தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….

தமிழ்மணவாளன்

Spread the love

nanda1 nanda2nanda2

இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே…எனக்கும் பிடிக்கும்…
‘அழகன் அழகி’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது.
‘அழகன் யார்..? அழகி யார்..?’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், அவர்கள் செல்லும் ஊருக்கெல்லாம் நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள்.அவர்களைச் சந்திக்க வரும் கதாபாத்திரங்களையெல்லாம் நம்மையும் சந்திக்க வைக்கிறார்கள்.அடேயப்பா…!எத்தனைக் கதா பாத்திரங்கள்…
ஒவ்வொன்றும், ஒரு சிறப்புச் சிறுகதைக்குத் தகுதி வாய்ந்த புனைவுப் புள்ளிகள்…….புள்ளிகள் தானே கோலத்தில் அடிப்படை…..புனைவுப் புள்ளிகளை வைத்து வண்ணக்கோலம் வரைந்திருக்கிறார்… இயக்குனர் நந்தா பெரியசாமி
படம் தொடங்கியது முதல், Non –stop express… ஆமாம்! நகைச்சுவைப் பெட்டிகளால் கோர்க்கப்பட்ட  Non –stop express… ரயில்..
ஒவ்வொரு நிமிடமும் இடைவெளியில்லாத சிரிப்புத் தோரணம்…
தோரணம் மட்டுமன்று. சமூகக் காரணம்..உள்ளே வேரோடியிருக்கிறது.
நாட்டின் நடப்பை நகைச்சுவையாய், பார்வையாளனை சந்தோஷ சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்வதில் இயக்குனர் நந்தா பெரியசாமி வெற்றி கண்டிருக்கிறார்…அரங்கில் சிரிப்பலைகள் அதற்குச் சாட்சி…!
சரவெடிக்குப்பின் வெடிக்கும் அணுகுண்டாய் …. அழுத்தம் மிகுந்த கதை வெளி…
‘பெண்ணின் பெருந்தக்க யாவுள…’
ஒருபோதும், சமூகம்  இக்கருத்தை வழிமொழிவதில்லை…..மாறாகவே…..ஒவ்வொரு பெண்ணுக்கு மொவ்வொரு மாதிரியாய்…..
எழும் சிக்கலில் இருந்து எப்படி வெளி வருவது…?என்னும் காட்சிச் சித்தரிப்புகள், கதையின் பாதையில் நாம் பயணிக்கிற வேளையில்,எதிர்பாராத திருப்பமாய், முற்றிலும் எதிர்மறையான திருப்பமாய் ஆச்சர்யமும் அதிச்சியும் கலந்த சம்பவக் கலவையாய்… வியப்பின் விளிம்பில் நிற்க வைக்கும் இடை வேளை…
இயல்பான முகத்தை எல்லோரும் காணமுடியும்..
இன்னொரு முகத்தை கலைஞனால் தான் தரிசிக்க முடியும்..
அவ்விதம், நந்தா பெரியசாமி தரிசிக்கும் தருணம் தான் இடைவேளை..!
கலகலப்பின் உச்சத்தை கைவசம் வைத்திருக்கும்,கதைப் போக்கில்,பங்கேற்கும் கலைஞர்களின் பங்களிப்பு பரவசப்படுத்துகின்றன.
நாயகன் ஜாக்-அவருடன் ஷாம்ஸ், ஆர்த்தி சேர்ந்து அடிக்கும் லூட்டி, சிக்கனமில்லாமல் நம்மை சிரிக்க வைக்கிறது.
சின்னத்திரையோ, பெரிய திரையோ –திரையில் முகம் தெரிய வேண்டும் என்னும் ஆசையின் யதார்த்தப் பதிவாய், அதன் பொருட்டு வெகுளியாய் வெளிப்படும் வெங்கடேஷ் அசத்தல் இன்ஸ்பெக்டர் ….
நாயகி ஆருஷி பல இடங்களில் மிகத்தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.
GM குமார், ரவிமரியா ஆகியோரின் பங்களிப்பு பலம்.
‘ரேணிகுண்டா’ படத்துக்குப் பின்னர் ரோஜாபதிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. சரியாக தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
பாடல்கள் மிகவும் இனிமையாக வந்திருக்கின்றன. குறிப்பாக மழைத்துளியா…? பனித்துளியா…? பாடல் காதுக்கு இனிமை…கண்ணுக்கு குளுமை.
ஒளிப்பதிவாளரைக் கட்டாயம் பாராட்ட வேண்டும்.அப்பாடா… என்ன ஒரு நேர்த்தி….? clarity…quality….
இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்..
அதற்குள் இடைவேளை முடிந்து படம் தொடங்கி விட்டதே…
ஊகிக்க முடியாத திருப்பத்தில், இடைவேளைக்குப்பின் வேகம் கொள்ளும் கதைக்களம்.
ஒற்றைப்புள்ளியை நோக்கிய பல் வழிச் சாலையாய்…..
காட்சிக்குக் காட்சி கவன ஈர்ப்பைக் கோரும் முக்கியத்துவத்தோடு, சுறுசுறுவென பார்வையாளனை நாற்காலியின் முனைக்கு நகரச்செய்யும் எதிர்பார்ப்புகள்…
ஆர்வத்தைத் தூண்டி விட்டு அதன் போக்கில் விறுவிறுப்படைகிறது கதையோட்டம்…
இயக்கத்தின் தீவிரத்தில் இருக்கும் போது, நெஞ்சை உறைய வைத்துவிடுகிற உச்சம்.
மிச்சம் வைக்காத உச்சம்.
நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை நாம் அடையாளம் காணும் உச்சம்.
படம் வெளிவரும்போது பாராட்டுகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நல்ல படத்தின் தயாரிப்பாளர் குருராஜன் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
’அழகன் அழகி’ வெல்ல, இயக்குனர் நந்தா பெரியசாமிக்கு என் வாழ்த்துகள்.

Series Navigationகவிதைகள்மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ

One Comment for “நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….”

  • punaipeyaril says:

    சிறகு ரவிச்சந்திரன் தான் படத்தை பார்த்து எழுதனும்..


Leave a Comment

Archives