தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

ஒரு கூட்டம் புறாக்கள்

ஹெச்.ஜி.ரசூல்

Spread the love

கூடுகளில் அடைபட்ட புறாக்கள்
கல்லெறிந்து தீ எரித்து
இரவினில் கலைத்து விடுவதற்கல்ல
விடிகாலையில் தீனிகொத்தும் அழகைரசித்து
குழந்தைகளோடு தத்தித்தத்தி நடந்தாடும்
ஒரு கூட்டம் புறாக்கள்
முன்பொரு நாள்
நேர்ச்சைக்கடனுக்காய் வழங்கிய
குஞ்சுப்புறாக்களும் இவற்றில் காணக்கூடும்
பறக்கவும் நடக்கவும் தெரிந்த புறாக்கள்
மினராக்களில் உட்கார்ந்து நடுங்குகிறது.

Series Navigationபத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்

Leave a Comment

Archives