நுகம்

This entry is part 20 of 34 in the series 10 நவம்பர் 2013

 – சிறகு இரவிச்சந்திரன்

hqdefaultபடித்த, இன்றைய சமுகக் கட்டமைப்பு மேல் கடும் கோபம் கொண்ட ஒரு இளைஞனை, தன் நாச வலைக்குள் இழுக்கிறது ஒரு அயல்நாட்டு தீவிரவாத கும்பல். பணத்தாசை காட்டி, இந்திய வெளியுறவு துறை அமைச்சரைக் கொல்ல ஏவுகிறது. இடையில் சேரும் இன்னொருவனால், தீவிரவாதம் திசை மாறுகிறது. அப்பாவி இளைஞனின் கதி என்ன ஆயிற்று என்பதை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
சொல்ல வந்த விசயம் உன்னதமானது தான்.. ஆனால் சொன்ன விதம்தான் அரைவேக்காடாக இருக்கிறது. திரைக்கதையின் அலைக்கழிப்பில், அல்லாடிப் போகிறான் பார்வையாளன்.
கதிர் ( விஜயகுமார் ) விமானத்தில் சென்னைக்கு வந்து இறங்குகிறான். ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கும்போது அறிமுகமாகிறான் ‘பெல் பாய் ‘ சுரேஷ் (சுரேஷ்) ஹைப்பர் ஆக்டிவ் ஆன சுரேஷ், கண்டதும் காதலிக்கும் ப்ரீதி, கதிர் மையலாகும் இனியா என கதை ஒரு பக்கம் ஓட்டமெடுக்கிறது. பன்னாடுகள் கூட்டமைப்புக் கூட்டத்திற்கு வருகை தரும் வெளியுறவு அமைச்சரைப் போட்டு தள்ளி விட்டால், கலவரம் வெடிக்கும். அதனால் அயல்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்படும். தாராளமயமாக்கல் தள்ளிப் போடப்படும். இந்தியத் தொழில்துறை வளமாகும். இதை எல்லாம் மூளைச் சலவையில் கதிரின் மனதில் இஸ்திரி போட்டிருக்கிறது ஒரு தீவிர வாதக் கும்பல். செயல் திட்டத்தை மடிக்கணிணியில் வைத்துக் கொண்டு, கதிரோடு கூட்டு சேருகிறான் ஜெய் ( ஜெய்பாலா ) அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு, அமைச்சர் கொலைத் திட்டத்தை அப்பாவி மக்கள் கூடும் இடங்களில், குண்டு வெடிக்கும் திட்டமாக மாற்றுகிறான் ஜெய். திட்டம் திசை மாறி விபரீதமாகப் போவதை உணரும் கதிர், விலக முயற்சிக்கிறான். ஆனால் அவனையே போட்டுத் தள்ள கூலிப்படையை ஏவுகிறான் ஜெய். கதிர் பிழைத்தானா? ஜெய்யின் திட்டங்களைத் தகர்த்தானா? என்பது க்ளைமேக்ஸ்.
ஹாண்டிகேமில் எடுத்த குறும்படம் போல இருக்கிறது ஒளிப்பதிவு. ஜெய்பாலா வித்தியாசம் காட்டுவதாக எண்ணிக் கொண்டு, பேசும் வசன வரிகளில், கடைசி வார்த்தையை மட்டும், கொஞ்சம் இடைவெளி விட்டு பேசுகிறார். போகப்போக அதுவே கடுப்பாகி விடுகிறது. வாகை சூடிய இனியா, இதில் சோகை படிந்த இனியா. சொல்லிக் கொள்ள ஏதுமில்லை. சுரேஷ் கொஞ்சம் பரவாயில்லை. விஜயகுமார், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால், தாக்குப்பிடிப்பார்.
ஆர்வக்கோளாறு எழுத்தாளர்கள் எழுதி வெளியிடும் சுய முன்னேற்ற கட்டுரைத் தொகுப்பு போல் இருக்கிறது படம். வீட்டு லைப்ரரியில் அடுக்கி வைத்து, அவ்வப்போது தொட்டுப் பார்த்து, திருப்தி அடைந்து கொள்ளலாம் இயக்குனர் ஜெ•பி.
0
•பைனல் காமெண்ட் : ரணம்

பாமரன் பேச்சு : துனியாவுல இனியாவுக்கு வேற படம் கெடைக்கலியா ?

லொள்ளோவியம் :
நீர் மிகுமின் பானைக் களிமண் விரலிடை நழுவும்
சொல்லை தடுக்கா நாவு போல.

Series Navigationதமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்திண்ணையின் இலக்கியத் தடம் -8 நவம்பர் – டிசம்பர் -2000
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *