தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

அறுவடை

ப மதியழகன்

Spread the love

கனவுக்கும்
நனவுக்கும்
இடையே இருந்தேன்
காலக் கணக்குகள் தப்பாகாது
வசிப்பது ஏ.சி அறையிலென்றால்
இறந்த பின்
அரியணையில் உட்கார வைத்து
சாமரம் வீசுவோர் உண்டோ
விதிக்கு கை விலங்கு
போட்டுவிட்டேன் என்று
நுனி மரத்தில் உட்கார்ந்து
அடி மரத்தை
வெட்டுவோர் உண்டோ
சமரில் சமரசம்
கொள்ளாதே என்று
கீதை உரைத்தவன்
வேடனடிக்க மாண்டது
விநோதமல்லவா
கருவறை இருட்டு
என்றாலும்
வெளியே நடப்பது
கர்மாதி கர்மமன்றோ
கோடி புரளும்
கோயிலெல்லாம்
உண்டிங்கே
மகசூல் விருத்தியாகி
விவசாயி வீட்டில்
உலை கொதிப்பதற்கு
நேரம் வராதோ இங்கே.

Series Navigationகுயூரியோஸ் அஸ்வினின் ‘ இன்பாக்ஸ் ‘வால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)

One Comment for “அறுவடை”

 • தேமொழி says:

  கோடி புரளும்
  கோயிலெல்லாம்
  உண்டிங்கே
  மகசூல் விருத்தியாகி
  விவசாயி வீட்டில்
  உலை கொதிப்பதற்கு
  நேரம் வராதோ இங்கே

  இந்த வரிகள் மிகவும் பிடித்தது. காலங்கள் மாறினாலும், அரசுகள் மாறினாலும் மாறாத ஒன்று இந்தச் சூழ்நிலை. நன்றி.

  …தேமொழி


Leave a Comment to தேமொழி

Archives