“சாலிடரி ரீப்பர்”…வில்லியம் வோர்ட்ஸ்வர்த்

This entry is part 5 of 23 in the series 7 டிசம்பர் 2014
 wordsworth_323269k
“அரிவாள் முனையில் கசியும் மோனம்”
Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.
அவளைப் பார்.
என்ன அழகு? என்று
உன் விழிகளால் விழுங்கிக்கொள்ள‌
உன்னைக்கூப்பிடவில்லை.
ஒற்றையாய் அந்த வயற்காட்டில்
தனிமை பிழிந்தெடுக்கும்
ஸ்காட்லாண்டு
“ஸெல்டிக்”மலைமுடிச்சுகளின்
உயர்ந்த திட்டில் கன்னிக்கனவுகளுடன்
அவள் இயங்குவதைப்பார்.
தானே பொழிந்த இசைமழையில்
குளித்துக்கொண்டு
கதிர்கள் அறுக்கும் பணியையும்
கவிதையாக்கிக்கொண்டிருக்கிறாள்.
அந்த பொன்மழை தூவும்
தாலாட்டை குலைத்து விடாதே.
குறுக்கே போகாமல்
இங்கேயே நில்.
அல்லது
முடியுமானால் மண்ணில் படாமல்
கால் கொண்டு மிதித்து
கொச்சைப்படுத்தும் ஓசை கிளப்பாமல்
கடந்து செல்.
தானியக்கதிர்களை அறுத்து
கட்டுகிறாள்.
கயிறு கொண்டு அல்ல.
முறுக்கிப்பிழியும்
தனிமைத்துன்பத்தின் புரி கொண்டு
கட்டுகிறாள்.
அந்த இறுக்கத்தையும் கூட‌
இனிய இசையாக்கி
சாரல் தூவுகிறாள்.
அந்த மலைச்சரிவெல்லாம் பார்.
உற்றுக்கேள்.
அவள் மனச்சரிவே
ஒரு இசையின் படலமாய்
புல்லில் விரித்து
பூவில் சிரித்து
அமுத ஒலியாய் வழிந்து நிரம்புவதை!
(இசையின் பொருள்
இங்கு பொருட்டில்லை.அந்த தனிமையின்
மெல்லிய சோகத்தின்
ஒரு கனவு முலாம் பூசிய‌
அந்த சவ்வுப்படலமே
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின்
பேனாவை
கவ்விப்பிடித்திருக்கிறது.)
Series Navigationநகை முரண்மரச்சுத்தியல்கள்
author

ருத்ரா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *