தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 பெப்ருவரி 2020

என்னை மன்னித்து விடு குவேனி

எம்.ரிஷான் ஷெரீப்

Spread the love

 

 

மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய

கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில்

இப்பொழுதும்…

அதிர்ந்து போகிறதென் உள்மனது

 

தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான்

நினைவிருக்கிறதா அந் நாட்களில்

தாங்கிக்கொள்ள முடியாத குளிர்

விசாலமாக உதித்த நிலா

 

பொன் நிற மேனியழகுடன்

எனதே சாதியைச் சேர்ந்த

எனது அரசி

எமதிரட்டைப் படுக்கையில்

ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக

 

குழந்தையொன்றை அணைத்தபடி

அரண்மனை மாடியில் நின்று

கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற

கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும்

 

இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது

அம் மோசமான நிலா

மண்டபத்திலிருந்து

மயானத்தின் பாழ்தனிமையை

அறைக்குக் காவி வருகிறது

 

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationஅவம்சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.

Leave a Comment

Archives