தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 மார்ச் 2020

விட்டு விடுதலை

ராமலக்ஷ்மி

Spread the love

சுமக்கிற பிரியங்களை
இறக்கி வைப்பது
இறுதி நொடியில் கூட
இயலுமா தெரியவில்லை.
பிரிகிற ஆன்மா
பேரொளியில் சேரத்
தடையாகுமதுவே
புரியாமலுமில்லை.

காலத்திற்கேற்ப
ஆசைகள் மாறுவதும்
தலைமுறைகள் தாண்டிப்
பாசங்கள் தொடர்வதும்
புகழ்பொருள் மீதான நாட்டங்கள்
போதையாகுவதுமே
சாஸ்வதமாக

மீளும் விருப்பற்று
இறுக்கும் சங்கிலிகளுக்குள்
இருப்பினைப் பத்திரமாக்கி

விட்டு விடுதலை ஆகாமலே
விடுதலை ஆகிறோம் ஓர் நாள்.

-ராமலக்ஷ்மி

Series Navigation‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னேநடனக்கலைஞர் சாந்தா ராவ் நினைவாக…

Leave a Comment

Archives