புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                     E. Mail: Malar.sethu@gmail.com

40.அறிவியலின் தந்​தையாக விளங்கிய ஏ​ழை………..

     “யா​ரை எங்​கே ​வைப்பது என்று யாருக்கும் ​தெரியல              அடஅண்டங்காக்​கைக்கும் குயில்களுக்கும்

​பேதம் ​தெரியல….​பேதம் ​தெரியல….”

அட​டே வாங்க..வாங்க..வாங்க… வாழ்த்துக்கள்…என்னங்க சினிமாப் பாட்டப் பாடிக்கிட்டு வர்ரீங்க….எங்கயாவது இந்தப் பாட்டக் ​கேட்டீங்களா…?என்ன..? என்னது? ஓ​​​​ஹோ..இந்த உலகத்துல உண்​மைக்கும் ​​பொய்​மைக்கும் ​பேதம் ​தெரியாமத் திரியறாங்க… அது உண்​மைதான்..நல்லவனா இருக்கற​தே பல​பேருக்குப் பிடிக்க மாட்​டேங்குது… அதனால ​கெட்டவங்களா மாறிடக் கூடாது… யாருக்குப் பிடிச்சாலும் பிடிக்கா​லேன்னாலும் நாம நல்லவங்களா இருக்கணும்… ஏன்னா, நம்ம திருவள்ளுவ​ரே,

“பண்பு​டையார் பட்டுண்டு உலகம்” அப்படீன்னு ​சொல்லிருக்கார்ல… அதனால எந்த நி​லையிலயும் நாம தீயவற்றுக்கு மாறிடக் கூடாது… உண்​மை ஒருநாள் ​வெளியாகத்தான் ​செய்யும்… அப்ப வருந்துவாங்க… ஆமா..​​போன வாரம் நான் உங்ககிட்ட ​கேட்டதுக்கும் இப்ப நீங்க ​சொல்றதுக்கும் ஏதாவது ​தொடர்பு இருக்குதா…? என்​னோட ​கேள்விக்கான பதிலக் கண்டுபிடிச்சுட்டீங்களா….? அட சரியாச் ​சொல்லிட்டீங்க​ளே… அமாங்க அவ​ரேதான் கலீலி​யோ தான். அவருதான் பல்​வேறு அறிவியல் ஆராய்ச்சிக​ளைச் ​செஞ்சு அடிப்ப​டை அறிவியல் உண்​மைக​ளை உலகத்துக்குத் ​தெரிவிச்சாரு…ஆனா இந்த உலகம் நம்பல…

அவரக் ​கொடு​மைப் படுத்தினாங்க..சூரியனப் பூமி சுத்தி வருதுன்னு கலீலி​யோ ​சொன்னாரு.. ஆனா அது தப்புன்னு புனித விவிலிய நூ​லைத் ​தொட்டுச் சத்தியம் ​செய்யச் ​சொன்னார்கள். அப்படிச் சத்தியம் ​செய்ய​லைன்னா அவருக்கு மரணதண்ட​னை விதிக்கப்படும் என்று எச்சரிச்சாங்க…வயதான காலத்துல ​வேற வழியில்லாமா கலீலி​யோ சத்தியம் ​செஞ்சாரு… பின்னால வந்தவங்க இவரு கண்டுபிடிச்ச விசயங்கள உண்​மைன்னு நிரூபிச்சாங்க… அவ​ரோட வரலாறு ஒங்களுக்குத் ​தெரிஞ்சாச் ​சொல்லுங்க​ளேன்…என்னது ஓரளவுக்குத்தான் ​தெரியுமா…? முழு​மையாத் ​தெரிஞ்சுக்கணுமா..? சரி சரி ​சொல்​றேன் ​கேட்டுக்​கோங்க…

பிறப்பும் தனி​மையும்

இவ​ரோட முழு​மையான ​பேரு கலீலி​யோ கலீலி என்பதாகும். கலீலி என்பதுதான் இவ​ரோட இயற்​பெயர். கலீலி​யோ என்பது அவரது குடும்பத்துப் ​பேரு. நாள​டைவில் இந்தப் ​பெய​ரே நி​லைச்சுப்​போச்சு… கலீலி​யோ 1564-ஆம் ஆண்டு பிபரவரி மாதம் 15-ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள ​பைசா நகரத்தில் வின்​சென்ஸி​யோ கலீலி​யோ என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.

கலீலி​யோ சிறுவனாக இருக்கும்​போது சிறந்த சிந்த​னையாளராகத் திகழ்ந்தார். அவர் தன்வயது​டைய சிறுவர்க​ளோடச் ​சேர்ந்து வி​ளையாடமாட்டார். எப்​போதும் தனியா​வே ​​பெரியவங்களப் ​போல ஒக்காந்துக்கிட்டு சிந்திச்சுக்கிட்டு இருப்பாரு… இரவு ​நேரம் வந்தால் கலீலி​யோ வீட்டிற்கு ​வெளி​யே ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து வானத்​தை​யே தன்​​னை மறந்து உற்றுப் பார்த்துக் ​கொண்டிருப்பார். இத​னைக் கண்ட கலீலி​யோவின் தந்​தை அத​னை கலீலி​யோவின் தாயிடம் கூற, அவ​ரோ, இவன் மிகச் சிறந்த அறிஞனாகத்தான் வரப்​போகிறான்..என்று கூறிப் ​​பெருமிதம் அ​டைந்தான்.

கலீலி​யோவின் குடும்பம் வறு​மையில் வாடினாலும் அவரது தந்​தை கலீலி​யோ​வை நன்கு படிக்க​வைக்க ​வேண்டும் என்று விரும்பி அவ​ரைப் பள்ளியில் படிக்க ​வைத்தார். பள்ளியில் கலீலி​யோ இலத்தீன், இத்தாலி ஆகிய ​மொழிக​ளைக் கற்றார். பள்ளியில் அ​னைவரும் வியக்கும் வ​கையில் சிறப்பாகக் கற்ற கலீலி​யோ​வைப் பார்த்து அவரது ஆசிரியர்கள் வியந்தனர்.

பள்ளியில் ஒருநாள் ஆசிரியர் ஆண்க​ளைவிடப் ​பெண்களுக்குப் பற்கள் கு​றைவு. ஆண்களுக்கு முப்பத்திரண்டு பற்கள் என்றால் ​பெண்களுக்கு இருபத்​தெட்டுப் பற்கள் என அரிஸ்டாட்டில் எழுதி ​வைத்த​தைப் பாடமாக நடத்திக் ​கொண்டிருந்தார். ஆசிரியர் நடத்திய பாடத்தில் கலீலி​யோவிற்கு ஐயம் ஏற்பட்டது. ​பெண்களுக்கு மட்டும் பற்கள் எப்படிக் கு​றைவாக இருக்கும்? என்று எண்ணிய கலீலி​யோ வீட்டிற்கு வந்து தனது தாயின் பற்க​ளை எண்ணினார். முப்பத்திரண்டு இருந்தது. அ​தோடு மட்டுமல்லாமல் அவர் பக்கத்து வீடுகளில் வசித்த ​பெண்களின் பற்க​ளையும் எண்ணிப் பார்த்தார். அவர்களுக்கும் முப்பத்திரண்டு பற்க​ளே இருந்தன.

தான் ​செய்த பற்கள் பற்றிய ஆய்வி​னை கலீலி​யோ ஆசிரியரிடம் ​சொல்லி எல்​லோருக்கும் முப்பத்திரண்டு பற்க​ளே இருக்கும் என்று ​தெளிவுபடுத்தினார். தனது தந்​தை​யைப் ​போன்​றே கலீலி​யோ கவி​தைகள் பு​னைவதிலும், இ​சைப்பாடல்கள் இயற்றுவதிலும், ஆர்கன், யாழ் ஆகிய இ​சைக்கருவிக​ளை இ​சைப்பதிலும் தனித்திறன் வாய்ந்தவராக விளங்கினார். அதுமட்டுமல்லாது கலீலி​யோ எந்தப் ​பொரு​ளைப் பார்க்கிறா​ரோ அத​னை அப்படி​யே ஓவியமாக வ​ரைவதில் திறன் ப​டைத்தவராக இருந்தார்.

கணிதத்தில் ஏற்பட்ட விருப்பம்

கலீலி​யோ பன்னிரண்டு வயதில் ​தொடக்கக் கல்வி​யை முடித்தவுடன் அவரது தந்​தை அவ​ரை எப்படியாவது மதகுருவாக்கிவிட ​வேண்டும் என்று கருதி வல்லம்ப்​ரோஸா என்ற ஊரிலிருந்த மடலாயப் பள்ளி ஒன்றில் மதக்கல்வி பயிலச் ​சேர்த்துவிட்டார். கலீலி​யோவிற்கு மதக்கல்வியில் மனம் ஒன்றவில்​லை. கணிதத்தி​லே​யே லயித்தது.

கலீலி​யோவின் விருப்பத்​தைக் கண்ட அவரது தந்​தைக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் கலீலி​யோ​வைப் பார்த்து, “மக​னே! நீ கற்க விரும்பும் கல்விக்கு நாட்டில் மதிப்​பே இல்​லை. ​வே​லைவாய்ப்புமில்​லை. அதனால் வறு​மையில்தான் வாட முடியும். அதனால் கணிதத்​தை மறந்துவிடு. அதற்குப் பதிலாக மருத்துவத்​தையாவது படி அப்படிப்பு உன் வாழ்க்​கைக்கு எல்லா விதத்திலும் உதவும் என்று கூறினார்.

தந்​தையின் விருப்பத்​தை நி​றை​வேற்றுவது என்று முடிவுக்கு வந்தார். கலீலி​யோவின் தந்​தை பலரது உதவிக​ளைப் ​பெற்று கலீலி​யோ​வை ​​பைசா நகரப் பல்க​லைக்கழத்திலுள்ள மருத்துவக் கல்லூரியில் ​சேர்த்துவிட்டுப் படிக்க​வைத்தார்.

கலீலி​யோ மருத்துவப் படிப்பிற்குச் ​சேர்ந்தாலும் அவரது மனம் கணிதத்​தை​யே நாடியது. அவர் யாருக்கும் ​தெரியாது ரகசியமாகக் கணிதத்​தைக் கற்றார். மருத்துவப் புத்தகங்களின் நடுவில் கணிதத்​தை ம​றைத்து ​வைத்துக் கலீலி​யோ பயின்று வந்தார். தா​மே வடிவ​மைத்த கணிதக் கருவிக​ளைக் ​கொண்டு வடிவியல் கணிதம் ​தொடர்பான ஆய்வுக​ளை மிகவும் ம​றைமுகமாக யாருக்கும் ​தெரியாமல் ​செய்து வந்தார். அப்​போது அரிஸ்டாட்டில் எழுதிய நூல்க​ளைப் பயிலும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. இயற்பியலில் அரிஸ்டாட்டில் பல தவறான மு​றைக​ளைக் ​கையாண்டிருப்ப​தை அறிந்து கலீலி​யோ அத்தவறுக​ளை ​வெளிப்படுத்தினார்.

மிரட்டலும் த​டையும்

அரிஸ்டாட்டிலின் மீது பற்றுக் ​கொண்டிருந்த ​பேராசிரியர்களுக்கு கலீலி​யோ மீது ​வெறுப்பு ஏற்பட்டது. அதன் காரணத்தால் கணிதம், இயற்பியல் ​போன்ற​வைக​ளைக் கலீலி​யோ கற்றது ​வெளிப்பட்டுவிட்டது. மருத்துவப் படிக்கும் மாணவன் கணிதத்​தைக் கற்றது தவறானது என்று ​பேராசிரியர்கள் கூறினார்கள். அ​தோடு மட்டுமல்லாது இனி​மேல் கணிதம்,இயற்பியல், வானியல் ​போன்ற நூல்க​ளைப் படிக்கக் கூடாது என்றும் மீறிப் படித்தால் கடு​மையான பின்வி​ளைவுகளுக்கு ஆளாக ​நேரிடும் என்றும் கலீலி​யோ​வை மிரட்டினர்.

இவற்றிற்​​கெல்லாம் அஞ்சாத கலீலி​யோ ​தொடர்ந்து கணிதம், இயற்பியல், வானியல் ​தொடர்பான நூல்க​ளைக் கற்றுத் ​தொடர்ந்து ஆய்வு ​செய்து வந்தார்.

நாடியளக்கும் கருவி​யைக் கண்டுபிடித்தல்

கலீலி​யோ பல்க​லைக்கழகத்தில் படித்துக் ​கொண்டிருந்த​போது 1584-ஆம் ஆண்டு ஒரு நாள் கிறித்தவத் ​தேவாலயத்திற்குச் ​​சென்று இ​றைவழிபாட்டில் ஈடுபட்டார், அப்​போது திரும​றைச் ​சொற்​பொழிவில் கவனம் ​செலுத்துவதற்குப் பதிலாகஅங்கு ​தொங்க விடப்பட்டிருந்த சரவிளக்குக​ளையும், அதில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்குக​ளையும் உற்று ​நோக்கிக் ​கொண்டிருந்தார்.

சங்கிலியால் கட்டித் ​தொங்க விடப்பட்டிருந்த சரவிளக்குகள் ​மெல்லிய காற்று அடித்தாலும் அ​சைந்தாடியது, அ​தேநி​லை காற்று அடித்து முடிந்த பின்னும் ​​நெடு​நேரம் அ​சைந்து ​கொண்​டே இருந்தது. ​தொ​லைவு அதிகமாக இருந்த​போதும் கு​றைவாக இருக்கும்​போதும் அது எடுத்துக் ​கொள்ளும் ​நேரம் ஒன்றாக இருப்ப​தைக் கலீலி​யோ உணர்ந்தார். அது அ​சைந்தாடுவ​தைத் தம் நாடித்துடிப்​பைக் ​கொண்டு ​நேரத்​தை அளந்தார். நாடித்துடிப்பும் அதுவும் ஒ​ரோக இருப்ப​தை உணர்ந்தார். நாடித் துடிப்​பை அளக்க உதவும் என்று நம்பியவர் வீட்டிற்குச் ​சென்று ஒரு நீண்ட ஆணியில் கல்​​லொன்றி​னைக் கட்டித் ​தொங்கவிட்டுக் கல்​லைஇப்படியும் அப்படியுமாக ஆட்டினார்,

​மேலும் அதன் அ​சைவுக் காலத்​தைக் குறித்துக் ​கொண்டார். பல்​வேறு களமும் பருமனும் உள்ள கற்​கைளக் கட்டி அ​வை அ​சையும் காலத்​தையும் கணக்கிட்டார். கனம் எவ்வளவு இருந்தாலும் அதன் உயரம் ஒன்றாக இருக்கும்​போது அ​சைவு காலம் ஒன்றாக இருப்ப​தைக் கண்டறிந்தார். இம்மு​றை​யை ​வைத்துத் தனிஊசல் விதி​யை உருவாக்கினார்.

கிறிஸ்ட்டியன் ​ஹை​ஜென்ஸ் என்பவரால் தனி ஊசல் விதியின் மூலமாகத் தனி ஊசல் கடிகாரம் உருவாக்கப்பட்டது, இது சரியான ​நேரத​தைக் காட்டப் பயன்படுகிறது. இத்தனிஊசல் மு​றையி​னைக் கலீலி​யோ ​கையாண்டதன் வி​ளைவாக நாடியளக்கும் கருவி​யைக் கண்டுபிடித்தார். ​மேலும் தான் கண்டுபிடித்த தத்துவத்​தைச் ​செயல்மு​றையில் பயன்படுத்தலாம் எனறு நி​னைத்து ஊசலினால் நாடித்துடிப்பு விகிதத்​தைக் கண்டறிந்தார்.

நழுவிய மருத்துவப் பட்டம்

கலீலி​யோ எவ்வளவுதான் நன்கு கற்றாலும் அவ​​ரைக் குடும்ப வறு​மை வாட்டி எடுத்தது. பலரின் உதவியுடன் மருத்துவப் படிப்​பைத் ​தொடர்ந்து படித்து வந்தார் கலீலி​யோ.  அது​போன்று ​​தொடர்ந்து கணிதம், இயற்பியல் பற்றிய ஆய்வுக​ளையும் ​செய்து வந்தார். இது ப​ரோசிரியர்கள் பலருக்குப் பிடிக்கவில்​லை, அதனால் இவரது படிப்பிற்கு அங்கீகாரம் கி​டைக்கச் ​செய்யக் கூடாது என்று அவர்கள் முடிவுகட்டினர்.

இந்நி​லையில் கலீலி​யோ இறுதியாண்டுத் ​தேர்வி​னை நன்கு எழுதியிருந்தும் ​தேர்வில் ​வெற்றி ​பெறமுடியாத அளவிற்குச் சதி ​செய்துவிட்டனர், அதனால் கலீலி​யோ மருத்துவப் பட்டம் ​பெற முடியவில்​லை. அவரும் அவரது ​பெற்​றோரும் மிகவும் மனம் வருந்தினர். ஆனால் கலீலி​யோ மனம் வருந்தவில்​லை. தந்​தையின் விருப்பத​தை நி​றை​வேற்ற முடியவில்​லை​யே என்ற ஏக்கம் மட்டும் கலீலி​யோவின் மனதில் இருந்து உறுத்தியது. இருப்பினும் நடப்ப​தெல்லாம் நன்​மைக்​கே என்ற எண்ணத்தில் கலீலி​யோ அத​னை மறந்து தனது ஆய்வுகளில் ஈடுபடலானார்.

சிற்றரசரின் உதவி

குடும்பத்​தை வறு​மையிலிருந்து காப்பது கலீலி​யோவின் கட​மையாக இருந்தது. அவருக்கு வறு​மை​யைப் ​போக்க ஒரு ​வே​லை ​தே​வையாக இருந்தது. அந்நி​லையில் ​பைசா நகரின் அருகிலிருந்த டஸ்க்கினி மாநிலத்தில் சிற்றரசர் பரம்ப​ரையில் வாழ்ந்துவந்த ​செல்வந்தர் ஒருவர் கலீலி​யோவின் வறிய நி​லைகண்டு உதவி ​செய்ய முன்வந்தார்.

அவரின் ​பெரு முயற்சியினால் ​பைசா நகரப் பல்க​லைக்கழகத்தில் கணிதப் ​பேராசிரியர் பணி கலீலி​யோவிற்குக் கி​டைத்தது. ஆனால் அப்பல்க​லைக்கழகம் கலீலி​யோவிற்கு ஊதியம் தர இயலாது என்று கூறிவிட்டது. இத​னை அறிந்த அவ்வரசர் தா​மே கலீலி​யோவிற்கு ஊதியம் தருவதாகப் ​பொருப்​பேற்றுக் ​கொண்டார். அப்படி இருந்தும் கலீலி​யோவின் மீது ​பொறா​மை ​கொண்ட ​பேராசிரியர்கள் கணிதத்தில் பட்டம் ​பெறாத ஒருவ​ரைக் கணிதப் ​பேராசிரியராக நியமித்தது தவறு என்று பல்க​லைக்கழக நிர்வாகத்திடம் வாதிட்டனர். அதற்குப் பல்க​லைக்கழகம் நாங்கள் அவருக்கு ஊதியம் தரவில்​லை. டஸ்க்கினி மாநிலச் ​செல்வந்தர் தருகிறார். அதனால் எது ​கேட்க ​வேண்டுமானாலும் அவரிடம் ​சென்று ​​கேட்டுக் ​கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது. ​பேராசிரியர்களால் சிற்றரசரிடம் தங்களது ​வெறுப்பி​னைக் காட்ட இயலவில்​லை. இருப்பினும் கலீலி​யோ​வை எப்படியாவது விரட்டி​யே தீர​வேண்டும் என்று அப்​பேராசிரியர்கள் நல்ல சந்தர்ப்பத்​தை எதிர்பார்த்துக் ​கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் கருத்​தை மறுத்தல்

இவ்வாறு பல்க​லைக்கழகப் ​பேராசிரியர்க​ளோடும் வறு​மை​யோடும் ​போராடி வந்த நி​லையில் கலீலி​யோ இயற்பியலில் இய்கவியலில் அரிஸ்டாட்டில் ​செய்திருந்த மா​பெரும் தவ​றைச் சுட்டிக் காட்டத் ​தொடங்கினார்.

​மேலிருந்து வரும் ​பொருள்களில் கனமான​வை ​வேகமாகவும், கனமில்லாத இ​லேசான ​பொருள்க​ளெல்லாம் தாமதமாக வந்து ​சேரும் என்றும் அரிஸ்டாட்டில் தமது குறிப்பில் எழுதி ​வைத்திருந்தார். ​இத​னை கலீலி​யோ தாம் கண்டறிந்த ஆய்வின் மூலம் அரிஸ்டாட்டிலினு​டைய தவறி​னைச் சுட்டிக் காட்டிய​தோடு அ​தை நிரூபித்துக் காட்டவும் தயாரானார். இதனால் அவர்மீது காழ்ப்புணர்வு ​கொண்ட ​பேராசிரியர்கள் அ​னைவரும் கலீலி​யோ மீது கடு​மையான ​கோபம் ​கொண்டனர். தாங்கள் ஆசிரியராகக் கருதும் அரிஸ்டாட்டிலின் மீது தவறு கண்டுபிடித்து அத​னை எங்கும் கூறித்திரிகிறா​யே அத​னை உன்னால் நிரூபித்துக் காட்ட முடியுமா? என்று ​கேட்டனர். அத​னைக் கலீலி​யோ சவலாக ஏற்றுக் ​கொண்டார்.

அத​னை நிரூபிக்க நா​ளை கா​லை ​பைசா நகரச் சாய்வுக் ​கோபுரத்திலிருந்து நான் நிரூபித்துக் காட்டுகி​றேன். எல்​லோரும் கா​லை பத்து மணிக்கு அங்​கே வந்து ​சேருங்கள் என்று ​பேராசிரியர்களிடம் கூறினார். மறுநாள் எல்​லோரும் கா​லை பத்துமணிக்கு ​பைசா நகரக் ​கோபுரத்தினரு​கே வந்து கூடினர். கலீலி​யோவும் வந்து  ​வெவ்​வேறு எ​டையுள்ள இரு இரும்புக் குண்டுக​ளையும் அவர்கள் முன்பாக உயரத்திலிருந்து கீ​ழே ​போட்டார். இரு குண்டுகளும் ஒ​ரே ​நேரத்தில் கீ​​ழே விழுந்தன.

இத​னைப் பார்த்த ​பேராசிரியர்கள் கலீலி​யோ கூறியது சரி​யென்று ஏற்றுக் ​கொள்ளவில்​லை. கலீலி​யோ அதற்காகக் கவ​லைப்படவில்​லை. கலீலி​யோ அவர்க​ளைப் பார்த்து, “நான் உங்களு​டைய ​செயல்பாடுக​ளை​யெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கிச் சும்மாயிருந்துவிடு​வேன் என்று மட்டும் நி​னைத்துவிடாதீர்கள். இத​னை இப்படி​யே விட்டுவிடாது உலக​மே அறியும் வ​கையில் உரத்த குரலில் கூறு​வேன். ஒரு​போதும் உண்​மை​யைத் தவிர ​பெய்யி​னை ஒரு​போதும் கூற மாட்​டேன்” எனக் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து அ​னைத்துப் ​பேராசிரியர்களும் கலீலி​யோ​வை அதிகமாக ​வெறுக்கத் ​தொடங்கினார்கள். கலீலி​யோ அத​னை அறிந்து அதுகுறித்துக் கவ​லைப் படவில்​லை. ​தொடர்ந்து தனது ஆய்வுக​ளைத்​ தொடர்ந்தார்.

​வே​லைஇழப்பும் வறு​மைநி​லையும்

​பைசா நகரப் பல்க​லைக்கழகத்தில் பணிபுரியும் ​பேராசிரியர்கள் பலக​லைக்கழகத்திற்குள் இருக்கும்​போது குறிப்பிட்ட அங்கி​யை அணிய ​வேண்டும். அவ்வாறு அணியவில்​லை என்றால் ஒறுத்தல்(அபராதம்) ​செலுத்த ​வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அத​னைக் ​கேட்ட கலீலி​யோ அது முட்டாள்த்தனம். இ​தெல்லாம் பிசாசுகளின் கண்டுபிடிப்பு என்று கூறி அவ்வங்கி​யை அணிய மறுத்தார்.

இத​னைக் கண்ட மற்ற ​பேராசிரியர்கள் ​கொதிப்புற்று பல்க​லைக்கழக நிர்வாகத்​தைக் கலீலி​யோ இழிவுபடுத்துவதாகக் கூறினர். கலீலி​யோவும் ஒறுத்த​லைக் கட்டி வந்தா​ரே தவிர அங்கி​யை அணியவில​லை. பல்க​லைக்கழக நிர்வாகம் கலீலி​யோ​வை ​வே​லை​யைவிட்டு நீக்க முடியவில்​லை. மன்னர் கலீலி​யோவிற்கு ஊதியம் ​கொடுத்ததால் பல்க​லைக்கழக நிர்வாகம் தடுமாறியது. கலீலி​யோவின் ​செல்வாக்​கை முடிவுக்குக் ​கொண்டுவர நி​னைத்தது.

இந்த நி​லையில் இத்தாலி மன்னரின் முதலாம் காஸி​​மோவின் மகன் டான்ஜி​யோ வன்னி என்பவன் கலீலி​யோவிற்குப் புதிய ப​கையாக உருவானான். அவன் ​லெகான் து​றைமுகத்​தைத் தூய்​மைப்படுத்துவதற்காக ட்​ரெட்ஜ் என்ற தூர்வாரும் இயந்திரம் ஒன்றி​னைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பலநாட்கள் முயற்சித்த பின்னர் தூர்வாரும் இயந்திரம் ஒன்றின் மாதிரி​யை உருவாக்கினான்.

அம்மாதிரி இயந்திரத்​தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக கண்டுபிடிப்புகளில் புகழ்​பெற்று வந்த கலீலி​யோவிடம் காட்டி அந்த இயந்திரத்தின் மாதி​யை நன்கு ஆய்வு ​செய்து விளக்கம் அளிக்குமாறு ​கேட்டுக் ​கொண்டான்.

அவ்வியந்திரத்​தை நன்கு ஆராய்ந்து பார்த்த கலீலி​யோ அம்மாதிரி​யைக்​கொண்டு தூர்வாரும் இயந்திரம் உருவாக்கப்பட்டால் அது ​வே​லை ​செய்யாது என்ப​தை நன்கு உணர்ந்தார். அத​னை ம​றைக்காது உள்ள​தை உள்ளவா​றே டான்ஜி​யோ வன்னிக்குக் கருத்துத் ​தெரிவித்துக் கடிதம் எழுதி அனுப்பினார்.

இதனால் வருத்தம​டைந்த வன்னி கலீலி​யோ​வை உட​னே கணிதப் ​பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கிவிட ​பைசா நகரப் பல்க​லைக்கழக நிர்வாகத்திற்கு எழுதினான். இத​னை எதிர்பார்த்திருந்த நிர்வாகம் உட​னே கலீலி​யோ​வை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டனர். ​வே​லை​யை இழந்த கலீலி​யோவும் அவரது குடும்பமும் வறு​மையின் பிடியில் சிக்கினர்.

கலீலி​யோவின் கருத்​தைத் தள்ளி​வைத்துவிட்டு தூர்வாரும் இயந்திரத்​தை வன்னி ​செய்தான். ஆனால் அது ​வே​லை ​செய்யவில்​லை. இருப்பினும் தனது ​தோல்வி​யை ஒப்புக் ​கொள்ளாது கலீலி​யோ​வை​யே குற்றம் சாட்டினான். அவனது வீம்பினால் கலீலி​யோ நிரந்தரமாக ​வே​லை​யை இழந்தார். ​வே​லையின்​மையால் கலீலி​யோ வறு​மையின் ​கோரப்பிடியில் சிக்கினார்.

அவரது வறு​மைநி​லையி​னை அறிந்த அவரது நண்பர்கள் க்ளாவியா, ​கைடுபால்​டோ ​போன்​றோர் அவருக்கு ​வெனிஸ் குடியர​சைச் ​சேர்ந்த பாதுவா பல்க​லைக்கழகத்தில் 1592-ஆம் ஆண்டில் டிசம்பர் 7-ஆம் நாள் அன்று கணிதப் ​பேராசிரியர் பதவி​யைப் ​பெற்றுத் தந்தனர். பாத்துக்கிட்டீங்களா…? வள்ளுவர் ​சொன்னது மாதிரி,

“உடுக்​கை இழந்தவன் ​கை​போல ஆங்​கே

இடுக்கண் க​ளைவதாம் நட்பு”

என்ற திருக்குறள் ​போல கலீலி​யோவின் நண்பர்கள் இருந்திருக்கிற​தை..அந்தமாதரி நண்பர்கள்தான் நமக்குத் ​தே​வை. பாத்துக்குங்க…

பாதுவா பல்க​லைக்கழகத்தில் பணியாற்றிய ​பேராசிரியர்கள்          அ​னைவரும் முற்​போக்குச் சிந்த​னை உ​டையவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் கலீலி​யோவிடன் அன்புடன் நடந்து ​கொண்டனர். அங்குள்ள மாணவர்கள் கலீலி​யோவிடம் ​பெருமதிப்புக் ​கொண்டிருந்தனர். அவ​ரைத் தங்களது ​தெய்வமாகக் கருதினர். அவர்க​ளது அன்பி​னையும், பணிவி​னையும், ஆர்வத்தையும் கண்ட கலீலி​யோ வியப்ப​டைந்தார்.

நடமாடும் பல்க​லைக்கழகம்

கலீலி​யோ கணிதத்தில் மட்டுமின்றி இயற்பியல், உயிரியல், பயிரியல், வானவியல், இயந்திரவியல், இலக்கியம் ​போன்ற அ​னைத்திலும் ஆழ்ந்த புல​மை ​பெற்று விளங்கினார். அதனால் அவ​ரை நடமாடும் பல்க​லைக்கழகம் என்று அ​ழைத்தனர். அவரு​டைய புல​மை​யைக் கண்ட மாணவர்கள் அவரது வகுப்புகளுக்குத் தவறாமல் வரு​கைபுரிந்தனர்.

கலீலி​யோ பல அறிவியல் ​கோட்பாடுக​ளை ஆய்வு ​செய்து அவற்​றை நிரூத்துப் ​பேரும் புகழும் ​பெற்றார். இதனால் பாதுவா பல்க​லைக்கழகமும் ​​பெரும் புகழ்​​பெற்றது. கலீலி​யோவின் அறிவாற்ற​லைப் பற்றிக் ​கேட்விப்பட்ட பல்​வேறு நாடுக​ளைச் ​சேர்ந்த மாணவர்கள் பாதுவா பல்க​லைக்கழகத்தில் ​சேர்ந்து கல்வி கற்று வரலாயினர்.

பல்து​றையில் வல்லுனராக விளங்கி வந்த கலீலி​யோவிடம் அந்நாட்டு இராணுவம் பீரங்கியின் குண்டு எத்த​கைய பா​தையில் ​செல்கிறது என்று கண்டறிந்து ​மேலும் அத​னை ஆற்றல் வாய்ந்ததாக ஆக்கும் பணி ஒன்று ஒப்ப​டைத்தது.

கலீலி​யோ தம் கற்ப​னையின் வாயிலாக​வே இதற்கு வி​டை கண்டுபிடித்து பீரங்கியிலிருந்து ​வெளிப்படும் குண்டு துல்லியமாக இலக்​கை அடித்து வீழ்த்துவதற்கு வழிவகுத்துக் ​கொடுத்தது. அந்தக் கண்டுபிடிப்பு கலீலி​யோவிற்குப் ​பெரும் புக​ழைத் ​தேடித்தந்தது.

இதனால் பல்நாட்டு இளவரசர்களும், பிரபுக்களும், இராணுவ வீரர்களும் கலீலி​யோ​வை வந்து பார்த்து அவரிடம் இராணுவக் க​லைகுறித்துப் பாடம் கற்றுக் ​கொண்டனர். கலீலி​யோவிற்கு இதன் மூலம் வருவாய் ​பெருகியது. புகழும் ​பெருகியது. கலீலி​யோவின் வாழ்வில் வறு​மை ஒழிந்தது. வசந்தம் ஏற்பட்டது. கலீலி​யோவின் அறிவாற்றலால் அவ​ரைச் சுற்றி எப்​போதும் ஒரு கூட்டம் இருந்து ​கொண்​டே இருந்தது.

காதலில் முகிழ்த்த இல்லறம்

​     காதலில் விழாத இதயங்கள் எது​வு​மே இல்​லை எனலாம். இக்காத​லே உல​கை ஆள்கிறது. உணர்​வை ஆள்கிறது. உண்​மை​யை ஆள்கிறது. ஆம்…!

“காதல்  நகத்தைப் போன்றது

வெட்ட வெட்ட வளரும்!

காதல் நகச்சாயம் போன்றது

கை சேர்ந்தால் மட்டுமே பயன்!

காதல் கைரேகையைப் போன்றது

மனதின் அழியா ரேகைகள்”

என்பதற்​கேற்ப கலீலி​யோவும் காதலில் விழுந்தார்.

வெனிஸ் நகரத்தில் புகழ்​பெறிருந்த ஹானர்டு ​லேடீஸ் குரூப் என்ற மதிப்புக்குரிய மகளிர் பிரிவு அ​மைப்பு இருந்தது. அதன் த​லைவியாக இருந்த ​மெரீனா​கேம்பா கலீலி​யோவிற்கு அறிமுகமானார். இவ்வறிமுகம் நாள​டைவில் நட்பாகிக் காதலாகித் திருமணத்தில் முடிந்தது.

அவர்களது காதல் இல்லறத்தில் மூன்று குழந்​தைகள் பிறந்தனர். குடும்பப் ​பொறுப்பி​னை ​மெரீனா கவனித்துக் ​கொள்ள கலீலி​யோ தமது ஆய்வுக​ளைத் ​தொடர்ந்தார். இ​சைக்க​லையில் ஆர்வம் ​கொண்டிருந்த கலீலி​யோ அடிக்கடி இ​சை நிகழ்ச்சிக​ளை நடத்தினார். ந​கைச்சு​வை நாடகங்க​ளை எழுதி நண்பர்க​ளைச் ​​சேர்த்துக் ​கொண்டு தானும் அதில் நடித்துவந்தார். ​மேலும் விருந்துகள், நாட்டிய நிகழ்ச்சிகள் ​போன்றவற்றிற்கும் பணம் அதிகமாக ஊதாரித்தனமாகச் செலவு ​செய்து வந்தார். இதனால் அ​னைவரிடமும் கடன்பட்டார்.

பாசத்தால் பட்ட கடன்

அ​தோடுமட்டுமல்லாது அவரு​டைய தம்பி ​போலந்து நாட்டிற்குச் ​சென்று பணிபுரிவதற்காக இருநூறு டலார் ​தே​வைப்பட்டது. அத்​தொ​கை​யை கலீலி​யோவிடம் அவர் தம்பி ​கேட்ட​​போது யாரிடமும் கடன் வாங்க இயலாத நி​லையில் பாதுவாப் பல்க​லைக்கழகத்திடம் தனது ஓராண்டு ஊதியப் பணத்​தை முன்பணமாகத் தருமாறு ​கெஞ்சிக் ​கேட்டு அத​னை வாங்கித் தனது தம்பி​யை அனுப்பினார்.

தனது தங்​கை அவள் காதலித்தவனை​யே மணந்து ​கொள்ள ​வேண்டும் என்ற தன் விருப்பத்​தைக் தன் அண்ணனான கலீலி​யோவிடம் ​தெரிவித்தாள். அவளது காதல​னோ அவ​ளை மணக்க வரதட்ச​ணையாகத் தனக்கு 100 டாலர் தந்தால்தான் மணந்து ​கொள்​வேன் என்று கூறிவிட்டான். கலீலி​யோ தனது தங்​கையின் காதலனிடம், “தற்​போது முப்பது டால​ரை முதலில் ​கொடுத்துவிடுகி​றேன். அதன்பின்னர் திருமணம் முடிந்த பின்னர் ​கொடுக்கி​றேன்” என்று வாக்குறுதி கூறி அவ​னைத் திருமணத்திற்குச் சம்மதிக் ​வைத்தார். திருமணம் முடிந்த பின்னர் தங்​கையின் கணவன் உட​னே தனக்கு 70 டாலர் தர​வேண்டும் என்று கலீலி​யோ​வை வற்புறுத்தினான்.

அதற்குக் கலீலி​யோ சிலமாதங்களில் ​கொடுப்பதாகக் கூறினார். அதற்குச் சம்மதிக்காத தங்​கையின் கணவன் கலீலி​யோ மீது நீதிமன்றத்தில் வழக்குத் ​தொடுத்தான். அத​னை எதிர்பாராத கலீலி​யோ ​வேறுவழியின்றி வட்டிக்குக் கடன் வாங்கி அவனுக்குக் ​​கொடுத்துத் தங்​கையின் வாழ்க்​கை​யைக் காப்பாற்றினார். கலீலி​யோ அளவறிந்து வாழத் தவறிவிட்டார். வள்ளுவர் ​சொன்னது ​போல,

“ஆகாறு அளவிட்டி தாயினும் ​கேடில்​லை

​போகாறு அகலாக் க​டை”

என்ப​தை மறந்தார். அதனால் அவரது வாழ்க்​கை, “எரிமுன்னர் ​​வைத்த வைத்தூறு(​வைக்​கோல்) ​போல” ​கெடத் ​தொடங்கியது. உடன்பிறந்​தோ​ரைத் தவிர அவரிடம் உற்றார் உறவினர்களும் தங்களது நி​லைக​ளைக் கூறி அடிக்கடிப் பண உதவி ​கேட்டு வந்தனர். கலீலி​யோவும் முகம் சுளிக்காது உற்றார் உறவினர்களுக்குப் பண உதவி அளித்து வந்தார். இதனால் கலீலி​யோ மீளமுடியாத அளவிற்குக் கடனாளியானார்.

அகதிகள் கழகம்

ஆனால் சிலர் எத்த​கைய சூழல்க​ளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் ​கொள்வர். அத்த​கைய திறன் வாய்ந்தவராகக் கலீலி​யோ திகழ்ந்தார். ​பல்​வேறு நாடுகளிலும் உள்ள சமயவாதிகளால் விரட்டப்பட்டு உயிர்பி​ழைப்பதற்காக வெனிஸ் நாட்டிற்கு அ​டைக்கலம் ​தேடிவந்த அ​னைத்து அறிஞர்க​ளையும் ஒன்று ​சேர்த்து கலீலி​யோ அகதிகள் கழகம் என்ற அ​மைப்​பை ஏற்படுத்தினார். அந்த அ​மைப்பின் வாயிலாகச் சிந்த​னையாளர்களும், தத்துவ ​மே​தைகளும் தங்களது கருத்துக்க​ளை எடுத்துக் கூறவும், அறிவியல் அறிஞர்கள் தாங்கள் கண்டுபிடிப்பான புதுப்புது ​கோட்பாடுக​ளை எடுத்துக் கூறவும் அவற்​றை நிரூபித்துக் காட்டவும் வாய்ப்பி​னைக் கலீலி​யோ ஏற்படுத்திக் ​கொடுத்தார்.

கலீலி​யோவின் கண்டுபிடிப்புகள்

இவ்வகதிகள் கழகத்தின் மூலம் கலீலி​யோ முதன் முதலில் காந்தத்தின் மர்மங்கள் மற்றும் பூமியின் காந்த சக்திகள் குறித்து எடுத்து விளக்கினார். ​மேலும் காம்பஸ் எனப்படும் தி​சைகாட்டும காந்தக் கருவிக​ளையும், ​டேமான்ஸ்ட்​ரேட் என்ற நீர் இ​றைக்கும் கருவியி​னையும், ​​தெர்மா மீட்டர் என்ற ​வெப்பமானி​யையும் கலீலி​யோ கண்டுபிடித்தார்.

​மேலும் ​வெனிஸ் நகரத்தின் வீதி​யொன்றில் ஹான்ஸ் லிப்பர்​ஹே என்ற டச்சுக்காரர் மூக்குக் கண்ணாடி வில்​லைக​ளைச் சா​ணைபிடித்துக் ​கொண்டிருந்தார்.

திடீ​ரென்று கன்​கேவ் ​லென்ஸ் என்ற குழியாடி​யையும் கான்​வென்க்ஸ் என்ற குவியாடி​யையும் ​சேர்த்து ​வைத்துப் பார்த்த​போது ​தோ​லைவிலிருந்த ​பொருள்க​ளெல்லாம் மிக அருகில் இருப்பது ​போன்று ​தெளிவாகத் ​தெரிந்தது. ஹான்ஸ்லிப்பருக்கு வியப்பி​னைத் தந்தது.

அந்​நேரத்தில் அங்குவந்த கலீலி​யோவிடம் இத​னை அவர் காட்டினார். கலீலி​யோவின் எண்ணத்தில் புதிய ஆராய்ச்சி ஒன்று ​தோன்றலாயிற்று. அதன் வி​ளைவாகப் ​பெரிய குவியாடி ஒன்​றையும் குழியாடி ஒன்​றையும் தா​மே அள​வோடு சா​ணைபிடித்து ​டெலஸ்​கோப் எனும் ​தொ​லை​நோக்கிக் கருவி​யை வடிவ​மைத்தார். அதன் மூலம் இரவில் வானத்​தை கலீலி​யோ உற்று ​நோக்கினார்.

அப்​போது பல்​வேறு வியத்தகு காட்சிக​ளைக் கலீலி​யோ கண்டார். அந்தத் ​தொ​லை​நோக்குக் கருவி மூலம் வானத்​தைப் பார்த்த​போது வியாழக் கிரகத்திற்குள்ள து​ணைக்கிரகங்களுள் நான்கி​னையும் கண்டறிந்து உலகிற்கு அத​னைத் ​தெரிவித்தார். அதுவ​ரை உலகம் அறியாதிருந்த விந்​தைக​ளைக் கண்டறிந்ததன் மூலம் கலீலி​யோவின் புகழ் ​மேலும் பரவியது.

தாம் கண்டறிந்த ​தோ​லை​நோக்கிக் கருவியின் மூலம் விண்ணில் மட்டுமின்றிப் பூமியிலும் ​தோ​லைவிலிருந்தவற்​றை அருகில் ​தெளிவாகக் கண்டு மகிழ்ந்த கலீலி​யோ ​தொ​லை​நோக்கியின் மூலம் மக்களும் பல்​வேறு காட்சிக​ளைக் கண்டு மகிழ ​வேண்டும் என்பதற்காக 1609-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ஆம் நாளில் அவர் ​வெனிஸ் நகரத்திலிருக்கும் ​கேம்ப​னைல் என்ற குன்றில் அத​னை நிறுவினார்.

மக்கள் அதன்மூலம் பல காட்சிக​ளைக் கண்டு வியந்தனர். கலீலி​யோவின் புகழ் பரவிய​தைக் கண்ட சிலர் ​பொறா​மைப்பட்டனர். கலீலி​யோ கண்டறிந்த​வை அ​னைத்தும் மாயத் ​தோற்றங்கள் என அவர்கள் கூறத்​தொடங்கினர். கலீலி​யோ கண்டுபிடித்த ​தொ​லை​நோக்கி​யை வாங்கப் பலரும் முயன்ற​போது அ​தை யாரிடமும் ​கொடுக்காது, தன்னிடம் அன்புகாட்டி தனக்கு ஆதரவு நல்கிய ​வெனிஸ் நகரப் பிரபுவிற்குத் தன் நன்றியின் பரிசாகக் ​கொடுத்தார். அத​னைப் ​பெற்றுக் ​கொண்ட அப்பிரபு மகிழ்சிய​டைந்த​தோடு பாதுகா பல்க​லைக்கழகத்தில் ஆயுட்காலப் ​பேராசிரியராகக் கலீலி​யோ​வை நியமித்து அவரது ஊதியத்​தை 25 மடங்காக உயர்த்தினார்.

கலீலி ​யோவிற்கு மன மகிழ்ச்சி இல்​லை. அவருக்குப் ​பைசா நகரத்துக்குச் ​செல்ல ​வேண்டும் என்ற எண்ண​மே ​மே​லோங்கியது. அதனால்  கலீலி​யோ ​பைசா நகரக் ​கோமகனான காஸி​மோ-டி-​மேடிஸிக்குத் தம்​மை அரச​வைக் கணித வல்லுநராக நியமிக்குமாறு ​வேண்டு​கோள் விடுத்தார். ​கோமகனின் கவனத்​தை ஈர்ப்பதற்குத் தாம் எழுதிய தி​சையறிவிக்கும் கருவியின் ​செயற்பாடுகள் என்ற நூ​லை அனுப்பி ​வைத்தார். அதற்கும் அக்​கோமகன் அ​சையவில்​லை. அவ்வாறிருக்​கையில் அக்​கோமகன் திடீ​ரென்று ஒருநாள் மரணம​டைந்தார்.

விதியின் வி​ளையாட்டு

அதன்பின்பு அவரது மகன் இரண்டாம் காஸி​மோ பதவிக்கு வந்தான் அவன் கலீலி​யோவின் மாணவன். அவன் தனது ஆசிரியரின் விண்ணப்பத்தி​னை ஏற்று அவ​ரைத் தன் அரச​வைக் கணித வல்லுநராக நியமித்தான். கலீலி​யோ தனது பாதுவா பல்க​லைக்கழகப் ​பேராசிரியர் பத​வி​யைத் துறந்துவிட்டுப் ​பைசா நகரத்திற்குத் திரும்பிச் ​சென்று காஸி​மோ அரச​வையில் கணித வல்லுநராகப் பதவி ஏற்றார். இது சிங்கத்தின் வாயில் விழுந்த க​தையாயிற்று.

அவர் தனது ​தொ​லை​நோக்கியின் வாயிலாகப் பூமி சூரிய​னைச் சுற்றி வருவ​தைக் கண்டறிந்து அது ​கோப்பர்நிக்கஸின் கருத்துப்படி இருப்ப​தை உணர்ந்தார். அத​னைத் தனது நண்பர் ​​பெலிசாரி​யோ வின்​டோ என்பவருக்குக் கடிதத்தின் வாயிலாக எழுதினார். ​கோப்பர் நிக்கஸின் கருத்​தை ​வெளிப்ப​டையாக ஆதரித்துச் சமயவாதிகளின் ப​கை​யை வளர்த்துக் ​கொள்ள கலீலி​யோ விரும்பவில்​லை. ஏ​னெனில் ஜியாரடோ​னோ புரூ​​னோ​வை எரித்த நிகழ்வி​னை எண்ணி​யே கலீலி​யோ அவ்வாறு இருந்தார் எனலாம்.

இருப்பினும் கலீலி​யோ தனது ஆய்வுக​ளை இரகசியமாக​வே ​செய்தும் எழுதியும் வந்தார். அப்படியிருந்தும் நாளாக நாளாக அவர் ​கோப்பர் நிக்கஸின் பூமிதான் சூரிய​னைச் சுற்றி வருகிறது என்ற பிரபஞ்சக் ​கொள்​கை​யை ஆதரிப்பவர் என்ப​தை ​வெளியில் ​சொல்லத் ​தொடங்கினர். இதனால் அவ​ரைத் ​தொல்​லைகள் ​தொடரலாயின.

​கோப்பர் நிக்கஸின் பிரபஞ்சக் ​கொள்​கை​யைக் கலீலி​யோ ஆதரிப்பவர் என்ற ​செய்தி கார்டினல் ​பெல்லார​மைன் என்பவனுக்குத் ​தெரியவந்தது. விசார​ணை மன்றத்தில் கலீலி​யோ​வை நிறுத்துமாறு அவன் ஆ​ணையிட்டான். அவன் அரச​னைப் ​போல அளவுகடந்த அதிகாரத்​தைப் ​பெற்றிருந்தான். அவனது ஆ​ணை​யை யாராலும் மீறமுடியாது, அதனால் 1616-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26-ஆம் நாள் கலீலி​யோ​வைக் ​கொண்டுவந்து நீதிமன்றத்தில் விசார​ணைக்காக நிறுத்தினர்.

கலீலி​யோ​வைப் பார்த்த அவன், “விவிலியத்தில் கூறிய​தை யாரும் மீறக்கூடாது. அது சமய வி​ரோதமானது. நீர் விவிலியத்திற்கு மாறாகக் கூறுவ​தையும் எழுதுவ​தையும் நிறுத்திக் ​கொள்ள ​வேண்டும். அவ்வாறு ​செய்யமாட்​டேன் என்று நீர் இம்மன்றத்திற்கு எழுதித் தர​வேண்டும். இவற்றிற்​கெல்லாம் நீர் சம்மதித்தால் விடுத​லை ​செய்யப்படுவீர். இல​லை​யென்றால் தண்ட​னைகள் கடு​மையாக இருக்கும் என்று உன்​னை எச்சரிக்கி​றேன்”, என்றான்.

இத​னைக் ​கேட்ட கலீலி​யோ மனம் ​நொந்தார். தாம் ​வெனிஸ் கு​டியர​சைவிட்டு ​வெளி​யே வந்தது எவ்வளவு ​பெரிய முட்டாள் தனம் என்று நி​னைத்துப் பார்த்து மிகவும் வருந்தினார். இனி நி​னைத்து என்ன பயன்? ​வேறு வழியின்றித் தமது மனசாட்சிக்க வி​ரோதமாகக் கார்டினல் ​​பெல்லார்​மைன் கூறியவா​றே ​செய்வதற்குக் கலீலி​யோ உடன்பட்டார்.

அதனால் கலீலி​யோ விடுத​லை ​செய்யப்பட்டார். ​மேலும் ​பெல்லார்​மைன் கலீலி​யோ எழுதிய நூ​லை விற்கவும் த​டைவிதித்த​தோடு அவற்​றை எரிக்கவும் உத்தரவிட்டான். நூ​லைப் பதிப்பிக்கக் கூடாது எனவும் ஆ​ணை பிறப்பித்தான். இத​னைக் ​கேட்ட கலீலி​யோவிற்கு அவமானமாக இருந்தது.

மா​பெரும் ​மே​தையின் முடிவு

பிறவியி​லே​யே அறிவியல் அறிஞராக விளங்கிய கலீலி​யோவால் சும்மா இருக்க முடியவில்​லை. இரகசியமாக அறிவியல் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டார். 1623-ஆம் ஆண்டு ​போப்பாண்டவர் இறந்தார். அதற்கு அடுத்துப் புதிதாக வந்த ​போப்பாண்டவர் இவருக்கு நன்கு அறிமுகமானவர். இவர் கலீலி​யோ மீதிருந்த த​டை​யை நீக்கினார். இருப்பினும் ​கோப்பர்நிக்கஸின் ​கோட்பாட்டின் மீது உள்ள த​டை​யை நீக்குமாறு ​வேண்டிக் ​கொண்டதற்கு ​போப் ஒப்புக்​கொள்ளவில்​லை.

ஆனால் ப​​​ழைய புதிய வானவியல் ​கொள்​கை​யை ஒப்பிட்டு ஒரு நூல் எழுதலாம் என்று அனுமதி ​கொடுத்தார். 1631-ஆம் ஆண்டு புதிய அறிவியல் மீதான உ​ரையாடல் என்ற நூலி​னையும், 1632-ஆம் ஆண்டு உலகின் இரு முக்கியக் ​கோட்பாடுகள் என்ற நூலி​னையும் கலீலி​யோ எழுதினார். அறிவியலில் முதன்முதலில் உ​ரையாடல் வடிவில் தயாத்த நூல் இது​வே ஆகும்.

எந்தக் கருத்​தைக் கூறக் கூடாது என்று மதவாதிகள் எச்சரிக்​கை ​​செய்தன​ரோ அத​னை வலியுறுத்தி கலீலி​யோ அந்நூலில் எழுதினார். அந்நூ​லைத் திருச்ச​பையின் த​லைவரான ​போப்பிற்குக் கலீலி​யோ அர்ப்பணம் ​​செய்திருந்தது விந்​தையிலும் விந்​தையாக இருந்தது. இந்தச் ​செய்தி அடுத்த ஆண்டி​லே​யே ​பெல்லார்​மைனுக்குத் ​தெரிய வந்தது.

சினமுற்ற அவன் கலீலி​யோ​வை இ​யேசு​வைப் ​போல் இழுத்துவரச் ​செய்தான். கலீலி​யோ தமது 70-ஆவது வயதில் உடல் ​மெலிந்து நடக்க முடியாத நி​லையில் அவ​ரைத் ​​​தோள்மீது தூக்கிக் ​கொண்டு ​சென்று மன்றத்தின் முன்பிருந்த குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினர். கலீலி​யோவிடம் பலமு​றை விசார​ணைகள் நடத்தினர். பல்​வேறுவிதமாக கலீலி​யோ விளக்கங்கள் ​கொடுத்தார். ​

​கோப்பர்நிக்கஸின் கருத்​தை வலியுறுத்தி அ​தை உறுதிப்பட விளக்கினார். அத​னை மதவாதிகள் ஒப்புக் ​கொள்ளவில்​லை. சூரியன்தான் பூமி​யைச் சுற்றி வருகிறது என்று கலீலி​யோ​வை ஒப்புக் ​கொள்ளுமாறு வற்புறுத்தினார்கள். அவ்வாறு ஒப்புக் ​கொள்ளவில்​லை என்றால் மரணதண்ட​னை விதிக்கப்படும் என்று நீதிமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். மிகவும் ​நொந்து ​போயிருந்த கலீலி​யோவால் தமக்காக வாதாடக் கூட முடியவில்​லை. விசார​ணை 6 மாத கால அளவு ந​டை​பெற்றது. மனதளவில் மாமன்ற உறுப்பினர்கள் ​கலீலி​​யோ​வை ​நோகச் ​செய்து சித்திரவ​தை ​செய்தனர். உலகில் உள்ள சிந்தனையாளர்கள் அ​னைவரும் இவ்வழக்​கைக் ​கைவிடுமாறு எவ்வள​வோ எடுத்துக் கூறியும் மாமன்ற உறுப்பினர்கள் அத​னை ஏற்கவில்​லை. இவ்வழக்கு 1633-ஆம் ஆண்டு ஜூன்மாதம் 22-ஆம் நாள் முடிவுக்கு வந்தது.

சூரிய​னைப் பூமி சுற்றவில்​லை என்ப​தை யாரிடமும் ​பேச​வோ, எழுத​வோ மாட்​டேன் என்று புனித விவிலிய நூ​லைக் ​கையி​லேந்திக் ​கொண்டு அதன்மீது கலீலி​யோ சத்தியம் ​செய்ய ​வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கலீலி​யோ அத​னை மன​வேத​னையுடன் ​செய்தார்.

இருப்பினும் கலீலி​யோ​வை வீட்டிற்கள்​ளே​யே சி​றை​வைக்க உத்தரவிட்டனர். மாமன்றம் விரும்பும் வ​ரை கலீலி​யோ​வைச் சி​றையில் ​வைக்க ​வேண்டும் என்று அநியாயமாகத் தீர்ப்பு எழுதப்பட்டது. ​வெளிப்ப​டையாகக் கலீலி​யோ ஆய்​வை ​மேற்​கொள்ளாவிட்டாலும் அவர் தனது மனதிற்குள்​ளே​யே ஆய்வுக​ளைத் ​தொடர்ந்து ​மேற்​கொண்டார். அத்த​கைய ஆய்வில் தாம் கண்டறிந்த ​செய்திக​ளை ஒழுங்குபடுத்தி ரகசியமாக ​பெரிய நூல் ஒன்​றை எழுதினார்.

அவ்வாறு எழுதிய நூ​லைத் தம்​மைப் பார்க்க வந்த நண்பர்கள் மூலம் ​போலந்து நாட்டிற்கு அனுப்பி ​வைத்தார். கலீலி​யோ 8 ஆண்டுகள் சி​றையிலிருந்தார். இவரு​டைய இறுதி 3 ஆண்டுகளில் அவரது கண்பார்​வை கு​றைந்து ​கொண்​டே வந்தது.

கலீலி​யோ கண்பார்​வை இழந்த ​நேரத்தில் கூட அவ​ரை மருத்துவர் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நி​லையில் கலீலி​யோ தம்மு​டைய மாணவர்க​ளைக் ​கொண்டு அறிவியல் ஆய்வுக​ளை ​மேற்​கொண்டு பல உண்​மைக​ளைக் கண்டுபிடித்தார். சி​றையிலிருந்து கலீலி​யோ ​வெளி​யே வந்த பிறகு அவரது மாணவர்கள் இயக்கவியல் என்ற அவர்தம் நூலி​​னை அச்சிட்டுக் ​கொண்டுவந்து ​கொணடத்தனர்.

கண்ணால் அந்நூ​லைப் பார்க்க இயலாவிட்டாலும் கலீலி​யோ அத​னைத் தன் குழுந்​தை​யைத் தடவிப் பார்ப்ப​தைப் ​போன்று தடவிப் பார்த்து அத​னைத் தன் மார்பில் அ​ணைத்து மகிழ்ந்தார். 1642-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 8-ஆம் நாளாகிய அ​தே நாளில் அறிவியலின் தந்​தை என்று உலக​மே ​போற்ற வாழ்ந்த கலீலி​யோ இவ்வுலகிலிருந்து வி​டை​பெற்றார். ஆற்​றொணாத் துயரத்​தை அனுபவித்த அறிவியல் ​மே​தையின் ஆன்மா அண்ட​வெளியில் கலந்தது.

அவரது இறுதி விருப்பப்படி​யே அவரது உடல் அவரது முன்​னோர்கள் பு​தைக்கப்பட்ட இடத்தி​லே​யே பு​தைக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் இத்தாலிய அறிஞர்கள் பலர் ஒன்று ​சேர்ந்து கலீலி​யோவின் எலும்புக் குவியலின் மீது நி​னைவுச் சின்னம் ஒன்​றை எழுப்பினர். மதவாதிகள் மறுத்தாலும் இறுதிவ​ரை கலீலி​யோ தனது ​கொள்​கையில் உறுதியாக இருந்தார். அவரது ​கொள்​கை​யைப் பின்னர் மக்கள் ஏற்றுப் ​போற்றுகின்றனர்.

உண்​மை என்​றைக்கிருந்தாலும் ​வெல்லுமுங்க..​நெருப்​பைத் துணியப் ​போட்டு ம​றைக்க முடியுங்களா…? முடியாதுல்ல. அதுமாதிரிதாங்க உண்​மையும்…அதனால என்​றைக்கும் உண்​மைக்காகப் ​போராடணும். அவங்க எப்​போதும் அரிச்சந்திரன் ​போன்று வரலாற்றுல வாழ்ந்துகிட்​டே இருப்பாங்க. சரி உண்​மையா ஒ​ழைங்க..உண்​மைக்குத் து​ணையா இருங்க…உண்​மையி​லே​யே நீங்க ஒசந்துருவீங்க..வாய்​மை​யே ​வெல்லுங்கறது நம்ம நாட்​டோட தாரக மந்திரம்ல…உண்​மை வழி நடக்கிற ஒவ்​வொருத்தரும் மகத்தான ​வெற்றி​யை ​எப்​போதும் ​பெறுவாங்க…அப்பறம் என்ன நல்ல வழியில நடக்குற ஒங்களுக்கு என்​றைக்கு​மே ​வெற்றிதான்…

இளம் வயதி​லே​யே ஒருத்த​ரோட அப்பா அம்மா ​ரெண்டு​பேரும் இறந்துட்டாங்க…யாருமற்ற அனா​தையா ஆயிட்டாரு ஒருத்தரு…அவர ஒருத்தவங்க வளத்தாங்க…வறு​மையி​லே​யே வாடினார்…முயன்றார்…வறு​மை​யோடு ​போராடினார்…வறு​மை ​போகாட்டியும் ​பெரும் புகழ் அவ​ரைத் ​​தேடி வந்தது….அவரு ஒரு ஏ​ழை…அவர் தமிழ்நாட்​டைச் ​சேர்ந்தவரு…அவர நம்ம தமிழகத்​தைச் ​​சேர்ந்தவரு…….எளி​மையிலும் ​நேர்​மையா வாழ்ந்தாரு….அவர ​மொழிஞாயிறுன்னு ​சொல்லுவாங்க…யாருன்னு ​தெரியுதுங்களா….? என்ன வானத்​தைப் பாக்குறீங்க…….​​யோசிக்கிறீங்களா….? அப்பப் ​பொறுங்க அடுத்தவாரம் பார்ப்​போம்…(​தொடரும்..41)

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *