ரோல் மாடல் என்னுடைய பார்வையில்.:-

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் அனைவருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் யாராவது ஒருத்தர் ரோல் மாடலாக இருந்திருப்பார்கள். சிலருக்கு அவர்கள் குடும்பங்களில் இருப்பவர்களே ரோல்மாடல்களாக இருப்பார்கள். சிலருக்கு சாதனை புரிந்தவர்கள். வெற்றிபெற்ற ஒவ்வொருவரின் பின்னும் ரோல்மாடல்களின் பங்கு கட்டாயம் இருக்கும்.

இந்நூலில் தம் உழைப்பால் உயர்ந்து முன்னுக்கு வந்த 21 பேரின் சாதனைக் கதைகள் ரோல்மாடல்களாக விரிகின்றன நம் கண்முன்னே. முன்மாதிரிகள் என்பவர்கள் எப்படியும் இருக்கலாம்தானே. அது போல் இந்நூல் பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வெற்றிக்கதைகளையும் கூறுகிறது.

சூழ்நிலையைக் கடந்து முன்னேற நினைத்தவர்கள், உடற்கூறின் இயலாமையைக் கடந்து முன்னேற நினைத்தவர்கள், சுற்றுச்சூழலின் மேல் அக்கறை கொண்டவர்களைப் பற்றி அவர்கள் மொழியிலேயே பேசிச் செல்கிறது .

இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் மரைன் இஞ்சினியர், சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு குப்பைத்தொட்டி.காம் ஆரம்பிச்ச சுஜாதா, குடிசைவாழ் குழந்தைகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்திய தாமோதரன், சகோதரி அமைப்பின் மூலம் வழிகாட்டும் திருநங்கை கல்கி, அமெரிக்கா செல்லும் வாய்ப்பையும் விட்டுவிட்டு தந்தையின் எண்ணெய் வியாரத்தை ஏற்றத்துக்குக் கொண்டுவந்த சாந்தி, மாற்றுத் திறனாளியாக இருந்தும் கால்பந்தில் சாதித்த முருகசாமி, டிஸ்லெக்சியா குறைபாடையும் மீறி வருமானவரித்துறையின் துணை இயக்குநராக மின்னும் நந்தகுமார், பைக் ரேஸர் சாம்பியன் சித்ரப்ரியா,பார்வையற்றும் ஆன்லைனில் ஆங்கிலப்பயிற்சி, தொடர்புத்திறன் பயிற்சியளிக்கும் பேராசிரியர் இளங்கோ, தடகள வீராங்கனை காயத்ரி, மாற்றுத்திறனாளியாக இருந்தும் மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக சுய உதவிக்குழு ஆரம்பித்துப் பயிற்சி அளித்து வரும் அமுத சாந்தி, பிஸியோதரஃபி படித்துவிட்டு ஆட்டுப் பண்ணையும் இயற்கை விவசாயமும் செய்யும் வெங்கடேஷ், பார்வையிழந்தும் தன்னம்பிக்கை இழக்காமல் ஐபிஎம்மில் சர்வீஸ் லீடராகப் பணிபுரியும் காமராஜ், நரிக்குறவர் இனத்தில் பிறந்து முதல் பொறியியல் பட்டதாரியான ரஜினி, பழைய பேப்பரைத் தரம்பிரித்து சப்ளை செய்யும் யூனிட் நடத்தும் சந்தானகிருஷ்ணன், கால்பந்தாட்ட வீராங்கனை வித்யாவதி, பக்தி வழிப் பசுமையைக் கொண்டுவந்த இயற்கை செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுப் புத்துயிர் கொடுத்துவரும் ஜெயராமன், சாஃப்ட்வேர் தொழிலை விட்டுவிட்டு நாட்டு மாடுகளை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் சண்முகம், அதேபோல வருட வருமானம் 70 லட்சம் வரக்கூடிய சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டுத் தன்னுடைய தேனூரை மாதிரி கிராமமாக மாற்றிய செந்தில், ஏரிகளைப் புனரமைக்கும் அருண் கிருஷ்ணமூர்த்தி, ஆகிய எல்லாரும் உழைப்பின் உயர்வையும் வெற்றியின் ரகசியத்தையும் சொல்றாங்க. தொடர்ந்த உழைப்பும் திட்டமிட்ட உழைப்பும் ஜெயிக்கும்னு.

இவர்கள் அனைவரும் 30 வயதுகளில் இருந்து அதற்கு மேலும் உள்ள வயதுகளில் இருப்பவர்கள். லட்சக்கணக்கில் வருமானம் வரக்கூடிய மென்பொறியியல் துறையைக்கூட விட்டுவிட்டு, அது தரும் சலுகைகளையும் அயல்நாட்டுப் பயணங்களையும் , சொகுசான வாழ்க்கையையும் விட்டுவிட்டு நம் மண்ணில் உள்ள தொழில்களைச் செய்வதில் ஆத்மதிருப்தியும் அதன் மூலம் பெரும் வருமானத்தையும் பெற்று வெற்றி பெற்றவர்கள்.

இவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் பின்னும் சமூக நலனும் அக்கறையும் மிளிர்கிறது. தம் மனோதிருப்திக்காக உழைக்கும் அதே நேரம் சமூகததையும் உயர்த்தும் இவர்கள் சேவை போற்றுதலுக்குரியது.

எந்தத் துறையானாலும் ஈடுபாடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தா ஜெயிக்க முடியும்னு சொல்றாங்க இந்த ரோல் மாடல்ஸ். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் 2013 பிப்ரவரியில் வாங்கின இந்த நூலை இப்பத்தான் படிக்க சந்தர்ப்பம் வாய்த்தது. இப்பவாவது சந்தர்ப்பம் கிடைத்ததே என்று இந்த நல்ல விவரங்களை எல்லோருடனும் பகிர்வதில் மகிழ்கிறேன்.

படிச்சுப் பாருங்க. எது செய்தாலும் ஜெயிப்போம்னு தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும்.

நூல் :- ரோல் மாடல்

ஆசிரியர் :- வெ. நீலகண்டன்..

பதிப்பகம். :- சூரியன்

விலை :- 75.

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Revathi Narasimhan says:

    மிக அருமை தேன். எத்தனை ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன இந்த நூலில். ஒளிபடைத்த கண்ணும் உறுதி கொண்ட நெஞ்சும் இவர்களை நம் கண்முன் நல்மாதிரியாக நிற்க வைத்திருக்கின்றன. எடுத்துச் சொன்ன ஆசிரியரூக்கும்,இங்கே கொடுத்த உங்களுக்கும் மிக நன்றி.

  2. Avatar
    meenal says:

    உலகிற்கு எத்தனையோ ஒளி விளக்குகளை விளக்கி ஏற்றிய ஆசிரியர் திரு.நீலகண்டன் நூலைப்பற்றி திண்ணையில் ஏற்றிய தேனம்மைக்கு ஒரு பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *