை தொகுத்த வேத வியாசர் பிராமணர் அல்லர். காயத்திரி மந்திரத்தை உருவாக்கிய விச்வாமிதிரரும் பிராமணர் அல்லர். இப்படி பல உதரணங்களை சுட்டிக்காட்டலாம். சமஸ்க்ரிதத்தையும் நாம் படிக்கவேண்டும் என்று நான் சொல்வதற்கு முக்கிய காரணம் அதில் மற்ற மொழிகளில் இல்லாத பல தனி சிறப்புகள் உண்டு. இதை மேற்க்கதியர்கள் நன்கு புரிந்து வைதிருக்கிறார்கள். அதனால் தான் அதை இன்றளவும் நிறைய ஆராய்ச்சிக்கு உட்படுதுகிரர்கள். ஒரு நாள் அதை பேடன்ட் செய்து விட்டு நமக்கே அதை வியாபாரம் செய்தாலும் செய்வார்கள். இதை அமெரிக்காவின் நாசாவும் மிகப்பெரியளவில் ஆராய்ச்சி செய்து வருகிறது (“Sanskrit & Artificial Intelligence — NASA Knowledge Representation in Sanskrit and Artificial Intelligence”)

        //ஹிந்திக்கு, சுருங்கச்சொல்லின், ஒரு பொது மொழியாக வலிமையில்லை. அது எங்கு தாய்மொழியாகப்பேசப்படுகிறதோ அந்தவிடங்களைத்தவிர மற்றவிடங்களில் அதால் ஊடுருவ முடியவில்லை. பிராந்திய மொழிகள் வெரி வெரி ஸ்ட்ராங்க்.//

        ஹிந்தி வந்தால் பிராந்திய மொழிகள் அழிந்துவிடாது என்கிறதுக்கு நீங்கள் சொன்னதே மிகப்பெரிய சான்று. இன்றைக்கு இந்தியாவிலேயே இணைப்பு மொழியாக தேர்வு செய்யப்படுவதற்கு ஹிந்திக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவில் 40% பேர் ஹிந்தி பேசுபவர்கள். அது மட்டுமின்றி வட இந்தியாவில் ஹிந்தி தெரியாதவர்களுக்கு கூட ஹிந்தி புரியும். தெற்கில் கூட கிட்டதட்ட அதே நிலைமை தான். அப்படி இருக்க ஹிந்தியை தான் சுலபமாக இணைப்பு மொழியாக ஆக்க முடியும். அதனால் தான் நான் ஹிந்தியை இணைப்பு மொழியாக ஆக்க முனைப்பு காட்டுகிறேன். ஆங்கிலம் ஒரு போதும் இணைப்பு மொழியாக இருக்க முடியாது. அப்படி ஆக்க முயற்சித்தால், அது நம்மை எப்பொழுதுமே மேற்கத்திய கலச்சரதொடு தொடர்பு படுத்தி அடிமை படுத்தி கொண்டே இருக்கும். இன்றைக்கு இந்தியாவில் நிறைய பேருக்கு தங்கள் தாய்மொழியின் மீது பற்று குறைவதற்கு மிகப்பெரிய காரணமே ஆங்கிலம் தான். அதனால் தான் சொல்கிறேன், ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் தாய் மொழி கட்டயமாக்கப்பட சட்டம் கொண்டு வரவேண்டும். பிறகு ஏதோ ஒரு இந்திய மொழியை இணைப்பு மொழியாக படிக்கவேண்டும் (அது ஹிந்தியாக இல்லாவிட்டாலும் பரவாஇல்லை; இருப்பினும் அதிகம் பேர் அதை புரிந்து கொள்ளும் தன்மை கொண்டதால் அதுவே சரியான சாய்ஸ்).

  52. Avatar
    paandiyan says:

    whether its based on Muslim related article or DMK realted article, people are capable to bring here the comments of Bhramins community and then start the arguments happily (note: Mr.malarmannan has clearly registered the comment on other article how X people confusing the hindus in online portals..). please sombody publish a article realted TOILET and i will see the same comment will be comming there also!!!!!!!!!!!

  53. Avatar
    ruthraa says:

    அன்பான மலர் மன்னன் அவர்களே

    அழகான தமிழ்ப்பெயர்
    தமிழ் மீதே இவ்வளவு
    “அலர்”தூற்றுவதன்
    உட்கிடக்கை என்ன?

    உங்களுக்கு முகம் மட்டும்
    முகமூடியல்ல.
    பெயரும் தான்.
    தமிழாலேயே தமிழைக்
    கசாப்பு செய்யத்தான் செய்வேன்
    என்றால் உங்கள பெயரை
    “அலர் மன்னன்”என்று
    வைத்துக்கொள்வதே நன்று.

    இல்லையென்றால்
    புஷ்பராஜ குலோத்துங்கன்
    என்று வைத்துக்கொள்ளுங்கள்.
    திராவிட இயக்கங்கள்
    மாயையோ மண்ணாங்கட்டியோ
    அதெல்லாம் இருக்கட்டும்.
    அந்த இயக்கங்களின் முழக்கங்கள்
    உயிர்க்காம‌ல் இருந்தால்
    த‌மிழ் என்ற‌ ஒலிப்பே
    இங்கு ம‌ண்மேடிட்டு
    புல் முளைத்திருக்கும்.

    த‌மிழ் நாட்டையே
    இன்னொரு
    மொஹ‌ஞ்ச‌தாரோ ஹ‌ர‌ப்பா
    ஆக்கியிருப்பார்க‌ள்.
    சிந்து வெளித்த‌மிழ் ப‌ற்றி
    ஆராய்ச்சி செய்த‌வ‌ர்க‌ள் எல்லாம்
    ச‌ண்டாள‌ர்க‌ளாக‌வும்
    மிலேச்ச‌ர்க‌ளாக‌வும் தான்
    இவ‌ர்க‌ளுக்கு தோன்றுகிற‌து.

    இந்த‌ப் பின்ன‌ணியில்
    “டால்மியா” என்ப‌து
    த‌மிழ‌னின் போராட்ட‌த்தின்
    அடையாள‌ம் ம‌ட்டுமே.
    தொழில் வ‌ள‌ர்ச்சி
    ம‌ற்றும் புள்ளிவிவ‌ர‌ங்க‌ள்
    அடுக்க‌லாம்.
    இவையெல்லாம்
    த‌மிழின் மீது அடுக்க‌ப்ப‌ட்ட‌
    சிதையே த‌விர‌ வேறு
    சிந்த‌னை ஏதும் இல்லை.

    வேத‌ம் ஒலிக்க‌
    தொண்டைக‌ள் இருந்த‌ன‌.
    சோம‌க்க‌ள் நுரைத்த‌ குர‌ல்க‌ள்
    க‌ன்னா பின்னா என்ற‌ன‌.
    இருப்பினும்
    அது ச‌ம‌ஸ்கிருத‌மான‌து
    ப‌ண்டைத்த‌மிழ்
    ப‌ழ‌க்கிக்கொடுத்த‌
    சொல்வ‌டிவ‌மும்
    வ‌ரிவ‌டிவ‌மும் ஆகும்.

    வியாஸ‌ன் இல்லையெனில்
    வ‌ந்தேறி மொழியின்
    கூச்ச‌ல்க‌ள் ம‌ட்டுமே இருந்திருக்கும்.
    அந்த‌த் திராவிட‌த்த‌மிழ‌ன்
    வ‌கைப்ப‌டுத்திய‌தே
    நான்கு வ‌கையில்
    புகை மூட்ட‌ம் போட்ட‌
    அந்த‌ இரைச்ச‌ல்க‌ள்.

    காளிதாச‌ன் என்னும்
    ஆடு மேய்ப்ப‌வ‌னே
    ச‌ம‌ஸ்கிருத‌த்தை
    அல‌ங்கார‌ம் செய்தான்.
    வால்மீகி வேட‌னே
    ராம‌னை க‌ட‌வுள் ஆக்கினான்.

    த‌மிழுக்கு ந‌ன்றி சொல்ல‌வேண்டிய‌
    ச‌மஸ்கிருத‌ம்
    த‌மிழைத் தின்று
    விட்ட‌ ஏப்ப‌மே
    இந்த‌ இர‌ண்டாயிர‌ ஆண்டுக‌ளாய்
    த‌மிழ் நாட்டை
    இருட்டில் த‌ள்ளிய‌து.

    த‌மிழ் எனும் ஆத‌வ‌ன்
    அக‌ல‌ விழித்த‌தில் தான்
    த‌மிழ் நாட்டுக்கு வெளிச்ச‌ம் வ‌ந்த‌து.
    ஆத‌வ‌னே ஆதித்த‌ன் ஆனான்.
    மீண்டும் மீண்டும்
    வ‌ந்தேறி மொழியின்
    மேக‌ மூட்ட‌மே
    இன்னும் இன்னும்
    இங்கு பார்க்கிறோம்.
    ம‌ல‌ர் ம‌ன்ன‌ர்க‌ளே
    புறநானூறுக‌ள் பாடாவிட்டாலும்
    புற‌ம் நின்று
    ஈட்டிக‌ள் பாய்ச்சும்
    ஈன‌த்த‌னம் நிறுத்துவீர்.
    த‌மிழ் கொல்லும்
    அர‌சிய‌ல் அக‌ற்றுவீர்.
    த‌மிழ் வாழும்.
    த‌மிழ்ப்ப‌கை இங்கு
    வீழும் வீழும்.

    ==========================================ருத்ரா

    1. Avatar
      paandiyan says:

      த‌மிழுக்கு ந‌ன்றி சொல்ல‌வேண்டிய‌
      ச‌மஸ்கிருத‌ம்
      த‌மிழைத் தின்று
      விட்ட‌ ஏப்ப‌மே
      இந்த‌ இர‌ண்டாயிர‌ ஆண்டுக‌ளாய்
      த‌மிழ் நாட்டை
      இருட்டில் த‌ள்ளிய‌து.

      த‌மிழ் எனும் ஆத‌வ‌ன்
      அக‌ல‌ விழித்த‌தில் தான்
      த‌மிழ் நாட்டுக்கு வெளிச்ச‌ம் வ‌ந்த‌து.
      ஆத‌வ‌னே ஆதித்த‌ன் ஆனான்.

      — you have a bright chance to become policical leader if you join any TN parties or else atleast u can get one morning slot in their TV channel where also u can generate huge amount….good luck…

  54. Avatar
    ராமன் முள்ளிப்பள்ளம் says:

    1953 ல் ராஜாஜியை எதிர்த்த காங்கிரஸ் தலைவர் டி ஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் செயல்லாளர். இவர் TGK என அறியப்பட்டார்.1952 தேர்தலில் பெரும்பாலான காங்கிரஸ் எம் எல் ஏ க்களை தேர்ந்தெடுத்த காரணத்தினால் இவர் சுமார் 97 எம் எல் ஏ க்களின் கையொப்பம் பெற்று ராஜாஜியை எதிர்த்தார். 97 எம் அல் ஏ க்கள் நம்பிக்கையில்லா தீர்மாணம் கொண்டுவரும் முன் ராஜாஜி தானாகவே ராஜினாமா செய்தார். டி ஜி கே தலைமையிலான காங்கிரஸ் எம் அல் ஏ க்களின் ராஜாஜி மீதான குற்றச்சாட்டு அவர் நேரு வின் சோசலிஸத்தை பின்பற்றவில்லை மாறாக பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்கிறார் என்பதே.

  55. Avatar
    Indian says:

    This reminds me of the song ” why this Kolaveri?”.
    Why this Kolaveri against Hindi and Sanskrit? Why are Tamils so paranoid about their mother tongue? After all, language is only a medium of communication and nothing else.
    “த‌மிழுக்கு ந‌ன்றி சொல்ல‌வேண்டிய‌
    ச‌மஸ்கிருத‌ம்
    த‌மிழைத் தின்று
    விட்ட‌ ஏப்ப‌மே
    இந்த‌ இர‌ண்டாயிர‌ ஆண்டுக‌ளாய்
    த‌மிழ் நாட்டை
    இருட்டில் த‌ள்ளிய‌து.”
    Mind boggling at this idiocy. Is Tamil so weak that some language can push TN into darkness? Pray tell us what this darkness is all about? Poetic (!) emotional out pour does not constitute logic and common sense.

    1. Avatar
      K A V Y A says:

      நீங்கள் சொல்வதுதான் அபத்தம்.

      எந்த மொழியையும் அழிக்க முடியும். ஹிந்தி ஆயிரக்கணக்கான இந்திய மொழிகளை அழித்திருக்கிறது என்று மார்க் டுலி காட்டுகிறார்.

      எந்த மொழியும் ஆதரவில்லையெனில் காணாமல் போய்விடும். தொடர்ந்து ஆதரவு இருந்து கொண்டேயிருக்கவேண்டும். இல்லையெனில், எந்த மொழிக்கு ஆதரவு இருக்கிறதே அம்மொழி இம்மொழியை விழுங்கிவிடும்.

      மொழிகளில் வரலாறு இதே. இம்மொழிக்கொள்கைக்குள் வராதபடி இருக்க தமிழ் ஒன்றும் அதிசய மொழியன்று.

      தமிழையும் அழிக்கலாம். அல்லது காணாமல் போகவைக்கலாம் தமிழர்களில் ஆதரவு வேறுமொழிக்குச் சென்றால்.

      எனவேதான் இம்மாதிரி கட்டுரைகள் தமிழர்கள் மனங்களை அவர்கள் மொழிக்கெதிராக மாற்றும் முயற்சி என்று பயப்படவேண்டியாதாகிறது.

  56. Avatar
    மலர்மன்னன் says:

    இந்தக் கட்டுரைக்கு மட்டுமாவது உன் பதிலை அனைவருக்குமாக எழுதிவிடு என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தி மின்னஞ்சல்கள் வருகின்றன.
    இந்த பதிலுடன் திருப்தி அடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    1. ஈ.வே.ரா. அவர்கள் தமது ஹிந்தி எதிர்ப்பு ஓர் அரசியல், அது ஒரு ஆயுதம்தான் என்று தமது குடியரசில் (1938 ஆம் ஆண்டு குடியரசு இதழ்கள்) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    2. தமது ஹிந்தி எதிர்ப்பு ஆங்கிலத்துக்காகத்தான் தமிழுக்காக அல்ல என்றும் தமிழில் படிக்க என்ன இருக்கிறது என்றும் விடுதலையில் ஈ.வே.ரா. அவர்கள் எழுதியுள்ளார். மேலும், தமிழ் மொழியைப் பல தடவைகள் மிகவும் கேவலமாக விமர்சித்துள்ளார்.
    3. 1965-ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் நூற்றுக்கு ஐம்பதுபேர்கூட மாணவர்களாக இருக்க மாட்டார்கள், காலிகள்தான் அதை நடத்துகிறார்கள் ஆனால் மாணவர்கள் நடத்துவதாகச் சொல்கிறார்கள், அதையே பத்திரிகைக்காரர்களும் எழுதுகிறார்கள் என ஈ.வே.ரா அவர்கள்தான் விடுதலையில் எழுதினார் (8-2-1965). அவரே இந்தியா ஒரு நாடா இருக்கணும்னா ஒரு பொது மொழி வேண்டாமா என்றும் கேட்டார் (விகடன் பேட்டி) . இந்த விவரங்களை நான் எனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன், அவ்வளவே. எனது மேற்படி கட்டுரையில் ஆதாரப் பூர்வமான தகவல்கள்தான் இருக்கும். எனது சொந்தக் கருத்துகள் ஏதேனும் இருக்குமாயின் அவை மிக மிக்க் குறைவாக , மேலதிக விவரமாக இருக்கும்.
    4. நமது நாட்டுக்குப் பொதுமொழியாக இருக்கத் தகுதி வாய்ந்தது சமஸ்க்ருதம் என்று சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்தான். நான் அல்ல.
    5. ரயில் நிலையம், ரயில் பெட்டிகள், பஸ் நிறுத்தங்கள், பஸ்கள், முதலானவை மக்களின் பொதுச் சொத்து. அவற்றில் கிறுக்குவதையும் எழுத்துகளை அழிப்பதையும் ஆங்கிலத்தில் vandalising என்பார்கள். இதன் பொருளை அகராதியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். எனது பதில் ஒன்றில் உள்ள, கட்டுரையில் இல்லாத ’சிறுபிள்ளைத்தனம்’ என்ற பிரயோகம் அதைவிட எவ்வளவோ மேல். ரயில் நிலையப் பலகைகளில் ஹிந்தி கூடாது என்ற கோரிக்கை இருக்குமானால் ரயில் நிலையம் முன்பும் ரயில்வே தலைமையகங்கள் முன்பும் ரயில்வே அமைச்சர், பிரதமர் அலுவலகங்கள் முன்பும் வன்முறையின்றி ஆர்ப்பாட்டம் நடத்துவதே நாகரிகம். பொதுச் சொத்துகளிலும் தனியார் கட்டிடச் சுவர்களிலும் முழக்கங்கள் எழுதுவதும், தலைவர் பிறந்த நாள் வாழ்த்துகள் எழுதுவதும், தேர்தல் சின்னம் வரைந்து வாக்கு கேட்பதும் அத்துமீறல் என்பதோடு நகரை அசிங்கப் படுத்துவதுமாகும். பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும்படியான பழக்கங்கள் இவை.
    6. டால்மியாபுரம் என்பது புதியதாக உருவான நகரம். அதற்குமுன் அங்கு ரயில் நிலையம் இல்லை. டால்மியாபுரம் என்ற பெயர் நாற்பதுகளின் தொடக்கத்திலே யிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்ததுதான். தி. மு க போராட்டம் 1953-ல்.
    7. ராஜாஜியைப் பதவி நீக்கம் செய்ய விரும்பிய தமிழ் நாடு காங்கிரஸ்காரர்கள் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னர்கள். அதில் பிரதானமானது குலக் கல்வித் திட்டம் கொண்டு வருகிறார் என்பது.
    எனது கட்டுரையைப் படித்துவிட்டு ஈ.வே.ரா. சொன்னதையும் அம்பேத்கர் சொன்னதையும் நான் சொன்னதாகக் குறிப்பிட்டு எதிர்வினைகள் செய்வது மிக மிகச் சாமானியனான என்னை அந்தப் பெரியவர்களுக்கு இணை வைப்பதாகும். அந்தப் பெருமைக்கான தகுதி எனக்கு இல்லை. எனக்குத் தெரிந்தவரை அனைவருக்கும் பொதுவான பதிலை எழுதிவிட்டேன். இனியும் எழுது, எழுது என எவரும் வற்புறுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
    -மலர்மன்னன்

    1. Avatar
      K A V Y A says:

      அம்பேத்கர் சொன்னார்; ஈவெரா சொன்னார்; அண்ணாத்துரை சொன்னார். ஓகே. மலர் மன்னன் என்ன சொல்கிறார்?

      1. Avatar
        paandiyan says:

        \அம்பேத்கர் சொன்னார்; ஈவெரா சொன்னார்; அண்ணாத்துரை சொன்னார். ஓகே. மலர் மன்னன் என்ன சொல்கிறார்?\

        உங்களை எல்லாம் ஒழுங்காக படிக்க சொல்லுகின்றார். பாவம் அவரும் எத்தனை தடவைதான் அதைய திரும்ப திரும்ப சொல்லபோகின்றரோ….

        1. Avatar
          Kavya says:

          மலரமன்ன்னுக்கென்று ஒரு கருத்து இல்லாமலா போகும்? அதைச்சொன்னலென்ன? அம்பேத்கரையும் ஈவெராவையும் அண்ணாத்துரையும் போய்ப்படியுங்கள் என்று சொல்ல மலர்மன்னன் என்ன வாத்தியாரா? இல்லை அவர்களப்படிக்க திண்ணைக்கு ஏன் வரவேண்டும்? திமுக, தி க பொதுக்கூட்டங்களுக்கோ, அல்லது நூலகங்களுக்கோ போயிருக்கலாமே?

          He should reveal his side on language policy. Because using others, he hides some agenda. Whats that?

    2. Avatar
      R Venkatachalam says:

      ராஜாஜியை காங்கிரஸ்காரர்கள் விரும்பாததற்கு முக்கியமான காரணம் அவர் கட்சி வேறு அரசு வேறு என்று கண்டிப்பாக இருந்ததுதான். எம் எல் ஏக்கள் யாரும் தலைமைச் செயலகத்துக்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு போட்டார். நிர்வாகத்தில் கட்சி நுழையக்கூடாது என்பது அவர் கொள்கை.
      மேலும் நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் அவருக்கு ஏற்புடையது. ஆனால் பெரும்பாலோனோர் முதலில் அரசியலுக்கு வந்தது கௌரவம் அந்தஸ்த்து காரணமாக.அவர்களில் 1940க்குப்பிறகு சுதந்திரம் நிச்சயம் வந்துவிடும் என்று தெரிந்தபிறகு அரசியலுக்கு வந்தவர்கள்தான் அதிகம் பேர்.

      கருணாநிதிக்குப் பிறகு வந்தவர்கள் வந்தது கொள்ளை அடிக்க. கொள்கையாவது கத்திரிக்காய் ஆவது.

      இந்தமாதிரி சூழலில் ராஜாஜி போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களுக்கு ஏது இடம்? காந்தியின் ஐந்து சாகாக்களில் முதலில் இருந்தவராக காந்தியால் தன்னுடைய அரசியல் வாரிசு மனசாட்சியின் காவலர் என்றெல்லாம் போற்றப்பட்டவர், கவர்னர்ஜெனரலாக முதலமைச்சராக கவர்னராக இருந்தவர் தன் வீட்டில் தனக்கு என்று ஒரு கடனில் வாங்கிய காருக்கு டுயூ கட்ட முடியாமல் அக்காரை திரும்பத்தந்துவிட்டவர் 1972 ஆம் ஆண்டு காமராஜரோடு அவர் அமைத்து இருந்த கூட்டணி தேர்தலில் விழுந்து நொறுங்கிக் கொண்டு இருந்ததைக் கேட்க பக்கத்துவீட்டுக்காரரிடம் டிரான்ஸ்சிஸ்டர் இரவல் வாங்கி தேர்தல் செய்தியை கேட்டவர் ராஜாஜி. அவர் ஒரு ஃபினாமினன் அவரைப்போல வேறொருவர் அவர்காலத்தலைவைர்களில் அகில இந்தியாவிலும் ஒருவரும் இல்லை.

  57. Avatar
    Indian says:

    இந்திய மொழிகளை அழித்திருக்கிறது என்று மார்க் டுலி காட்டுகிறார்.
    Who is this guy Mark Tully?Is it the BBC guy? He should worry more about England, considering the mess it is in. I particularly attach very little importance to white fellas opinion, especially on matters that is local and Indian. Anyhow, that is an opinion of one individual.Period.
    As far as I can see, Tamil, such a great rich language, is alive and well and thriving. It hasn’t been gobbled up by any other language or person.
    Now don’t say it is all because of DK/DMK wallas!
    Bottom line is this: Why are Tamils so paranoid about Tamil?

    1. Avatar
      R Venkatachalam says:

      இந்தியன் ஐயா அவர்களே உலகத்தில் வேகமாக அழிந்து வரும் ஐம்பது மொழிகளில் தமிழும் ஒன்று. இது யுனஸ்கோவின் ஆய்வில் தெரியவந்து உள்ள ஒன்று. தாங்கள் பள்ளி மாணவ மாணவியர் பேசுவதைச் செவி உறுவதில்லையா? பத்து சொற்கள் பேசினால் அதில் ஏழு அல்லது எட்டு சொற்கள் ஆங்கிலச்சொற்கள் இருக்கும். ஆங்கில மொழி வழிக்கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் ஆங்கிலத்திலேயே உரையாடுவது மிக சாதாரணமாக நடைபெறும் ஒன்று. அக்குழந்தைகள் தமிழைக்கற்பதோ அல்லது பேசுவதோ கிடையாது.

  58. Avatar
    Indian says:

    I agree Shri R Venkatachalam. It is common for people to communicate in English more than in their own mother tongue. This is more so among Tamils. Group of Punjabis/Malayales etc, talk in their own language when they get together(I feel left out when you are in this sort of situation)This is a problem due to 1) Tamils feel it is cool/ fashionable to speak in English 2) Tamils are well versed in English, more than any other sections in India and are comfortable in conversing in English 3) I hate to say this but is Tamil ??? outdated for usage for common man in modern times? It is easier for auto rickshaw driver to understand ” Bus Stand” instead of ” Perinthu Nilayam”.”Phone” is easy to understand than ” Tholai Pesi” I don’t have an answer how one can change this situation other than blaming Macaulay education.I also feel Tamil as a language need to evolve if it is facing extinction.

  59. Avatar
    லெட்சுமணன் says:

    தமிழ் மொழி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று ஆங்கிலத்தில் உரையாடல். விளங்கிவிடும்.

    “மெல்ல தமிழ் இனிச் சாகும் என்று
    அந்த பேதை உரைத்தான்.

    காவ்யா என்ன ஆச்சு இன்னும் இந்த பின்னூட்டத்தை படிக்கலையா?

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *