எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர். தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். அடக்கம் மிகுந்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை. அவர் எதிர்பார்த்ததுமில்லை. அக்காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும் போல தம் இயல்பில் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கம் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்ட போதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்த போதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு தியாகம் என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.
அவர் 1974-ல் இறந்த போது அவர் சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில் தான் இருந்தது. அவர் குமாரர்கள் தம் வழிச் சென்றுவிட்டனர். இது எங்கும் அனேகமாக நேர்வது தான். அவரது இரண்டாவது மகள், பாப்பா தான் வீடுகளில் சமையல் வேலை செய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். திஜர வின் மறைவிற்குப் பின்னும் இதே நிலை. 2008-ல் தமிழக அரசு திஜர வின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கி ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த ஆறு லட்ச ரூபாயைப் பங்கு போட்டுக்கொண்டனர் திடீரென தோன்றிய திஜரவின் சட்டபூர்வமான வாரிசுகள் அனைவரும். இதுவும் அனேகமாக எங்கும் நடப்பது தான். அதில் திஜரவையும் தாயையும் காப்பாற்றி வந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியதாகியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களூக்குப் போயிற்று.
இப்போது, தந்தை திஜரவையும் தன் தாயையும், காப்பாற்றி வந்த பாப்பா வுக்கு 86, இப்போது அவரையும் தன் 50 வயது அக்காவையும் காப்பாற்றி வருவது அவரது இரண்டாம் மகள், திஜர வின் பேத்தி, 48 வயது சத்திய பாமா. அவர் குழந்தைகளுக்கு பாட்டு வகுப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வந்தது. அம்மா அக்கா இருவருமே முதுமையின் தேக உபாதைகளால் துன்புறுபவர்கள். அவர்களுக்கான மருத்துவ செலவும் சேர்ந்து கொள்ள அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இரண்டாம் பேத்தியினதாகியது.
தீக்ஷை பெற்று சன்னியாசியாக தனித்து வாழ்ந்த வந்த மலர்மன்னன் தான் அவர்களைத் தான் இருந்த இடத்திற்கு அழைத்துப் பாதுகாத்து வந்துள்ளார் கடந்த சில வருஷங்களாக. அவரும் இப்போது மறைந்துவிட்டார். மலர் மன்னன் தன் கடைசி வருடங்களில் சத்தியபாமாவின் பாட்டு வகுப்புக்களையும் நிறுத்தச் சொல்லி அவர்களது முழு பாதுகாப்பையும் தாமே எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். அவர்களது பெயரில் ஒரு வைப்பு நிதி ஒன்று வசூலித்து ஏற்படுத்தி விட்டால் அதிலிருந்து வரும் வட்டி இவர்களை ஓரளவுக்குக் காப்பாற்றும் என்பது அவரது திட்டமாக இருந்திருக்கிறது. அவரது மறைவிற்குப் பிறகு, அந்தத் திட்டமும் நிறைவேறாது அவரது பாது காப்பும் அற்ற நிலையில் திஜரவின் பேத்தி இருவரும் அவர்களது முதிய தாயும் விடப்பட்டுள்ளனர். குறைந்த வாடகையில் அவர்கள் இருப்பது மலர்மன்னன் இருந்த இடம் தான். மலர் மன்னன் இறந்ததும் அவரது குடும்பத்தார் வந்து மலர்மன்னனின் புத்தகம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்று விட்டனர்.
எனது வேண்டுகோள் நாம் எல்லோரும் அவரவருக்கு முடிந்த அளவில் செய்யும் பொருள் உதவி மொத்தமாக வறிய நிலையில் அனாதையாகி விட்ட இவர்களூக்கு உதவக்கூடும். ஆறு லட்சம் அரசின் நிதி உதவி பெற்ற குடும்பம் என்ற பெயர் அழுத்தி வதைக்கும் வெற்று பாரமாகவே இவர்களுக்கு ஆகியுள்ளது வாழ்க்கையின் தரும் முரண்களில் ஒன்று.
எனவே திரும்பவும் எனது வேண்டுகோள். அவரவர் சக்திக்கு ஏற்றபடி உதவி அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விவரங்கள்.
R. Sathyabama, SB A/c No. 37950100001010,
IFSC code BAR8 ‘O” THICE, Micr code 600012047
Bank of Baroda, Thiruvanmiyur Branch,
Chennai
அவரது முகவரி: R.Sathyabama, 18/37, MuthuLaxmi Road,
Laxmipuram (near Pamban Swami mutt)
Chennai-41 PIN 600 041
- மோட்டூர்க்காரி!
- “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
- சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி வெளியீடு
- தாகூரின் கீதப் பாமாலை – 68 தேர்ந்தெடுத்த என் பாதை .. !
- நினைவு மண்டபம்
- மருத்துவக் கட்டுரை நிமோனியா
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23
- மொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்
- நீங்காத நினைவுகள் – 6
- வெற்றி மனப்பான்மை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -5
- திருமால் புகழ்பாடும் திருப்புகழ்
- அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
- நான் இப்போது நிற்கும் ஆறு
- மதுரையில் ஆடிய குரவைக்கூத்து
- NH அவிநாசி திருச்சிசாலைச் சித்திரங்கள் – இளஞ்சேரலின் சிறுகதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -27 என்னைப் பற்றிய பாடல் – 21 (Song of Myself) மூர்க்கத் தோழன் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 6,7
- அக்னிப்பிரவேசம்-37
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13
- புகழ் பெற்ற ஏழைகள் – 10
- செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
- விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?
சரியான ஒருவர் மூலம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. என்னிடம் அவர் இது பற்றிச் சொன்ன போது திண்ணையில் என்னால் எழுதுவதை விட வேறு பெரியோர்கள் எழுதினால் நன்றாயிருக்கும் என்று நினைத்தது தாண்டி எதுவும் செய்யவில்லை. மலர்மன்னன் மறைவிற்கு பின்னர் யாரும் இந்த விஷயம் கேட்டு யாரும் முன்னெடுக்கவில்லை என்று வேதனைப்பட்டார் அவர். திருமதி.சீதாலட்சுமியிடம் சொல்லியதாகச் சொன்னார்.பின்னர் தான் திருமதி.சீதாலட்சுமி அவர்கள் முதுமையால் அமைதி காப்பதாக அவரது தொடரின் இறுதி அத்தியாத்தில் பொதுவாகச் சொல்லியது படித்தேன். திருமதி.சத்யா அவர்களின் மின்னஞ்சல் satya_malar@rediffmail.com அவரிடம் திரு.மலர்மன்னன் எழுதிய ஒரு கோரிக்கை கடிதம் இருப்பதாகச் சொன்னார். அதை ஸ்கேன் பண்ணி அனுப்பச் சொல்லியும் இன்னும் வரவில்லை. அவரே நேரிடையாக பிறரிடம் கேட்பதற்க்கு சங்கடமாக இருப்பதாகச் சொன்னார்.
அவரது – திருமதி . சத்யா – செல்பேசி 97899 62333
my IFSC CODE BECOMR IFS8 SO KINDLY APPROVE MY CORRECT CODE
IFSC CODE BARB O THICHE
WARM REGARDS
SATHYA BAMA.R
coorect IFSC Code:BARB0THICHE.pl note
Is thier any Tamizh writters Assn existes in T.N.? What are they doing?
நான் திரு சோம சுந்தரம் கேட்ட கேள்வியை கேட்டிருந்தால் அஃது இடக்காகவும் மனித நேயமற்றதாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்
நல்லவேளை இன்னொருவர் அதைச்செய்துவிட்டார் இனிநான் பேசலாம்.
செய்தியாளர்கள் புரம் என்ற இடமும் பொறியாள்ர் நகர் என்றும் மதுரையில் உண்டு. அவர்களுக்கென்று மனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தில்லியில் ப்ரஸ் என்க்ளேவ் உண்டு. நக்கீரன் கோபாலுக்கு ஒன்று என்றால் செய்தியாளர்கள் ஒன்று கூடுகிறார்கள். ஹிந்து ராம் தலைமை வகிக்கிறார்.
வக்கீல்கள் நான்காவது நாளாக புதுவையில் தமிழகத்தில் நீதிமன்ற புறக்கணிப்பு நடாத்திவருகிறார்கள்; ஏனென்றால் டி ஜி பி அவர்கள சங்கத்தலைவரை அவமதித்துவிட்டாராம். அட்வகே வெல்ஃபேர் பண்டு என்று ஸ்டாம்பு ஒட்டினால்தான் மனுவை கோர்ட்டு எடுத்துக்கொள்ளும். அப்பணத்தை தரவேண்டிய பொறுப்பு கட்சிககாரருக்கு.
நலிந்த கலைஞர்கள் வய்தான காலத்தில் கவனிப்பாரற்று வாடும்போது நடிகர் சங்கம் நிதி திரட்டிக்கொடுக்கிறது. சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடாத்துகிறது.
ஒரு ஓட்டுனரை ஒரு எம் எல் ஏ தாக்கினால் தமிழகமே ஸ்தம்பித்துவிடுகிறது. அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்படுகின்றன.
பொறியாளர்கள், மருத்துவர்கள் அரசு ஊழியர்கள் என்று எல்லாரும் தத்தம் அமைப்புக்களை வைத்துக்கொண்டு அவர்களுள் நலிந்து வாடுவோருக்கு உதவுகிறார்கள். அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கென்றே கேந்திரிய வித்யாலாக்கள்.
இந்த எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்கள் தங்கள் வயிறு வளர்ந்தால் போதும் என்று சோத்தால் அடித்த பிண்டங்களாக வாழ்கிறார்கள். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்கிறார்கள். தாய்லாந்தி சிங்காரிகளின் அரவணைப்பிலே போட்டோ போடுகிறார்கள். அஹங்காரமே என் போதை என்கிறார்கள். சினிமா நடிகனைப்போல இரசிகர் மன்றம் வைத்துக்கொண்டு ஒரு எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளன தாக்கிக்கொண்டு வாழ்கிறான். சினிமா கதை எழுதி பணம் பண்ணப்பார்க்கிறர்கள். பெரிய கட அவுட்டுக்களில் சிரிக்கிறார்கள்.
பணங்கொழுத்த எழுத்தாளன் ஏழை எழுத்தாளன் எவரென்று கண்டு கொள்வதே இல்லை;.தான் வாழ்ந்தால் போதும் என வயிறு வளர்க்கும் இக்கூட்டம்.
எனவே திண்ணையில் அன்பர்களுக்காக என்று கோரிக்கை வைக்கிறர் ஒரு விமர்சக எழுத்தாளர் இன்னொரு மறைந்த எழுத்தாளரின் நலிந்து வாடும் குடும்பத்துக்காக. அவரால் ஒரு எழுத்தாளர் சங்கத்திடம் வைக்க முடியவில்லை.
என்னே இயற்கை!
நான் திரு சோம சுந்தரம் கேட்ட கேள்வியை கேட்டிருந்தால் அஃது இடக்காகவும் மனித நேயமற்றதாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். நல்லவேளை அவருக்குப்பின் நான் பேசலாம்.
செய்தியாளர்கள், வக்கீல்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், திரைப்படக்கலைஞர்கள் என்று தனித்தனியாக சங்கங்கள் வைத்து அவர்களில் நலிந்தோரின் குடுமபங்களுக்கு பொருளுதவி தருகிறார்கள். அதற்கென்றே அவர்களிடம் அறக்கட்டளை இருக்கிறது. எழுத்தாளர்களிடம் மட்டும் இல்லையே!
எனவே திண்ணையில் அன்பர்களுக்காக என்று கோரிக்கை வைக்கிறர் ஒரு விமர்சக எழுத்தாளர் இன்னொரு மறைந்த எழுத்தாளரின் நலிந்து வாடும் குடும்பத்துக்காக. அவரால் ஒரு எழுத்தாளர் சங்கத்திடம் வைக்க முடியவில்லை.
வியப்பான ஒன்று.
dear somasundharam sir i can’t understand your questin
warm regards sathya bama rajagopaln
THIS IS A REAL FACT. IF WE ENCOURAGE BUYING BOOKS OF GOOD WRITERS AND COMPEL THE GOVT AND PUBLISHERS TO PAY WRITERS A GOOD SHARE ONLY THEN SOME CHANGE IS POSSIBLE. I FEEL SORRY FOR A GREAT PERSON LIKE T.JA.RA. WHO HAS LEFT NOTHING TO HIS LOVING FAMILY.
வாழ்க்கையில் பல முரண்கள் உண்டு. காப்பி ரைட் ஆக்ட் கடுமைப் படுத்தப் பட வேண்டும். கொண்டாடப்படும் கலைஞர்களுக்கு கொடை தரும் வள்ளல்கள் இருக்க வேண்டும். ஆண்டவன் அருள்வானாக…
என்னிரு மடல்களில் இரண்டாவதைத்தான் போடச்சொன்னேன். திண்ணையிரண்டையும் போட்டுவிட்டது.
கிடக்கட்டும்.
கலைஞர்கள் பொதுவாக பணத்தை அதுவரும்போது சட்டை பண்ணுவதில்லை. அவர்கள் நினைப்பெல்லாம் அவர்கள் கலையில் மீதே எப்போதுமிருப்பதால். ஒரு சிலர் மட்டுமே அதைச் சட்டை பண்ணுவார்கள்.அஃது இருதோணிகளில் கால்களை வைத்து நீரில் செல்வதைப்போல. சிலர் பணத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல் வாழ்ந்தாலும் அவர்கள் மனைப்பெண்டிர் அக்கவனத்தைக்கொண்டு பேணுவர். பிற்காலத்தில் அது நன்றாக உதவும். மனைப்பெண்டிரும் நாட்டமில்லை; அல்லது தெரியவில்லையென்றால், கலைஞரும் அவர் குடும்பமும் வறுமையில் வாடி மாண்டுவிடும். எ.கா பாரதியார் வாழ்க்கை. செல்லம்மாள் கல்வியறிவே இல்லாதவர். எனவே எவர் சொன்னாலும் கேட்டுவிடுவார். அதனால் எப்படி பாரதி குடும்பத்தினர் நலிந்தனர் என்பதை என் ‘பாப்பா’ கட்டுரை விரைவில் சொல்லும்.
தி ஜ ர எழுத்தாளர். சாதாராண எழுத்தாளரன்று. எழுத்தே தன் வேள்வி எனக்கொண்டவர். அவர் பணத்தைப்பேணாமல் விட்டது வியப்பொன்றுமில்லை. அவர்தம் குடும்பத்தார் விட்டதே வியப்பு.
அரசின் மீது குற்றமில்லை. அரசுடைமையாக்கி லட்சங்களைத் தந்தது. பங்காளிச்சண்டையில் அது பறி போனால் அரசு எப்படி பொறுப்பாகும்?
அரசு தடாலடியாக எவரின் நூல்களையும் உடமையாக்கிக் கொள்வதில்லை. கேட்டுத்தான் பெறும். அப்படிக்கேட்டபோது உவேசா குடும்பத்தினர் மறுத்ததனால், இன்றும் அவர்தம் நூல்களின் உரிமை அக்குடும்பத்தினரடம்தான் இருக்கிறது.
நேருவின் நூல்களை அரசு உடைமையாக்கிக்கொள்ளவில்லை. அவரின் மேடைப்பேச்சுக்களை மட்டுமே உரிமையக்கிக்கொண்டது. எனவே டிஸ்கவரி ஆஃப் இந்தியா, கிளிம்ப்ஸஸ் ஆஃப் வர்ல் ஹிஸ்டரி இவைகளின் காப்பிரைட் உரிமை இந்திரா காந்தியிடம் இருந்து அவர் சோனியாவுக்கு எழுதிவைத்து விட்டுச்சென்றார். உலகம் முழுவதும் விற்கின்றன. அதனால் வரும் ராயல்டி மடடுமே போதும், சோனியாவுக்கும் பிரியங்காவுக்கும் ராகுலுக்கும். அவ்வளவு பணம்.
காப்பிரைட் சட்டம் சரியாகத்தான் இருக்கிறது. மனிதர்கள்தான் சரியாக இல்லை.
எல்லார் கருத்துக்களூக்கும் நன்றீ.தி.ஜ.ர நாட்டையும்,எழுத்தையும் பற்றீ மட்டுமே சிந்தித்ததால் தான் எங்கள் குடும்பத்திற்கு கஷ்டம்.மலர்மன்னன் ஐயா இருந்தபொழுது எழுத்தாளர் சங்கத்திடம் கூறீனார் யாரும் எதுவும் செய்யவில்லை.மலர்மன்னன் அய்யா விருப்பத்தின் பேரிலே இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருமதி.சத்யபாமா, உயர்திரு வெ.சா வால் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன் விளைவு ஒரு புறம் இருக்கட்டும், நீங்கள் அமைதியாக இருப்பது சாலச் சிறந்தது. பெரும் இலக்கியவாதிகள், போராளிகள், சமூக சேவகர்கள், நல் அரசியல்வாதிகள் ( உ.ம்: திரு.கக்கன் ) என பலரும் தங்காள் நம்பும் லட்சியத்திற்காக வாழ்ந்திருக்கிறார்கள். தரமான இலக்கியம் படைத்ததால் தான் அரசு ஒரு தொகை கொடுத்தது. மேலும் வாழ்வாங்கு வாழ்ந்தவன் என்ற நிலைப்பாடும் இருக்கிறது. அரசு தந்த ஆறு லட்சம் சிதறியது வேதனையே. ஆனால், தனி மனிதராக உங்களின் நிலை பற்றிச் சொல்லுங்கள். திரு. மலர்மன்னன் உங்களுக்கு தொலைதூர பாடல் வகுப்பிற்கு ஏற்பாடு செய்தாரே, அதன் நிலை என்ன? நீங்கள் வேலைக்குச் செல்கிறீர்களா? இல்லையெனில் உங்களின் திறமை பற்றி எழுதினால் நிச்சயம் யாராவது ஒருவர் வேலைக்கு ஏற்பாடு செய்வர். உங்களுக்கு பாட்டு வகுப்பு எடுக்க முடியும் என்று திரு.வெ.சா எழுதியுள்ளார், அந்த துறையில் உங்கள் பகுதியில் பாட்டு வகுப்பு நடத்தலாமே? இந்த விஷயத்தை ஒரு விவாத பொருளாக பிறரும் மாற்ற வேண்டாம். கோரிக்கை பிடித்தவர்கள் உதவட்டும், பிறர் அமைதியாக இருப்ப்தே நன்று. என் தந்தை சொத்தை தொலைத்தவன் நான். லூஸாக பணம் இழந்தவன் நான். இன்செப்ஷன் படத்தில் வரும் டயலாக்கில், பழயதை நினைத்து நான் முதியகாலத்தில் புலம்பாமல் இருக்க இறைவன் அருள் புரிய துடிக்கிறேன்.
திரு புனைப்பெயரில் அவர்களூக்கு நான் வாழ்க்கையின் எல்லைக்கே சென்றவள்.எனக்கு தாயாகவும்,தந்தயாகவும் இருந்து என்னை மகளாக ஏற்றவர் மலர்மன்னன் அப்பா.என்னை 5 வயது குழந்தையாக பாவித்து காப்பாற்றீயவர்.எனக்கு நிரந்தர வருமானம் கிடையது.1வருடத்திற்கு முன்பே. தான் முக்தி அடையப்போவதை பற்றீ கூறீனார்.எனக்கு தொலை தூர பாட்டு வகுப்பு எதுவும் ஏற்படுத்தவில்லை.அப்பா சித்தி அடைவதற்கு 6 மாதம் முன்பே என் சில வகுப்புகள் விட்டு தன்னுடனேயே இருக்கச் சொன்னார்.நான் முற்பிறவியில் செய்த பாவம் சந்யாஸ நிலையில் இருந்த மலர்மன்னன் அப்பாவிற்கு பணீவிடை செய்து நான் பிறந்த பயனை அடைந்துவிட்டேன்.அப்பா மறைவு என்னை மிகவும் பாதித்து விட்டது.நான் பசியை பழகியவள்.6000ருபாய் பாட்டு வகுப்பில் வருகிறது.