தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 ஜனவரி 2021

பேரழகி

ப மதியழகன்

Spread the love

உயிர் பிரியும்

இறுதி வினாடியில்

நினைத்துப் பார்க்கிறேன்

வாழ்ந்திருக்கலாமே என்று

விடை பெறும் தருணத்தில்

தவறவிட்டு விட்டேன்

வழியனுப்பி விட்டு

திரும்பி இருக்கலாம்

மதுப் புட்டியில்

மயங்கி விழுந்தேன்

புதுப் புது கவிதைளோடு

பிறகு எழுந்தேன்

போதைியில் அமிழ்ந்தால் தான்

எழுதுகோலில் மை

கரைகிறது

நதியில்

நீந்துவதெல்லாம்

கவிதையோடு

கரை சேர்வதற்காகத்தான்

கற்பனைக்காக

கடிவாளத்தை கழற்றிய போது

துகிலுரித்துக் காட்டினாள்

அரசிளங்குமரி

சுயம்வரத்தில் தோற்றால் என்ன

விளக்கை அணைத்தால்

படுக்கை விரிப்பும்

பஞ்சு மெத்தை தான்

அடுக்களைக் கூட

அந்தப்புரம் தான்

எல்லோரும்

மகாராணிகள் தான்.

Series Navigation‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…ஒரு செடியின் கதை

One Comment for “பேரழகி”

  • கவிஞர் இராய. செல்லப்பா says:

    //உயிர் பிரியும் / இறுதி வினாடியில் / நினைத்துப் பார்க்கிறேன் / வாழ்ந்திருக்கலாமே என்று// – என்ற வரிகளை ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் உச்சரிக்கத்தான் போகிறான், தான் மரிக்கும் தருணத்தில். தரமான கவிதை. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா


Leave a Comment

Archives