தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

23 பெப்ருவரி 2020

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்

ருத்ரா

Spread the love

 

ஆயிரம் பக்க
எழுத்துக்களின்
\”போன்சாய்\” மரம்

காதல் தீயை
பற்ற வைக்கும்
சிக்கி-முக்கிக்கல்.

சங்கத்தமிழ்
அடைந்து கிடக்கும்
முத்துச்சிப்பிகள்

ஒரு சோறில்
ஒன்பதாயிரம்
பசி.

எதிர்வீட்டு ஜன்னலில்
உட்கார்ந்து இருப்பவர்கள்
காளிதாசன் கம்பன்கள்.

மொழியே  இல்லாத
ஹைக்கூ
குயிலின் குக்கூ.

பேனாவின் ஒற்றைப்புள்ளியில்
காதலின்
ஏழுகடல்கள்.

இரு எழுத்து போதும்
காதலின் பிரபஞ்சம் தெரிய..
\”கண்\”

கழி நெடிலடி எண்சீர் விருத்தமும்
கழுத்து சுளுக்கிக்கொண்டது ..அவள்
\”களுக்\” சிரிப்பில்.

கவிதைக்கடல் இங்கே
கர்ப்பம் தரித்த சொல்
\”பாரதி\”

Series Navigationகளரி தொல்கலைகள் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்மணலும் நுரையும்! (3)

2 Comments for “குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்”

 • தேமொழி says:

  “மொழியே இல்லாத ஹைக்கூ குயிலின் குக்கூ” இது மிகவும் அருமை, நன்றி.
  தேமொழி

 • e.paramasivan ruthraa says:

  நன்றி!தேமொழி அவர்களே.

  மொழியின் விரிவை சுருட்டி மடக்கி சொல்வது தான் ஹைக்கூ என்ற கருத்து
  இப்போது ஏற்பட்டிருந்தாலும் சொல்லாமல் விட்டு விடும் வெறுமையை உணர்வின் வர்ணக்குழம்பில் அச்சு எடுப்பதும் குறும்பாக்கள் தான்.அற்புதமான பரிமாணங்கள் கொண்டவை குறும்பாக்கள்.உங்கள் ரசிப்புக்கு என் நன்றி.

  அன்புடன்
  ருத்ரா


Leave a Comment

Archives