நான் தனியாக நின்றூ பிரச்சனைகளோடு வாழமுடியலை.ஒருபக்கம் 86 வயது தாய் இன்னொருபக்கம் 50 வயது அக்கா இருவரும் நோயால் அவதி.அவர்களீன் மருத்துவ செலவு.ராஜகோபலன் என்பது எனது காலம் சென்ற தந்தை.எங்களூக்கு உதவ யாரும் இல்லாததால் நான் திரு வெ.சா அய்யா அவர்களூக்கு மலர்மன்னன் அப்பா கையெழுத்திட்ட மடலை அனுப்பினேன் என் தாய் பட்னி இருப்பதை பொருக்க முடியாமல்.தி.ஜ.ர வும் அவரது மனைவியும்(எனது தாத்தா பாட்டி)இருவரும் கடைசி காலம் பட்டினியால் தான் இறந்தனர்.அந்த பாதிப்பு என்னை உதவி கேட்க வைத்தது.என் தாய் படும் வேதனை வலி எனக்கு மட்டுமே தெரியும்.எங்களது நிலை எந்த ஒரு எழுத்தாளருக்கும் வரக்கூடாது என அப்பா வணங்கிய கிருஷ்னரையே வேண்டுகிறேன்.நன்றீ
சத்தியபாமா அவர்களே, நீங்கள் ஒவ்வொருவருக்கும் பதிலளித்துக்கொண்டிருக்காதீர்கள். உதவி செய்பவர்கள் செய்யட்டும். செய்யாதவர்கள் போகட்டும்.
நீங்கள் உதவி செய்யலாம் ஷாஜகான்.
தில்லித் தமிழ்ச்சங்கத்துக்கு தெரிந்தவர் நீங்கள். தில்லிகை என்ற இலக்கியமைப்பை நடாத்திவருபவர். அதைப்பற்றி திண்ணையிலும் எழுதியவர் நீங்கள் இல்லையா?
தில்லித்தமிழ்ச்சங்கம் நலிந்த எழுத்தாளர்களுக்கும் அவர்தம் குடுமபத்துக்கும் இதுகாறும் என்ன செய்தது? எனக்குத் தெரிந்தவரை ஒன்றுமேயில்லை.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு அச்சங்கத்தை கவுரவித்து அதன் சேவை மேலும் சிறக்க இலக்கங்களை ரொக்கமாக வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர். I heard about 10 lakhs. அச்சங்கத்தலைவர் திரு முகுந்தன் அவர்களும் ஜெயா தொலைக்காட்சியில் வந்து தம் சங்கத்தைப்பற்றித் தமிழக மக்களுக்குச் சொன்னார். Just last month
இப்படிப்பட்ட சங்கத்தில் கையில் காசு நிறையவே இருக்கிறது. மேலும் பல பெரியோர்களின் வாரிசுகள் அறக்கட்டளை அப்பெரியோர் நினைவாக அச்சங்கத்தில் வைத்து விழாக்களும் கொண்டாடி பரிசுகளும் வழங்கி வருகிறார்கள்.
அச்சங்கத்தில் ஒரு உறுப்பினர் ஷாஜகான். மேலும் ஒரு பதவியில் இருந்ததாகவும் நான் கேள்விப்பட்டதுண்டு. ஷாஜகான் தலைவரிடம் பேசலாம் இக்கட்டுரையைப்பற்றி. ஒரு அறக்கட்டளை நிறுவச்சொல்லலாம். ஜெயின் இலக்கங்களில் ஒன்றே இரண்டோ போதும். அல்லது ஜெனரல் பாடி மீட்டிங்கில் பேசி ஓட்டெடுப்பு நடாத்தி ஒரு தொகையைக் கொடுக்கச்சொல்லலாம். முடியும் ஷாஜகானால்.
தமிழ் எழுத்தாளர்கள் குடும்பங்கள் நலியும் போது கைகொடுத்து சிறு உதவியாவது செய்து தூக்கலாம். திரைப்படக்கலைஞர்கள் சங்கம் நலிந்த பழம்பெரும் நடிகர்களுக்குச் செய்வது போல.
ஒரு சங்கம் செய்தல், ஒரு அமைப்பு செய்தல் – இவையே தி ஜ ர போன்ற மாபெரும் எழுத்தாளருக்குச் செய்யும் மரியாதை. உபகாரம் வெறும் யாசகமாக இருக்கக்கூடாது ஷாஜ கான். சாதாரண மனிதருக்குச் சரி. தமிழுக்குக் கொடை தந்தோருக்கு மரியாதை செய்து கொடுப்பதே சாலச்சிறந்தது.
பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் இளமையில் இறந்தவர். அவர் மனைவி எங்கிருக்கிறார் என்றே எவருக்கும் தெரியாமலிருக்கும்போது சரத்குமார் கண்டறிந்து அவருக்கு ஒரு மேடையில் பணமுடிப்பு வழங்கினார்.
பாரதிதாசனுக்கு சென்னையில் மாபெரும் விழாநடாத்தி திராவிட முன்னேற்றக்கழகம் பணமுடிப்பு வழங்கியது.
கனடாவில் வாழும் பாரதியாரின் மகளை சென்னைக்கு வரவழைத்து மேடையில் விழாநடாத்தி பாரதி பற்றி நூலை வெளியிட வைத்தார் வைகோ.
தி ஜ ராவின் குடும்பம நலிந்தது எனத்தெரிந்த வெ சா போன்ற மூத்த எழத்தாளர் திண்ணையில் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் என்றெழுதாமல். பொது வெளியில் அனைத்து தமிழ்மக்களுக்கும் போய்ச்சேரும்படியும் – தமிழறிஞர்கள், தமிழாசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் – என்று, பெருந்தலைவர்களுக்கும் போய்ச்சேரும்படி செய்திருக்க வேண்டும். அப்படிச்செய்யின், ஒரு பொது மேடையில் அவர்தம் குடும்பத்தார் வரவழைக்கப்பட்டு கவுரவம், உதவி செய்யப்பட்டிருந்தால், அதுவே தி ஜ ரவுக்கு தமிழர்கள் செய்யும் மரியாதை.
உபகாரம் என்ற சொல் இழிசொல் ஷாஜகான்.
\எனவே திண்ணையில் அன்பர்களுக்காக என்று கோரிக்கை வைக்கிறர் ஒரு விமர்சக எழுத்தாளர் இன்னொரு மறைந்த எழுத்தாளரின் நலிந்து வாடும் குடும்பத்துக்காக. அவரால் ஒரு எழுத்தாளர் சங்கத்திடம் வைக்க முடியவில்லை.
என்னே இயற்கை!\
துயரத்தில் இருக்கும் ஒருவருக்கு முடிந்தால் உபகாரம் செய்யலாம்.
குறைந்த பக்ஷம் உபகாரம் செய்பவர்களை நிந்திக்காது இருக்கலாமே?
சஹோதரி சத்யபாமா அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டுகோள் விடுத்த அன்பர் வெ.ச அவர்களை, ஏன் எழுத்தாளர் சங்கத்தில் வேண்டுகோள் விடுக்கவில்லை என கேழ்வி கேட்பது அனாவசியமானது.
அமரர் மலர்மன்னன் அவர்களின் நல்லாசியும் நல்ல உள்ளங்களின் உதவி செய்ய முனையும் போக்கும் உங்கள் துயரங்களை நிச்சயம் துடைக்கும் சஹோதரி அவர்களே. நல்லதே நடக்கும்.
பெரும் புகழ் மிக்க தமிழ் எழுத்தாளர் திரு தி.ஜ .ரங்கநாதன் அவர்களின் குடும்பம் இன்று வறுமையில் வாடுவதை திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் வேண்டுகோள் படித்து வருந்துகிறேன்.
தமிழ் எழுத்தாளர்கள் மேல் நாட்டு எழுதாளர்கள்போல் உலகளாவிய நிலையில் தங்களுடைய நூல்களை வெளியிட்டு பொருளாதார நிலையில் உயர்ந்ததாக சரித்திரம் இல்லை. தமிழ் நாட்டு வாசகர்களையே பெரிதும் நம்பியுள்ளனர்.அவர்களை மகிழ்விக்கும் வகையில்தான் எழுதி வருகின்றனர்.எழுத்தின் மூலம் வரும் வருமானம் சொற்பமே என்பதற்கு இது நல்ல உதாரணம்.
வெளி நாடுகளில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களின் நிலையம் இதுவே. இங்கே நூல்களை எழுதி அதை வெளியீடு செய்யும்போது பிரபல பிரமுகர்கள் முதல் நூலை வாங்கும்போது நிறைய பணம் தருவதோடு சரி.நூல் வெளியீட்டில் ஒரு கணிசமான வசூல் வருகிறது.அதன்பின்பு மீதமுள்ள நூல்கள் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு உறங்குகின்றன.அவற்றை முறையாக விற்பனை செய்யும் வழி வகைகள் இங்கு இல்லை.
வேறு வருமானம் இல்லாமல் நூல்களை நம்பி வாழ்வது இயலாத காரியம்.
இந்த நிலையில் ஒரு எழுத்தாளர் அடுத்த எழுத்தாளருக்கு உதவ முடியாத நிலையில்தான் உள்ளனர்.
மலர்மன்னன் அவர்கள் தன்னால் முடிந்த வகையில் உதவியுள்ளார். அவரின் நல்ல உள்ளத்துக்கு நாம் நன்றி சொல்வோமாக.
சிறு துளி பெரு வெள்ளம் என்பதுபோல் முடிந்தவர்கள் உதவலாம். தர்மம் தலை காக்கும் .
இந்த வேண்டுகோளை விடுத்துள்ள திரு வெங்கட் சுவாமிந்தன் அவர்களுக்கு நன்றி.
திண்ணை வாசகர்கள் தங்களால் இயன்ற வகையில் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.
வெங்கட் சுவாமி நாதன் யார் பேரில் செக் அனுப்ப வேண்டும் எனக்கூறுவீர்களா?
அர.வெங்கடாசலம்
THANK YOU VERY MUCH SHREE R.VENKATACHALAM SIR,YOU SEND THE
CHEQUE IN THE NAME OF R.SATHYABAMA
WARM REGARDS,
R.SATHYABAMA(THI.JA.RA’S GRAND DAHGHTER)
R.SATHYABAMA,
18/37 MUTHULAKSHMI ROAD,
LAKSHMI PURAM,(NEAR PAMBAN SWAMI JEEVA SAMADHI)
THIRUVANMIYUR,
CHENNAI-41,PIN:600041
நன்றி அன்பரே. மேலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் மறுபடியும் கீழே தருகிறேன்.
MY ACCOUNT DETAILS.
MS SATHYABAMA.R
SB-NO:37950100001010
IFSC CODE:BARB O THICHE
MICR CODE:600012047
THIRUVANMIYUR BRANCH,CHENNAI:41
ஒரு சிறு தவறு. My account details என்றால் என்னுடயது அல்ல. சத்யபாமாவின் மடலிலிருந்து பிரதி செய்தது. தவறிப் போய் இந்த வார்த்தைகளும் சேர்ந்துவிட்டன. இந்த கணக்கு சத்யபாமாவினது தான். என்னுடையது அல்ல. வயதான கோளாறு எப்படியான விபரீதங்களையெல்லாம் கொண்டு சேர்க்கிறது பாருங்கள்.
என்னைப்பற்றி நிறையவே அறிந்து வைத்திருக்கிறீர்கள் கணபதி ராமன். நீங்கள் யார் என நான் அறியேன். இருக்கட்டும். தில்லிகை அமைப்பில் நான் பொறுப்பில் இல்லை. சங்கத்தில் நான் பொறுப்பு வகித்த காலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இல்லை. மற்றபடி, தில்லித் தமிழ்ச்சங்க அமைப்புவிதிகளின்படி இவ்வாறு செய்வதற்கு இடம் இல்லை. ஆம், சிறப்புப் பேரவையைக் கூட்டி அதற்காக ஏதும் செய்யலாமா என்று யோசிக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதும் அல்ல, உடனே நடக்கக்கூடியதும் அல்ல. இப்போது பொறுப்பில் உள்ளவர்கள் அதற்குத் தயாராகவும் இருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இப்போது செய்யக்கூடியது எதுவோ அது பற்றிச் சிந்திக்கிறேன். தனிநபர் என்ற வகையில் என்னால் இயன்றதைச் செய்கிறேன்.