தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

கடல் என் குழந்தை

கு.அழகர்சாமி

Spread the love

 

கடலைக் கைகளில்

தூக்கி

வைத்துக் கொள்வேன்.

 

அடம் பிடிக்காதே என்று

அறிவுறுத்துவேன்.

 

அழுது கொண்டே இருக்காதே

என்று

சமாதானப்படுத்துவேன்.

 

நிலாவைப் பார்

என்று

வேடிக்கை காட்டுவேன்.

 

அலைகளில்

துள்ளித் துள்ளி விளையாடுவது கண்டு

ஆனந்திப்பேன்.

 

ஆகாயச் சட்டை போட்டு விட்டு

அழகு பார்ப்பேன்.

 

தினம் தினம்

வீட்டுக்குக்

கூட்டி வந்து விடுவேன்.

 

இரவில் என் கூடப்

படுக்க வைத்துக் கொள்வேன்.

 

தூங்காத கடலைத் தூங்க வைக்க

அலைச் சிகையைக்

கோதி விடுவேன்.

 

மறைந்த என் சின்ன மகள் நீறில்

உயிரில் ’கரைந்த’ கடல் என்

செல்லக் குழந்தை தானே!.

கு.அழகர்சாமி

Series Navigationஉயிர்த் தீண்டல்வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)

Leave a Comment

Archives