நீதிக்கட்சியின் காலம்வரை பிராமணரல்லாதோரின் ஒன்றிணைதல் என்பது முழுமையடையவில்லை.
ஆனாலும் கூட மேலைநாட்டுக் கல்வியும் அதன்வழி அவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட சமத்துவகோட்பாடுகளும் நீதிக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றங்களை அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்தது. அக்காலச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அச்சட்டங்களை மிகப்பெரிய சமூகப்புரட்சி என்றே சொல்லலாம்.
நாடகம் பார்க்க பஞ்சமர்க்கு இடமில்லை என்று நுழைவுச்சீட்டில் அச்சடித்து வெளியிட்டக் காலக்கட்டம், பச்சையப்பன் அறக்கட்டளை நடத்தும் கல்விநிலையங்களில் ஆதிதிராவிடர், கிறித்துவர், இசுலாமியர்கள் சேர முடியாத காலக்கட்டம். பேருந்துகளில் ஆதிதிராவிடர்கள் ஏற அனுமதியில்லை,
அவர்களுக்கு டிக்கெட் கொடுக்க மாட்டோம் என்று சட்டங்கள் இருந்தக் காலக்கட்டம். இச்சமூக சூழலில் நீதிக்கட்சி கொண்டுவந்த சட்டங்கள் மிகவும் புரட்சிகரமானவை தான்.
பேருந்துகளில் குறிப்பிட்ட சாதியை ஏற்றமாட்டோம் என்பதைக் கடைப்பிடிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு அவர்கள் லைசன்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.
உள்ளாட்சி துறையிலோ தனியார் நிறுவனங்களாலோ நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்க மறுக்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தொகை உடனே நிறுத்தப்படும் என்று கூறி மான்யம் பெறுவதற்கான
முன்நிபந்தனையாக இதை மாற்றியது ஒரு பெரும்சாதனை. அப்படி மாற்றப்பட்ட பள்ளிகள் 1936ல் 9614 பள்ளிக்கூடங்கள் என்பதை மறப்பதற்கில்லை.
இந்த இயக்கத்தின் மூன்றாவது கட்டத்த்தில் தலைமை ஏற்கும் தந்தை பெரியார், அவர் கண்ட சுயமரியாதை இயக்கம் , திராவிடர் கழகம் சில கொள்கைகளை உரக்கப்பேசியது.
1950ல் ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.
நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம்
என்றார்.
அவருடைய கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார். மேனாட்டில் நாத்திகம் என்பது முழுக்கவும் அறிவியல் பார்வை. ஆனால் பெரியார் பேசிய நாத்திகம் என்பது முழுக்க முழுக்க சமூகநேயத்தை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது. அதற்கு உதவியாகத்தான் அறிவியல் ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்.
சூத்திர பஞ்சமர்களுக்கு இடையில் நிலவிய தீண்டாமையையும் சேர்த்தே எதிர்த்தார். அகமணமுறை தான் சாதியம் வாழ்வதற்கான இன்னொரு காரணம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால் தான் சாதிமறுப்பு திருமணங்களையே அவரே முன்னின்று ந்டத்தினார் . . சாதியம் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றியதற்கு மனுசாஸ்திரத்தை ஏற்றுக்கொண்ட பிராமணியம் தான் காரணம் என்று உறுதியாக நம்பினார். அதானாலேயே இந்துமதத்தையும் இந்துமதக்காவலர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களையும் கடுமையாக எதிர்த்தார்.
பெரியார் பேசிய இந்துமத வைதீக எதிர்ப்பு, சாதி ஒழிப்பு , சமத்துவம் ஆகிய கருத்துகளை அவருக்கு முன்னரே தமிழ்மண்ணில் பேசி
எழுதி இயக்கம் கண்டு போராடிக்கொண்டிருந்த ஆதிதிராவிட
சமூகம் மிக இயல்பாக பெரியாரின் இயக்க செயல்பாடுகளால்
களப்பணிகளால் ஈர்க்கப்பட்டார்கள்.
திராவிட இயக்க வரலாற்றில் பெரியாரின் காலக்கட்டத்தில் நடந்த மிக முக்கியமான மாற்றமாக இதை நான் கருதுகிறேன்.
ஏனேனில் நான் குறிப்பிட்டது போல இயக்க வரலாற்றின்
பாதையில் மூன்றாவது கட்டமான ஒன்றிணைதல்
பெரியாரின் காலத்தில் சாத்தியப்பட்டுவிட்டது.
இதை மிகச்சரியாக அறுவடை செய்தவர் அறிஞர் அண்ணா எனலாம்
( தொடரும்)
- வீடு திரும்புதல்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- நட்பு
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- தினமும் என் பயணங்கள் – 13
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை