தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்

This entry is part 6 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

 (குட்டி திருவிழா)

2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை.

நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோவின் 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதையொட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 5 (05-08-2013, திங்கள்) ஆம் தேதியிலிருந்து 11 (11-08-2013, ஞாயிறு) ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் வெவ்வேறு ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது. 

05-08-2013, திங்கள் – “பீ” ஆவணப்படம் – R.P. அமுதன் (இதனுடன் ஒரு குறும்படம்)

06-08-2013, செவ்வாய் – ஒருத்தி – அம்ஷன் குமார் (இதனுடன் ஒரு குறும்படம்)

07-08-2013, புதன் – என் பெயர் பாலாறு – ஆர்.ஆர். சீனிவாசன் (இதனுடன் ஒரு குறும்படம்)

08-08-2013, வியாழன் – போரும் அமைதியும் – ஆனந்த் பட்வர்தன் (இதன் தமிழ் பதிப்பே பெரும்பாலும் திரையிடப்படும். கிடைக்காத பட்சத்தில், ஆங்கில சப்-டைடிலுடன் திரையிடப்படும்.

09-08-2013 – ஜான் பில்ஜர் படங்கள்..

10-08-2013, சனிக்கிழமை – லீனா மணிமேகலையின் படங்கள் திரையிடல்

11-08-2013, ஞாயிறு – பீ. லெனின் இயக்கிய நாக் அவுட், கல்ப்ரிட், ஊருக்கு நூறு பேர் படங்கள் திரையிடல்.

இதில் 5 ஆம் தேதி முதல், 8 ஆம் தேதி வரையிலான திரையிடல் சென்னை கே.கே. நகரில் உள்ள தியேட்டர் லேபில் நடைபெற உள்ளது (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை உள்ளது, முனுசாமி சாலை), நேரம் மாலை 7 மணிக்கு (7 PM)

10-08-2013, சனிக்கிழமை திரையிடல் சென்னை எக்மோரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்த அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ளது. இந்த திரையிடலில் லீனா மணிமேகலை கலந்துக் கொள்கிறார். திரையிடல் முடிந்ததும் அவருடன் உரையாடல் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் லீனாவின் பெரும்பாலான படங்கள் திரையிடப்படுகிறது.

11 ஆம் தேதி லெனின் இயக்கிய மூன்று படங்களும், மேற்கு கே.கே. நகர், முனுசாமி சாலையில் உள்ள தியேட்டர் லேபில் திரையிடப்பட உள்ளது. நேரம் மாலை 4 மணிக்கு.

தொடர்புக்கு: 9840698236

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 19மங்கோலியன் – I
author

அறிவிப்புகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *