கால் இருந்ததால்,
வாசம் வசமானதென்றாள்
கால் உள்ள மது, மாது
அவள் கள்ள சிரிப்பால்
பேதை அவன் கால் முளைத்து
போதைக்கு பலியானான்
அ.நாகராசன்.
பி.கு- கால் என்றால் காற்று ,
கால் என்றால் உடல் உறுப்பு,
கால் என்றால் குறிலை நெடிலாக்கும் தொனை கால் (உ.ம்) மது-மாது